Categories
சினிமா நாமக்கல் மாவட்ட செய்திகள்

இரசிகரின் குடும்பத்தினருக்கு விஜய் செய்த உதவி!

பொருளாதார ரீதியில் கஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள குடும்பம் ஒன்றுக்கு நடிகர் விஜய் உதவி செய்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி முருகன் சமீபத்தில் விபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவை அடுத்து அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டு வருவதை விஜய் இரசிகர் மன்ற நிர்வாகி மூலம் விஜய் அறிந்துள்ளார். இதனையடுத்து அந்த குடும்பத்திற்கு விஜய்  50, 000 ரூபாய் நிதி உதவி செய்துள்ளதாகவும் மேலும் உதவி தேவைப்பட்டால் தன்னை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பங்களாதேஷ் அணி விபரம்… ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் அறிவிப்பு..!!

ஜிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் 16பேர் கொண்ட பங்களாதேஷ் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணியில், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து விலகிய விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் முஷ்ஃபிகுர் ரஹீம் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். மேலும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் கவனம் செலுத்தும் நோக்கில், அனுபவ வீரரான மொஹமதுல்லா அணியில் இடம்பெறவில்லை. அதேபோல, இறுதியாக 2017ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய டாஸ்கின் அகமது, மெஹிடி ஹசன் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் அணியில் இடம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யை கண்டு கொள்ளாத அட்லீ – கோவத்தில் ரசிகர்கள்.!

தளபதி விஜய்யை கண்டு கொள்ளாததால் அட்லீ மீது  ரசிகர்கள் கோவத்தில் உள்ளனர். தமிழ் சினிமா திரையுலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் அட்லி. இவரின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையும் அள்ளித்தந்தது. இதுவரை 4 திரைப்படங்களை இயக்கியுள்ள அட்லியின் 3 திரைப்படங்கள் விஜயின் திரைப்படம் தான். மேலும், அட்லி எப்போதும் விஜய்யை தனது அண்ணன் என்று கூறிக்கொண்டு வருகிறார். ஆனால், சமீபத்தில் விஜய் […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் ஒரே சமயத்தில் 2 கிராமங்களில் தாக்குதல்: 30 பேர் உயிரிழப்பு!

நைஜீரியாவில் வடக்கு மாகாணமான காட்சினாவில் உள்ள 2 கிராமங்களுக்குள் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 30பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில் வடக்கு மாகாணமான காட்சினாவில் உள்ள 2 கிராமங்களுக்குள் போகோஹரம் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில், 30பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்த நிலையில், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இத்தாக்குதல் சிறுவர்கள் மற்றும் முதியவர்களை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. 2 கிராமங்களிலும் போலீஸ் பாதுகாப்பை மீறி இந்த தாக்குதல் நடந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

ட்ரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஐரோப்பாவுக்கு வர்த்தகத்தில் பெரும் அதிகரிப்பு.!!

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி (உபரி) வர்த்தகம் 2019ஆம் ஆண்டில் மேலும் அதிகரிப்பை எட்டிள்ளது. இதன்படி, 2019இல் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்றுமதி வர்த்தகம் 165.5 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 231.7 பில்லியன் யூரோ அளவுக்கு இறக்குமதியும் அதைவிட அதிகமாக 384.4 பில்லியன் யூரோ அளவுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. 2018ஆம் ஆண்டை விடவும் இது 11 சதவீத அதிகரிப்பாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அதுல்யா ரவியின் புதிய சிகை அலங்காரம்!

நடிகை அதுல்யா ரவி  புதிய ஹேர்ஸ்டைலில் எடுத்த போட்டோஷூட்  புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகியுள்ளது. அதுல்யா ரவி நடிப்பில் இதுவரை வெளியான காதல் கண் கட்டுதே,  கேப்மாரி மற்றும் நாடோடிகள் 2 என எந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Glowing #AthulyaRavi @AthulyaOfficial @teamaimpr pic.twitter.com/YVCqkVCinJ — Ramesh Bala (@rameshlaus) February 16, 2020

Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண புகைப்படத்தை வெளியிட்டார் நடிகை ஸ்ரேயா!

தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் இருவீட்டார் முன்னிலையில் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் தனக்கு திருமணம் ஆனதை அவர் ஒப்புக்கொண்டாலும் திருமண ஒளிப்படங்களை  அவர் வெளியிடவில்லை. இந்த நிலையில் அவர் திருமண புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் மணமக்கள் இருவரும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி […]

Categories
மாநில செய்திகள்

‘தமிழ்நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை’ – மக்கள் நல்வாழ்வுத்துறை.!

தமிழ்நாட்டில் யாருக்கும் கோவிட்-19 (கொரோனா வைரஸ்) பாதிப்பு இல்லையெனவும், 2 ஆயிரத்து 181 பயணிகள் பொது சுகாதாரத் துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் எனவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை வெளியிட்டுள்ள கொரோனா வைரஸ் கண்காணிப்பு குறித்த தகவலில், சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்குதல் பாதிப்புகள் 26 நாடுகளில் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் இந்த நோய் வராமல் தடுப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசின் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ – அரிவகை மூலிகை மரங்கள் எரிந்து நாசம்..!

பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்துவருவதால் அரிய வகை மூலிகை மரங்கள், உயிரினங்கள் தீயில் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேற்குத் தொடர்ச்சி வனப்பகுதிகளில் காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் கோடை காலங்களில் மட்டுமே காய்ந்த மரங்களின் உராய்வினால் காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போது சற்று பனிப்பொழிவிருக்கும் காலத்திலேயே எதிர்பாராதவிதமாக தீப்பற்றியுள்ளது. பெரியகுளம் தைலாராமன் வனப்பகுதிகளில் சுமார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பேருந்தை வேகமாக ஓட்டிய ஓட்டுநர் – தட்டிக் கேட்ட பயணிக்கு அடி.!

தனியார் பேருந்தை வேகமாக ஓட்டியதற்கு கண்டிப்பு தெரிவித்த பயணியை ஓட்டுநர் அடித்து பேருந்திலிருந்து கீழேயிறக்கியதால் பரபரப்பு நிலவியது. கோவை ரயில் நிலையம் அருகில் இன்று ஒண்டிப்புதூரிலிருந்து உக்கடம் வழியாக காந்திபுரம் சென்ற தனியார் பேருந்தை அதன் ஓட்டுநர் மிக வேகமாக ஓட்டியுள்ளார். அதனால் பயந்த பயணி ஒருவர் மெதுவாக ஓட்டுமாறு ஓட்டுநரிடம் கூறியுள்ளார். அதை, சிறிதும் பொருட்படுத்தாத ஓட்டுநர் தொடர்ந்து வேகமாகவே ஓட்டியுள்ளார். அதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கோபமடைந்த ஓட்டுநர், அந்தப் பயணியை அடித்து […]

Categories
தேசிய செய்திகள்

சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள சிசிடிவி காட்சியை நாங்கள் வெளியிடவில்லை – பின்வாங்கும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகம்!

மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்தும் தாக்குதல் குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள நிலையில், அதனை நாங்கள் வெளியிடவில்லை என ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் பின்வாங்கியுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள், கடந்த ஜனவரியில் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல ஜாமியா மிலியா மாணவர்கள் முயன்றனர். மாணவர்களின் இப்போராட்டத்தில் பொது மக்களும் பெரும் திரளாக […]

Categories
மாநில செய்திகள்

எழுவர் விடுதலை தொடர்பில் ஆளுநருக்கு முதல்வர் அழுத்தம் கொடுப்பார் – அற்புதம்மாள் நம்பிக்கை!

உச்சநீதிமன்றம் உத்தரவுபடி, ஏழு தமிழர் விடுதலை குறித்து என்ன முடிவு செய்யப்பட்டுள்ளது என ஆளுநரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்பார் என அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடலூரை அடுத்த ஆண்டாள் முள்ளிப்பள்ளம் பகுதியில் திராவிடர் கழக மூத்த உறுப்பினர் கோதண்டபாணி கமலா அம்மாள் அவர்களின் படத்திறப்பு விழாவில் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கலந்து கொண்டார். அதன் பின்னர் ஊடகங்களை சந்தித்த அளித்த அவர், ’முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நிரபராதிகளான என் மகன் பேரறிவாளன் உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

‘முடிந்தால் ஆட்சியை கவிழ்த்துப் பாருங்கள்’ – பாஜகவுக்கு சிவசேனா சவால்!

