ஊகான் மருத்துவமனை இயக்குநர் கொரோனா வைரசால் பலியான நிலையில், அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டபோது அவரது மனைவி வாகனத்தின் பின்னால் கதறி அழுதபடி ஓடிய காட்சி வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் ஊகான் நகரில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில் கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் ஊகான் நகரில் […]
Author: MM SELVAM
கணினி உலகின் வரப்பிரசாதமாக கருதப்படும் கட், காப்பி, பேஸ்ட் (cut, copy, paste) செயல்பாடுகளை உருவாக்கிய விஞ்ஞானி லாரி டெஸ்லர் காலமானார். அமெரிக்காவைச் சேர்ந்தவர் லாரி டெஸ்லர் (Larry Tesler). 74 வயதான இவர் ஜெராக்ஸ் பார்க், ஆப்பிள், அமேசான், யாகூ உள்ளிட்ட உலகில் பெரிய தொழில்நுட்பம், தயாரிப்பு மற்றும் மின்னணு நிறுவனங்களில் பணியாற்றி பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை படைத்து அசத்தியவர். மேலும் கணினி உலகின் வரபிரசாதமாக கருதப்படும் கட், காப்பி, பேஸ்ட் செயல்பாடுகளையும் இவர்தான் உருவாக்கியுள்ளார். […]
லக்னோவில் சிஏஏ-வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பொது சொத்துகளை சேதபடுத்தியதற்காக ரூ 64,00, 000 பணத்தை செலுத்த 28 பேருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதா எதிர்ப்பு போராட்டத்தின் போது அரசு பேருந்து மற்றும் போலீசாரின் பைக்குகள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சதாப் ஜாபர் உள்ளிட்ட […]
நியூசிலாந்தில் வாழும் இந்தியர் ஒருவர் தனது வளர்ப்பு நாய் இறந்ததை அடுத்து அஸ்தியை எடுத்து வந்து கங்கை நதியில் கரைத்தது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவர் பிரமோத் குமார். இவரது பூர்வீகம் பீகார் மாநிலம் புர்னியா (Purnia) மாவட்டமாகும். அந்நாட்டின் ஆக்லாந்தில் 40 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இவர், 10 ஆண்டுகளாக லைகான் எனும் நாயை அன்புடன் பாசத்தோடு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் அந்த நாய் சமீபத்தில் இறந்து போனது. இதையடுத்து இந்து […]
இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து ட்விட் செய்துள்ளார். நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா […]
உ.பியில் பாலியல் பலாத்காரம் செய்ததாக விதவை பெண் அளித்த புகாரில் பா.ஜ.க எம்.எல்.ஏ, அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த விதவை பெண் ஒருவரும், பதோகி தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் (Ravindranath Tripathi) உறவினர் சந்தீப் (sandeep) என்பவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பேசிபழகி வந்துள்ளனர். அதை தொடர்ந்து சந்தீப் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அந்த […]
பலூசிஸ்தான் விடுதலைப் படை நடத்திய பயங்கர தாக்குதலில் 16 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உள்பட 19 பேர் பலியாகியுள்ளனர். தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் அடைக்கலம் கொடுத்து வருவதாக பலூசிஸ்தான் விடுதலைப் படை குற்றம் சாட்டி வருகிறது. மேலும் பாக்., ராணுவ முகாம்களிலேயே லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயிற்சி பெற்று வருவதாகவும் பலூசிஸ்தான் படையினர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவம், I.S.I .உளவுத்துறை மற்றும் லஷ்கர் இ தொய்பா (Lashkar-e-Taiba) தீவிரவாத முகாம்கள் மீது பலூசிஸ்தான் […]
ஜெர்மனியில் இரண்டு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெர்மனியின் ஹனாவ் நகரில் சிஷா மதுபான விடுதி மற்றும் அருகில் சில தொலைவில் இருக்கின்ற மற்றொரு விடுதி என இரண்டு இடங்களில் சரமாரியாக மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். முதலில் மர்ம நபர்கள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளார். இரண்டாவது நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 8 பேர் இறந்துள்ளனர். மேலும் 5 பேரின் நிலைமை […]
அமெரிக்காவில் ராக்கெட் வேகத்தில் காரை இயக்கி சாதனை படைக்க முயற்சி செய்த நபர்தோல்வியடைந்தார். அமெரிக்க நாட்டில் மின்னசொட்டா பகுதியைச் சேர்ந்தவர் கர்ட் ஆண்டர்சன் ( Kurt Anderson) . இவர் ராக்கெட் வேகத்தில் காரை இயக்கி சாதனை செய்ய முயன்றார். இதற்காக அவர் பிரத்யேகமான கார் ஒன்றையும் தயாரித்தார். இதையடுத்து விஸ்கான்சின் (Wisconsin) மாகாணத்தில் பனியால் உறைந்து போயிருக்கும் பியர் ஏரியில் தன்னுடைய சாதனைப் பயணத்தை ஆண்டர்சன் தொடங்கினார். அப்போது பனிப்பாதையில் மணிக்கு 380 கி. மீட்டர் […]
