Categories
சினிமா டிரெய்லர் தமிழ் சினிமா

#ThunivuTrailer: என்ன மாதிரி ஒரு அயோக்கிய பையன் மேல கைய வைக்கலாமா… வெளியானது ”துணிவு” டிரைலர்

நடிகர் அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் துணிவு திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இன்னுமா நம்புறீங்க?…. “பவர்ஃபுல் பேட்டர் பண்டுக்கு வாய்ப்பு”…. கிண்டல் செய்து சஞ்சுக்கு ஆதரவாக கொந்தளிக்கும் ரசிகர்கள்..!!

சஞ்சு சாம்சனை புறக்கணித்து ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு வழங்கி வருவதாக நிர்வாகம் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி  கிறிஸ்ட் சர்ச் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி தொடக்கம் மிடில் ஆர்டர் சரியாக இல்லாததால் 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 219 ரன்கள் குவித்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அக்காகிட்ட நான் பிரியமா தான் இருக்கேன்” – சூர்யசிவா-டெய்சி பேட்டி…!!

சூர்யா சிவா மற்றும் டெய்சி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சூர்ய சிவா, தனிப்பட்ட இருவருக்கும் இடையேயான உரையாடல். அதுல வந்து எங்க மாநில தலைவர் சொன்ன மாதிரி,  அது தனிப்பட்ட முறை இருந்தாலும் சரி,  பொது தளத்தில் இருந்தாலும் சரி,  கட்சி கண்டிப்பாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கும் என மாநில தலைவர் சொன்ன மாதிரி, ஒழுங்கு நடவடிக்கை குழுவை சந்திக்க சொன்னாங்க. அண்ணன் சபாபதி அவர்கள் தலைமை நடந்துச்சு. நாங்க இருவருமே எங்களுடைய தரப்புல,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமி: தங்கம் தென்னரசு

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டினுடைய எதிர்க்கட்சித் தலைவர் திரு எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநரை சந்தித்து பொய்களினுடைய ஒட்டுமொத்த வடிவமாக புனைந்துறைகள் நிரம்பிய புளுகு மூட்டைகளை அவரிடத்திலே ஒரு கோரிக்கை மனுவாக அளித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்து இருக்கிறார். அதிமுகவை யார் கைப்பற்றுவது ? என்று இப்போது அவர்களுக்கிடையே பெரிய யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது.  அந்த யுத்தத்திலே தான் வெற்றி பெற வேண்டி தன்னுடைய எஜமானர்களை சென்று சந்தித்து விட்டு, அதே கையோடு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PakvsZim : “அடுத்த முறை உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள்”…. பாகிஸ்தானை கலாய்த்த ஜிம்பாப்வே அதிபர்..!!

அடுத்த முறை உண்மையான மிஸ்டர் பீனை அனுப்புங்கள்” என்று பாகிஸ்தானை கலாய்த்துள்ளார் ஜிம்பாப்வே அதிபர் எம்மர்சன் டம்புட்ஸோ மங்காக்வா.. ஆஸ்திரேலியாவில் தற்போது 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் சூப்பர் 12 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் குவித்தது. இதையடுத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : தொடர் மழை…. ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து போட்டி ரத்து….!!

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான்-  அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுபோட்டிகள் ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மழை காரணமாக சில போட்டிகள் கைவிடப்பட்டும் வருகின்றது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: நாளை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் – வெளியானது முக்கிய தகவல் …!

நாளை மாலை அதிமுக எம்எல்ஏக்களின் கூட்டம் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாளை மாலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற இருக்கிறது. வரும் திங்கட்கிழமை முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆனது நடைபெற இருக்கிறது. இந்த சட்டப்பேரவை கூட்டம் பொருத்தவரை நான்கு நாட்கள் நடைபெறும் என்றாலுமே இதில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்தும், இதில் பேசவேண்டிய முக்கியமான கோரிக்கைகள் குறித்தும் இந்த கூட்டத்திலே பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக அமைச்சரவை கூட்டமும் நேற்றைய […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

BREAKING: விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் கைது – பெரும் பரபரப்பு

விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கைது செய்யப்பட்டுள்ளார.  சிவகாசியில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார்.  சிவகாசியில் ரயில் தண்டவாளத்தில் படுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் குண்டு கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயலிடம்  சென்னை – கொல்லம் விரைவு ரயில் சிவகாசி ரயில் நிலையத்தில்நின்று செல்ல கோரிக்கை வைத்தநிலையில், ரயில் நிற்காமல் சென்றதை கண்டித்து  மறியல் செய்த மதுரை மதுரை எம்பி சு.வெங்கடேஷனும் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: கோவைக்கு துணை ராணுவம் வருகை… ஸ்கெட்ச் போட்டு இறங்கிய NIA… அதிகாலை முதலே பெரும் பரபரப்பு …!!

