நடிகை ரகுல் பிரீத் சிங், தனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை என்றால் அதற்கு காரணம் நான் கவர்ச்சியாக நடித்ததுதான் என்று தெரிவித்துள்ளார். தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ரகுல் பிரீத் சிங். ஆனால் இப்போது ரகுலுக்கு பட வாய்ப்புகள்மிகவும் குறைந்து விட்டன. ஆம், இதனால் என்னசெய்வது என்று தெரியாமல் ரகுல் பிரீத் சிங் இருக்கிறார். இந்த நிலையில் இதுகுறித்து ரகுல் ப்ரீத்தி சிங் உருக்கமாக கூறியதாவது: “நான் தொடர்ந்து படங்களில் மிகவும் […]
Author: MM SELVAM
“எஸ்.ஜே சூர்யாவையும், தன்னையும் பற்றி வெளியான வதந்தி உண்மை கிடையாது என பிரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார். புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின், விஜய் டிவியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அதன் பின் ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் நடித்து மிகவும் பிரபலமானதால் அவருக்கென ரசிகர்கள் கூட்டமே உருவானது. அதை தொடர்ந்து இவர் நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ படமும் நல்ல வரவேற்பை […]
திரிபுராவில் வறுமையால் ஒரு தம்பதியர் தங்களது குழந்தையை ரூ 5000த்திற்கு விற்பனை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. திரிபுரா மாநிலத்தில் இருக்கும் பழங்குடியின கிராமங்களில் பசி, வறுமை அதிகரித்து வருவதாகவும், அதன் காரணமாக அங்கு வசித்து வருபவர்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை, குழந்தையில்லா தம்பதியருக்கு துட்டுக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் உனாகோட்டி மாவட்டம் கைலாஷகர் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியர் இப்படி செய்து செய்து சிக்கியுள்ளனர். ஆம், அவர்கள் ஜனவரி 13 ஆம் […]
உ.பியில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மாறிமாறி காதலித்து வந்துள்ளான். ஆனால் அந்த இரு பெண்களுக்கும் இது தெரியாது. இரு பெண்களிடமுமே அந்த இளைஞன் நன்றாக பேசி பழகி ஆசை வார்த்தை கூறி காதலித்து வந்துள்ளான். இந்த நிலையில் பெண்கள் இருவருக்கும் திருமணம் செய்து கொள்வதில் சண்டை ஏற்பட்டுள்ளது. இரண்டு பெண்களும் அந்த இளைஞனை […]
செங்கல்பட்டில் காதலிக்காததால் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிடுவதாக மிரட்டிய இளைஞனால் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் மாமல்லபுரம் அண்ணாநகரைச் சேர்ந்த சரவணன் என்பவரின் அக்கா மகள் மோனிஷா. 22 வயதுடைய இவர் அரசு கல்லூரியில் படித்து வருகின்றார். மோனிஷாவின் பெற்றோர் இறந்து விட்டதால் தனது தாய் மாமா சரவணன் வீட்டில் தான் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் மோனிஷாவை அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞன் ஒரு […]
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் சுகாதார துறை இயக்குனர் ஜெனரல் ஜெரோம் சாலமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 191 ஆக அதிகரித்துள்ளதாகவும், ஒரே நாளில் நாடு முழுவதும் 61 கொரோனா தொற்று நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸால் 12 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 12 மாகாணங்களில் 5 மாகாணங்களில் 10 க்கும் மேற்பட்டோர் அடையாளம் […]
வட கொரியா கடலில் ஏவி அடையாளம் தெரியாத இரண்டு ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென் கொரியாவின் இராணுவம் தெரிவித்துள்ளது. நேற்று வட கொரியாவின் கிழக்கு கடலோர பகுதியில் இருக்கும் வோன்சான் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி இந்த இரண்டு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது.சுமார் 240 கி.மீ. தூரம் சென்ற இந்த ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய குறைந்த தூர ஏவுகணைகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுபோன்ற ஏவுகணைகள் மேலும் ஏவப்படலாம் […]
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 3100 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரசால் இதுவரை 3100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரசால் மொத்தம் 90,000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது மிக வேகமாக அமெரிக்காவிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வருகின்றது. இதன் காரணமாக அந்நாடு பல சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. […]
