Categories
தேசிய செய்திகள்

அஹ்மத்நகரில் குண்டு வெடிப்பு – 3 பேர் பலி !

மகாராஷ்டிரா மாநிலம் அஹ்மத்நகரில் நடந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அஹ்மத்நகர் அருகே கே.கே.ரேஞ்சு என்ற பகுதியில் இன்று காலை திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில், அக்ஷய் நவ்நாத் கய்வாட், சந்தீப் பொவ் சாஹிப் திவாடடே உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Categories
கால் பந்து தேசிய செய்திகள் விளையாட்டு

ஜீரோ டிகிரியில் கார்னர் கிக் கோல் அடித்த கேரள சிறுவன்… வைரல் வீடியோ!

கேரளாவில் நடந்த சிறுவர்களுக்கான போட்டி ஒன்றில் 10 வயது சிறுவன் பூஜ்ஜிய டிகிரில் டைரெக்ட்டாக கார்னர் கிக்கில் கோல் அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. கால்பந்து போட்டிகளில் கார்னர் கிக்கிலிருந்து டைரெக்கடாக கோல் அடிப்பது அவ்வளவு எளிதல்ல. நேர்த்தியான கோணத்தில் பந்தை அடித்தால் மட்டுமே அதுபோன்ற கோல் அடிக்க முடியும். அப்படி கோல் அடிப்பதற்கு ஜீரோ டிகிரி கோல் என்று பெயர். இந்த ஜீரோ டிகிரி கோல் அடித்த வீர்ரகளை விரல் விட்டு எண்ணிடலாம். ஜாம்பவான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”என் முதல் காதல்” வீடியோ பகிர்ந்த சச்சின் டெண்டுல்கர்!

உலகம் முழுவதும் காதலர் தினத்தைக் கொண்டாடி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் காதல் குறித்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். உலகம் முழுவதும் காதலர் தினத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் காதல் குறித்த பார்வைகள் வேறுபடும். ஒரு சிலருக்கு தாங்கள் வளர்க்கும் நாய் மேல் காதல், ஒரு சிலருக்கு தங்களின் வேலையின் மேல் காதல், ஒரு சிலருக்கு இணை, ஒரு சிலருக்கு மட்டுமே கிரிக்கெட். இந்தியாவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் 2020: ஆர்சிபி அணிக்கு புதிய மாற்றமாவது கைகொடுக்குமா?

ஐபிஎல் தொடரின் முக்கிய அணியாக வலம்வரும் ஆர்சிபி அணி தங்கள் அணியின் புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக அணியில் ஏதெனும் மாற்றத்தைச் செய்வது வழக்கம். இதனிடையே நேற்று ஆர்சிபி அணியின் நிர்வாகம் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகளில் இருந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற பெயரை ராயல் சேலஞ்சர்ஸ் என்று மாற்றம் செய்ததோடு, முகப்பு […]

Categories
தேசிய செய்திகள்

பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த கெஜ்ரிவால்..!!

மூன்றாவது முறையாக முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ள நிலையில், வரும் 16ஆம் தேதி நடக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. அம்மாநில முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாகப் பதவியேற்கவுள்ள நிலையில், வரும் 16-ஆம் தேதி நடக்கும் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. வரும் ஞாயிறு காலை 10 மணியளவில் டெல்லி ராம்லீலா […]

Categories
உலக செய்திகள்

“சின்ன தப்பு செய்தாலும்… 2 நாடுகள் மீது தாக்குதல் நடத்தப்படும்… எச்சரிக்கும் ஈரான்..!!

சிறிய தவறு செய்தாலும் அந்த இருநாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தளபதி ஹொசைன் சலாமி எச்சரித்துள்ளார். சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவியது. இதற்கு பதிலடியாக, ஈரான் இராணுவம் ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது. தற்போது போர் பதற்றம் தணிந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் : பிப்ரவரி 20 ஆம் தேதி வரை நடைபெறும்..!!

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் தொடங்கியது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கிய  இந்த கூட்டுத் தொடர் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தோடு 9ஆம் தேதியோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 20ஆம் […]

Categories
உலக செய்திகள்

துருக்கி ராணுவம் பதிலடி… சிரிய படையினர் 55 பேர் உயிரிழப்பு..!!