ஆஸ்திரேலியாவில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட பயங்கர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் இருக்கும் மங்களூர் என்ற இடத்தில் சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது வானில் பறந்து கொண்டிருந்த மற்றொரு சிறிய விமானத்தின் மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு விமானங்களும் கீழே வயல்வெளியில் விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது. இதில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த […]
இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் கமல், இயக்குனர் ஷங்கர் இணைந்துள்ள இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார். 85 வயது கதாபாத்திரத்தில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த பட […]
நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று இரவு 10: 30 மணியளவில் […]
லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகிவரும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். ‘இந்தியன் 2’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மத்தியப் பிரதேசம் மாநிலம் போபால் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதன் பின்னர் குவாலியர் நகரில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. அதை தொடர்ந்து […]
தாய்லாந்து நாட்டில் இருக்கும் வணிக வளாகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். தாய்லாந்தின் வடகிழக்கே பாங்காக் நகரிலிருந்து 250 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் நாகோன் ராட்சசிமா பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த 8-ஆம் தேதி ராணுவ வீரர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட ராணுவ வீரரை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்று விட்டனர். அதை தொடர்ந்து இனிமேல் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது […]
ஜப்பான் நாட்டில் ஆஸ்பத்திரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 6 ஆயிரம் முகமூடிகளை திருடர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சீனாவின் வூஹான் நகரில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலககின் பல நாடுகளுக்கு பரவி மிரட்டி வருகிறது. அதில், சீனாவின் அண்டை நாடான ஜப்பானும் அடங்கும். எனவே அங்கிருக்கும் பொதுமக்கள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு அன்றாட பணிகளை செய்து வருகின்றனர். முகமூடி இல்லாமல் யாரையுமே பார்க்கமுடியவில்லை. இந்த நிலையில் அந்நாட்டின் துறைமுக நகரமான கோபேயில் இருக்கும் ஜப்பான் செஞ்சிலுவை […]
அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 3 ஆம் தேதி உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 3-ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அரசு தேர்வுகள் எழுதுபவர்களுக்கு விடுமுறை பொருந்தாது என்றும் கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 14-ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வேலூரில் அடிபட்டு உயிரிழந்த நாய்க்கு அறுவை சிகிச்சை செய்து 5 குட்டிகளை பத்திரமாக கால்நடை டாக்டர் மீட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் மக்கான் சிக்னல் அருகில் நேற்று முன்தினம் காலை நேரத்தில் தெருநாய் ஒன்று சாலையை கடந்து செல்ல முயன்றபோது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஓன்று திடீரென்று நாயின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. ஐயோ பாவம்!… இதில் அந்த நாய்க்கு காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அந்தசமயத்தில் அவ்வழியாக வந்தவர் […]
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருக்கும் சீனாவின் வூகான் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு தனி விமானம் ஒன்று நாளை அங்கு செல்கிறது. கொரோனா வைரஸ் சீனாவின் ஹூபேய் மாகாணம் வூகான் நகரில் முதலில் பரவத்தொடங்கி, தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பயம் காட்டி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரையில் 2,004 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 74,000த்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. இதனிடையே, வைரஸ் தாக்குதல் அதிகம் […]
முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. அமைச்சரவை கூட்டத்தில், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அனைத்துத் துறை அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானாவில் குளிர்பதனக் கிடங்கில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 5 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. ஹரியானா மாநிலம் ஷாகாபாத் அருகில் இருக்கும் நல்வி கிராமத்தில் இயங்கி வரும் குளிர்பதன கிடங்கில், நேற்று இரவு திடீரென 9.30 மணியளவில் அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கிடங்கை சுற்றி இருக்கும் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாத நிலை மற்றும் வாந்தி மயக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டது. இதையடுத்து […]
தங்கம் விலை பவுனுக்கு ரூ 312 உயர்ந்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில வாரம் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிய தங்கத்தின் விலை 31 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 39 ரூபாயும், சவரனுக்கு 312 ரூபாயும் உயர்ந்து விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 312 உயர்ந்து ரூ 31,720-க்கு விற்பனை […]
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூளை செயலற்ற 2 பேரின் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்தனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சச்சின் என்ற 26 வயது தொழிலாளி மற்றும் 61 வயதான மிட்டல் ஆகியோர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரது குடும்பத்தினரும் உறுப்பு தானம் செய்ய தானாக முன்வந்தனர். அதன்படி 2 இருதயங்கள், 4 சிறுநீரகங்கள், 4 கருவிழி வட்டங்கள் மற்றும் எலும்புகள் கடந்த 48 மணி நேரத்தில் வேறு நோயாளிகளுக்குப் பொருத்தப்படுள்ளன. இதன் காரணமாக […]
காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாதுகாப்பு படையினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் இந்திய ராணுவப்படையினருக்கும் இடையே அடிக்கடி துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க போலீசாரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவந்திபோரா அடுத்த டிரால் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவி வருவதை தடுப்பதற்கு போலீசார் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தினர். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சண்டையில் 3 […]
தாய்லாந்து நாட்டில் சிக்னலில் நின்று கொண்டிருந்த லாரியில் இருந்த கரும்பை 2 யானைகள் ரசித்து ருசித்து சுவைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தாய்லாந்து நாட்டின் வடக்குப் பகுதியில் இருக்கும் நகோன் சவான் என்ற இடத்தில் இரண்டு யானைகள் இடமாற்றம் செய்யப்படுவதற்காக இரு லாரிகளில் தனி தனியாக ஏற்றப்பட்டு வேறொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது இடையில் சிக்னல் போடப்பட்டதால் வண்டி நிறுத்தப்பட்டது. லாரிகளில் இரண்டு யானைகளும் நின்றபடி காத்திருந்தன. அப்போது அருகே கரும்பு லோடு ஏற்றிக் […]
மலாலாவை சுட்ட தலிபான் பயங்கரவாதி சிறையிலிருந்து தப்பி சென்றது உண்மைதான் என்று பாகிஸ்தான் தற்போது ஒப்புக் கொண்டுள்ளது. பெண் கல்வி முக்கியத்துவத்தை வலியுறுத்தி பல்வேறு பிரசாரங்களை செய்தவர் மலாலா. இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு பயங்கரவாதியான இசானுல்லா இசான் (Ehsanullah Ehsan) என்பவர் துப்பாக்கியால் சுட்டுள்ளான். இதில் மலாலாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மலாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு பின் குணமடைந்தார். மலாலாவை சுட்ட இசான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். […]
இங்கிலாந்து நாட்டில் கடல் கொந்தளிப்பில் சிக்கிய படகுக்கு டால்பின் மீன்கள் வழிகாட்டியாக வந்த வீடியோ வெளியாகியுள்ளது. பொதுவாக ஆபத்தில் சிக்கினால் டால்பின் வந்து காப்பாற்றும் என்று நாம் கேள்விபட்டிருக்கிறோம். அப்படி உண்மையிலேயே காப்பாற்றுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கிறது. அந்த சந்தேகத்தை போக்கும் வகையில் இங்கிலாந்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆம் அந்நாட்டில் கடந்த சில தினங்களாகவே டென்னிஸ் புயல் கோரத்தாண்டவம் ஆடி கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கார்ன்வெல் […]