சென்னையில் தங்கத்தின் விலை அதிகரித்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ 32, 200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ 4,025 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ரூ 48.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மார்ச் 8 ம் தேதி மகளிர் தினத்தன்று எனது சமூக வலைதளங்களை பெண்கள் நிர்வகிக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்பட அனைத்து தளங்களில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட் செய்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி தான் பிரதமராவதற்கு முன்பே ட்விட்டரில் தனது பெயரில் ஒரு கணக்கு வைத்திருந்தார். பிரதமர் ஆன பிறகு தனது செயல்பாடுகளை தொடர்ந்து அதன் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி வந்தார். […]
3 பேருக்கு செய்யும் கடமையாக கருதி படப்பிடிப்பில் நடந்ததை கூறினேன் என்று நடிகர் கமல் ஹாசன் கூறியுள்ளார். இந்தியன் -2 படப்பிடிப்பு தள விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் புரொடக்ஷன் மேனேஜர் , லைகா நிறுவனம் , ஆபரேட்டர் , கிரேன் உரிமையாளர் என 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் […]
ஒரு பெண் காவலர் தனது ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் உத்தரபிரதேச முதல்வரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கவுதம் புத்தா நகர் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களைத் தொடங்கி வைத்தார். நொய்டாவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவர் சென்றபோது, ஆண்கள், பெண்கள் என ஏராளமான காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தனர். அவர்களில் பிரீத்தி ராணி (Priti Rani) என்ற […]
2019 ஆம் ஆண்டில் விற்பனையில் சாதனை படைத்த ஆல்பமாக அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்டின் (Taylor Swift) “லவ்வர்”, பாடலுக்கு கிடைத்துள்ளது. ஐ.எப்.பி.ஐ (IFPI) என்ற அமைப்பின் சார்பாக விற்பனையில் சாதனை புரிந்த செய்ததற்காக ஆல்பங்களை கண்டறிந்து அதனை பாடிய பாடகருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. இணையத்தில் நேரலையாக பார்ப்பது முதல் பயன்பாட்டை உலகளவில் விற்பனை செய்வது வரை அனைத்தையும் கணக்கிட்டு இந்த விருது வழங்கப்படுகின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான “லவ்வர்” பாடல் […]
பிரேசிலில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 28 பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். பிரேசிலின் வடக்கு மாநிலமான அமாபாவில் அமேசான் மழைக்காடுகளை சுற்றி பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒரு பெரிய படகில் சென்றுள்ளனர்.அப்போது, அமேசான் ஆற்றில் படகு எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் மூழ்கி பலியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் 28 பேரைக் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த விபத்து குறித்து […]
சென்னையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்து விற்பனையாவதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ 32, 112 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 9 உயர்ந்து ரூ 4,014 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ரூ 48.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பல்வேறு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான அகதிகள் துருக்கி வழியாக நடந்து கிரீஸ் நாட்டிற்குள் செல்ல முயற்சிக்கின்றனர். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான கிரீஸ், சட்டவிரோதமாக தங்கள் நாட்டிற்குள் வருபவர்களை தடுக்க எல்லைப்பகுதி முழுவதும் வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இருப்பினும், கிரீஸ் செல்வதற்கு தங்கள் நாட்டின் வழியைப் பயன்படுத்துவதற்கு அதன் அண்டை நாடான துருக்கி எந்த வித ஆட்சேபனையும் தெரிவிக்காததால், நூற்றுக்கணக்கான அகதிகள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். துருக்கி எல்லையில் தங்குவதற்கு […]
தூக்கு தண்டனைக்கு தடைகோரிய நிர்பயா குற்றவாளிகள் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் ராம் சிங், பவன் குமார் குப்தா, அக்சய் தாகூர், முகேஷ் […]