சிரியாவின் தாக்குதலுக்கு துருக்கி ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் சிரிய பாதுகாப்பு படையினர் 55 பேர் கொல்லப்பட்டனர். சிரியாவின் வடக்கு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள குர்திஷ் போராளிகளுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்ற நிலையில், சிரிய ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. அதன்படி கடந்த வாரம் இட்லிப் மாகாணத்தில் சிரிய ராணுவம் இரண்டு முறை தாக்குதல் நடத்தியது. இதில் துருக்கி பாதுகாப்பு படையினர் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் துருக்கி இராணுவம் நடத்திய தாக்குதலில் […]

Categories
கால் பந்து விளையாட்டு

மகளிர் ஏ டிவிஷன் கால்பந்து லீக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை!

அர்ஜென்டினாவின் மகளிருக்கான ஏ டிவிஷன் கால்பந்து லீக் தொடரில் பங்கேற்பதற்கு திருநங்கை மாரா கோம்ஸிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது கால்பந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. கால்பந்து மீது அதிகமான ஈடுபாடு கொண்ட நாடு என்றால் அது அர்ஜென்டினாதான். ஆனால் அந்த நாட்டிற்கு மற்றொரு அடையாளமும் இருக்கிறது. மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை காப்பதில் அர்ஜென்டினாவுக்கு நிகர் அர்ஜென்டினாதான். 2010ஆம் ஆண்டிலேயே தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களுக்கு திருமணத்தை அங்கீகரித்தது, தனது பால் அடையாளத்தை மாற்றுவதற்கு அதீத கட்டுப்படுகளும் இல்லாமல் சரியான சுதந்திரத்தை வழங்கியது […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள் விளையாட்டு

முதலமைச்சர் கோப்பை: ஆன்லைன் விண்ணப்பங்களால் விளையாட்டு வீரர்கள் தவிப்பு..!

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இந்த ஆண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்ததால், விளையாட்டுப் போட்டிகளில் குறைந்த அளவிலேயே வீரர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடக்கின்றன. இதன் ஒரு பகுதியாக அரியலூரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் 25 வயதுக்குட்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

லாகூர் தாக்குதலால் நாங்கள் யார் என்பதைப் புரிந்துகொண்டோம் : சங்கக்காரா!

கிரிக்கெட்டர்கள் மீதான லாகூர் தாக்குதல் சம்பவம் பற்றி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள எம்சிசி அணியின் கேப்டன் சங்கக்காரா பேசியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை அணி 2009ஆம் ஆண்டு கடாஃபி மைதானம் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென யாரும் எதிர்பாராத வகையில் தீவிரவாதிகள் இலங்கை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 7 பேர் காயமடைந்தனர். மேலும் பொதுமக்களில் 8 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள எந்த சர்வதேச […]

Categories
இந்திய சினிமா சினிமா

கரீனாவை டேட்டிங் செய்ய சயீப் அலிகானுக்கு டிப்ஸ் கொடுத்த ராணி முகர்ஜி..!

கரீனாவை டேட்டிங் செய்ய சயீப் அலிகானுக்கு பிரபல நடிகை ராணி முகர்ஜி டிப்ஸ் கொடுத்துள்ளார். இந்த தகவலை சயீப் அலிகானே தற்போது வெளிப்படுத்தியுள்ளார். கரீனாவுடனான டேட்டிங் காலத்தில் ஒன்றாக வசித்தபோது பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க நடிகையும், தோழியுமான ராணி முகர்ஜி, தனக்கு வழங்கிய டிப்ஸ் குறித்து நடிகர் சயீப் அலிகான் வெளிப்படுத்தியுள்ளார். பாலிவுட் நடிகரான சயீப் அலி கான் – ராணி முகர்ஜி ஆகியோர் டா ரா ரம் பும், ஹம் தும் படங்களில் இணைந்து […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட வித்யா பாலன்..!