கோவை கருப்பு கடை பகுதியில் பி.எஃப்.ஐ தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவர் வீட்டில் தேசிய புலமை முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  இஸ்மாயில் வீட்டில் முன்பாக துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனை கண்டித்து போராட்டம் நடத்திய PFI அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். இஸ்மாயில் என்பவரை அழைத்துச் சென்றது தேசிய புலனாய்வு முகமை. அதே போல தேனி வடகிழக்கு காவல் நிலையம் முன்பு  பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பரபரப்பு…! 11 இடங்களில் NIA ரெய்டு… காலை முதலே அதிரடி …!!

மதுரை திண்டுக்கல் தென்காசி ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் NIA  அதிகாரிகள் சோதனைகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களில் NIA  அதிகாரிகள் சுமார் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளின் இல்லங்களில், அலுவலகங்களில் இந்த சோதனை என்பது நடைபெற்று வருகிறது. இந்த சோதனைக்கு எஸ்டிபிஐ மற்றும் சிஎப்ஐ   அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். பாப்புலர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

Road Safety World Series 2022: வெஸ்ட் இண்டீஸ் V நியூஸிலாந்து இன்று மோதல் ..!!

ஒவ்வொரு ஆண்டும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சாலை பாதுகாப்பு கிரிக்கெட் உலக தொடர் 2020ஆம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது. 90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்களான சச்சின், சேவாக், பிரட் லீ, ஜான்டி ரோட்ஸ், முத்தையா முரளிதரன் உள்ளிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்கள்  களமிறங்கவுள்ளனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த தொடரின் முதல் சீசன் 2020, 2021 என இரண்டு பகுதிகளாக நடந்தது. முதல் சீசன்: முதல் சீசனில் இந்தியன் லெஜண்ட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ், […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW: தமிழக, காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுவிப்பு …!!

இலங்கை கடற்படையால் கடந்த 6ஆம் தேதி சிறை பிடித்து செல்லப்பட்ட தமிழக மற்றும் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் எல்லை தாண்டினால் மூன்றாண்டுகள் சிறை தண்டனை என்ற நிபந்தனையோடு திரிகோணமலை நீதிமன்றம் மீனவர்களை விடுவித்து இருக்கின்றது.

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING: அமித் ஷாவுடன் ஈபிஎஸ் சந்திப்பு …!!

ஒற்றை தலைமை விகாரத்தில் ஓபிஎஸ் உடன் முதல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அமித்ஷாவை சந்திக்கிறார் ஈபிஎஸ். இந்த சந்திப்பு குறித்து இரண்டு விஷயங்களை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டி இருக்கிறது. ஒன்று இந்த சந்திப்பு என்பது உள்துறை அமைச்சரின் வீட்டில் இல்லாமல் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் நடந்திருக்கிறது. டெல்லியில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் இந்த சந்திப்பு என்பது நடைபெற்றிருக்கிறது. எனவே பெரும்பாலும் இது அரசு சார்ந்த விஷயமான சந்திப்பாக இதனை நாம் கருத வேண்டி இருக்கிறது. காலை 11 மணிக்கு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

Breaking: தி.க – இந்துமுன்னணி மாறிமாறி தாக்குதல் – பெரும் பரபரப்பு …!!

திமுக எம்.பி ஆ.ராசா இரண்டு தினங்களுக்கு முன்பாக இந்துக்களுக்கு எதிராகவும்,  பெண்களுக்கு எதிராகவும் பேசியதாக போராட்டங்கள் வலுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போவதாக அறிவித்தனர். அவர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆர்ப்பாட்டத்தில்  நாட்டின் பெரும்பான்மை மக்களான எஸ் சி/ எஸ் டி மக்களை பஞ்சமர்கள்  என்றும்,  எம்பிசி / ஓபிசி மக்களை சூத்திரர்கள் என்றும், பெண்களை விபச்சாரிகள் என்றும் கூறும் மனுதர்ம  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல் – வெளியான பரபரப்பு அறிக்கை …!!