ரஷ்யாவில் பனியால் உறைந்து போயிருக்கும் உலகின் ஆழமான ஏரியில் விமானத்தை இறக்கி பைலட்ஒருவர் சாதனை நிகழ்த்தியிருக்கிறார். உலகின் மிக ஆழமான ஏரி என்று அழைக்கப்படும் ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரி இப்போது பனியால் முழுமையாக உறைந்துள்ளது. இந்த ஏரி உலகில் உள்ள நன்னீரில் சுமார் 20% இருப்பது குறிப்பிடத்தக்கது. உறைந்து போயிருக்கும் இந்த ஏரியில் ஒரு சிறிய செஸ்னா 172 (small Cessna 172 plane) வகை விமானத்தை இறக்க பைலட் வாடிம் மகோரோவ் என்ற […]
நிர்பயா வழக்கில் மரண தண்டனைக்கு எதிராக குற்றவாளி பவன் குமார் தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் ராம் சிங், […]
உலகளவில், கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவின் வுஹானில் தொடங்கிய கொரோனா வைரஸ் 6 கண்டங்களுக்கு பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 2,870 பேர் உயிர் இழந்த நிலையில், பல்வேறு நாடுகளில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கையுடன் சேர்த்து மொத்தம் 3,001 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று, ஒரே நாளில் மட்டும் ஈரான் நாட்டில் 11 பேர் உட்பட 24 பேர் இந்த கொடிய நோயால் இறந்துள்ளனர். 67 நாடுகளில் பரவியிருக்கும் கொரோனா வைரசால் இதுவரை பாதிக்கப்பட்ட 88, […]
சென்னையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்து விற்பனையாகிறது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ 31,984 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 12 உயர்ந்து ரூ 3,998 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.10 காசுகள் அதிகரித்து ரூ 48.50 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையை அடுத்த மாதவரம் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். திருவள்ளுர் மாவட்டம் மாதவரம் ரவுண்டானா அருகே தனியார் ரசாயன கிடங்கில் இன்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் 5 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைத்துக்கொண்டிருந்தனர். மேலும் கிடங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார், 8 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த பயங்கர தீயினால் சுற்று வட்டார பகுதிகள் […]
நியூயார்க்கில் நாளையில் இருந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை எரிப்பதாலும் காற்று மாசடைகிறது. அதேபோல் எரிக்காமல் எங்கேயாவது தெருவோரங்களில் தூக்கி எரிந்து விட்டால் விலங்குகள் அதனை சாப்பிட்டு உயிரிழக்க நேரிடுகிறது. மேலும் பிளாஸ்டிக் பூமிக்குள் புதைந்து மட்காமல் மழை நீரை பூமிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துகின்றது. இப்படி பல பிரச்சனைகள் பிளாஸ்டிக் பைகளால் உள்ளன. உலகில் இருக்கும் […]
ரஷ்ய தாக்குதலில் துருக்கி வீரர்கள் உயிரிழந்ததற்கு நேட்டோ அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் துருக்கிக்கு ஆதரவாக கூடுதல் படைகளை அனுப்ப மறுத்துவிட்டது. சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தை எட்டியிருக்கின்ற நிலையில், இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரியாவுக்கு ரஷ்யா ஆதரவளிக்கின்றது. அதேபோல துருக்கி குர்திஷ் போராளிகளுக்கு ஆதரவளித்து வருகின்றது. தற்போது இரு பிரிவினரும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் இட்லிப் மாகாணத்தில் சிரிய-ரஷ்ய கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 34 துருக்கி வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அமெரிக்கா உட்பட […]
ஆந்திராவில் இரண்டு குறுகிய சுவர்களுக்கு இடையே தவறி விழுந்த 2 சிறுவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் நூலகப்பேட்டையில் இருக்கும் பள்ளியின் சுவரையொட்டி ஒரு குறுகிய சுற்றுச்சுவர் உள்ளது. இந்தநிலையில் அந்த சுவரில் மேல் ஏறி இரு பள்ளி சிறுவர்கள் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தனர். இருவருக்கும் வயது 4. அப்போது எதிர்பாராதவிதமாக ரமணபாபு மற்றும் முன்னா ஆகியோர் இரு சுவர்களுக்கு இடையில் தவறி விழுந்து விட்டனர். இதையடுத்து இருவரும் கதறி அழுதுள்ளனர். அதைதொடர்ந்து சத்தம் […]
நிர்பயா குற்றவாளி பவன் குப்தா மனு மீதான விசாரணை 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால், அறிவித்தபடி குற்றவாளிகள் 4 பேரும் மார்ச் 3 ஆம் தேதி தூக்கிலிடப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிர்பயா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஓட்டு […]