மனித கணிணி என்று அழைக்கப்படும் சகுந்தலா தேவி படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார் நடிகை வித்யா பாலன். புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பாலிவுட் நடிகை வித்யா பாலன். திருமணத்துக்கு பின்பும் தனக்கான மார்கெட்டை இழக்காமல் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் பாலிவுட் நடிகை வித்யா பாலன். இதையடுத்து தனது புதிய படம் குறித்த அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். அதில், ‘ஷெர்னி’ என்ற தலைப்பில் உருவாகும் எனது அடுத்த படம் குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

‘கட்சியின் கொள்கையில் மாற்றம் வேண்டும்’ – காங்கிரஸ் தலைவர்!

கட்சியின் கொள்கையில் மாற்றம் வேண்டும் என காங்கிரஸ் இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கருத்துக்கணிப்புகளில் தெரிவித்தபடியே மாபெரும் வெற்றியை ஆம் ஆத்மி பதிவு செய்தது. ஆம் ஆத்மி 62 இடங்களையும் பாஜக 8 இடங்களையும் கைப்பற்றின. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. இதையடுத்து கட்சியின் பல தலைவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு: குற்றவாளிக்கு வாதாட புதிய வழக்கறிஞர் நியமனம்.!

நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவர் பவன் குப்தாவின் புதிய வழக்கறிஞராக ரவி காஸியை நியமித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவர் பவன் குப்தா. இவர் தரப்பு வாதங்கள் தாமதமாக முன்வைக்கப்படுவதாக டெல்லி நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. தனது தரப்புக்காக வாதாட புதிய வழக்கறிஞரை நியமிக்க அவகாசம் வேண்டும் என பவன் குப்தா தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதிய வழக்கறிஞராக ரவி காஸியை நியமித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்குத் […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கண்டெய்னரில் கடத்த முயன்ற 661 கிலோ கஞ்சா பறிமுதல் – 5 பேர் கைது..!

வேதாரண்யத்தில் கண்டெய்னர் மூலம் கடத்தி வரப்பட்ட 661 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்து, 5 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட போலி தனியார் நிறுவன கண்டெய்னர் லாரியில் கஞ்சா கடத்தி வருவதாக சென்னை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அதில், ஆந்திராவிலிருந்து வந்த […]

Categories
மாநில செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தத் தடை: சென்னை காவல் ஆணையர்..!

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் நடத்தக்கூடிய எந்த அமைப்பினருக்கும் காவல்துறை அனுமதி அளிக்காது என சென்னை காவல் ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், மனித சங்கிலி, உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளை நடத்த எந்த அரசியல் கட்சியினருக்கும், அமைப்பினருக்கும் அடுத்த 15 நாள்களுக்கு சென்னை காவல்துறை அனுமதி வழங்காது என காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வள்ளுவர் கோட்டம், சேப்பாக்கம் விருந்தினர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காட்டுப்பள்ளி துறைமுகத்தில் சிங்கங்கள் நடமாட்டம் வெளியான புகைப்படங்கள்

காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் 3 சிங்கங்கள் நடமாடும் புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில் வெளியானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. திருவள்ளூர், காட்டுப்பள்ளியில் உள்ள காமராஜர் துறைமுகத்தில் சரக்குப்பெட்டகங்களை கையாளும் முனையத்தில் பெண் சிங்கம் ஒன்று அப்பகுதியில் திரிவதைப் போன்ற படம் வாட்ஸ்அப்பில் வைரலாகி வருகின்றது. வனப்பகுதி என்பதால், அங்கு சிங்கம் நடமாட்டம் உள்ளதா? என கண்காணிப்பு கேமராவில் உள்ள பதிவுகளை வைத்து காமராஜர் துறைமுக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து ஒரு சிங்கம் மட்டுமே […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட் 2020-21: வளர்ச்சிக்கான ஒன்றா அல்லது வாக்குக்கான ஒன்றா?

இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்குமா அல்லது அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக அரசுக்கு ஒரு ஆயுதமாக இருக்குமா என்பது குறித்த சிறிய பார்வை. 2020-21 நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஒன்பதாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பொதுவாகவே மாநில பட்ஜெட் என்பது நிதி நிலையை விளக்கும் ஆவணமாக அல்லாமல் அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் […]

Categories
மாநில செய்திகள்

சிறுவனை காலணியை கழற்றுமாறு கூறிய விவகாரம் – எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதிலளிக்க நோட்டீஸ்..!!

பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்றுமாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிய விவகாரத்தில், எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு தமிழ்நாடு டி.ஜி.பி, தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தேசிய பழங்குடியின நல ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமை பார்வையிடுவதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கு சென்றார். அப்போது அவர், அங்கிருந்த கோயிலுக்குச் செல்லும்போது பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணியை கழற்றுமாறு கூறினார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘தலைவி’ படம், ‘குயின்’ இணையதொடருக்கு தடை கோரி ஜெ. தீபா மேல்முறையீடு

‘தலைவி’ திரைப்படத்துக்கும், ‘குயின்’ இணையதொடருக்கும் தடை கோரி மறைந்த முதலமைச்சர் ஜெயலலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா சார்பில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை பிரிதிபலிக்கும் ‘தலைவி’ மற்றும் ‘குயின்’ திரைப்படங்களுக்கு தடை விதிக்கக்கோரிய மேல்முறையீட்டு வழக்கில் படத்தின் இயக்குநர்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘தலைவி’ என்ற பெயரில் தமிழிலும், ‘ஜெயா’ என்ற பெயரில் இந்தியிலும் […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராகும் நாராயண மூர்த்தியின் மருமகன்!

தொழிலதிபரும் இன்போசிஸின் இணை நிறுவனருமான நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்கை பிரிட்டன் நாட்டின் நிதியமைச்சராக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் நியமித்துள்ளார். நாட்டின் முன்னணி நிறுவனங்களில் இன்போசிஸும் ஒன்று. இந்நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி ஆவார். இவரின் மகளான அக்சதாவுக்கும் பிரிட்டன் நாட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்குக்கும் 2009-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துள்ள ரிஷி சுனக் முதலீட்டு வங்கி ஆலோசகராக பணியாற்றிவந்துள்ளார். 2014ஆம் ஆண்டு முதல் […]

Categories
தேசிய செய்திகள்

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரித்தவர் மீது குற்றச்சாட்டு

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர் மீது அஸ்ஸாம் மக்கள் தொண்டு நிறுவனத் தலைவர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான, ஏ.பி.டபிள்யூ தலைவர் அபிஜித் சர்மா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிவடிவம் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய வழிகாட்டலின்படி நடக்கவில்லை. இதில் ஏராளமான குளறுபடிகள் நடந்துள்ளன. அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜிலா தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். […]

Categories
நீலகிரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காதலர் தினத்தை முன்னிட்டு 5 லட்சம் கார்னேசன் மலர்கள் ஏற்றுமதி.!

காதலர் தினத்தை முன்னிட்டு 5 லட்சம் கார்னேசன் மலர்கள் நீலகிரி மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உதகை அருகே உள்ள கூக்கல்தொரை, தும்மனட்டி, துனேரி, கொடநாடு உள்பட பல்வேறு பகுதிகளில் கொய்மலர் சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. கார்னேசன், ஜெர்பரா, லில்லியம் போன்ற கொய்மலர்கள் பசுமை குடில்களில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் சில விவசாயிகள் கார்னேசன் என்ற கொய்மலரை அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். சிவப்பு, வெள்ளை, ஆரஞ்சு, பிங்க், மஞ்சள் என பல […]

Categories
உலக செய்திகள் பல்சுவை லைப் ஸ்டைல்

‘ஆதலால் காதல் செய்வீர்’ – காதலும்; காதலர் தினமும்!

உலகெங்கிலும் உள்ள அனைத்து உயிருள்ள ஜீவன்களுக்கும் பொதுவானதாக அமைந்திருக்கும் ‘காதல்’ என்கிற மந்திரச் சொல்லைக் கொண்டாடும் நாளாக ‘பிப்ரவரி 14’ திகழ்கிறது. ‘காதல்’ என்பது வெறும் சொல் என்பதைவிட, அது ஒரு வாழ்வியல் என்பதே மெய். அந்த வாழ்வியலைக் கடக்காத மனிதர்களே இல்லை எனக் கூறலாம். இல்லை, இல்லை… காதலே செய்திடாத சிலரும் இருக்கிறார்கள் என்கிறீர்களா? ஆம், காதல் செய்துவிடக்கூடாது என்பதில் அவர்களுக்குக் காதல். இப்படி மனிதர்களின் வாழ்வோடு ஒன்றாகப் பிணையப்பட்டிருக்கும் காதலுக்கு சாதி, மதம் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

காதலர் தினத்தில் ரிலேஷன்ஷிப் பற்றி மனம்திறக்கும் ரைசா – வெறித்தனமான வெயிட்டிங்கில் ஜிவி பிரகாஷ்.!