திமுகவில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிக்கை வெளியீட்டு, அறிவித்திருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இருந்து வருகிறார். நீண்ட காலமாக . திமுகவினுடைய துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மொட்டகுறிச்சி தொகுதியில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். அந்த தோல்விக்கு காரணம் கட்சியில் இருக்கக்கூடியவர்கள் உள்ளடி வேலை செய்தவர்களாக அதிருப்தியில் இருந்ததோடு, இது குறித்து தலைமையிடம் புகார் கொடுத்திருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ப்ளூ காய்ச்சல்….. பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி..!!

சென்னையில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர், ஞாயிற்றுக் கிழமை கொரோனா தடுப்பூசி முகாம் அடுத்த மாதம் முதல் வாரம் தோறும் புதன்கிழமைகளில் நடத்தப்படும். தமிழகத்தில் தான் இலவச தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ப்ளூ காய்ச்சலால் தமிழகத்தில் இதுவரை 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ப்ளூ காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கக்கூடிய சூழல் தற்போதைக்கு இல்லை. தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்தால் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும். 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் இலவச […]

Categories
சற்றுமுன் தங்கம் விலை பல்சுவை மாநில செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 432 சரிவு – செம மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 432 குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 432 குறைந்து 37 ஆயிரத்து, 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூபாய் 54 குறைந்து 4,626 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுக்கள் அதிகரித்து, ரூபாய் 61.60க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை குறைந்துள்ளதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

காவல் நிலையத்திலேயே மாமுல் வாங்குறாங்க – உயர்நீதிமன்றம் கருத்து

தமிழக காவல்துறையின் ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக உள்ள முத்துக்குமரன், பார்த்திபன், ரமேஷ் மற்றும் வெங்கடேசன் தங்களை சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்த மனு  நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியன் முன்பு விசாரணை வந்தபோது,  காவல்துறை தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர்கள் 40 வயதை கடந்து விட்டதாலும், துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொண்டதாலும் அவர்களை சட்ட ஒழுங்கு பிரிவுக்கு மாற்ற முடியாது எனவும் வாதிட்டார்கள். இதை ஏற்று நால்வரின் மனுக்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2ஆவது முறையாக ADMKஆபீஸ்ல அதிகாரிகள்… செம டென்ஷனில் ஓபிஎஸ் …!!

அதிமுகவினுடைய அலுவலகத்தில் ஜூலை மாதம் 11-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் வருகை தரும் பொழுது மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் அதிமுக அலுவலகத்திற்குள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நுழைந்தது. அப்பொழுது ஏற்பட்ட பிரச்சனையில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது, கொள்ளையடிக்கப்பட்டது என பல்வேறு புகார்கள் அதிமுக –  இபிஎஸ் சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த வழக்கானது நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சிபிசிஐடி வசம் மாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் ஏற்கனவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#JUSTNOW: அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி மீண்டும் விசாரணை …!!

அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடியுடன் மீண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி அதிமுக அலுவலகத்தில் நடந்த வன்முறை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை, நடத்திய நிலையில் தற்போது மீண்டும் தங்களின் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர் . நேற்று   அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் சிபிசிஐடி போலீஸ் அலுவலகத்தில் ஆஜராகி விசரணையில் பல்வேறு தகவல்களை திரட்டிய சிபிசிஐடி காவல்துறையினர் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

ஏன் டயர்டா இருக்க ? கேட்டதும் அதிர்ந்த C.M …. உடனே உத்தரவு போட்ட ஸ்டாலின்… தமிழகத்தில் இனி செம திட்டம் ..!!

மதுரை மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த பின் அங்கு பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், கருணை வடிவமான திட்டம் தான் இந்த காலை சிற்றுண்டி திட்டம்.  நான் சென்னையில் அடிக்கடி மாநகராட்சி பள்ளி, அரசு பள்ளிகளுக்கு ஆய்வு மேற்கொள்கின்ற போது, ஒரு முறை ஒரு பள்ளிக்கு நான் சென்றேன். ஒரு நிகழ்ச்சிக்காக போயிருந்தேன். அப்போ அங்க இருக்க […]

Categories
மாநில செய்திகள்

சாப்பாடு நல்லா இருக்கா…. குழந்தைகளுக்கு உணவு பரிமாறி… தரையில் அமர்ந்து சாப்பிட்ட தமிழக முதல்வர் ..!!

தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் என்பது இன்று மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது. மதுரையில் தொடங்கி வைக்கப்படும் இந்த திட்டம் என்பது தமிழகம் முழுவதும் இன்று முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. அரசு பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாடு போகவும், இடைநிற்றலை  தவிர்க்கவும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் என்ற பேரில் இந்த திட்டம் என்பது தொடங்கப்படும் என ஏற்கனவே சட்டப்பிரிவையில் 110 விதியின் கீழ் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ் மீது நடவடிக்கை எடுக்கலாம்…! ADMKவுக்கு பெரும் ஷாக்…! நீதிபதி அதிரடி உத்தரவு …!!

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீதான நடவடிக்கைக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை அவரது உறவினர்களுக்கு வழங்கி 4,800 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. சிபிஐ விசாரணை: இதை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டெண்டர் முறைகேட்டில்….! ”ஈபிஎஸ் மீது நடவடிக்கை” … நீதிபதி அதிரடி முடிவு ..!!

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி மீதான நடவடிக்கைக்கு தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை அவரது உறவினர்களுக்கு வழங்கி 4,800 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: டெண்டர் முறைகேடு: ஈபிஎஸ் மீது நடவடிக்கை…. நீதிமன்றம் அதிரடி ….!!

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்ற இபிஎஸ் இன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கப்பட்டதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்று இருப்பதாக கடந்த 2018ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கெதிராக திமுகவின் அமைச்சர் பாரதி ஆர்.எஸ். பாரதி புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை சென்றது. உச்சநீதிமன்றத்தில் மீண்டும் […]

Categories
Uncategorized அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு…!!

கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல்  செய்யப்பட்டிருக்கின்றது. ஜிப்மர் மருத்துவமனை மாணவியின் பிரேத பரிசோதனை உள்ளிட்ட மற்ற அறிக்கைகளை தராமல் இருந்தார்கள். காவல்துறையினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். காரணம், விசாரணை சரியாக சென்று கொண்டிருப்பதால் இடையில் அறிக்கைகளை கொடுப்பது குழப்பத்தை விளைவிக்கும் என்று கூறியிருந்தார்கள். இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில்  மாணவியின் தாயார் சார்பாக மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல பள்ளி நிர்வாகத்தை சேர்ந்தவர்களுக்கு ஜாமீன் வழங்கியதற்கு எதிராகவும் மேல்முறையீடு என்பது செய்யப்பட்டிருக்கின்றது. விரைவாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க கூட்டணி கட்சி… பார்த்து அறிக்கை விடுங்க… கம்யூனிஸ்ட் கட்சிக்கு DMK பதிலடி ..!!

மின் கட்டண உயர்வு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்த நிலையில், கூட்டணி கட்சி தலைவர்களின் அறிக்கை எதிரிகளின் வாய்க்கு அவலாகி விடக்கூடாது என்று திமுகவின் முரசொலி நாளிதழ் அறிவுறுத்தி இருக்கிறது. சிலந்தி என்ற பெயரில் முரசொலி நாளிதழில் எழுதப்பட்டிருக்கக் கூடிய கட்டுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் கேரள மாநிலத்தில் கூட அண்மையில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. வேறு வழியற்ற நிலையில்தான் கேரளா அரசு, மின் கட்டண உயர்வை அறிவித்திருக்கும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

1இல்ல… 2இல்ல… 8MLAக்கள் ”நச்சுன்னு தூக்கிய பாஜக” கோவா காங்கிரஸ் காலி …!!

கோவா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். 40 பேர் கொண்ட கோவா பேரவையில் காங்கிரஸுக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் 8 பேர் கட்சி மாறியதால் காங்கிரஸ் பலம் மூன்றாக சரிவு. ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்த இந்தியா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வரும் நிலையில் கோவா காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களான திகாம்பர் காமத், மைக்கேல், டிலியா, ராஜேஷ், கேதர் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலெக்ஸியோ சிக்குரியா, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