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வருகைக்காக 100 கோடி செலவிடப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தநிலையில் மாநில அரசு இத்தனைகோடி ரூபாய் மட்டுமே செலவிட்டதாக குஜராத் முதல்வர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 24-ஆம் தேதி அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அவருடன் டிரம்ப் மனைவி மெலனியா, மகள் இவாங்கா ட்ரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் வந்திருந்தனர். குஜராத்தின் அஹமதாபாத் நகருக்கு வந்த ட்ரம்பை நேரில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அதிபர் ட்ரம்புக்கு […]
புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த ஒருவனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கம் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளையே உலுக்கியது. இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான பாலகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய 3 இடங்களில் உள்ள பயங்கரவாத […]
பாகிஸ்தானில் பேருந்து மீது ரயில் மோதிய கோர விபத்தில் 30 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலம் கராச்சியில் இருந்து பஞ்சாப் நோக்கி பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. நூற்றுக்கணக்கான பயணிகளுடன் சென்ற அந்த இரயில் ரோஹ்ரி நகர் அருகே காந்த்ரா என்ற இடத்தில் வந்தபோது, அதேசமயம் ஆள் இல்லாத ரயில்வே கிராசிங்கை ஒரு பேருந்து கடந்து செல்ல முயன்றது. அப்போது அந்த ரயில் பேருந்தின் […]
சிரியா அரசு படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் உயிரிழந்ததையடுத்து, துருக்கி- ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வருகின்றது. சிரியாவில் அரசுக்கு எதிராக குர்திஷ் போராளிகள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. அதனால் ரஷ்யாவின் உதவியுடன் சிரிய ராணுவம் போராளி குழுக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே நேரம் குர்திஷ் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்றது. ஆம், சிரிய எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளை பல இடங்களில் […]
சென்னையில் தங்கத்தின் விலை 32 ஆயிரத்திற்கும் கீழே இறங்கி விற்பனையாவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் தொடர்ந்து தங்கத்தின் விலை 32 ஆயிரத்திற்கும் மேலே ஏறுமுகத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.624 குறைந்து ரூ 31,888 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 78 குறைந்து ரூ 3,986 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் […]
அமெரிக்கா – தலிபான்கள் இடையே கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வருகின்ற போர் முடிவுக்கு வருகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டுமுதல் ஆப்கானிஸ்தான் நாட்டின் அரசு படைகளுக்கும், தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே பெரும் போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் கிட்டத்தட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்கா ஒரு அதிரடி முடிவு எடுத்தது. அதாவது, ஆப்கான் அரசு படைக்கு உதவும் வகையில் 14,000 அமெரிக்க வீரர்களை ஆப்கானில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கு அனுப்பியது […]
அசுர வேகத்தில் பரவிவருகின்ற கொரோனா வைரஸ், மேலும் 5 நாடுகளுக்கு பரவியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 2,800 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 82,000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் 39-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த நிலையில், மேலும் 3 ஐரோப்பிய நாடுகளுக்கும், ஒரு ஆப்பிரிக்க நாடுக்கும், நியூசிலாந்துக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான […]