‘நான் பால் தாக்கரேவின் மகன், பாஜகவின் சவாலை ஏற்கிறேன்’ என்று கூறிய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, ‘முடிந்தால் சிவசேனா ஆட்சியை கவிழ்த்து பாருங்கள்’ என மத்திய அரசுக்கு பகிரங்கமாக சவால் விடுத்தார். மகாராஷ்டிராவின் வடக்கு எல்லை மாவட்டமான ஜல்கான், முக்தாய் நகரில் நடந்த விவசாயிகள் பேரணியில் மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார். இந்தப் பேரணியில் மூத்த தலைவரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனருமான சரத் பவாரும் கலந்துகொண்டார். விவசாயிகள் பேரணி பேரணியில் பேசிய உத்தவ் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஆயூர்வேதம்!

கொரோனா வைரஸ் தொற்று சீனா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் மிக வேகமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றை ஆயூர்வேத மருந்துகள் மூலம் கட்டுப்படுத்த முடியும். இயற்கையாகவே மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பல்வேறு அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. தவறான உணவுப் பழக்கம், மன அழுத்தம், தூய்மைக் குறைபாடு போன்ற காரணங்களால் இந்த நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுகிறது. சுகாதாரமற்ற சூழலில் இருந்து புதிதாகத் தோன்றும் நுண்ணுயிரியானது உயிர்களின் செல்களில் பாதிப்பை ஏற்படுத்த […]

Categories
மாநில செய்திகள்

ஓரிரு நாளில் தமிழ்நாடு பாஜக தலைவர் அறிவிப்பு..!

புதிய தமிழ்நாடு பாஜக தலைவர் அறிவிக்க பாஜக அதிக காலம் எடுத்துக்கொள்வது, தமிழ்நாடு பாஜகவிலுள்ள உட்கட்சி பூசல் குறித்த யூகங்கள் வலுப்பெற உதவின. இருப்பினும் தற்போது தமிழ்நாடு பாஜக தலைவர் உறுதிசெய்யப்பட்டதாகவும், ஓரிரு நாள்களில் அதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், 5 மாதங்களுக்கு முன் தெலங்கானா ஆளுநராக அறிவிக்கப்பட்டார். 5 மாதங்களுக்கு மேலாகியும், தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது […]

Categories
தேசிய செய்திகள்

‘அது ஒரு கோரிக்கை திட்டம், தொடர்ந்து செயல்படுத்த விரும்புகிறோம்’: நிர்மலா சீதாராமன்..!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், கோரிக்கையின் அடிப்படையில் தொடர்கிறது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாட்டின் வரவு-செலவு திட்ட நிநிதிலை அறிக்கையை நாடாளுமன்றத்தின இரு அவைகளிலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2ஆம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்துக்கு கடந்த நிதியாண்டை காட்டிலும் தற்போது நிதி ரூ. 8 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த நிதியாண்டில் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக பிரமுகர் என்னை மிரட்டினார் – அச்சம் தெரிவித்த முன்னாள் உ.பி முதலமைச்சர்!

பா.ஜ.க பிரமுகர் தன்னை தொலைபேசி மூலம் மிரட்டியதாக முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அச்சம் தெரிவித்துள்ளார். பாஜக மூத்தத் தலைவர் ஒருவர் தனக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாக முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். முன்னதாக, கன்னவுஜில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் அவர் கலந்துகொண்டு விலைவாசி உயர்வு குறித்து பேசினார். அப்போது, இளைஞர் ஒருவர் அவரின் பேச்சை தடுத்து நிறுத்தி நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வீர்கள் என கேள்வி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நாய் கூறும் கதை – ‘அன்புள்ள கில்லி’ மோஷன் போஸ்டர் வெளியீடு..!

