Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களை பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு

கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆய்வகங்களை வரும் 15ஆம் தேதி பொதுமக்கள் மாணவர்கள் கண்டுகளிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் குருஷேத்ரா என்ற தொழில்நுட்ப கருத்தரங்கு நேற்று  தொடங்கியது. இந்த தொழில்நுட்ப கருத்தரங்கில் விழா மலரை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கண்டுபிடிப்புகளை பார்த்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கருணாமூர்த்தி, கிண்டி பொறியியல் கல்லூரியில் நடைபெறும் குருஷேத்ரா 2020 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

‘1.30 மணி நேரத்தில் 50 முட்டைகளில் 50 தலைவர்களின் உருவம்’ – வரைந்து அசத்திய கோவை மாணவி..!

தொண்டாமுத்தூர் பகுதி உலியம்பாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி முட்டையில் தலைவர்கள் படம் வரைந்து சாதனைப் படைத்துள்ளார். கோவை கல்லூரி ஒன்றில் இளங்கலை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார், மோனிஷா. சிறு வயதில் இருந்தே ஓவியத்தில் வரைவதில் ஆர்வம் கொண்ட இவர் ஓவியத்தில் புதுமை படைக்க, உண்ணும் முட்டையில் ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார். பள்ளிப் பருவத்தின் போது முட்டையின் ஓட்டில், மகாத்மா காந்தியின் ஓவியம் வரைந்துள்ளார். அது அருமையாக வரவே அவரது தாய், தந்தை அளித்த ஊக்கத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2021ஆம் ஆண்டு விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும் – பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை!

வருகின்ற 2021ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிகவின் 20ஆவது ஆண்டு கொடி நாளை முன்னிட்டு அக்கட்சியின் அலுவலகத்தில் உள்ள 118 அடி உயர கொடிக் கம்பத்தில் கட்சிக்கொடியை தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்றிவைத்தார். இந்நிகழ்வில் பிரேமலதா விஜயகாந்த், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கட்சிக்கொடி ஏற்றிவைத்த பின்பு அலுவலகத்தில் கூடியிருந்த 500க்கும் அதிகமான தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், ஏழை […]

Categories
மாநில செய்திகள்

பிரசவத்தின் போது உயிரிழந்த தாய், குழந்தை – கணவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், ஆயிக்கவுண்டன்பாளையத்தை சேர்ந்த ராஜ் என்பவரின் மனைவி காஞ்சனா, பிரசவத்திற்காக விஜயமங்கலத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்தவர் இல்லாததால் காஞ்சனாவிற்கு செவிலியர் சுகன்யா என்பவரே பிரசவம் பார்த்துள்ளார். அப்போது, குழந்தையின் தலை பாதி வெளியே வந்த நிலையில், அசைவின்றி நின்றுவிட்டது. இதனால், அருகில் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பள்ளி ஆசிரியரை கொலை செய்த மைதுனருக்கு ஆயுள் தண்டனை..!

பள்ளி ஆசிரியரை வெட்டி கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பரமக்குடி விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (43). மஞ்சூரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய அவர், அதே பள்ளியில் படித்த மாணவி ஒருவரை விரும்பியுள்ளார். இது ராஜ்குமாரின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதைத் தொடர்ந்து ராஜ்குமார் மனைவியின் சகோதரர் உமாபதி (42), ராஜ்குமாரை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் உமாபதி நகராட்சி இடத்தில் வீடு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுமியிடம் அத்துமீறிய முதியவர் போக்ஸோவில் கைது ..!

அம்பத்தூரில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரவு காவலாளியை, போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 4-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமிக்கு பட்ரவாக்கத்தை சேர்ந்த இரவு காவலாளி ஒருவர் பிப்ரவரி 4ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாய், அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், காவல் ஆய்வாளர் ரமணி வழக்குப்பதிவு செய்து […]

Categories
இந்திய சினிமா சினிமா

குருக்கள் மீது பக்தி காட்டிய மங்கேஷ்கர் – குழந்தைப்பருவ புகைப்படத்தைப் பதிவிட்ட ‘பிக் பி’

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல பாடகர்களான லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே ஆகியோரின் குழந்தைப்பருவப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். திரைப்பிரபலங்கள் தற்போது ‘த்ரோ பேக்’ என்னும் கடந்த காலப் பதிவுகளை, தங்களது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவதும் அதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருவதும் வழக்கமான ஒன்றாகும். தற்போது பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவின் சிறந்த பாடகர்களான லதா மங்கேஷ்கர், ஆஷா போஸ்லே ஆகியோரின் குழந்தைப்பருவ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர். ரகுமானுக்கு அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை!