10 MLA கிட்ட பேசிட்டாங்க…! பஞ்சாபில் பாஜக குறி… ஆம் ஆத்மி ஆட்சிக்கு சிக்கல் ? குண்டை தூக்கி போட்ட கெஜ்ரிவால் ..!!

பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி பொறுப்பை ஏற்றது முதல் எதிர்க்கட்சி ஆட்சி நடந்து வரும் மாநிலத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி, அங்குள்ள எம்எல்ஏக்களை தங்கள் வசம் இழுத்து ஆட்சியை கவிழ்த்து, பாரதிய ஜனதா ஆட்சியை நிலைநாட்டி வருகிறது. இந்தியா முழுவதும் பல நிகழ்வுகள் இது போல் அரங்கேறியுள்ளனர். அது தொடர்பாக அண்மையில் கூட டெல்லி மாநில அரசை பாஜக கவிழ்க்க நினைப்பதாக குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல தற்போது ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றுவரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: ADMK ஆபீஸ் கலவர வழக்கு ; 1.30மணி நேர விசாரணை நிறைவு ..!!

ஜூலை மாதம் 11ஆம் தேதி ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டு தரப்பினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் கற்கள், கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு மோதிக்கொண்ட நிலையில்,  இந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்த நிலையில்,  இபிஎஸ் தரப்பில் இருந்து சிவி சண்முகம் அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கும், அதேபோல் ஓபிஎஸ் தரப்பில் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கும் என மூன்று வழக்குகள் பதிவு […]

Categories
தேசிய செய்திகள்

#Breaking: ஞானவாபி மசூதி விகாரம்: இந்து பெண்கள் கேவியட் மனு ..!!

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவின் ஒரு பகுதி அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதியின் ஒரு சுவற்றில் அமைந்துள்ள செங்கார் கவுரி ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடு நடத்த வேண்டும் எனவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் எனவும் இந்து சமுதாயத்தை சேர்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்து இருந்தார்கள். இதை ஞானவாபி மசூதி கடுமையாக எதிர்த்திருந்தது. மசூதி தரப்பைச் சேர்ந்தவர்கள் இந்த மனுவை உடனடியாக நிராகரிக்க வேண்டும் எனவும்,  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ரெடியான 50 கேள்விகள்…! ஆஜரான ADMKமேனேஜர்.. சூடுபிடிக்கும் கலவர வழக்கு… வேகம் காட்டும் சிபிசிஐடி ..!!

அதிமுக அலுவலக வன்முறை தொடர்பான வழக்கில் அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். ஜூலை மாதம் 11ஆம் தேதி ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகத்தில் இரண்டு தரப்பினரிடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த மோதலில் கற்கள், கட்டை உள்ளிட்டவற்றை கொண்டு மோதிக்கொண்ட நிலையில்,  இந்த கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்திருந்த நிலையில்,  இபிஎஸ் தரப்பில் இருந்து சிவி சண்முகம் அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கும், […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பெரும் சோகம்…! மினி பேருந்து கவிழ்ந்து விபத்து… 11பேர் உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீரின் பூச் நகரின் சாவ்ஜியன் பகுதியில் இன்று காலை கிட்டத்தட்ட 40 பயணிகளை ஏற்றுக்கொண்டு மினி பேருந்து ஒன்று அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த மினி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. அதிகாலையில் இந்த சம்பவம் நடைபெற்றதால், அந்த பகுதியில் மீட்பு பணி என்பது மிகவும் காலதாமதமாக நடைபெற்றிருக்கிறது. தற்பொழுது வரை இந்த விபத்தில் சிக்கி ஒட்டுமொத்தமாக 11 பயணிகள் உயிரிழந்திருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. 25 பயணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

போலீசுக்கு விரட்டிவிரட்டி அடி…! வாகனத்துக்கு தீ வைப்பு… வங்கத்தில் வம்பிழுத்த பாஜகவினர் ..!!

மேற்குவங்க மாநிலத்தில் திரிணமூல் கட்சி தமைலையிலான ஆட்சி நடைப்பெற்று வருகின்றது. மாநில முதல்வராக அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி இருக்கின்றார். கம்யூனிஸ்ட்களின் கோட்டை என அறியப்பட்ட மேற்குவங்க அரசியல் நிலைமை தற்போது  தலைகீழாக மாறியுள்ளது. கடந்த சில வருடங்களாக பாரதிய ஜனதா கட்சி அசுரமத்தனமாக வளர்ந்து வரும் நிலையில் அரசு எதிரான போராட்டங்களை மிகவும் ஆக்ரோஷமாக முன்னெடுத்து வருகிறது. நேற்றைய தினம் மேற்கு வங்க அரசின் ஊழலை கண்டித்து அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை பாரதி ஜனதா […]

Categories
தேசிய செய்திகள்

தனியாக சிக்கிய போலீஸ்; ஓட ஓட விரட்டி பாஜகவினர் செய்த காரியம்…! 