லாப்ரடார் வகை நாயின் நடிப்பில், இயக்குநர் ஸ்ரீனாத் ராமலிங்கம் இயக்கிவரும் ‘அன்புள்ள கில்லி’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று வெளியானது. ஸ்ரீனாத் ராமலிங்கம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அன்புள்ள கில்லி’. சாந்தினி, மைம் கோபி, தொகுப்பாளர் ஆஷிக், நாஞ்சில் விஜயன், பூ ராமு, இந்துமதி, ஸ்ரீ ரஞ்சனி, பேபி கிருத்திகா என பெரிய நடிகர் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. லாப்ரடார் வகையைச் சேர்ந்த நாய்தான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாம். தனது முதல் படமான ‘உனக்கென வேணும் சொல்லு’ […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் இல்லாத கெஜ்ரிவால் அமைச்சரவை.!!

டெல்லி அமைச்சரவையில் ஒரு பெண் கூட இடம்பெறாதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. 70 இடங்களில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கெஜ்ரிவாலுடன் மணிஷ் சிசோடியா, சத்யந்தர் ஜெயின், […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் சென்ற ஐநா பொதுச் செயலாளர்!

சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்துகொள்ளும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் (Antonio Guterres) பாகிஸ்தான் சென்றுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு பாகிஸ்தான் உறைவிடம் தந்துவருகிறது. இதுகுறித்த சர்வதேச மாநாடு பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. இதில், உரையாற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் பாகிஸ்தான் சென்றுள்ளார். பாகிஸ்தான் அரசு, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் இணைந்து இந்த மாநாட்டை நடத்தவுள்ளது. இதனை, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் […]

Categories
உலக செய்திகள்

நைட் கிளப்பில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு, 4 பேர் காயம்!

அமெரிக்காவிலுள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான கனெக்டிகட் தலைநகர் ஹார்ட்ஃபோர்ட் நகரிலுள்ள நைட் கிளப் ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) அதிகாலை திடீரென்று துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதுகுறித்து காவல் துறையினர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், அதிகாலை 3 மணியளவில் ஹார்ட்ஃபோர்டின் தெற்கு பகுதியிலுள்ள ஃபிராங்க்ளின் அவென்யூவில் உள்ள இரவு விடுதியில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 […]

Categories
மாநில செய்திகள்

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி உயர்மட்டக்குழு அமைக்க திட்டம்..!

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயல்பாட்டில் கொண்டுவருவதற்கு உயர்மட்டக்குழு அமைக்க திட்டம் வகுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. மாநில மருத்துவக் கல்வி இயக்க தேர்வுக் குழு சார்பில் இங்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும், அதன் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வசம் இருந்தது. இந்நிலையில், இதனை முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் மீதான கடனை அரசே செலுத்தும் – ஆர்.பி. உதயகுமார்

மக்கள் மீது இருக்கும் கடனுக்காக எந்த அரசும் மக்களை கடனை திருப்பி செலுத்துங்கள் என்று சொல்வது கிடையாது. அரசுதான் கடனை அடைத்து வருகிறது என கமல்ஹாசன் பேச்சுக்கு திருமங்கலத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பதிலளித்தார். மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ப.சிதம்பரம் இந்திய பொருளாதாரம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வாகன சோதனையில் சிக்கிய கொள்ளையர்கள் – 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கம் பறிமுதல்..!!

பெருங்கொளத்தூரில் வாகன சோதனையில் சிக்கிய கொள்ளையர்கள் இருவரிடமிருந்து 5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னை தாம்பரம், புறநகர் பகுதிகளில் இரவு நேரங்களில் அதிகளவில் கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதால், காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி, நேற்று பீர்க்கன்காரணை காவல்துறையினர் பெருங்களத்தூரில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில், இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை பிடித்தனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர்களின் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகையில் குடிக்க பணம் தர மறுத்த சகோதரி மீது பெட்ரோல் ஊற்றிய சகோதரர் – காப்பாற்றிய உறவினரும் படுகாயம்..!!

குடிப்பதற்கு பணம் தர மறுத்த சகோதரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற போது சகோதரரும் , காப்பாற்றிய உறவினரும் தீவிபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர். நாகை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (39). இவர், திருமணம் நடைபெறாத விரக்தியில் குடி பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். இந்நிலையில், மகேஷ் திருவள்ளுவரில் வசிக்கும் தனது சகோதரி மஞ்சுளா(36) வீட்டிற்கு துக்க காரியத்துக்கு வந்துள்ளார். அங்கு குடிக்க பணம் கேட்டு, தனது சகோதரி மஞ்சுளாவிடம் தகராறு […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஓபிஎஸ் சகோதரர் தோட்டத்தின் ஓட்டுநர் இறப்பில் சந்தேகம்? – உறவினர்கள் சாலை மறியல்..!!