ரைசாவின் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் அப்டேட் குறித்து நடிகை ஓவியா, ஜிவி பிரகாஷ் என பிரபலங்கள் அடுத்தடுத்து வீடியோவை வெளியிட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். காதலர் தினத்தில் தனது ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை நடிகை ரைசா வெளியிடவுள்ளாராம். இதையடுத்து அதை எதிர்நோக்கி காத்திருப்பதாக நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். ‘பிக் பாஸ்’ முதல் சீசன் மூலம் பிரபலமான மாடல் ரைசா, ‘பியார் பிரேமா காதல்’ படம் மூலம் கதாநாயகியாக உருவெடுத்தார். தற்போது எஃப்ஐஆர், காதலிக்க யாருமில்லை, ஆலிஸ் உள்ளிட்ட படங்களில் […]

Categories
மாநில செய்திகள்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு – விசாரணை ஒத்திவைப்பு.!!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரில் முகாந்திரம் இல்லை என்ற லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைக்க வேண்டுமென அமைச்சர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, 2011ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மதுரை – தல்லாகுளத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், […]

Categories
தேசிய செய்திகள்

ட்ரம்ப் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் – யெச்சூரி தகவல்.!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் இந்திய வருகையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார். ஒடிசா மாநிலத் தலைநகர் புபனேஸ்வரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “பிப்ரவரி 24 மற்றும் 25ஆம் தேதிகளில் இடதுசாரி தொண்டர்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் இந்தியப் பயணத்துக்கு எதிராகப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள். அது டெல்லியாகவோ அல்லது குஜராத்தாகவோ இருக்கலாம். முதலில் அமெரிக்கா அழுத்தம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் வழக்குகள் பதிவு!

மாநிலம் முழுவதும் பள்ளி மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் வன்முறை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் மாநிலத் தகவல் ஆணையத்தில் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை நிகழ்வுகள் குறித்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னையிலுள்ள மாநிலத் தகவல் ஆணையத்தில், ஆணையர் முத்துராஜ் முன்னிலையில் இன்று நடந்தது. அதில் ஆஜரான கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி மாணவிகளுக்கு எதிராக 171 பாலியல் குற்றங்கள் நடந்திருப்பதாகத் தெரிவித்தனர். தமிழ்நாட்டில் கடந்த 2000 […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அமைச்சர் விழாவை புறக்கணித்த திரிணாமுல் காங்கிரஸ்..!!

மத்திய அமைச்சர் கலந்து கொள்ளும் அரசு விழாவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புறக்கணித்தனர். கொல்கத்தாவில் மெட்ரோ வழித்தடம் திறப்பு விழாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொள்கிறார். இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மற்றும் அம்மாநில அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அவரின் பெயரும் அழைப்பிதழில் அச்சிடப்படவில்லை. இதையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அமைச்சர் கலந்து கொள்ளும் அந்நிகழ்ச்சியை புறக்கணித்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் – சு. வெங்கடேசன் எம்.பி.

மெட்ரோ ரயில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கான திட்டத்தினை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சு. வெங்கடேசன், நாளைய தினம் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தென் மாநிலங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் மதுரை- தூத்துக்குடி தொழில் வழி சாலைக்கு தனி அலுவலரை நியமிக்க வேண்டும். பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் […]

Categories
மாநில செய்திகள்

‘முதலமைச்சரின் அறிவிப்பை விசிக வரவேற்கிறது’ – தொல். திருமாவளவன்..!

டெல்டாப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்ததை விசிக வரவேற்கிறது என தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் விசிக கட்சியின் மண்டல செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம், “கடலூர் மாவட்டத்தில் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை அமைக்க, தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. அதனால் விளைநிலம் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். விஜய் படப்பிடிப்புத்தளத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. ராஜிவ் […]

Categories
மாநில செய்திகள்

தூதரகம் மூலம் கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களுக்கு உதவி – மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி..!

