ஐதராபாத்தில் கவனக்குறைவினால் அப்பாவே தனது குழந்தையை கொன்ற சம்பவம் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் சந்திரயங்குட்டாவின் பார்காஸ் பகுதியைச் சேர்ந்தவர் கலீத் சாரி. 28 வயதான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருக்கும் தனது காரை எடுத்துள்ளார். அதேநேரம் அவரது 18 மாத பெண் குழந்தை ஹுடா, காருடைய முன் சக்கரத்திற்கு அருகில் விளையாடி கொண்டு இருந்துள்ளது. அதனை பார்க்காத கலீத், காரை தனது குழந்தை மீது தெரியாமல் ஏற்றி […]
Author: MM SELVAM
சிகரெட் மற்றும் புகையிலை பொருள்களை பயன்படுத்துவோரின் வயது 18ல் இருந்து 21ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் மட்டுமே புகையிலை மற்றும் சிகெரெட் பொருள்களை பயன்படுத்துவதற்கு சட்ட ரீதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவே நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்களில் சிலர் யாருக்கும் தெரியாமல் சிகரெட் பிடிப்பதை நாம் பார்த்திருப்போம். சிலர் தெரிந்தே சிகரெட் பிடிப்பார்கள். சட்ட ரீதியில் தப்பு என்றாலும் தெரியாமல் […]
உலகில் இருக்கின்ற பெண்கள் அனைவரும் கொண்டாடப்பட வேண்டியவர்களில் முதலிடத்தில் இருக்கிறார்கள். அப்பெண்கள் அனைவரையும் ஒவ்வொரு ஆண்களுமே மதிக்க வேண்டும். தாய், சேய், தாரம், அக்கா, சகோதரி, என ஆண்களை உருவாக்கும் இவர்கள் அனைவருமே போற்றப் பட வேண்டியவர்கள். ஆனால் இன்றைய காலத்தில் அப்படி எதுவுமே நடப்பதாக தெரியவில்லை. ஆம்,பெண்களுக்கான பாதுகாப்பு ஆண்களிடம் இருந்து கிடைப்பதே இல்லை. பிறந்த சிறு குழந்தை தொடங்கி முதியவர் வரை வயது வித்தியாசமின்றி அனைவருக்குமே சில கொடூரர்கள் பாலியல் தொல்லை, கொடுக்கின்றனர். இதுபோன்று […]
மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களின் பதவி காலம் முடியவுள்ள நிலையில் அந்த வெற்றிடத்திற்கு மீண்டும் நியமிக்கப்படுவோர் குறித்த எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மோதிலால் வோரா, திக்விஜய்சிங், குமாரி சல்ஜா உட்பட 12 ராஜ்ய சபா உறுப்பினர்கள் ஏப்ரல் மாதத்துடன் ஓய்வு பெற இருக்கின்றனர். இந்த நிலையில் ஆளுமையின் அடிப்படையில் அவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து கட்சியின் மாநிலங்களவை (ராஜ்யசபா) துணைத் தலைவர் ஆனந்த் சர்மா கூறுகையில் ”ராஜ்யசபா உறுப்பினர் […]
இஸ்லாமிய பயங்கரவாதம் தான் உலகின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் இந்திய பயணமாக இன்று மதியம் 12 மணியளவில் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அவருடன் மனைவி மெலனியா மற்றும் மகள் இவான்கா ஆகியோரும் வந்திருந்தனர். அதிபர் டிரம்புக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளுடன் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சொகுசு காரில் அங்கிருந்து […]
ஈரானிய கப்பல்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைவதற்கு குவைத் தற்காலிக தடை விதித்துள்ளது. உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரையில் சீனாவில் 2,592 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 77, 150 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல ஈரானில் கொரோனா வைரஸ் நோய் தாக்கம் காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்து, 43 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தங்கள் நாட்டுக்கும் (குவைத்) கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் […]
சென்னையில் இன்று மாலை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 752 உயர்ந்து ரூ.33,328 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 94 உயர்ந்து ரூ.4,166-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 90 உயர்ந்து ரூ.53.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ஜனநாயகக் கட்சியினரிடையே நவாடா மாகாணத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders) வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்காக ஒவ்வொரு மாகாணங்களிலும் வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, தென்மேற்கில் அமைந்திருக்கும் நவாடா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவரும், வெர்மான்ட் மாகாண […]
இதுவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் மட்டும் 2, 592 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் வூஹானில் தான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன்பின் கொரோனா தனது வேகத்தை காட்டத் தொடங்கியது. அந்நாட்டின் பீஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் வூஹான் மாகாணத்தில் அதிவேகமாக பரவி அடுத்தடுத்து மக்களை கொன்று குவித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சீன பெருஞ்சுவரையும் தாண்டி உலக […]
இத்தாலி நாட்டில் இருந்து ஆஸ்திரியா செல்வதாக இருந்த இரயில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இரு நாட்டு எல்லையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது . கொரோனா வைரஸ் சீனாவில் மட்டுமில்லாமல் மற்ற பிற நாடுகளுக்கும் பரவி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதாவது, ஹாங்காங், ஜப்பான், தென்கொரியா, பிலிப்பைன்ஸ், மலேசியா, சிங்கப்பூர், ஈரான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு பலர் உயிருக்கு போராடி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடான […]
மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ள மகாதீர் பின் முகமதுக்கு வயது 95. ஆளும் கூட்டணியில் இருந்தும் மகாதீர் முகமதுவின் கட்சி விலகியது. மலேசிய மன்னரிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் பிரதமர் மகாதீர். மேலும் அன்வர் இப்ராகிம் பிரதமர் பதவிக்கு வராமல் தடுக்க மகாதீர் கூட்டணிக் கட்சியினர் முயற்சி செய்கின்றனர். பிரதமர் பதவியை மகாதீர் ராஜினாமா செய்ததால் மலேசிய அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பை பாதுகாக்க தாஜ்மகாலில் 5 சிங்கவால் குரங்குகளை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முதல் முறையாக தனி விமானம் மூலம் அரசு முறை பயணமாக நேற்று அமெரிக்காவில் இருந்து புறப்பட்டு, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மதியம் 12 மணியளவில் வந்து இறங்கினார். அவருடன் மனைவி மெலனியா, மகள் இவான்கா ஆகியோரும் வந்துள்ளனர். விமான நிலையத்தில் […]
சீனாவின் வூஹானில் மேலும் ஒரு வைத்தியர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பலியாகியுள்ளார். சீனாவில் உள்ள ஜாங்னான் வைத்தியசாலை வட்டாரங்கள் அதிகாரப் பூர்வமாக இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 29 வயதான சியா சிசி என்ற அந்த வைத்தியர் கடந்த 19 ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் அவர் வூஹான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் வைத்தியசாலையில் அந்த வைத்தியர் தொடர்ந்து சிகிச்சை பெற்று […]
உலக நாடுகளில் இராணுவ பலம் அதிகமுள்ள முதல் 5 இடங்களை பிடித்துள்ள நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. உலக நாடுகளுக்கிடையே போர் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். உலகில் போர்க் களங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. உலகத்தில் இருக்கும் முன்னணி நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலரை தங்கள் இராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக ஒதுக்கீடு செய்கின்றன. அதில் இந்தியாவும் ஓன்று. அதன்படி ஆயுதப் படைகளுக்கு மிக உயர்வான பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் ஆயுத பலத்தை அதிகரிப்பதற்காக பெருமளவில் நிதி […]
ஆபரணத் தங்கம் 1 கிராம் 4,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். ஒட்டுமொத்த உலக பொருளாதார மந்த நிலை காரணமாக முதலீட்டாளர்கள் ஆபரண தங்கம் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக தான் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே செல்கின்றது. இந்தநிலையில் சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் ஆபரண தங்கம் 1 கிராம் 28 ரூபாய் அதிகரித்து 4, 100ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. […]
கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் ‘கோவிட்-19’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடிக்க முடியாமல் சீனா, அமெரிக்கா உட்பட உலகநாடுகள் திணறி வருகின்றன. இதுவரையில் கொரோனா வைரசுக்கு 2,300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 76,000-த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]
நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 3-ஆம் தேதி தூக்குதண்டனை நிறைவேற்றப்படவுள்ள நிலையில், திகார் சிறைத்துறை நிர்வாகம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. திகார் சிறைத்துறை நிர்வாகம் அனுப்பிய கடிதத்தில், தூக்கிலிடப்படும் தேதி நெருங்குவதால், கைதிகள் 4 பேரும் கடைசியாக தங்கள் குடும்பத்தினர்களை எப்போது சந்திக்க விரும்புகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், முகேஷ் சிங் மற்றும் பவன் குப்தா ஆகியோர் தங்களது பெற்றோரை ஏற்கனவே சந்தித்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் மீதமுள்ள குற்றவாளிகள் அக்ஷய் […]