துணை முதலமைச்சர் ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜாவின் தோட்டத்தில் வேலை செய்த டிராக்டர் ஓட்டுநர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், போடி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட போடந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி (50). இவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதர் ஓ.ராஜாவிற்கு சொந்தமான தோட்டத்தில், கடந்த 5வருடங்களாக டிராக்டர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் இன்று காலை வேலைக்கு சென்ற முனியாண்டி இறந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: ஹர்மன்ப்ரீத் கவுர் கடந்து வந்த பாதை!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் கவுர் கடந்து வந்த பாதைகள் பற்றி பார்க்கலாம். சரவ்தேச அளவில் பார்த்தால் இந்தியாவில் கிரிக்கெட் மதம் தான். ஆனால் அந்த மதம் ஆடவருக்கானது. மகளிர் கிரிக்கெட்டை நேரடியாக ஒளிபரப்புவதற்கே இங்கே ஆயிரம் பிரச்னைகள் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு தெருவிலும் கிரிக்கெட் விளையாடுவதற்கு 100 ஆண்கள் கிடைப்பார்கள். ஆனால் அதே தெருவில் எத்தனை பெண்கள் கிரிக்கெட் ஆடுகிறார்கள் எனப் பார்த்தால், 0.001% தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மைதானத்திற்குள் ‘சிங்கம்’ நுழையபோகும் தேதி தெரியுமா?

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை நேற்று வெளியான நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி மார்ச் 1-ஆம் தேதி சென்னையில் பயிற்சியை தொடங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29-ஆம் தேதி தொடங்கப்படவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை – மும்பை அணிகள் மோதவுள்ளன. இதில் சென்னை அணியின் கேப்டன் தோனி உலகக்கோப்பைத் தொடருக்கு பின் சர்வதேச போட்டிகளில் ஆடாமல் ஓய்வில் உள்ளார். தோனியின் நிலை குறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி, அணியின் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்!

விசுவக்குடி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் அடக்கிய காளையர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடி கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய்த்துறையினர் விலங்கு நல வாரியம் அலுவலர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, திருச்சி மாவட்டங்களிலிருந்து 450 ஜல்லிக்கட்டு காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

‘நமஸ்தே ட்ரம்ப்’- ட்ரம்பை வரவேற்கத் தயாராகும் இந்தியா!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்திய வருகையை தேசிய அளவில் பிரபலப்படுத்தும் நோக்கில், இனி அவரது வருகை ‘நமஸ்தே ட்ரம்ப்’ என்றே அழைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப் இரு நாள் அரசு முறை பயணமாக வரும் பிப்ரவரி 24,25 ஆகிய தேதிகளில் இந்தியா வரவுள்ளார். 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் ட்ரம்ப் இந்தியா வருவது இதுவே முதல்முறை என்பதால், இப்பயணம் சர்வதேச அளவில் மிக முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

பதஞ்சலி யோகா மையத்தினை தொடங்கி வைத்த பாபா ராம்தேவ்!

பதஞ்சலி யோகா சமிதி சார்பில் உடல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் இலவச யோகா பயிற்சி மையத்தை யோகா குரு பாபா ராம்தேவ் தொடங்கி வைத்தார். பதஞ்சலி யோகா சமிதி சார்பில் 3 நாட்கள் நடைபெறும் யோகா பயிற்சி முகாம் புதுச்சேரி கடலூர் செல்லும் சாலையில் உள்ள ஏஎப்டி மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. இதில் யோகா குரு பாபா ராம்தேவ் கலந்துகொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்து காண்பித்து யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல்லில் 2500 கிலோ ஆட்டுக்கறி விருந்து – 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!!