தங்கம் விலை பவுனுக்கு ரூ 216 உயர்ந்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில வாரம் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிய தங்கத்தின் விலை 31 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 27 ரூபாயும், சவரனுக்கு 216 ரூபாயும் உயர்ந்து விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 216 உயர்ந்து ரூ 31,624-க்கு விற்பனை […]
சிரியாவில் அரசுப்படையினரால் நடத்தப்படும் வான்வெளி தாக்குதலின் போது தனது 4 வயதுள்ள குழந்தை அச்சப்படக்கூடாது என்பதற்காக, அவளின் கவனத்தை திசை திருப்புவதற்கு தந்தை செய்த செயல் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டு சிரியா நாட்டில் தொடங்கிய உள்நாட்டுப்போர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது என்றே சொல்லலாம். குர்திஷ் போராளிகளின் வசமிருந்த அந்நாட்டின் வடக்கு பகுதிகளை சிரிய அரசு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வசம் கைப்பற்றிவருகின்றனர். மேலும், வடக்கு பகுதியில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் அரசுக்கு […]
பாகிஸ்தானில் கன்டெய்னரை திறக்கும் போது விஷ வாயு தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் இருக்கும் கேமாரி துறைமுகத்துக்கு நேற்று முன்தினம் இரவு சரக்குக் கப்பல் ஒன்று வந்துள்ளது. அந்த கப்பலில் இருந்து கொண்டு வரப்பட்ட காய்கறிகள் நிரம்பிய கன்டெய்னரை ஊழியர்கள் இறக்கி வைத்தனர். அதை தொடர்ந்து அந்த கன்டெய்னர் அருகில் இருக்கும் ஒரு சந்தைக்கு எடுத்து கொண்டு செல்லப்பட்டது. சந்தைக்கு வந்ததும், அங்கே காய்கறிகளை தனி தனியாக […]
பருவநிலை மாறுபாடு பிரச்சனைகளை சமாளிக்க அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 71,000 கோடி ரூபாய் நன்கொடை வழங்க உள்ளார். இது தொடர்பாக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், பருவநிலை மாறுபாடு தான் பூமியின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் புவி நிதி என்ற பெயரில், 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 71,000 கோடி) நன்கொடையாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இயற்கையை உலகை பாதுகாக்கவும், […]
தங்கம் விலை பவுனுக்கு ரூ 192 உயர்ந்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில வாரம் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிய தங்கத்தின் விலை 31 ஆயிரத்தை தாண்டியது. இதையடுத்து இன்று மாலை நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 24ரூபாயும், சவரனுக்கு 192 ரூபாயும் உயர்ந்து விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 192 உயர்ந்து ரூ 31,408-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே […]
தெலுங்கானாவில் ஊர் செல்வதற்கு எந்த வண்டியும் கிடைக்காத விரக்தியில் அரசு பேருந்தை ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் விகராபாத்தில் இருக்கும் (Vikarabad) பேருந்து நிலையத்தில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவர், நேற்று முன்தினம் (16-ஆம் தேதி) இரவு பணி முடிந்து ஊருக்கு செல்வதற்கு காத்துக்கொண்டிருந்தார். நீண்ட நேரம் அவர் நின்று கொண்டிருந்தும், அவ்வழியே எந்த ஒரு பேருந்தோ, வாகனங்களோ வரவில்லை. இதனால் கடுப்பான அவர் உடனே யோசித்து ஒரு முடிவு […]
நைஜர் நாட்டில் அகதிகளுக்கு உணவு வழங்கும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மிதிபட்டு பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியா மற்றும் சாட் நாடுகளின் எல்லையோரத்தில் இருக்கிறது நைஜர் நாட்டின் டிஃபா நகரம். இந்த நகரத்தில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அடிக்கடி நடத்தும் கொடூர தாக்குதலுக்கு உள்ளான நைஜீரிய அகதிகள், சொந்த நாட்டிலுள்ள வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளவர்கள் உள்ளிட்ட 2, 50,000-த்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்தநிலையில் அங்கே இருக்கின்ற […]
பிகில் பட வருவாய் தொடர்பாக வருமான வரித்துறை அலுவலகத்தில் அன்புச்செழியன் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார். கடந்த 5ஆம் தேதி முதல் நான்கு நாட்கள் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 32 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மேலும் நடிகர் விஜய் மற்றும் அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அவரின் வீட்டில் எதுவும் சிக்கவில்லை. இந்த சோதனையின்போது அன்பு செழியன் வீட்டில் 77 கோடி, அசையா சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது […]