 திரைப்படங்களுக்கு இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, சேவை வரி செலுத்தும்படி, ஏ.ஆர். ரகுமானுக்கு ஜிஎஸ்டி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இசையமைப்பாளர் ஒருவர் தன் படைப்புகளின் முழு காப்புரிமை உரிமையாளராக உள்ளார். பின், அந்த உரிமையை பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கிவிட்டால், சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, சேவை வரி செலுத்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமா

‘உங்களால் ஒவ்வொரு முறையும் உருகுகிறேன்’ – சன்னி ட்வீட்

நீங்கள் ஒவ்வொரு முறையும் சிரிக்கும்போதும் சந்தோஷத்தில் துள்ளி குதித்து விளையாடும் போதும் பாடும் போதும் அம்மா என்று கூப்பிடும் போதும் எனது மனம் உருகிவிடுகிறது என சன்னி லியோன் தனது இரு மகன்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ட்வீட் செய்துள்ளார். ஒவ்வொரு முறையும் தனது மகன்கள் அம்மா என்று கூப்பிடும்போது மனம் உருகிவிடுவதாக சன்னிலியோன் கூறியுள்ளார். இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சன்னி லியோனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் தமிழில் ஜெய் நடித்த […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘ஃபில்டர் காபி அந்த்தே… ஸ்ரீவி. பில்டர் காபி’ – சிலாகித்த பிரபல தெலுங்கு நடிகர்

பிரபல நகைச்சுவை நடிகர் வெண்ணிலா கிஷோர் தமிழ்நாட்டில் குடித்த ஃபில்டர் காபி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சிலாகித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் வெண்ணிலா கிஷோர். இவர் தெலுங்கில் நாகர்ஜூனா, மகேஷ் பாபு, பிரபாஸ், நானி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இதனையடுத்து வெண்ணிலா கிஷோர் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ‘திருடன் போலீஸ்’ இயக்குநர் கார்த்திக் ராஜூ இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் […]

Categories
உலக செய்திகள் சினிமா ஹாலிவுட் சினிமா

என்னடா இது ஆஸ்கருக்கு வந்த சோதனை…!

இந்தாண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியினை தொலைக்காட்சியில் கண்டுகளித்த பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட குறைந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட்டின் பிரமாண்ட திருவிழாவான 92ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடந்து முடிந்தது. இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை தென் கொரிய மொழிப்படமான ‘பாராஸைட்’ திரைப்படம் வென்றது. இதன் மூலம் ஆங்கில மொழிப்படங்கள் அல்லாமல் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் வெல்லும் முதல் படம் […]

Categories
தேசிய செய்திகள்

விடைபெற்றார் வெண்டல் ரோட்ரிக்ஸ் – பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர்..!!

பத்ம ஸ்ரீ விருது பெற்ற ஆடை வடிவமைப்பாளர் வெண்டல் ரோட்ரிக்ஸ் (59), கோவாவில் நேற்று  காலமானார். மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரும், ஒருபால் ஈர்ப்பாளர்கள் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்துவருமான வெண்டல் ரோட்ரிக்ஸ், நீண்டகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த நிலையில் நேற்று காலமானார். வெண்டல் ரோட்ரிக்ஸின் நண்பரான பாஜக எம்.எல்.ஏ. நிலகாந்த் ஹலர்கர் இதனை உறுதி செய்துள்ளார். கோவாவைச் சேர்ந்த மிகப் பிரபலமான ஆடை வடிவமைப்பாளர் வெண்டல் ரோட்ரிக்ஸ். 2014ஆம் ஆண்டு அவருக்கு பத்ம ஸ்ரீ […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த முதியவரை மிதித்துக்கொன்ற யானைக் கூட்டம்

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பண்ணைபட்டி கோம்பை என்ற கிராமத்தில் யானைகள் மிதித்ததில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைபட்டி கோம்பை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளையப்பன் (70). மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இவருக்குச் சொந்தமான மாங்காய்த் தோப்பு ஒன்றில் குடிசை வீடு அமைத்து அதில் வசித்துவந்தார். இந்நிலையில் நேற்று இரவு இவரது குடும்பத்தினர் அனைவரும் வெளியில் சென்றுவிட்ட நிலையில் வெள்ளையப்பன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் சாராயம் விற்பனை- காவல் துறையினரிடம் பிடித்துக்கொடுத்த பொதுமக்கள்..!!