பரமத்தி வேலூர் அருகேயுள்ள திருப்பதி முனியப்பசாமி கோயிலில் 2 ஆயிரத்து 500 கிலோ ஆடுக்கறி விருந்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த சேளூர் சாணார்பாளையத்தில் பிரசித்திப் பெற்ற 60 அடி உயரம், 25 அடி அருவாள் ஏந்திய திருப்பதி முனியப்பசாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதைத்தொடர்ந்து இன்று மாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெற்றது. […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பிரியாணி கடை, பியூட்டி பார்லர்…இப்போ பெட்ரோல் பங்க்…!

கீழ்வேளூர் பகுதியில் பெட்ரோல் பங்க் ஊழியரை திமுகவினர் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், கீழ்வேளூர் அடுத்துள்ள கூத்தூர் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கில், கோகுர் கிராமத்தைச் சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இந்தப் பெட்ரோல் பங்கிற்கு கீழ்வேளூர் திமுக சேர்மன் வாசுகி, அவரது கணவரும் திமுக துணை ஒன்றிய செயலருமான நாகராஜன் ஆகியோர் தங்களது காரில் டீசல் போட வந்துள்ளனர். அப்போது, 300 […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பலமுறை கண்டித்த கணவன்… கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்… நேரில் பார்த்து அரங்கேறிய சம்பவம்..!!

திருமணத்தை மீறிய உறவில் இருந்த மனைவியையும், அவருடைய ஆண் நண்பரையும் பெண்ணின் கணவர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நந்தம் காலனியைச் சேர்ந்தவர் சண்முகம். மேளம் வாசிக்கும் தொழில் செய்துவரும் இவருக்கு, திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். சண்முகத்தின் எதிர் வீட்டில் வசிப்பவர் ராமமுர்த்தி. திருமணமாக ராமமுர்த்தி அதே ஊரில் கூலி வேலை செய்துவருகிறார். இந்நிலையில் ராமமுர்த்திக்கும் சண்முகத்தின் மனைவி மாரியம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

பெண் பயணிக்கு பாலியல் தொல்லை – ஆட்டோ ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு..!

ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்ற ஆட்டோவின் ஒட்டுனரை காவல் துறையினர் வலைவீசித் தேடிவருகின்றனர். ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பல்லவி என்பவர் சென்னை போருரில் உள்ள தனியார் மருந்துக்கடையில் பணியாற்றிவருகிறார். இவர், நேற்று இரவு தனது சொந்த ஊரான ஆந்திராவிற்குச் செல்ல, ஆட்டோ மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தார். செல்லும் வழியில் ஆட்டோவின் ஒட்டுனர் இருட்டான பகுதியில் வண்டியை நிறுத்தி, அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘பாராஸைட்’ தயாரிப்பாளருக்கு எதிராக வழக்கு – விஜய் படத் தயாரிப்பாளர் தகவல்..!

ஆஸ்கர் வென்ற ‘பாராஸைட்’ படத்தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர்வது குறித்து சர்வதேச வழக்கறிஞர்களுடன் ஆலோசிப்பதாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் தேனப்பன் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் கொரிய மொழியில் போங் ஜூன் ஹோ இயக்கத்தில் வெளியான ‘பாராஸைட் திரைப்படத்திற்கு சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ‘பாராஸைட்’ படம் சிறந்த திரைப்படம், சிறந்த […]

Categories
மாநில செய்திகள்

தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்..!

தடியடி நடத்திய காவல் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார். மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி திருச்சி சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திவருகின்றனர். மக்களின் இந்த உணர்வுகளை தமிழ்நாடு அரசும், காவல் துறையும் புரிந்து கொள்ளவில்லை. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற […]

Categories
தேசிய செய்திகள்

தோல்வியுடன் சொந்த மண்ணில் விடைப்பெற்றார் லியாண்டர் பயஸ்!

பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் லியாண்டர் பயஸ் ஜோடி தோல்வி அடைந்தது. இந்த ஆண்டுக்கான பெங்களூரு ஓபன் தொடர் பெங்களூருவில் நடைபெற்றது. இந்திய டென்னிஸின் அடையாளமாக திகழும் லியாண்டர் பயஸ் இந்த ஆண்டின் இறுதியில் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்படி சொந்த மண்ணில் அவர் பங்கேற்ற கடைசி டென்னிஸ் தொடர் இதுவாகும். இந்நிலையில், இந்தத் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி […]

Categories
உலக செய்திகள்

இப்படி ப்ரபோஸ் பண்ணா யாரும் நோ சொல்ல மாட்டாங்க..! – ராணுவ வீரரின் “ஐ லவ் யூ”!