கொன்று குவித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை, 2800-ஆக அதிகரித்துள்ளதாக சீனாவின் சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகளவில் அச்சுறுத்தி வருகின்ற நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 2800 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,000-ஆக அதிகரித்துள்ளது. சீனாவை தவிர்த்து அடுத்தப் படியாக தென் கொரியாவில் கொரோனா வைரஸ் வேகம் காட்ட தொடங்கியுள்ளது. அந்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 2,022ஆக உயர்ந்துள்ளது. இதுவரை அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக […]
ரஷ்ய வீரர் ஒருவர் உறைந்த நீருக்கடியில் ஒரே மூச்சாக 180 மீட்டர் ஆழம் வரை வேகமாக நீச்சலடித்து சென்று கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார். ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் உறைந்த நீருக்கு அடியில் ஒரே மூச்சில் 180 மீட்டர் ஆழம் வரை நீச்சலடித்து சென்று ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அவரது பெயர் அலெக்ஸி மோல்ச்சனோவ் (Alexey Molchanov). ரஷ்ய நீச்சல் வீரரான இவர் இந்த சாதனை முயற்சியை வெறும் 3 நிமிடத்தில் நிகழ்த்தி அசத்தியிருக்கிறார். குளிர்ந்த நீருக்கு […]
சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் நடந்த வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவில் அரசுக்கு எதிராக குர்திஷ் போராளிகள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. அதனால் ரஷ்யாவின் உதவியுடன் சிரிய ராணுவம் போராளி குழுக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே நேரம் குர்திஷ் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்றது. ஆம், சிரிய எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளை பல இடங்களில் குவித்து வைத்துள்ளது. அடிக்கடி இரு பிரிவினருக்கு இடையே தாக்குதல் […]
தெலுங்கானாவில் கல்லூரி விடுதியில் மர்மமாக உயிரிழந்த சிறுமிக்கு நீதிக்கோரி போராட்டம் நடத்திய தந்தையை காலால் எட்டி உதைத்த போலீஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தெலுங்கானா மாநிலம் சங்கா ரெட்டி மாவட்டம் வெலிமெலாவில் தனியார் கல்லூரி ஓன்று இயங்கி வருகிறது. அந்த கல்லுரியில் படித்து வந்த 17 வயது சிறுமி சில நாட்களுக்கு முன் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அக்கல்லுரி நிர்வாகமும் அவள் தற்கொலை செய்து கொண்டதாக கூறி, குளிர்சாதனப்பெட்டியில் உடலை அடைத்து வெளியில் […]
பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ வில்சனின் மூத்த மகள் ஆன்டிஸ் நிஜாவுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. கன்னியாகுமரி களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த ஜனவரி 8ஆம் தேதியன்று பாதுகாப்புப் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக அப்துல் சமீம், தவ்பீக் ஆகியோர் கர்நாடகாவில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கொலையாளிகளுக்கு உதவியவர்கள் பலரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ. வசம் […]
உத்தரபிரதேசத்தில் திருமண மண்டபத்தின் குளியலறையில் 3 வயது சிறுமி அடையாளம் தெரியாத இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூரி மாவட்டத்தின் போகான் பகுதியில் இந்த சம்பவம் புதன்கிழமை இரவு நடந்துள்ளது. ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள சிறுமி தனது பெற்றோருடன் வந்திருந்தாள். அவள் சுற்றி விளையாடிக் கொண்டிருந்தாள், பின்னர் காணாமல் போனாள், ஆனால் அவள் இல்லாததை பெற்றோர்கள் கவனிக்கவில்லை. இதையடுத்து திருமணத்திற்கு வந்த ஒரு பெண் விருந்தினர் வாஷ்ரூமுக்குச் சென்றபோது, […]
உத்தரப்பிரதேசத்தில் பேறுகாலத்துக்காக வந்த பெண் தெருவோரம் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரைச் நகரில் (Bahraich) இருக்கும் அரசு மருத்துவமனைக்கு வெளியே தான் இந்த அவலம் நிகழ்ந்துள்ளது. ஆம், நேற்று இரவு நிறைமாதக் கர்ப்பிணிப்பெண் ஒருவர் வலி தாங்க முடியாமல் பேறுகாலத்துக்காக வந்துள்ளார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அந்தப் பெண்ணை உடனே மருத்துவமனைக்குள் அனுமதிக்காமல் நேரம் கடத்தி அலட்சியம் செய்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் வேறு வழியில்லாமல் பேறுகால வலி ஏற்பட்ட […]