மயிலாடுதுறையில் பட்டப்பகலில் சட்டத்திற்குப் புறம்பாக, பாண்டிச்சேரி சாராயம் விற்பனை செய்த நபரை பொதுமக்களே பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகரில், கீழப்பட்டமங்கலம், கேணிக்கரை, ஆரோக்கியநாதபுரம், ஆராயத்தெரு, அண்ணாநகர், சாந்திகாப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பாக, பாண்டிச்சேரி சாராயத்தின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தற்போது மதுபானங்களின் விலையேற்றத்தால் மலிவு விலையில் கிடைக்கும், பாண்டிச்சேரி சாராயத்தை (ரூ.50) வாங்க குடிமகன்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதை வாங்க வரும் குடிமகன்களின் கூட்டத்தால் பொதுமக்களுக்கு இடையூறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் திமுக முக்கியப்புள்ளிக்கு தொடர்பு – அமைச்சர் ஜெயக்குமார்..!!

டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவுக்கு தொடர்பு இருப்பதாக தான் தெரிவித்தபோதும், அவர் அமைதியாக இருப்பது ஏன் என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை மந்தைவெளியில் உள்ள ராணி மெய்யம்மை பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினர். இதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் புதிய இரண்டடுக்கு மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்!

புதிய இரண்டடுக்கு மேம்பாலத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதால் இன்னும் சில வாரங்களில் அம்மேம்பாலம் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. வளர்ந்துவரும் மாநகரமான சேலத்தில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அமைக்கப்பட்டு வரும், தமிழ்நாட்டுப் மிக நீளமான இரண்டடுக்கு மேம்பாலத்தின் கட்டுமானப் பணி நிறைவடையும் நிலையை எட்டியுள்ளது. சேலம் மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டேவருகிறது. இந்நிலையில், சேலத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க 2016ஆம் ஆண்டு 320 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்டமான மேம்பாலம் […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர மாநில எம்.எல்.ஏ. ஒருவரைக் கொன்ற வழக்கு – சரணடைந்த மாவோயிஸ்ட்..!!

ஆந்திர மாநில எம்.எல்.ஏ. ஒருவரைக் கொன்ற வழக்கில் சந்தேகிக்கப்படுபவர், ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் இன்று காவல்துறை முன் சரணடைந்தார். ஆந்திர மாநில எம்.எல்.ஏ. ஒருவரைக் கொன்ற வழக்கில், குற்றவாளியைக் கண்டுபிடித்து தருபவருக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஒடிசா அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் இன்று காவல்துறை முன் மாவோயிஸ்ட் ஜிப்ரோ ஹபிகா சரணடைந்தார். இதுகுறித்து, மல்கன்கிரி காவல் கண்காணிப்பாளர் ரிஷிகேஷ் டி கிலாரி கூறும்போது, ‘2012ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு வாரம் 5 நாள் வேலை – அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு..!!

மகாராஷ்டிரா அரசு பிப்ரவரி 29ஆம் தேதி முதல் அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாள் வேலையை அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில், அரசு உள்ளாட்சி அமைப்புகளில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில், மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிப்ரவரி 29-ஆம் தேதி முதல் அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு வாரம் 5 நாள் வேலையை அறிவித்துள்ளது. மேலும், இதர பிற்படத்தப்பட்டோர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்புகள் ஆகியவை […]

Categories
தேசிய செய்திகள்

முத்தலாக் கூறிவிட்டு, பணம் கொடுத்து குழந்தையை அபகரிக்க முயற்சி!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுல்தானா என்ற பெண், தனது கணவர் தன்னை துன்புறுத்திவிட்டு முத்தலாக் கூறியதாகவும்; தன்னிடமிருந்து தனது குழந்தையை அபகரிக்க முயற்சிப்பதாகவும் பாகத் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சுல்தானா என்ற பெண், தனது கணவர் தஸ்தகீர் தன்னை உடல் ரீதியாக துன்புறுத்திவிட்டு, தனக்கு முத்தலாக் கூறியதாகவும்; தன்னிடமிருந்து தனது குழந்தையை அபகரிக்க முயற்சிப்பதாகவும் நிஷா பாகத் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணான சுல்தானாவின், கணவரான தஸ்தகீருக்கு ஏற்கெனவே ஒரு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

BREAKING : ஜப்பானில் நிறுத்தப்பட்ட கப்பலிலுள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா..!!

ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் உள்ள 2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ‘கோவிட்-19’ (கொரோனா வைரஸ்) எனப்படும் தொற்று நோய் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபே மாகாணத்தில் பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் காரணமாக இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர். இதனிடையே சீனாவில் இருந்து ஜப்பான் வந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற […]

Categories
தேசிய செய்திகள்

“முதல்வர் கெஜ்ரிவால் தீவிரவாதி”… மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பா.ஜ.க எம்.எல்.ஏ..!!

பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பி.சர்மா, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஒரு தீவிரவாதி என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி வளர்ச்சித் திட்டங்களை முன்னிறுத்தி பிரசாரம் செய்தது. ஆனால் பாரதிய ஜனதா வெறுப்பு அரசியலை வைத்து பிரச்சாரம் செய்தது. குறிப்பாக இந்த தேர்தல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் தேர்தல் என்று மிகவும் மோசமாக பிரச்சாரம் செய்த நிலையில் தான் மக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை மூன்றாவது முறையாக முதல்வராக அரியணையில் […]

Categories
தேசிய செய்திகள்

சொகுசுக் காரை அதிவேகமாக இயக்கி விபத்து: கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ மகன் கைது?

காரை அதிவேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவின் மகனை காவலர்கள் தேடிவருகின்றனர். கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) என்.ஏ. ஹாரிஷ். இவரது மகன் முகம்மது நலபாத். இவர் கடந்த சனிக்கிழமையன்று தனது சொகுசுக் காரை வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரின் கால் எலும்பு முறிந்தது. இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்நிலையில் எம்எல்ஏ மகனின் காரை இயக்கி விபத்துக்குள்ளாக்கியதாக இளைஞர் ஒருவர் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : FASTag பயன்படுத்துவோருக்கு ரூ 100 கட்டணம் தள்ளுபடி..!!

தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய சுங்கச்சாவடிகளில் மட்டும் ரூ 100 கட்டணம் தள்ளுபடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.  சமீபத்தில் மத்திய அரசு பாஸ்டேக் (FASTag) முறையை கொண்டு வந்தது. அதன்படி வாகனத்தின் முன் பகுதியில் FASTag ஸ்டிக்கரை ஒட்டி விட்டால் சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் சென்று கொண்டே இருக்கலாம். காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவே சுங்கச்சாவடிகள் மின்னணுமயமாக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக்கை அமேசான் மற்றும் எஸ்பிஐ, எச்டிப்சி மற்றும் ஐசிஐசிஐ, கோடக் மஹேந்திரா, […]

Categories
உலக செய்திகள்

அழியும் நிலையில் 5,00,000 பூச்சி இனங்கள்… விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்..!!

மனிதர்கள் மற்றும் பருவ நிலை மாற்றம் போன்ற காரணத்தால் இதுவரை 5 லட்சம் பூச்சி இனங்கள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் அழிந்து வரும் பூச்சி இனங்கள் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு  மேற்கொண்டனர். இதில், பூச்சி இனங்கள் மட்டுமில்லாமல் வண்டுகள் மற்றும் பறவை இனங்களும் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுவரையில் பார்த்தோம் என்றால், 5 லட்சம் பூச்சி இனங்கள் அழிந்து வருவதாக ஆய்வறிக்கை சொல்கிறது. இந்த பட்டியலில் […]

Categories
உலக செய்திகள்

மானை வீட்டிற்கு அழைத்து வந்து விருந்தளித்த பெண்…. வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர்..!!