ராணுவ வீரர் ஒருவர் பீரங்கிகளை இதய வடிவில் நிறுத்தி, தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை வெளிப்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. ‘காதல்’ என்பது வெறும் வார்த்தை அல்ல அது மனிதர்களின் மனதில் இருக்கும் ஒரு இணை பிரியா அங்கம். இளமைப் பருவத்தில் தொடங்கும் காதலானது முதுமை வரை நம்மை பின் தொடர்ந்துவருகிறது. இவ்வாறான காதலை வெளிப்படுத்த தயங்கும் மனிதர்களின் மத்தியில், ஒரு சிலர் காதலை வித்தியாசமாக வெளிப்படுத்தி அசத்துவதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் ஒருவர் தனது காதலியிடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யுவராஜ் சிங்கின் காதலர் தின பதிவை கலாய்த்த இர்பான் பதான்!

காதலர் தினத்தின்று இன்ஸ்டாகிராமில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் பதிவிற்கு, இர்பான் பதான் கிண்டலாக பதிலளித்துள்ளார். காதலர்தினம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பலரும் தங்களது காதலை சமூக வலைதளப் பக்கங்களில் வெளிப்படுத்தினர். அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், தனது மனைவிதான் என்றும் தனது காதலி என […]

Categories
தேசிய செய்திகள்

12 மாணவர்களுடன் சென்ற பள்ளி வேன் தீப்பிடித்து விபத்து… 4 குழந்தைகள் உடல்கருகி பலி… பஞ்சாப்பில் சோகம்..!

பஞ்சாப்பில் பள்ளி வேன் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதில் 4 குழந்தைகள் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பயின்று வரும் 12 மாணவ, மாணவிகள் நேற்று பள்ளி முடிந்ததும் வேனில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.  அப்போது வழியில் திடீரென அந்த வேன் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதனால் வேனிற்குள் அமர்ந்து இருந்த குழந்தைகள் பதறிப்போய் தங்களை காப்பாற்றும்படி அலறியுள்ளனர். உடனே  வேனை […]

Categories
தேசிய செய்திகள்

சொன்னா கேளு லவ் பண்ணாத… முற்றிய காதல்… காதலனுடன் சேர்ந்து அம்மாவை கொலை செய்த மகள்..!

டெல்லியில் காதலைக் கண்டித்ததால் பெண் காவலரை சொந்த மகளே காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்குநாள் காதல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக இன்றைய கால கட்டத்தில் சிறு வயதிலேயே காதல் பூக்கின்றது. ஆம், காதலில் விழுந்த பலர் காதலுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள். சிலர் வீட்டில் காதல் விவகாரம் தெரிந்து, அதற்கு எதிர்ப்பு கிளம்பிவிட்டால், தோல்வியில் இருவரும் தற்கொலை செய்து கொள்வதும், வீட்டை விட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆதரவு… வைரலான வீடியோ… சிக்கிய கல்லுரி மாணவர்கள்..!!

கர்நாடகாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட பொறியியல் கல்லுரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் (Hubli)  கேஎல்இ(kle) பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் வெளி மாநிலத்திலிருந்தும் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதன்படி காஷ்மீரைச் சேர்ந்த 3 மாணவர்கள், பாகிஸ்தானிற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து சில நாட்களுக்கு முன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அந்த 3 மாணவர்களையும் அம்மாநில போலீசார் கைது […]

Categories
தேசிய செய்திகள்

காதலர் தினத்தில்.. காதலிக்க மாட்டோம்… உறுதி மொழியெடுத்த மாணவிகள்.. புகாரளித்த தேசிய விருது பெற்ற சிறுமி..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 12 வயது சிறுமி ஒருவர் மாநில கூடுதல் போலீஸ் இயக்குநரிடம் புகாரளித்துள்ளார். மகாராஷ்ட்ரா மாநிலம் அமராவதியில் இருக்கும் ஒரு தனியார் கல்லுரியில் காதலர் தினத்தை முன்னிட்டு காதல் திருமணம் செய்ய மாட்டோம் என அங்கு பயிலும் மாணவிகளை வற்புறுத்தி கட்டாயமாக உறுதி மொழி ஏற்க வைத்துள்ளதாக, ஜென் சதவர்தே (Zen Sadavarte) என்ற 12 வயது சிறுமி கூடுதல் போலீஸ் இயக்குனரிடம் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வம்புக்கு இழுக்கிறதா ஈரான் ?… அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீசி தாக்குதல்..!