அமெரிக்க நாட்டின் அலாஸ்கா (Alaska) வனத்தில் வாழும் கிரிஸ்லி பழுப்பு நிற கரடிகளை (Grizzly Bear) வேட்டையாடுவதற்கு அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகன் 1000 டாலர் கட்டணம் கட்டி அனுமதி வாங்கியுள்ளார். ஆம், இனி அவர் காட்டுக்குள் புகுந்து விலங்குகளை வேட்டையாடலாம். அமெரிக்காவில் மான்கள், கரடிகள் மற்றும் காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடுவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்குகிறது. ஆனால் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு தான் இது பொருந்தும். அந்த வகையில் வடமேற்கு அலாஸ்காவின் சீவர்ட் (Seward) […]
சைபிரியாவில் உறைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பறவையின் உடல், 46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த ஹார்ன்ட் லார்க் என்ற பறவையினுடையது என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் சைபிரியா பிரதேசத்தில் வடகிழக்கே இருக்கும் பெலாய கோரா (Belaya Gora) என்ற பகுதியில் ஹார்ன்ட் லார்க் (horned lark) என்ற பறவையின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த பறவை 46,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளது. இந்த தகவலை சுவீடன் ஆய்வாளர்கள் நிகோலஸ் டஸக்ஸ், லவ் டேலன் ஆகியோர் ஆய்வு செய்து […]
இந்தோனேசியாவில் ஆற்றை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென நீர்மட்டம் உயர்ந்ததால் 8 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் இருக்கும் யோககர்த்தா (Yogyakarta) மாகாணத்தில் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து ஆற்றில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்த போது, சுற்றுவட்டாரத்தில் பெய்த கனமழையால் ஆற்றில் எதிர்பாராதவிதமாக திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அறியாத மாணவர்கள், ஆற்று நீரில் அடித்து […]
பாகிஸ்தான் முழுவதும் சுமார் 3,00,000 சதுர கி.மீட்டர் பரப்பளவில் விளைநிலங்களை வெட்டுக்கிளிகள் அழித்து நாசம் செய்து வருவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் வெட்டுக்கிளிகள் கூட்டம் வேகமெடுக்கத் தொடங்கியது. வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவாசயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். அந்நாட்டில் விவசாயத்தை அதிகமாக நம்பியிருக்கும் பஞ்சாப் மாகாணம் மிகவும் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது . வெட்டுக்கிளிகளின் வேட்டையால் கடந்த ஜனவரி மாதத்தில் மாவுகளின் விலைகள் 15 சதவிகிதமும், சர்க்கரை விலை […]
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரே இடத்தில் மொத்தமாக 220 ஜோடி மணமக்கள் முகமூடி அணிந்து திருமணம் செய்து கொண்டனர். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரசால் இதுவரையில் 2,345 பேர் மரணடைந்துள்ளனர். மேலும் 76,000-த்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகோலோட் என்ற இடத்தில் 220 ஜோடிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் நேற்று முன்தினம் […]
உத்தரபிரதேசத்தில் மணமேடையில் மணமகன் செய்த காரியத்தால் திருமணம் வேண்டாம் என்று மணப்பெண் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியை அடுத்த மீர் கஞ்ச் பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில், திருமணத்துக்கு முந்தைய நாள் நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றது. மறுநாள் (திருமணநாளன்று) காலை மணமக்கள் இருவரும் திருமணத்துக்கு ரெடியாகி மணமேடையில் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மணமகனின் தங்கை மிகவும் மகிழ்ச்சியாக பாடல் ஒன்றிக்கு நடனம் […]
இராணுவ பலம் மிக்க நாடுகளில் இந்தியாவும் ஒன்று என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் புதிய இராணுவ தலைமையகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடைபெற்றது. இதில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பூமி பூஜையை நடத்திவைத்து புதிய ‘தள் சேனா பவன்’ கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “இப்போது நாம் மிக பிரம்மாண்டமான இராணுவத் தலைமையகம் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டியுள்ளோம். இது மிக […]