ஆமெரிக்காவில் மான்களை அழைத்து வந்து வீட்டில் வைத்து உணவு பரிமாறிய பெண் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது. ஆம், அந்த நாட்டின் கொலார்டோ மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காட்டில் சுற்றி கொண்டிருந்த மான்களை வீட்டிற்குள் அழைத்து வந்து  பிரெட், பழங்கள், கேரட் போன்ற உணவுப்பொருட்களை பரிமாறியுள்ளார். அவர் விருந்து வைத்தது மட்டுமில்லாமல் வீடியோவும் எடுத்துள்ளார். அந்த வீடியோ வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதன்பின் அந்த பெண்ணின் மீது […]

Categories
மாநில செய்திகள்

7 பேரை விடுதலை செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை – தமிழக அரசு..!

7 பேரை விடுதலை செய்ய தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய கடந்த 2018 செப்டம்பர் 9-ஆம் தேதி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 11-ஆம் தேதி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் இந்த பரிந்துரை மீது ஆளுநர் எந்த ஒரு முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு கோடியா.. 2 கோடியா… தொழிலாளிக்கு அடித்தது லக்… ரூ 12,00,00,000 கோடி…. மகிழ்ச்சி வெள்ளத்தில் குடும்பம்..!!

கேரளாவில் ஆதிவாசி தொழிலாளிக்கு லாட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடி கிடைத்ததால் அவர் குடும்பத்தோடு மகிழ்ச்சியில் இருக்கிறார்.  கேரள மாநில அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவது வழக்கமான ஓன்று. அதன்படி ஏதாவது பண்டிகை என்று வந்துவிட்டால் பம்பர் குலுக்கல் நடைபெறும். அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு மற்றும் ஓணப்பண்டிகை காலங்களில் பம்பர் குலுக்கல் கட்டாயம் நடைபெறும். அந்த வகையில் சமீபத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் குலுக்கல் நடைபெற்றது. இதில் கண்ணூர் மாவட்டம் […]

Categories
மாநில செய்திகள்

அம்மா என்ன யாரோ தொரத்துராங்க மா?… ‘விஸ்வாசம்’ பட மீமை வைத்து kavalan app-க்கு விளம்பரம்..!!

நடிகர் அஜித்தின் ‘விஸ்வாசம்’ திரைப்பட காட்சியொன்றை மீமாக மாற்றி, தேனி மாவட்ட காவல்துறை, kavalan app -ஐ  விளம்பரப்படுத்தியது இணையத்தில் வைரலாகிவருகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் காவல்துறை அதிரடியாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு அவசர காலத்தில் உடனடி பாதுகாப்பு அளிக்கும் வகையில், காவலன் SOS  என்ற மொபைல் செயலி (APP) செயல்பட்டு வருகிறது. சிலருக்கு இந்த செயலி தெரியாமல் இருக்கலாம் அதற்காக தமிழக காவல்துறை […]

Categories
தேசிய செய்திகள்

வடிவேலுவை மிஞ்சிய சம்பவம்… 4,50,000 டாய்லெட்டை காணோம்… அதிர்ச்சி புகார்..!!

 மத்தியபிரதேசத்தில் 4.5 லட்சம் கழிவறைகள் காணாமல் போய்விட்டதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 2012-ஆம் ஆண்டு  வறுமைக் கோட்டுக்கு சற்று மேலே இருக்கும் 62 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கழிவறைகளை கட்டிக் கொடுக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பின்  நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் ஒரு பேரதிர்ச்சி. அதாவது, சுமார் நான்கரை லட்சம் கழிவறைகள் கட்டப்படாமலேயே கணக்கு காட்டப்பட்டது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ 540 கோடி […]

Categories
உலக செய்திகள்

அடுத்த 10 ஆண்டுகளில்…. மலர் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க திட்டம்…. கொலம்பிய அரசு!

அடுத்த 10 ஆண்டுகளில் கண்கவரும் மலர் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க உள்ளதாக கொலம்பிய அரசு  அறிவித்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய மலர் ஏற்றுமதி செய்யும் நாடு கொலம்பியா. இங்கிருந்து கலர் கலராக கண்களை கவரும் வித விதமான ரோஜாக்கள், சாமந்தி என 1, 500-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த 66 கோடி பூக்கள் ஆண்டுதோறும் அமெரிக்கா, மெக்ஸிகோவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. காதலர் தினத்திற்கு இன்னும் இரண்டே நாட்கள் தான் இருக்கிறது. இந்ததினத்தையொட்டி மட்டும் 1, 000 கோடி ரூபாய்க்கு […]