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு மீண்டும் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் அமெரிக்கா நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஈரான் கடந்த மாதம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் இறந்து விட்டனர் என ஈரான் அறிவித்தது. ஆனால் அப்படி யாரும் […]

Categories
உலக செய்திகள்

புல்வாமா தாக்குதல் நடத்திய மசூத் அசாரை குடும்பத்தோடு காணவில்லை – பாகிஸ்தான்..!

ஜெய்ஷ்-இ-முகமது  இயக்கத் தலைவன் மசூத் அசாரை காணவில்லை என பாகிஸ்தான் தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அவ்வளவு எளிதில் நாம் மறக்க முடியாத புல்வாமா தாக்குதல் சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கோர தாக்குதலில், 40 இந்திய சி.ஆர்.பி.எப் (CRPF) வீரர்கள் உயிர் தியாகம் செய்தனர். இந்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து […]

Categories
உலக செய்திகள்

ஹவுதி கிளர்ச்சி படைக்கு பதிலடி… சவுதி தலைமையில் தாக்குதல்… 31 பேர் மரணம்..!!

ஏமனில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் அப்பாவி மக்கள் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சிபடையினருக்கு ஆதரவாக ஈரான் நாடு செயல்படுகிறது. அதே சமயம் அரசு படையினருக்கு ஆதரவாக சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையினரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த இரு பிரிவினருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று அல் ஜாவ்ப் மாகாணத்தில் பறந்து கொண்டிருந்த சவூதி அரேபியா […]

Categories
உலக செய்திகள்

அருங்காட்சியகம் மற்றும் மசூதியை பார்த்து ரசித்த ட்ரம்ப் மகள்..!

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவான்கா, அபுதாபியில் இருக்கும் லூவர் அருங்காட்சியகத்தை ஆர்வமுடன் பார்த்து ரசித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா அபுதாபியில் நடைபெற்ற பெண்களுக்கான தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் லூவர் அருங்கட்சியகத்திற்கு சென்ற இவான்கா, அங்கே இருந்த கலை வடிவங்களை பார்த்து ரசித்தார். மேலும், சிலைகள் மற்றும் கலைப்பொருட்கள் தொடர்பான வரலாற்றையும் அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து கொண்டார். அதைதொடர்ந்து இவான்கா, அங்கிருந்து அதிகாரிகளுடன் துபாயில் உள்ள கிராண்ட் மசூதிக்கு சென்று, இஸ்லாமிய முறைப்படி […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி அரசியலுக்கு வந்தால் மனதார வரவேற்போம் – ஆர்.பி.உதயகுமார்..!!

ரஜினியை வரவேற்கிறோம், மக்கள் பணியாற்ற வேண்டும், மக்கள் அங்கீகாரம் கொடுப்பதை மக்களோடு சேர்ந்து நாங்களும் பார்ப்பதற்கு ஆர்வத்தோட இருக்கிறோம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற அன்னதானம் வழங்கும் விழாவை தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி .உதயகுமார் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் பத்தாவது நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் […]

Categories
மாநில செய்திகள்

கதறி அழுத வைகோ: கட்சி நிர்வாகி இறுதிச் சடங்கில் சோகம்..!!

கட்சி நிர்வாகியின் இறுதிச் சடங்குக் கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கதறி அழும் காட்சி காண்போரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த பன்னீர் என்பவர் மதிமுக வேலூர் மேற்கு மாவட்ட முன்னாள் செயலாளராகவும், அக்கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டுவந்த பன்னீர், நேற்று காலை மரணமடைந்தார். இவரது இறுதிச் சடங்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டு அவரது […]

Categories

Tech |