உலகையே மிரட்டிவரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,345 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகின்றது. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 109 பேர் உயிரிழந்துள்ளதாக சீனா தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், ஹூபே மாகாணத்தின் தலைநகர் வூஹானில் மட்டும் 90 பேர் இறந்துள்ளதாக, சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் மட்டும் கொரோனா வைரஸிற்கு புதிதாக 397பேர் பாதிப்படைந்துள்ளதாக […]
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வின்போது ஆண் ஆசிரியர்கள் மாணவிகளை சோதனை செய்வதற்கு தடைவிதித்து அரசுதேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வியில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் முடிந்த நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி […]
உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் கேதார்நாத் கோயில் நடை வருகின்ற ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தராகண்ட் மாநிலத்தின் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில். இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இதனை பார்வையிடுவதற்கு நாடு முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். இந்த கோவில் குளிர் காலங்களை தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டுமே […]
இங்கிலாந்து கண்டெய்னர் லாரியில் 39 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்குத் தொடர்பாக 7 பேர் மீது வியட்நாம் போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர். இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் கவுண்டி பகுதியில் கண்டெய்னர் லாரியில் 39 பேர் சடலமாக மீட்கப்பட்ட வழக்குத்தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 ஆண்களும், 2 பெண்களும் சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்கள் என்றும், வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்கள் என்றும் ஹாரின் (Ha Tinh) மாகாண போலீசார் தெரிவித்தனர். கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி கண்டெய்னர் லாரி […]
திருமணமான இளம்பெண் ஒருவர் மீது ஒருதலை காதலால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வடலூரை சேர்ந்தவர் சலோமி. 21 வயதான இவருக்கு திருமணமாகிவிட்டது. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்று கூட பாராமல் பேருந்து நடத்துனரான சுந்தரமூர்த்தி என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது விருப்பத்தை சுந்தரமூர்த்தி அப்பெண்ணிடம் கூறியுள்ளார். ஆனால் அதனை சலோமி மறுத்துவிட, உடனே தான் கொண்டுவந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி சுந்தரமூர்த்தி […]
பெங்களூரிலிருந்து கணவனை கத்தாருக்கு வழியனுப்பி வைக்க வந்த மனைவி விபத்தில் பலியானதால் அந்த குடும்பமே சோகத்தில் மூழ்கியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஸ்னிஜோ ஜோஸ். இவர் பெங்களூரில் பணியாற்றி வரும் தமது மனைவி அனுவின் வருகையை எதிர்பார்த்து சம்பவதினத்தன்று பேருந்து நிலையத்தில் காத்து கொண்டிருந்தார். நீண்ட நேரமாகியும் தனது மனைவி அனுவிடம் இருந்து எந்தவொரு தகவலுமே வரவில்லை என்பதால், அவரது மொபைலுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் மனைவி அனு பேசாமல், அவரது மொபைலை எடுத்துப் பேசியவர் […]
அமெரிக்காவில் கொள்ளை கும்பலில் ஒருவன் பிரபல ‘ராப்’ பாடகர் பாப் ஸ்மோக்கை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல ‘ராப்’ பாடகர் பாப் ஸ்மோக். இவரது இயற்பெயர் பஷர் பராகா ஜாக்சன். 20 வயதான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் லாஸ் ஏஞ்சல்சில் இருக்கும் மேற்கு ஹாலிவுட் நகரில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாப் ஸ்மோக் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கொள்ளை கும்பல் ஓன்று […]
கொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவில் பேனல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் டி.வியின் விலை அடுத்த மாதம் முதல் 10 சதவீதம் வரை உயரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் பேனல்களின் (panel) விலை மிகவும் குறைவு என்பதால் அதிகளவில் இந்தியாவின் டி.வி. தயாரிப்பு நிறுவனங்கள் இறக்குமதி செய்து வந்தன. மேலும் பிற நாடுகளும் அங்கிருந்து வாங்குகின்றன. ஆனால் தற்போது சீனா மட்டுமின்றி உலகையே கொரோனா வைரஸ் மிரட்டி வருகின்றது. இதனால் சீனாவில் இயல்புநிலை முற்றிலும் முடங்கியுள்ளது. அதன் […]