மேற்கு வங்க அரசை கண்டித்து கொல்கத்தாவில் பாஜக நேற்று நடந்த பேரணி வன்முறையில் முடிந்தது. பாஜகவினர் கண்மூடித்தனமாக போலீசாரை விரட்டி, விரட்டி அடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மம்தா பானர்ஜி அரசில் ஊழல்கள் பெருகிவிட்டதாக குற்றம் சாட்டி பாரதிய ஜனதா கட்சி கொல்கத்தாவில் நேற்று தலைமைச் செயலகத்தை நோக்கி கண்டன பேரணி மேற்கொண்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆட்களை திரட்டி நடத்தப்பட்ட இந்த பேரணியில் பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரெடியா இருக்கேன்…! இதுக்கும் ”எஃப் ஐஆர்” போடுங்க… விஜிலன்சுக்கு ஐடியா கொடுத்து… கூலாக பேசிய விஜயபாஸ்கர்..!!

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அரசுக்கு எவ்வளவு பணிகள் இருக்கு. இந்த நேரத்துல ஒரு மூன்று ரூமையும் காலையில் இருந்து சோதனை போடுவதற்கு இவ்வளவு பெரிய அரசு இயந்திரங்களை பயன்படுத்துவது எனக்கு ரொம்ப ரொம்ப கவலையா இருக்கு ? என்னுடைய உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கழக நிர்வாகிகள் எங்களுக்கும் குடும்பம் எல்லாம் இருக்கு. இத பார்த்தா என்ன நினைப்பாங்க ? இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை எஃப் ஐ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்கள் மடியில் கனமில்லை… சந்து பொந்துல நுழைஞ்சு, தப்பிக்கல.. ஸ்டாலினுக்கு துணிச்சல் இருக்கா ? எடப்பாடி கேள்வி

விடியா தி.மு.க அரசினுடைய அமைச்சர்களுக்கு எதிராக வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை திச திரும்ப தனது ஏவல் துறை மூலமாக எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நடத்தும் நாடகமே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்று அதிமுகவினுடைய இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றிணை வெளியிட்டிருக்கிறார்  குரங்கின் கையில் பூ மாலை: குரங்கின் கையில் பூமாலையும், கொள்ளிக்கட்டையும் கிடைத்தால் என்னவாகும் ? என்பது அனைவருக்கும் தெரியும் என்றும்,  குரங்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சார்..! அடுத்த ரெய்டு எப்போ வாறீங்க… ஆஃபீசரை கலாய்த்த விஜயபாஸ்கர் மகள்…!!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஏற்கனவே இதேபோன்று லஞ்ச ஒழிப்பு துறை சோதனையை நான் எதிர்கொண்டு இருக்கின்றேன். இப்போது  திருப்பவும் இரண்டாவது முறையா சோதனை நடத்தினார்கள். இப்ப வெளியே வரும்போது தான் தொலைக்காட்சியில் பார்த்தேன். கிட்டத்தட்ட 120 ஆவணங்கள் கைப்பற்ற பட்டதாக சொல்லப்பட்டது. என்னிடம் அவர்கள் என்னவெல்லாம் எடுத்துச் சென்றார்கள் என்பதற்கான அறிக்கை நகல் கொடுத்து இருக்காங்க. எதுவுமே கைப்பற்ற முடியாமல் கடைசியில் என்கிட்ட இருக்கக்கூடிய மொபைல் போன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் வீடு 3ரூம், 1 ஹால், 2000 சதுர அடி தான்… ”நன்றி சொல்லி” பெயரை அடுக்கிய விஜயபாஸ்கர் ..!!