ஜப்பானில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கப்பலில் இருக்கும் இந்தியர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜப்பான் நாட்டின் யோகஹாமா துறைமுகத்தில் “டைமண்ட் பிரின்சஸ்” என்ற சொகுசுக் கப்பல் கொரோனோ வைரஸ் அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 2500க்கும் மேற்பட்ட பயணிகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களும் உள்ளனர். அதில் 162 பேர் இந்தியர்கள் என்பதால் அவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பு அரசியல் கட்சிகள், பொது […]

Categories
தேசிய செய்திகள்

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி கைது!

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஜம்மு காஷ்மீர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்ததாக கூறப்பட்டு வந்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் அதிரடி சோதனையில் ஜம்மு காவல்துறையினர் ஈடுபட்டனர். இந்நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி, ஒருவரை ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் கைது செய்தனர். காவல்துறையினர் நடத்திய சோதனையில், பயங்கரவாதியின் பெயர் தவுஃபிக் அகமது பட் எனவும்; அவர் மோங்கமா பகுதியைச் […]

Categories
தேசிய செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் நீக்கும் – சிதம்பரம் நம்பிக்கை..!!

நாட்டின் கருத்தாக்கத்தின் மேல் குடியுரிமை திருத்தச் சட்டம் தாக்குதல் நடத்துவதாகவும் எனவே உச்ச நீதிமன்றம் அதனை நீக்கும் எனவும் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப. சிதம்பரம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “அஸ்ஸாமில் நடைபெறும் வன்முறைக்குக் காரணமே குடியுரிமை திருத்தச் சட்டம்தான். இந்தியாவின் அடிப்படை கொள்கைகளின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. நாட்டில் பிறக்கும் 40 விழுக்காட்டினர் குறித்து பதிவு செய்யப்படுவதில்லை. சட்டத்தில் சில […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற ராகுல் காந்தி வலியுறுத்தல்

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராகப் போராடியவர்கள், தற்போது என்ன செய்யப் போகிறார்கள் என்ற கேள்வியுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கேள்வியொன்றை எழுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்த போது, சமையல் கியாஸ் விலை உயர்வுக்காக பாஜக மகளிரணி நடத்திய போராட்ட புகைப்படம் அது. அதில் ஸ்மிருதி இரானியும் உள்ளார். அந்தப் புகைப்படத்தைப் […]

Categories
தேசிய செய்திகள்

5 வயது சிறுமியை சீரழித்த கொடூரன்… 25 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி..!!

உத்தர பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு போக்சோ நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இளம்பெண்களை விட சிறுமிகள் தான் சில காம கொடூரர்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாலியல் குற்றங்களை தடுப்பதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் ஆங்காங்கே பாலியல் சம்பவம் அரங்கேறி கொண்டு தான் வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேச […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி..!!

வருகின்ற ஏப்ரல் 15-ஆம்தேதிக்குள் ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று கட்சிக்குள் பேசப்படுகிறது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தானாக முன் வந்து ராஜினாமா செய்தார். ராகுலை அக்கட்சியினர் சமாதானப்படுத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனாலும் முடிவில் பின் வாங்காமல் மீண்டும் பதவியை ஏற்க மாட்டேன் என மறுத்து விட்டார். இதையடுத்து சோனியாகாந்தி, கட்சியின் இடைக்கால தலைவராக தேர்வு செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர் […]

Categories
உலக செய்திகள்

டிரெய்னிங் கொடுக்கல… கத்துக்கிட்டு கெத்து காட்டும் 5 வயது சோனியா..!!