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்படுவதாக ஏகே விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இரவு 9 மணியளவில் செட் அமைக்கும் பணியின் போது எதிர்பாராத விதமாக, ஸ்டுடியோ லைட் வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இதில் பல அடி உயரத்தில் இருந்து விழுந்த […]
உத்திரப்பிரதேசத்தில் 3,350 டன் எடை அளவுள்ள தங்க படிமங்கள் கொண்ட, 2 சுரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் அம்மாநில புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகம் ஆகியவை இணைந்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் அம்மாநிலத்தின் பெரிய மாவட்டமான சோன்பத்ராவில் இருக்கும் சோன்பாகதீ (Sonpahadi) என்ற இடத்தில் 2,700 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டீ (Hardi) என்ற பகுதியில் 650 டன் அளவுள்ள தங்க படிமங்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. […]
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக திருமணத்தையே நிறுத்தி வைத்த ஊகான் மருத்துவர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் நாளுக்குநாள் காவு வாங்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நாட்டு மருத்துவர்கள் இரவு பகல் என்றும் பாராமல் சிகிச்சையளித்து வருகின்றனர். அதேநேரத்தில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. சில மருத்துவர்களும் இதற்கு பலியாகியுள்ளனர். அந்த வகையில் ஊகான் ஜியாங்ஜியா First People மருத்துவமனையில் பணியாற்றி வரும் 29 வயதான மருத்துவர் பெங் யின்ஹுவா […]
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சீனாவில் நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் அடித்து கொல்லப்படுவதாக புகார் எழுந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு 2000-த்திற்கும் மேற்பட்டோர் இதுவரையில் இறந்துள்ளனர். மேலும் 75000த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே அந்நாட்டு மக்கள் வீடுகளில் வளர்த்து வரும் செல்லப் பிராணிகளும் தனிமைபடுத்தப்பட வேண்டும் என மருத்துவர் ஒருவர் […]
நியூசிலாந்து நாட்டில் டிண்டர் (Tinder) செயலி மூலம் அறிமுகமான பெண்ணை கொலை செய்தவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனை சேர்ந்தவர் கிரேஸ் மிலன் (GRACE MILLANE). 27 வயது பெண்ணான இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கிரேஸ் மிலன், ஆன்லைன் டேட்டிங் செயலியான (app) டிண்டர் மூலம் ஒரு 28 வயதான ஜெஸ்ஸி கெம்ப்சன் என்ற (Jesse Kempson) நபரிடம் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் நெருங்கி பழகி […]
சீனாவில் சிறைச்சாலைகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை அடுத்து, முகாம்களிலும் பரவி விடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். சீனாவின் உகான் நகரில் தொடங்கி உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரசின் கோர தாக்குதலுக்கு இதுவரையில் 2,236 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நாடுமுழுவதுமாக இந்த வைரஸ் பாதிப்பிற்கு மொத்தம் 75,465 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், சீனாவில் 450-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் மற்றும் காவல்துறையினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சீன […]
இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உயிரிழந்தது தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகர் கமல் மற்றும் ஷங்கர் இணைப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தில் கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் […]
பள்ளியில் தன்னை கேலி செய்வதால் தற்கொலை செய்து கொள்வதற்கு தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறி அழும் 9 வயது சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், பள்ளி சீருடையில் அவரது 9 வயது மகன் குவார்டன் (Quaden) கதறி அழுது கொண்டே நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கூறுகிறார். தனது மகனை சமாதானப்படுத்த தாயும் அழுது கொண்டே […]