2019 ஆம் ஆண்டு நடந்த காலர் தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு நடந்த காவலர் தேர்வு முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 8,888 காவலர் பணியிடங்களை அறிவித்து, ஆகஸ்ட் மாதம் தேர்வு நடைபெற்றது. இதற்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு இறுதிப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே […]
இதுவரை யாரும் பறக்காத உயரத்தை ‘ஜெட் பேக்’ எனப்படும் நவீன இயந்திரம் மூலம் இளைஞர் ஒருவர் எட்டி சாதனை நிகழ்த்தியுள்ளார். அடிக்கடி சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வந்தாலும் தற்போது புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. அதாவது, காற்றை உள்ளிழுத்து பின் அதிவேகமாக வெளித்தள்ளும் ஜெட் பேக் இயந்திரம் மூலம் ஒவ்வொருவரும் அதிக தூரம் சென்று சாதனை நிகழ்த்த வேண்டும் என பயிற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வின்ஸ் ராபெஃட் என்பவர் ஜெட் பேக் […]
ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸார் காணாமல் போகவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் -இ -முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவனான மசூத் அஸார் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தது தொடர்பான 2 வழக்குகளில் தலா 5 1/2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மசூத் அஸார் திடீரென காணாமல் போய் விட்டதாக பாகிஸ்தான் பொருளாதார விவகாரத்துறை அமைச்சர் ஹம்மத் அஸார் (Hammad Azhar) […]
தங்கம் விலை பவுனுக்கு ரூ 88 உயர்ந்து விற்பனையாவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில வாரம் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிய தங்கத்தின் விலை 31 ஆயிரத்தை தாண்டியது . இதையடுத்து இன்று சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 11 ரூபாயும், சவரனுக்கு 88 ரூபாயும் உயர்ந்து விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 88 உயர்ந்து ரூ 31,304-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே […]
சீனாவில், ‘கொரோனா’ வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை, 1,868 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 72 ஆயிரத்து, 436 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில், வூஹான் நகரில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு, தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் அந்நாட்டின், 34 மாகாணங்களில் 31 மாகாணங்களை ஆக்கிரமித்துள்ளது. குறிப்பாக ஹூபய் மாகாணத்தில் இருக்கும் 18 முக்கிய நகரங்களில் மிக அதிகமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு […]
தென்னாபிரிக்கா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியை பாப் டு பிளெஸிஸ் இராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரை சொந்த மண்ணில் இழந்ததால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். 3 வகை கிரிக்கெட் போட்டிக்கும் தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் தலைவராக செயற்பட்டு வந்த பிளெஸிஸ், இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர்கள் உலகக்கோப்பை தொடரில், அணி தோல்வியை சந்தித்ததையடுத்து, ஒருநாள் அணியின் கேப்டன் பதவியை இராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து டெஸ்ட் […]
சிரியாவின் இட்லிப் பகுதியில் சிரிய அரசு செய்யும் அட்டூழியங்களுக்கு ஆதரவு அளிப்பதை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக துருக்கி அதிபர் எர்டோகனிடம் அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேசியுள்ளார் என்றும், இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் வடமேற்குப் பகுதியில் இருக்கும் அலெப்போவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த சில நாட்களாகவே ரஷ்யா உதவியுடன் அரசுப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் […]
சினிமா குடும்பத்தில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷின் ஒரு சில திரைப்படங்கள் தோல்வி அடைந்தாலும் அவருக்கான வாய்ப்புகள் சற்றும் குறையவில்லை. கீர்த்தி நடித்த படங்கள் தோல்வியடைந்தாலும், அவர் அதிகம் உழைப்பதால், தோல்வியடைந்த கதாபத்திரங்களிலும் புகழ்ந்து பேசப்படுகிறார்.சினிமாவிற்கு வந்த சில வருடத்திலேயே இளைய தளபதி விஜயுடன் 2 படங்கள் நடித்துவிட்ட கீர்த்தி சுரேஷ், தற்போதும் கூட […]