ரஷ்யாவில் தனது திறமையால் பிரஞ்ச் புல் வகை நாய் ஸ்கேட்டிங் செய்து அசத்தியது. ரஷ்யாவில் 5 வயது நாய் ஓன்று தனது ஸ்கேட்டிங் திறமையால் மிகவும் பிரபலமடைந்துள்ளது. பிரஞ்ச் புல் வகையான சார்ந்த அந்த நாயின் பெயர் சோனியா. இந்த நாய் செல்யபின்ஸ்க் (Chelyabinsk) நகரில் தனது உரிமையாளருக்கு ஈடு கொடுத்து சிறப்பாக ஸ்கேட்டிங் செய்து அசத்தி வருகிறது. இதுபற்றி உரிமையாளர் டிமிட்ரி பேசுகையில், சின்ன குட்டியாக இருக்கும் போதிலிருந்தே  இயற்கையாகவே சோனியாவுக்கு ஸ்கேட்டிங் செய்வதற்கு ஆர்வம் […]

Categories
தேசிய செய்திகள்

வேறு ஒருவருடன் தொடர்பு… மனைவியை நடு ரோட்டில்…. தர தர வென இழுத்து போட்டு… வெளுத்து வாங்கும் வீடியோ..!!

மத்தியப் பிரதேசத்தில் போலீஸ் அதிகாரி தனது மனைவியை நடுத்தெருவில் இழுத்துப் போட்டுத் சரமாரியாக அடிக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் தார் (Dhar) நகரில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தில் பொறுப்பாளராக இருப்பவர் நரேந்திர சூர்யவன்ஷி. இவர் தனது மனைவியை நடுத்தெருவில் தர தரவென தள்ளி இழுத்து போட்டு தாக்குகிறார். அப்போது சக காவலர்கள் அவரைத் தடுத்து நிறுத்துகின்றனர். இந்த காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன. தற்போது இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

10 ஆண்டுகளாகியும்… பல மடங்கு ஆபத்து… நீடிக்கும் மெக்சிகோ எண்ணெய் கசிவு..!!

மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட  ஆழ்கடல் எண்ணெய் கசிவு, நிபுணர்கள் கூறியதை விட பலமடங்கு ஆபத்தான ஒன்றாக இப்போதும் நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2010-ஆம் ஆண்டு மெக்சிகோ வளைகுடாவில் ஆழ்கடல் எண்ணெய் கசிவு (Deepwater Horizon) ஏற்பட்டது. அமெரிக்காவின் எண்ணெய் கிணறு வரலாற்றிலேயே மிகவும் மோசமான ஒரு அத்தியாயமாக இந்த கசிவு பார்க்கப்படுகின்றது. ஆம், பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்திற்காக டிரான்ஸ்ஓசியன் லிமிட்டட் (Transocean Ltd) ஆழ்கடல் எண்ணெய் கிணறு திட்டத்தை மேற்கொண்ட போது, விபத்து ஏற்பட்டு 11 […]

Categories
உலக செய்திகள்

ஆப்கான் பாதுகாப்பு படை அதிரடி… 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!!

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 13 தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானில் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளை தலிபான் தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அதன் காரணமாக அந்நாட்டு ராணுவத்தினர் தொடர்ந்து பயங்கரவாதிகள் மீது தாக்குதல்களை நடத்தி அவர்களின் பிடியில் உள்ள கிராமங்களை மீட்டு வருகின்றனர். அந்த வகையில், அங்குள்ள பெல்ஹம் மாகாணத்தில் இருக்கும்  ஜர்-இ-குஷக் பகுதியில் பாதுகாப்பு படையினர் […]

Categories
உலக செய்திகள்

2 டால்பின்களை கொன்ற கொடூரர்கள் யார்?… காட்டிக்கொடுத்தால் ரூ 14,00,000… அமெரிக்க அரசு அதிரடி அறிவிப்பு..!!

அமெரிக்காவில் 2 டால்பின்கள் சுட்டுக்கொன்ற குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால், அவர்களுக்கு 14 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நேபிள்ஸ் கடற்கரையிலும் அதே வாரத்தில் எமரால்டு கடற்கரையிலும் 2 டால்பின் இறந்து அதன் உடல்கள் கரை ஒதுங்கின. இறந்து போன 2 டால்பின்களின் உடலிலும் துப்பாக்கியால் சுடப்பட்டும், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்காக தடயங்கள் இருந்தன என்று தேசிய பெருங்கடல் மற்றும் சுற்றுச்சூழல் […]

Categories
உலக செய்திகள்

அண்டார்டிகாவில்… மால்டா நாடு அளவுக்கு பெரிய பனிப்பாறை… உடையும் வீடியோ இதோ!