Categories
உலக செய்திகள்

விபத்தில் சிக்கிய பள்ளி பேருந்து… தூக்கி வீசப்பட்ட குழந்தைகள்… அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்காவில் விபத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்திற்குள் குழந்தைகள் தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சில குழந்தைகள் தங்களுக்குரிய பள்ளி வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பள்ளி வாகனத்திற்கு குறுக்கே கார் ஒன்று வந்தது. இதனால் நிலைதடுமாறிய பள்ளி பேருந்தும், காரும் மோதிக் கொண்டன. இதில் பேருந்தில் இருந்த குழந்தைகள் அங்கும் இங்குமாக சிதறி விழுந்தனர். அடுத்த சில நொடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து அருகில் இருந்த ஒரு […]

Categories
உலக செய்திகள்

சிரிய இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய போராளிகள் – 2 பேர் உடல்கருகி பலி.!

சிரியாவில் அரசுப் படையின் ஹெலிகாப்டரை போராளிகள் சுட்டு வீழ்த்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். ரஷ்யத் தயாரிப்பான எம்ஐ -17 ரக ஹெலிகாப்டர் ஓன்று நேற்று இட்லிப் நகரின் மேற்பரப்பில் பறந்து  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது அப்பகுதியில் மறைந்திருந்த கிளர்ச்சியாளர்கள் ஹெலிகாப்டரை குறி வைத்து தாக்கினர்.இதில் தாக்குதலுக்கு உள்ளான அந்த ஹெலிகாப்டர் தீ பற்றி எறிந்தவாறு கட்டுப்பாட்டை இழந்து அங்கும் இங்கும் வானத்தை சுற்றித் திரிந்தது. பின்னர் சிறு சிறு துண்டுகளாக நொறுங்கிய அந்த ஹெலிகாப்டர் கொளுந்து […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் தற்கொலை படை தாக்குதல்… ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி..!!

ஆப்கானில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தற்கொலைப் படைத் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் அடிக்கடி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்தவகையில்  அங்குள்ள தலைநகர் காபூலில் உள்ள மார்ஷல் ஃபாஹிம் ராணுவப் பயிற்சி பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நேற்று இரவு திடீரென தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், […]

Categories
உலக செய்திகள்

ஆசைக்கு ஒரு அளவு இல்லையா… நெருக்கமான போட்டோ… கடித்து விழுங்கிய முதலை..!!

பிரேசிலில் முதலையை மிகவும் நெருக்கமாக போட்டோ பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நபரின் செல்போனை அதே முதலை கடித்துக் குதறி விழுங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது. பிரேசில் நாட்டின் தெற்குப் பகுதியில் ‘புளோரியா நோபிள்ஸ்’ என்ற இடத்தில் உள்ள ஆற்றில் ஏராளமான முதலைகள் வசித்து வருகின்றன. இதில் ஏதாவது ஒரு முதலையை நெருக்கமாக படம் பிடிக்க வேண்டும் என விரும்பிய ஒரு நபர் விசித்திரமாக யோசித்து தனது டேப்லட் வகை செல்போனை கயிறு கட்டி தண்ணீரில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

‘டெலிவரி ஊழியர்’ செய்த கேவலம்… பீட்ஸாவில் தூ.. தூ… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!

துருக்கியில் வாடிக்கையாளருக்கு  பீட்சாவில் எச்சில் துப்பி கொடுத்த நபருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. துருக்கி நாட்டில் எஸ்கிஷெகிர் (Eskişehir) என்ற இடத்தில் இந்த கேவலமான சம்பவம் நடந்துள்ளது.. ஆம் வாடிக்கையாளர் ஒருவர் பீட்ஸா ஆர்டர் செய்திருந்தார். அதன்படி அதனை விநியோகிக்கும் நபர் வாடிக்கையாளர் வீட்டின் வாசல் பக்கத்தில் நின்று கொடுக்கப்பட வேண்டிய பீட்சாவில்,  உமிழ்நீரை (எச்சில்) துப்பிய பின் வழங்கியுள்ளார். ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை. ஆனால் அந்த அருவெறுப்பான நிகழ்வு அருகில் இருந்த […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் இனி ‘கோவிட்-19’ என வழங்கப்படும்.!

உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸுக்கு ‘கோவிட்-19’ என உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாகப் பெயர் சூட்டியுள்ளது. சீனாவில் ‘கொரோனா வைரஸ்’ என்னும் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடி வருகின்றனர். ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் இந்த நோய் பரவி வருவதால் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த கொடூர நோய்க்கு ‘கோவிட்-19’ என […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 6 நாள்… 10 ஆம் வகுப்பு மாணவியை சீரழித்த கல்லூரி மாணவன்…!!

பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கும்பகோணம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருபவர் தீக்‌ஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை கடந்த ஆறு நாட்களாகக் காணவில்லை என்று, அவரது தாய் லதா திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாவிடம் புகார் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஆய்வாளர் கவிதா, பந்தநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா ஆகியோர் கடந்த ஆறு நாட்களாக பத்துக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் போட்டிகளில் 240 பந்துகள் வீசி, ஒரு விக்கெட்டும் எடுக்காத பும்ரா!

முதல்நிலை பந்துவீச்சாளரான இந்தியாவின் பும்ரா, கடந்த 4 ஒருநாள் போட்டிகளில் ஒரு விக்கெட்டையும் எடுக்காமல் மோசமான ஃபார்மில் இருக்கிறார். தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையினாலும் துல்லியமான யார்க்கர் பந்துகளினாலும் சிறந்த பந்து வீச்சாளராக வலம்வருபவர் இந்திய வீரர் பும்ரா. கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்த இவர், இலங்கை அணிக்கு எதிராக கடந்த மாதம் நடந்த டி20 தொடர் மூலம், மூன்று மாதங்களுக்குப் பின் மீண்டும் இந்திய அணிக்குத் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

பிரபல செக் குடியரசு வீரரை, அப்செட் செய்த இந்தியர்!

பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நிகி பூனச்சா, பிரபல செக் குடியரசு வீரர் லூகஸ் ரோசலை வீழ்த்தியுள்ளார். ஆடவர் வீரர்களுக்கான நடப்பு ஆண்டின் பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடர், பெங்களூருவில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் சுற்றுப்போட்டியில் தேசிய சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் நிகு பூனச்சா, பிரபல செக் குடியரசை சேர்ந்த லூகஸ் ரோசலை நேற்று எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட நிகி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்தியா – பாக். கிரிக்கெட் தொடர் நடக்க வேண்டும்’: யுவராஜ் சிங் விருப்பம்

இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருதரப்பு தொடர்கள் நடந்தால், அது கிரிக்கெட்டுக்கு நல்லது என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். முன்பு ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் இந்தியா – பாகிஸ்தான் இருதரப்பு தொடர் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ரசிகர்கள் மத்தியில் இவ்விரு அணிகள் விளையாடும் போட்டிகளுக்கு எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும். ஆனால், சமீப ஆண்டுகளாக பல்வேறு அரசியல் காரணங்களால் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் இருக்கிறது. இறுதியாக, […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக போலி இணையதளம், கொலை மிரட்டல் வழக்கு: கே.சி. பழனிசாமிக்கு நிபந்தனை பிணை..!!

அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தியதாக கைது செய்யப்பட்ட கே.சி. பழனிசாமிக்கு கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் நிபந்தனை பிணை வழங்கியுள்ளது. அதிமுக பெயரில் இணையப்பக்கம் நடத்தி, அதில் அக்கட்சி சின்னத்தைப் பயன்படுத்தியதாகவும்; இது குறித்து கேள்வி எழுப்பிய அதிமுக பிரமுகர் கந்தவேல் என்பவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.சி. பழனிசாமி கடந்த ஜனவரி 25ஆம் தேதி சூலூர் காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவர் மீது மோசடி, கொலை மிரட்டல் உட்பட 17 […]

Categories
மாநில செய்திகள்

புதிதாக தொடங்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமனம்!

தமிழ்நாட்டில் புதிதாகத் தொடங்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களை நியமனம் செய்து, பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட கள்ளக்குறிச்சி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களுக்கும் தலா ஒரு முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் வீதம், ஐந்து முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.6,000 கோடி கடனில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி..!!

வாராக்கடன் காரணமாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 6 ஆயிரத்து 76 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடப்பு 2019-2020 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டு (அக்டோபர் முதல் டிசம்பர் ) நிதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், வாராக்கடன் காரணமாக 6 ஆயிரத்து 76 கோடி ரூபாய் நஷ்டத்தை வங்கி சந்தித்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்த வங்கி 346 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்த நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

வைகையைப் பாதுகாக்கும் வகையில் உயர் நீதிமன்றம் உத்தரவு!