வடக்கு புர்கினா பாசோ நாட்டில் உள்ள தேவாலயம் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குலில் 24 பேர் உயிரிழந்துள்ளதோடு மட்டுமில்லாமல் 18 பேர் காயமடைந்துள்ளனர். வடக்கு புர்கினா பாசோ நாட்டில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) வாராந்திர ஆராதனையின் போது, பன்சி கிராமவாசிகள் மீது ஆயுதங்களோடு வந்த பயங்கரவாதிகள் குழுவொன்று இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது, காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், சிலர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பிராந்திய ஆளுநர் கர்னல் சல்போ கபோரே […]
நடிகை கஸ்தூரி தற்போது உள்ள நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் செயல் பட ஆரம்பி விட்டார் என விமர்சனங்கள் எழுகிறது. ஆம், 80-களில் சினிமாவை ஆட்சி செய்தவர்களுள் முக்கிய பங்கு நடிகை கஸ்தூக்கும் உண்டு. அந்த அளவிற்கு நடித்து அசத்தியிருப்பார். சொல்லப்போனால் சத்யராஜ் நடித்த ‘அமைதிப்படை’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். ஆனால் அதன் பின் திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். இவரது மகளுக்கு புற்று நோய் ஏற்பட்ட காரணத்தால் சினிமாவை விட்டு முற்றிலும் […]
தர்மபுரியில் காதலிக்கு காதலர் தினத்தன்று வாழ்த்து தெரிவித்த இளைஞனை விரிவுரையாளர் தாக்கியதால் மனமுடைந்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் மாக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் நவீன் (வயது 23) என்பவர் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்கிறார். முன்னதாக நவீன் அரசு கலைக்கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது, அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில், காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் […]
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆணுக்கு பதில் பெண் குழந்தை பிறந்ததால் பெற்ற தாயே தன் குழந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் ஷஜாபூர் மாவட்டம் அம்ஹோரியா கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சு சிங். 26 வயதான இவருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இதற்கிடையே மீண்டும் கர்ப்பமாக இருந்த இவருக்கு கடந்த12 ஆம் தேதியன்று (புதன்கிழமை) அம்மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து […]
ஏர் இந்தியா விமான நிறுவனம் தனியாருக்கு விற்கப்பட்டாலும், அதன் பெயர் மாற்றப்படாது என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இந்தியர்களை கொரோனா தொற்று பாதித்த சீனாவின் ஊகானில் இருந்து பத்திரமாக மீட்ட ஏர் இந்தியா ஊழியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பாராட்டு கடிதம் வழங்கும் நிகழ்வு டெல்லியில் நடைபெற்றது. அதில் பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, தனியாருக்கு ஏர் இந்தியாவை விற்கும் போது அதன் பணியாற்றும் ஊழியர்களை குறிப்பிட்ட […]
ஸ்வீடன் நாட்டில் புதிய ஆடம்பரமான மிதக்கும் ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது அங்குள்ள மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்வீடன் நாட்டில் மிதக்கும் மாளிகை (ஹோட்டல்) லூலே நதியில் வட்ட வடிவத்திலான அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கு மரத்தினால் தயார் செய்யப்பட்ட நடைபாதை வழியாக நாம் சென்றடைய முடியும். மேலும் ‘ஆர்க்டிக் பாத் (‘The Arctic Bath) எனும் இந்த மிதக்கும் ஹோட்டலின் நடுவில் மிகப்பெரிய ஐஸ் பாத் செய்யுமிடமும் உள்ளது.இந்த ஹோட்டல் கட்டடக் கலைஞர்களான பெர்டில் ஹார்ஸ்ட்ரோம் மற்றும் […]
அமெரிக்காவில் நள்ளிரவில் வீட்டில் பற்றிய தீயிலிருந்து தனது குடும்பத்தை 5 வயது சிறுவன் காப்பாற்றி சம்பவம் அனைவரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆம், நள்ளிரவில் ஒரு குடும்பம் நன்றாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அனைவருமே கண்மூடி அயர்ந்து தூங்கி கொண்டிருந்தாலும், அதில் 5 வயது சிறுவன் நோவா மட்டும் திடீரென விழித்து தீ பற்றி எரிவதை பார்த்துவிட்டான். […]
நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் ,குற்றவாளிகளுக்கு மார்ச் 3-ஆம் தேதி தூக்குத்தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. கடந்த 2012ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. முக்கிய 4 குற்றவாளிகளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள தூக்கு தண்டனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு குற்றவாளிகளும் தங்களுக்கான சட்ட வாய்ப்பை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் […]