ஜெனீவாவில் நடைபெற்ற 43 வது ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானை தீவிரவாதத்தின் தொட்டில் என்று இந்தியா சாடியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதியை குலைத்து மனித உரிமை மீறல்களுக்கு காரணமாக விளங்கும் தீவிரவாதம் குறித்து இந்தியா புகாரளித்துள்ளது.கடந்த ஏழு மாதங்களாக காஷ்மீரில் ஜனநாயக மற்றும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை நடத்தி வருவதாக இந்தியாவின் முதன்மை செயலர் விமராஷ் விமர்ஷ் ஆரியன் (Vimarsh Aryan) தெரிவித்துள்ளார். மேலும் தேநீர் கோப்பைக்குள் புயலை எழுப்ப முயற்சிக்கும் பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்களை உலக […]
சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ 32, 568 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 7 உயர்ந்து ரூ 4,071 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.10 காசுகள் குறைந்து ரூ 49.80 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கிடைத்துள்ள 3 கோடியே 40 லட்சம் ரூபாய் நன்கொடையை தொண்டு நிறுவனத்துக்கு வழங்குவதாக அவனது தாய் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் அண்மையில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், பள்ளி சீருடையில் காருக்குள் உட்கார்ந்து கொண்டு அவரது 9 வயது மகன் குவாடன் பேல்ஸ் (Quaden) கதறி அழுது கொண்டே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறுகிறார். தனது மகனை […]
புனிதப் பயணிகளுக்கான விசா தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகையே ‘கோவிட்-19’ எனப்படும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் மத்திய கிழக்கு நாடுகளிலும் வேகமாக பரவி வருவதன் காரணமாக, யாத்திரிகர்களுக்கான விசாக்களை நிறுத்தி வைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டதாக சவுதி அரேபிய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி ‘உம்ரா’ (Umrah) வுக்காக சவுதி அரேபியா செல்வதற்கும், புனித மதீனா செல்வதற்குமான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி […]
காஸ்கஞ்ச் மாவட்டம் பாட்டியாலி கோட்வாலி என்ற பகுதியில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தின் பாட்டியாலி கோட்வாலி என்ற பகுதியில் திருமணமான இளம்பெண் ஒருவர் திருமணமானதும் பண்ணைக்கு வேலைக்கு சென்றபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் போலீசாரிடம் அளித்த புகாரில், “எனக்கு புதிதாக திருமணம் ஆகியுள்ளது. நான் ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்கு சில […]
ஒடிசாவில் மனைவியை 300 துண்டுகளாக வெட்டி கொன்ற கணவனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் வசித்து வருபவர் சோம்நாத் பரிதா (வயது 78). இவரது மனைவி உஷா ஸ்ரீ. சோம்நாத் இந்திய இராணுவத்தில் மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்த நிலையில் சோம்நாத் மற்றும் அவருடைய மனைவி உஷா ஸ்ரீ இருவருக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து […]
2020 ஐ.பி.எல். தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர், செயல்படுவார் என அந்த அணியின் நிர்வாகம் அறிவித்துள்ளது. கேப்டனாக மீண்டும் நியமித்தது குறித்து டேவிட் வோர்னர் கூறுகையில், ‘நடப்பு ஐ.பி.எல். தொடரில் கேப்டன் பதவி வழங்கப்படுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் ஒரு முறை அணியை வழிநடத்துவதற்கான வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.கடந்த 2 ஆண்டுகளில் அணியை வழிநடத்திய வில்லியம்சன் மற்றும் புவனேஷ்வர் குமாருக்கு நன்றி சொல்ல நான் விரும்புகிறேன். […]
கடந்த சில வாரங்களில் பயணிகளிடமிருந்து 3,000-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக கனட போக்குவரத்து நிறுவனம் (சி.டி.ஏ) தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 15-ஆம் முதல் பிப்ரவரி 13 ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 8 வார காலப்பகுதியில் மொத்தம் 3,037 புகார்கள் வந்துள்ளதாக கனட போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி மத்திய அரசு (கனடா) புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியது. அதன்படி, விமானம் தாமதமாவது மற்றும் விமானத்தின் கட்டுப்பாட்டிற்குள் ரத்து செய்யப்பட்டதற்கு விமான நிறுவனங்கள் […]
வடகிழக்கு பிரான்சில் ஒரு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வடகிழக்கு பிரான்சின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள (Strasbourg) ஒரு கட்டிடத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பரிதாபமாக உடல் கருகி பலியானதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் […]