ஏமனில் கடந்த 15-ஆம் தேதி சவுதி அரேபிய கூட்டுப்படை நடத்திய விமானத் தாக்குதலில் 31 பேர் பலியானதை ஐ.நா உறுதி செய்துள்ளது. ஏமனில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் அல்-ஜாஃப் நகரில் கடந்த 15ஆம் தேதி சவுதி அரேபிய கூட்டுப்படைகள் திடீர் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில் 19 சிறுவர்கள் உட்பட 31 பொதுமக்கள் பலியானதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் ஐநாவின் யுனிசெப் அமைப்பு இதனை தற்போது உறுதி செய்துள்ளது. முன்னதாக சவுதிக்கு சொந்தமான டொர்னாடோ […]
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்திய பயணத்தின் போது இந்தியா- அமெரிக்கா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக 24 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வருகிறார். இதையடுத்து அதிபர் டிரம்ப் 25-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்த பேச்சுவார்த்தையின்போது முக்கியமான 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்திய வெளியுறவுதுறை அமைச்சக செய்தி […]
இந்தோனேஷியாவில் 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நில நடுக்கத்தால் பலர் தங்கள் வீடுகளையும், உயிர்களையும் இழந்துள்ளனர். அதன்படி அதிகாலை 3.24 மணியளவில் வடமேற்கு இந்தோனேசியாவின் சுமார் 229 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சயூம்லாகி பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நடுக்கமானது 157 கி.மீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த […]
உலகையே பயமுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) தொற்றுக்கு இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரசின் கோர தாக்கத்திற்கு நேற்று (வியாழக்கிழமை) மட்டும் 118 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு புதிதாக 889 பேர் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் நாடுமுழுவதுமாக இந்த […]
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக சீனாவுடனான விமான போக்குவரத்து தடையை ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை நீடிப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலக நாடுகளை கதிகலங்க செய்துள்ளது. வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து அந்நாட்டிற்கான விமானப்போக்குவரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.அதன்படி மத்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் டெல்லி- ஷாங்காய் இடையிலான 6 வாராந்திர விமானங்களை கடந்த மாதம் […]
காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிகளுக்கான தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் வலியுறுத்தியுள்ளார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் இதற்க்கு சம்மதிக்கவில்லை. ஆனாலும் ராகுல் முடிவில் இருந்து பின் வாங்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கான இடைக்கால தலைவராக சோனியா காந்தி நியமனம் செய்யப்பட்டார். நீண்ட நாட்களாக சோனியா காந்தி இடைக்கால தலைவராக இருந்து வருகின்ற நிலையில், கட்சியின் […]
ஆஸ்திரேலியாவில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி நகரத்தில் இருந்து மெல்போர்ன் நோக்கி 160 பயணிகளுடன் சென்ற இரயிலானது, வாலன் பகுதியில் வந்தபோது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் முழுமையாக கவிழ்ந்ததில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஸ்பெயின் நாட்டில் சட்டவிரோதமாக சுரங்கம் அமைத்து போதை சிகரெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 20 பேரை போலீசார் கைது செய்தனர். ஸ்பெயின் நாட்டில் மாட்டுத் தொழுவத்திற்கு கீழே 4 மீட்டர் ஆழத்தில் சுரங்கம் அமைத்து சட்டவிரோதமாக ஒரு கும்பல் போதை சிகரெட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அந்த சுரங்க தொழிற்சாலையில் போலீசார் அதிரடியாக சோதனையிட்டு 20 பேரை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த போதை சிகெரெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த சமபவம் குறித்து […]
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்திற்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ 15 ஆக உயர்த்தப்பட இருக்கிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமேடை டிக்கெட் கட்டணம் ரூ 15 ஆக உயர்த்தப்பட இருக்கின்றது. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 3 மாத காலத்திற்கு ரூ 10-க்கு பதில் 15 ஆக டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோடை காலத்தில் நடைமேடையில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த கட்டண உயர்வு […]