நீர்வழிப்பாதைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வைகை நதியைப் பாதுகாக்கும் வகையில் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மதுரை மேலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி உள்ளிட்டோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், “மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நீர்நிலைகளில் தண்ணீரைச் சேமிக்க முடியாத நிலை உள்ளது. நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் முறையாகச் செல்வதில்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யோகிபாபுக்கு தங்க செயின் வழங்கிய ‘கர்ணன்’..!!

புதிதாக திருமணம் முடித்த நகைச்சுவை நடிகர் யோகி பாபுக்கு தனுஷ் தங்க செயினை பரிசாக கர்ணன் படப்பிடிப்பு தளத்தில் வைத்து வழங்கியுள்ளார். நகைச்சுவை நடிகர் யோகிபாபு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மஞ்சு பார்கவி என்ற பெண்ணை பிப்ரவரி 5-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். பின் தனது திருமணப் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்துகொண்டு மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தெரிவித்திருந்தார். இவரின் திருமணத்திற்கு திரைத்துறை பிரபலங்கள் பலர் சமூக வலைதளத்தில் வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்நிலையில்,’பரியேறும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சல்மான் கானுடன் இணையும் பூஜா ஹெக்டே – ‘கபி ஈத் கபி தீபாவளி’

சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் ‘கபி ஈத் கபி தீபாவளி’ படத்தில் பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இயக்குநர் ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கபி ஈத் கபி தீபாவளி’. இப்படத்தை சஜித் நதியாவாலா தயாரிக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் பூஜா ஹெக்டே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் சஜித் நதியாவாலா கூறுகையில், ஹவுஸ் ஃபுல் நான்கு படங்களில் பூஜா ஹெக்டேவுடன் பணியாற்றியுள்ளேன். இதனால் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘இந்தியாவில் இது புதுசு’ – ஆம் ஆத்மி முன்வைக்கும் நவீன அரசியல் என்ன?

மத, இன, மொழி, சாதி ஆகிய அடையாளங்களை முன்வைத்தே சுதந்திர இந்தியாவின் அரசியல் மையம் கொண்டிருந்த நிலையை மாற்றி, நல்லாட்சி என்ற புள்ளியை அடிப்படையாகக் கொண்டு உருவெடுத்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் அரசியல், டெல்லியில் மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. நாடு இன்று கெஜ்ரிவால்களைத் தேடும் நிலைமையில் உள்ளது. முன்பெல்லாம் நல்லவன் யாராவது கிடைத்தால், “என் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்” என்று கூறிய காலம் போய், ’முதலமைச்சர் நாற்காலி காலியாக இருக்கு, நாடு ஆள வா எனக் கெஞ்சும் நிலைக்கு […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

இந்தியா வரும் ட்ரம்ப் அகமதாபாத்துக்கு செல்வார் என தகவல்.!

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தன் மனைவி மெலனியா ட்ரம்ப்புடன் அகமதாபாத்துக்கு செல்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்பும் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்தப் பயணித்தின் போது, தலைநகர் டெல்லிக்கும், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகருக்கும் செல்ல உள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

விஜய் – அன்புச்செழியன் ஆடிட்டர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர்..!

பிகில்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் ஆடிட்டர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளனர். ‘பிகில்’ படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாகத் தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அப்படத்தின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், பைனான்சியர் அன்புச்செழியன் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகக் கூறி, வருமான வரித்துறையினர் தமிழ்நாடு முழுவதும் அவ்விருவருக்கும் சொந்தமான 38 இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும், அத்திரைப்படத்தின் கதாநாயகனான நடிகர் விஜய்யையும் அவரது வீட்டில் வைத்து […]

Categories
மாநில செய்திகள்

‘அதிமுக அரசிற்கு உச்ச நீதிமன்றம் வைத்த குட்டு’..!!

எழுவர் விடுதலை தொடர்பான தீர்மானத்தில் ஆளுநர் எடுத்த நடவடிக்கை குறித்து கேட்டு இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யக் உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், அதிமுக அரசிற்கு குட்டு வைத்துள்ளதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஏழு தமிழர் விடுதலை குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானம் மீது ஆளுநர் எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆளுநரிடம் கேட்டு இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது. இதையொட்டி திமுக […]

Categories

Tech |