இன்று காலை முதல் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தி முடித்த நிலையில் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நான் குடியிருப்பது அப்பார்ட்மெண்ட். மூணு ரூம், ஒரு ஹால், 2000 ஸ்கொயர் பிட்டு இருக்கு. இங்கே 12:30 மணி நேரம் சோதனை நடத்தி இருக்கிறார்கள். ஒரு முழுமையான அரசு இயந்திரத்தை திராவிட முன்னேற்றக் கழக அரசு பயன்படுத்தியுள்ளது. எத்தனையோ மக்களைப் பிரச்சினைக்கெல்லாம் மறந்துவிட்டு, ஒரு தனிப்பட்ட […]

Categories
மாவட்ட செய்திகள்

JUST NOW: பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து; கள்ளக்குறிச்சியில் மீண்டும் பரபரப்பு …!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் வி. மாமந்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. பள்ளியின் ஆறாம் வகுப்பு அறையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் நான்கு மாணவர்கள் படுகாயம் அடைந்து இருக்கின்றனர். படுகாயம் அடைந்த நான்கு மாணவர்களும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் 7,000 ரூபாய் தான்… வேற ஒண்ணுமே கிடைக்கல… கெத்தாக பிரஸ்மீட் நடத்திய வேலுமணி…!!

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை ஏவி மூன்றாவது முறையாக என் வீட்டில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். இன்றைக்கு தொடர்ந்து  பழிவாங்குதல் நடவடிக்கையை ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். ஸ்டாலினின் அரசியல் கால்புணர்ச்சியை போல் எந்த தலைவர்களும் செய்ததில்லை. இதற்கு முன்பு எத்தனையோ பேர் முதலமைச்சராக இருந்திருக்கிறார்கள். காவல்துறையை தவறான முறையில் பயன்படுத்தி வருகின்றார். மூன்றாவது முறையாக என் வீட்டில் ரெய்டு நடத்தி எந்த ஆதாரமும், ஆவணமும் எதுவுமே எடுக்கல. என்னுடைய வீட்டில் வெறும் 7500 பணம். இது தவிர எங்க அம்மாவுடைய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் கிட்ட பேசுனேன்…. என்னை அப்போதே குறி வச்சுட்டாங்க… பழிவாங்கும் படலம் தொடங்கிடுச்சு… எஸ்.பி வேலுமணி பரபரப்பு பேட்டி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, திட்டங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தான் இருக்க வேண்டும். அதிமுகவில் வந்த குழப்பங்களை சரி செய்து ஓபிஎஸ் அவர்களை அன்றைக்கே இணைத்து அதிமுக ஆட்சி தொடர நான் காரணமாக இருந்த காரணத்தால், அப்போதே நான் திமுகவால் குறி வைக்கப்பட்டேன். எடப்பாடியார் நாலு வருஷமா அற்புதமா ஆட்சி செய்தார். அற்புதமாக இருந்த அதிமுக  ஆட்சி திட்டம் தான் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு தான் இன்னைக்கு இதற்கு தான் பழிவாங்கல் நடவடிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரெய்டில் எதுவுமே கிடைக்கல… ஏமாந்து போன போலீசார்… கெத்தாக பேசிய எஸ்.பி வேலுமணி..!!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, இன்று மூன்றாவது முறையாக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் என் வீட்டில் ரெய்டு நடத்தி முடித்திருக்கிறார்கள். இன்றைக்கு தொடர்ந்து இந்த பழிவாங்குதல் நடவடிக்கையை ஸ்டாலின் செய்து கொண்டிருக்கிறார். இந்த அரசியல் காழ்ப்புணர்ச்சியை இதுபோல் எந்த தலைவர்களும் செய்ததில்லை. முதலமைச்சராக பலபேர் இருந்திருக்கிறார்கள். தொடர்ந்து காவல்துறையை இன்றைக்கு தவறான முறையிலே பயன்படுத்தி வருகின்றார். எந்த ஆதாரமும் இல்லாமல் இன்றைக்கு மூன்றாவது முறை ரெய்டு […]

Categories
மாநில செய்திகள்

தடை செய்யப்பட்ட ஃபிரீ பையர் கேமை எப்படி விளையாடுகிறார்கள்?…. நீதிபதிகள் கேள்வி..!!

தடை செய்யப்பட்ட பின்னரும் பிரீ பையர் விளையாட்டு செயல்படுவது எப்படி என்ற கேள்வியை சென்னை உயர்நீதிமன்ற மன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. ப்ரீ பயர் (Free fire) விளையாட்டு தடை செய்யப்பட்ட நிலையில், இளம் தலைமுறை விளையாடுவது எப்படி காவல் துறையினரும் சைபர் கிரைம் துறையினரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.. அதோடு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லை எனில் இளம் தலைமுறையினர் […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி அம்மாவோடு பள்ளி பேச்சுவார்தை ? சிக்கிய புதிய ஆதாரம் … பெரும் பரபரப்பு …!

சக்தி மெட்ரிக் பள்ளி மனைவி உயிரிழந்த விவகாரத்தில் பேரம் பேசியதாக கூறப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் மரணம் இதுவரை மர்மமாக இருக்கக்கூடிய சூழலில் அதற்குப் பின்பாக நடந்த சம்பவங்கள் அனைத்தும் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளாகவும்,  அந்த காட்சிகளின் புகைப்படங்களாகவும் வெளி வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது சிசிடிவி காட்சியின் ஒரு புகைப்படம் ஆனது வெளியாகியிருக்கிறது. மாணவி உயிரிழந்ததாக  சொல்லப்படக்கூடிய ஜூலை 13ஆம் தேதி இரவு 7:00 மணிக்கு மாணவியின் தாயார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

குரங்கின் கையில் பூமாலை… பட்டை நாமம் போட்ட திமுக… ஸ்டாலினுக்கு துணிச்சல் இருக்கா ? எடப்பாடி 3பக்க பரபரப்பு அறிக்கை …!!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் இல்லங்களில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர்கள் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். விடியா தி.மு.க அரசினுடைய அமைச்சர்களுக்கு எதிராக வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை திசை திரும்ப தனது ஏவல் துறை மூலமாக எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நடத்தும் நாடகமே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்று அதிமுகவினுடைய இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் […]

Categories
மாநில செய்திகள்

ஐசரி கணேசன் வீட்டிலும் ரெய்டு – லஞ்சம் ஒழிப்புத்துறை அதிரடி …!!

தமிழகத்தில் இன்று காலை அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இல்லங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதிமுக ஆட்சி காலகட்டத்தில் தனியார் மருத்துவமனைக்கு விதிமுறைகளை மீறி சான்றிதழ் வழங்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரில் திரு ஐசரி கணேஷ் அவர்களின் பெயரும் அடிபட்ட நிலையில் தற்போது அவர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகின்றது.  வேல்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு லஞ்சம் கொடுத்து ESSENTIALITY சான்றிதழ் வாங்கப்பட்டதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரோட்டை லாக் செஞ்சாச்சு… உள்ளே யாரையும் விடாதீங்க.. அதிமுக MLAக்கள் அதிரடி கைது… நச்சுன்னு தூக்கிய போலீஸ் …!!

முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அவரது வீட்டின் முன்பாக வேலுமணி ஆதரவாளர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பி வந்த நிலையில் எஸ்.பி வேலுமணி வீட்டிற்கு முன்பு உள்ள ஆதரவாளர்கள் மற்றும் கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.பி வேலுமணி வீட்டின் முன்பு அதிக அளவில் தொண்டர்கள் கூடுவதை தடுக்கும் விதமாக, எஸ் பி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

7 ADMK எம்.எல்.ஏக்கள் கைது – எடப்பாடி பழனிசாமி கண்டனம் ..!!

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இல்லங்களில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து அதிமுக  இடைக்கால பொதுச் செயலாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மின்கட்டண உயர்வால் அரசின் மீது ஏற்பட்டிருக்கும் மக்கள் எதிர்ப்பை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மூலம் திசை திருப்ப நினைக்கும் இந்த திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் செயலை கண்டித்து,ஜனநாயக முறையில் கேள்வி எழுப்பிய கோவை மாவட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.600 பல்புக்கு ரூ.4500 விலை… ஒரு பல்புக்கு ரூ3,900 கொள்ளை – பரபரப்பு  தகவல் …!!

இன்று காலை தமிழகம் முழுவதும் அரசியல் பரபரப்பு  அரங்கேறி கொண்டிருக்கிறது. அதிமுகவின் முன்னாள் அரசில் முக்கியத்துறைகளின் அமைச்சர்களாக இருந்த சி.விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி ஆகிய இருவர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். அனைத்து கிராமங்களிலும் இருக்கக்கூடிய  தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றினால் மின் தேவை குறையும் என்ற புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.2015- 2018ஆம் ஆண்டு காலகட்டங்களில் அனைத்து தெருவிளக்குகளையும் led விளக்குகளாக மாற்றுவதற்கான திட்டத்திற்கு நிதி 875 கோடி ஒதுக்கீடு […]

Categories

Tech |