அண்டார்டிகாவில் மால்டா நாடு (Malta), அளவுக்கு பெரிய பனிப்பாறை உடைந்தது தொடர்பான சாட்டிலைட் படங்களை கொண்டு உருவாக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. மேற்கு அண்டார்டிகா பனிப்பிரதேசத்தை  பல்வேறு பனிப்பாறைகள் கடலுடன் இணைக்கின்றன. அதில் பைன் ஐலண்ட் கிளேசியரும் (Pine Island Glacier) ஒன்று. கடந்த 25 ஆண்டுகளில் இந்த கிளேசியர் பருவநிலை மாறுபாடு மற்றும் வெப்பமடைதல் காரணமாக உடைந்து பெருமளவிலான பனிப் பாளங்களை இழந்துள்ளது. கடந்த ஆண்டு இந்த பனிப்பாறையில் இரண்டு பிளவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

“இந்திய தூதரகம் தேவையான உதவிகளை அளித்து வருகிறது”… ஸ்டாலினுக்கு ட்விட்டரில் ஜெய்சங்கர் பதில்..!!

இந்தியர்களுக்கு டோக்கியோவில் இந்திய தூதரகம் தேவையான உதவிகளை அளித்து வருகிறது என  ஸ்டாலினுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்  சீனாவில் ‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) எனப்படும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் காரணமாக இதுவரை 1367 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இதனிடையே சீனாவில் இருந்து ஜப்பான் வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ […]

Categories
தேசிய செய்திகள்

சுற்று சூழல் பாதிப்பு… ஆண்டுக்கு 10,00,000 பேர் மரணம்… ஆய்வறிக்கையில் அதிர்ச்சி..!!

இந்தியாவை பொறுத்த வரை சுற்றுச்சூழல் பாதிப்பால் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய பசுமை அமைப்பு சுற்றுச்சூழல் தொடர்பாக ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் அணல் மின் நிலையங்கள், தொழிற்சாலைகள், வாகனங்கள் போன்றவற்றுக்கு பயன்படுத்தும் நிலக்கரி மற்றும் பெட்ரோலிய எரி பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு தொடர்ந்து மோசமடைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு ஏராளமானோர் உயிரிழப்பதுடன் பலர் நோய்க்கு ஆளாவதும் அதிகரித்து இருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

15 அடி உயரம்… கீழே விழுந்த டான்ஸர்… மீண்டும் ஆடிய நெகிழ்ச்சி சம்பவம்… குவியும் பாராட்டுக்கள்..!!

அமெரிக்காவில் நட்சத்திர விடுதி ஒன்றில் கம்பத்தின் உச்சியில் நடனமாடிய பெண் கீழே விழுந்த பிறகு மீண்டும் நடனத்தை தொடரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் கடந்த ஞாயிற்று கிழமை நிகழ்ச்சி ஓன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இரண்டு பெண்கள் நடனமாடி கொண்டிருந்தனர். அவர்களுள் ஜெனியா என்ற பெண் அந்தரத்தில் 2 கம்பிகளுக்கு இடையே நடனமாடிக் கொண்டிருந்தார். மற்றொருவர் கீழே நடனமாடி கொண்டிருந்தார். அப்போது 15 அடி […]

Categories
தேசிய செய்திகள்

கெஜ்ரிவால் பதவியேற்பு – பிற மாநில தலைவர்களுக்கு அழைப்பில்லை.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிற மாநில முதல்வர்கள் அழைக்கப்படவில்லை என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.  கடந்த 8-ஆம்தேதி 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்து, வாக்கு எண்ணிக்கை 11 ஆம் தேதி (நேற்று முன்தினம்) நடந்தது. இந்த தேர்தல் முடிவில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில்  வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. டெல்லி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டம்..!!

கர்நாடகாவில் கன்னட அமைப்புகளின் அழைப்பின் பேரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி வணிக வளாகங்கள், கடைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசு தனியார் துறை பணிகளில் கன்னடர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு கேட்டு இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

Categories
மாநில செய்திகள்

மதுரை இரண்டாக பிரிக்கப்படுமா? ஆர்.பி உதயகுமார் பதில்.!

மதுரை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில்  மதுரை மாவட்டத்தை 2ஆக பிரிப்பது தொடர்பான மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று மதுரை மக்களின் விருப்பம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |