Categories
தேசிய செய்திகள்

“அனைவரின் இதயம் உடைந்துள்ளது” தோல்வி குறித்து ராகுல் ட்வீட்…!!

இந்திய அணியின் தோல்வியால் அனைவரின் இதயம் உடைந்துள்ளது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியைத் தழுவி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“240 ரன் பெரிய ஸ்கோர் அல்ல” சச்சின் டெண்டுல்கர் கருத்து …!!

 240 ரன் என்ற வெற்றி இலக்கை  சந்தேகமில்லாமல் இந்திய அணி எட்டிப் பிடித்துவிட முடியும் இது பெரிய ஸ்கோர் அல்ல என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலக கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நியூஸிலாந்து அணிகள் நேற்று முன்தினம் மோதின. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்ட ஓவரில் இருந்து எஞ்சிய ஆட்டம் நேற்று தொடங்கியதில் நியூசிலாந்து அணி  239 ரன் எடுத்தது. பின்னர் 240 ரன் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 210 ரன்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தற்கொலையால் நீட் தேர்வை இரத்து செய்ய முடியாது” இல.கணேசன் கருத்து ..!!

தற்கொலைகளை மட்டுமே காரணம் காட்டி நீட் தேர்வை ரத்து செய்ய சொல்வது ஏற்புடையது அல்ல என்று இல.கணேசன் தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பிற்கான தேசிய நுழைவு தேர்வான நீட் தேர்வை மத்திய அரசு நிறைவேற்றியற்றது. இதற்க்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் உட்பட மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தமிழக அரசு சட்ட மசோதாவை நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பியது. ஆனால் தமிழக அரசின் தீர்மானத்தை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. இது […]

Categories
தேசிய செய்திகள்

“துப்பாக்கியுடன் ஆட்டம் போட்ட பாஜக MLA” சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை….!!

 துப்பாக்கிகளுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏவை கட்சியிலிருந்து நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்ய கட்சி தலைமை முடிவு செய்துள்ளது. டெல்லியில் பத்திரிக்கையாளரை மிரட்டிய புகாரில் ஏற்கனவே மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்துள்ளார் பாஜக எம்எல்ஏ பிரணவ் . காலில் அறுவைசிகிச்சை செய்து கொண்டு வீட்டிற்கு சென்ற அவர் மது அருந்தி கொண்டு கையில் துப்பாக்கி வைத்து ஆடுவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி சர்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் துப்பாக்கிகளுடன் ஆட்டம் போட்ட பாஜக எம்எல்ஏவை கட்சியிலிருந்து நிரந்தரமாக சஸ்பெண்ட் செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக ஏ.கே.சின்ஹா நியமனம் …!!

மத்திய நீர்வள ஆணைய தலைவரான ஏ.கே.சின்ஹா காவிரி மேலாண்மை ஆணைய தலைவராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா_வின் காவேரியில் இருந்து தமிழகம் , புதுவை , கேரளா ஆகிய மாநிலங்களுக்கு உரிய காவிரி நீரை வழங்க உச்சநீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று , சம்மபந்தப்பட்ட மாநில பிரதிநிதிகளை உள்ளடக்கி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை அமைத்தது மத்திய அரசு. இந்த குழுவின் தலைவராக  மசூத் ஹூசைன் இருந்து வந்தார்.இந்நிலையில் மசூத் ஹூசைன் பதவிக்காலம் சென்ற ஜூன் 30_ஆம் தேதியுடன் முடிவடைந்து […]

Categories
பல்சுவை

“உயர்ந்த டீசல் , மாற்றமின்றி பெட்ரோல்” இன்றைய விலை நிலவரம்…!!

இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை நிலையாகவும் , டீசல் விலை உயர்ந்தும் காணப்படுகின்றது. தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச சந்தை […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 11.!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 11 கிரிகோரியன் ஆண்டு : 192_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 193_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 173 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   472 – உரோம் நகரில் தனது சொந்த இராணுவத் தளபதிகளால் முற்றுகையிடப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு உரோமைப் பேரரசர், அந்தெமியசு சென் பீட்டர்சு தேவாலயத்தில் கைப்பற்றப்பட்டு கொல்லப்பட்டார். 813 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் மைக்கேல், சதி முயற்சியை அடுத்து, தனது தளபதி ஐந்ர்தாம் லியோவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, அத்தனாசியசு என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இறுதி போட்டிக்கு முன்னேற போவது யார் ..?ஆஸ்திரேலியா இங்கிலாந்து நாளை மோதல்…!!

உலக கோப்பை  தொடரின்   2 வது  அரை இறுதி போட்டி நாளை aus – eng அணிகளுக்கு இடையே  நடைபெற இருக்கிறது  நடை  பெற்று வரும்  உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடரின்  2- வது அரை இறுதி ஆட்டம் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நாளை  மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும்  இங்கிலாந்து அணிகள் மோத  உள்ளன .ஆஸ்திரேலியா  அணி ஏற்கனவே 7 முறை  உலக கோப்பை இறுதி  சுற்றுக்கு   சென்று,5 முறை உலக  கோப்பையை வென்று உள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

“திருமணத்துக்கு முன் கட்டாய HIV டெஸ்ட்” கோவா_வில் புதிய திட்டம் …!!

திருமணத்துக்கு முன்பு கட்டாயமாக HIV டெஸ்ட் மேற்கொள்ள வேண்டுமென்ற புதிய திட்டத்தை கோவா மாநிலம் நிறைவேற்றவுள்ளது. மனிதனுக்கு பல்வேறு நோய்கள் வந்தாலும் மிக கொடூரமான நோய்யாக பார்க்கப்படுவதில் ஓன்று தான்  எச்.ஐ.வி என்ற வைரஸால் பரவும் எய்ட்ஸ். உயிரையே கொள்ள கூடிய இந்த நோயி நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த தற்சமயம் தடுப்பூசியோ , நிரந்தர தீர்வோ இல்லை . மக்களால் மிகவும் கூடியதாக பார்க்கப்படும் இந்த பரவலாம் இருக்க  எச்.ஐ.வி பரிசோதனை முக்கியமானதாகும். அந்த வகையில் திருமணத்தை பதிவு செய்வதற்கு […]

Categories
உலக செய்திகள்

“20 கிளர்ச்சியாளர்கள் கொன்று குவிப்பு” ஏமன் அரசு படை அதிரடி ….!!

ஏமன் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மீது அரசு படை நடத்திய தாக்குதலில் 20 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுதி என்ற கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து உள்நாட்டு போர் புரிந்து வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த அரசின் ஆதரவு படையும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றது. இருவருக்கும் இடையே ஏற்படும் மோதலில் இரண்டு தப்பினருக்கும் சேதாரம் ஏற்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த தாக்குதலில்  20 ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். இதுகுறித்து ஏமன் நாட்டு அரசு ஆதரவு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

திரும்பி போ…!! திரும்பி போ..!! சந்திக்க வந்த அமைச்சருக்கு எதிராக கோஷம்…!!

அதிருப்தி MLA_க்களை சந்திக்க சென்ற கர்நாடக அமைச்சரை திரும்பி போ திரும்பி போ என்று ஜனதா தள ஆதரவாளர் கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு அரங்கேறிய வண்ணம் இருந்து வருகின்றது. ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளமும் , ஆட்சியை கவிழ்க்க பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மும்பை விடுதியில் தங்கி இருக்கும் 14 சட்டமன்ற உறுப்பினர்களை எப்படியாவது சமாதான படுத்திவிட காங்கிரஸ் முயன்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

 “போலீஸ் எந்த படையையும் குவிக்கட்டும்” கர்நாடக அமைச்சர் ஆவேசம்…!!

அதிருப்தி MLA_க்களை சந்திக்க விடாமல் போலீஸ் எந்த படையையும் குவிக்கட்டும்  என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு அரங்கேறிய வண்ணம் இருந்து வருகின்றது. ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளமும் , ஆட்சியை கவிழ்க்க பாஜகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு மும்பை விடுதியில் தங்கி இருக்கும் 14 சட்டமன்ற உறுப்பினர்களை எப்படியாவது சமாதான படுத்திவிட காங்கிரஸ் முயன்று வருகின்றது. அதே போல விடுதியில் தங்கி இருக்கும் சட்டமன்ற […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பரிதவிக்கும் கர்நாடக அரசு…..மும்பை சென்ற அமைச்சர் தடுத்து நிறுத்தம்…!!

மும்பை நட்சத்திர விடுதிகளில் இருக்கும் அதிருப்தி MLA_க்களை சந்திக்க சென்ற அமைச்சர் சிவகுமாரை அங்குள்ள போலீசார் அனுமதிக்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக மாநில சட்டசபையில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணிக்கு 119  உறுப்பினர்களும் , பாஜகவுக்கு 105 உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸ்+ ஜே.டி.எஸ் கூட்டணி சார்பில் குமாரசாமி மாநில முதல்வராகவும் , பாஜக எதிர்கட்சியாகவும் இருந்து வருகின்றது. காங்கிரஸ் + ஜே.டி.எஸ் MLA_க்கள் ராஜினாமா :  கூட்டணி ஆட்சியில் தொடர்ந்து நிலவிவரும் அரசியல் குழப்பத்தால் அங்குள்ள காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா […]

Categories
பல்சுவை

“மாற்றமின்றி பெட்ரோல் , டீசல்” வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி …!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எவ்வித மாற்றமுமின்றி விலை நிலையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 10.!!

இன்றைய தினம் : 2019 ஜூலை 10 கிரிகோரியன் ஆண்டு : 191_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 192_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 174 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   988 – டப்லின் நகரம் அமைக்கப்பட்டது. 1086 – டென்மார்க் மன்னர் நான்காம் கனூட் கிளர்ச்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார். 1212 – லண்டன் நகரின் பெரும் பகுதியை தீ அழித்தது. 1460 – வாரிக் துணைநிலை மன்னர் ரிச்சார்ட் நெவில் இங்கிலாந்தின் ஆறாம் என்றி மன்னரின் படைகளை நோர்த்தாம்ப்டன் நகரில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்து மன்னரைச் சிறைப்பிடித்தார். 1499 – வாஸ்கோ ட காமாவுடன் பயணம் செய்து இந்தியாவுக்கான பயண […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா அபார பந்து வீச்சு…. 8_ஆவது ஓவரில் முதல் பவுண்டரி அடித்த நியூஸி……!!

இந்தியா நியூசிஸிலாந்து அணிகள் மோதும்  உலகோப்பை அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணி 8_ஆவது ஓவரில் முதல் பவுண்டரியை அடித்துள்ளது. நடைபெற்றுவரும் 2019- உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி   போட்டியில் இந்தியா ,  நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில்  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகின்றது. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா அபாரமாக பந்து வீசி வருவதால் நியூஸிலாந்து தொடக்க […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக முதல்வர் உத்தரவு …..!!

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கோரி கர்நாடக முதல்வர் குமாரசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா தமிழகத்திற்கு  177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து ஒவ்வொரு மாதமும் கர்நாடகா எவ்வளவு தண்ணீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டியுள்ளது.  அதன்படி ஜூன் மாதம் 9.19 டிஎம்சி நீரை தமிழகத்துக்கு வழங்க ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடகாவோ தமிழகத்துக்கு வெறும் 2 டிஎம்சி நீர் மட்டுமே வழங்கியது. இந்நிலையில் கடந்த 25_ஆம் தேதி டெல்லியில் உள்ள சேவா பவனில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்லும் பாஜக” காங்கிரஸ் MLA குற்றசாட்டு…!!

சுயேச்சை MLA  நாகேஷை பாஜக வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று விட்டதாக கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடக அரசியலில் உச்சகட்ட குழப்பம் ஏற்பாட்டு வருகின்றது.எப்போது வேண்டுமெனாலும் ஆட்சி கவிழும் சூழலில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கட்சி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் போராடி வருகின்றனர்.அங்குள்ள கோலார் மாவட்டத்தின் முல்பாகல் சட்டப்பேரவை தொகுதியில், சுயேட்சை வேட்பாளராக வெற்றி பெற்றவர் நாகேஷ். இவரின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றியவர் காங்கிரஸ் கட்சியின் சிவகுமார். சிவகுமார் கர்நாடக அரசில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

7 பேர் விடுதலை “இனி ஆளுநர் தான் முடிவெடுக்கனும்” முதல்வர் பல்டி …!!

7 பேர் விடுதலை தொடர்பாக இனி ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டுமென்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் சட்டம் நீதி நிர்வாகம் சிறைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சன் 7 பேர் விடுதலை தமிழக அரசு தீர்மானம் போட்டு ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில் என்ன முடிவு எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினார். இதற்க்கு பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் , எங்கள் அதிகாரத்துக்குட்பட்ட அமைச்சரவையை கூட்டி தீர்மானனம் நிறைவேற்றி ஆளுநருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

தீடிர் பரபரப்பு “19 மாநிலம் 110 இடங்களில் சோதனை” CBI அதிரடி ……!!

ஒரே நேரத்தில் 19 மாநிலத்தின் 110 இடங்களில் CBI சோதனை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரே நேரத்தில் நாட்டின் 19 மாநிலங்களின் 110 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட தனித்தனி வழக்குகள், சில ஊழல் வழக்குகள் , சில ஆயுதங்களை கடத்துவதில் சம்பந்தப்பட்ட வழக்குகள் போன்ற பல்வேறு விதமான வழக்குகளுக்கான சோதனைகளை சிபிஐ ஒன்றாக சேர்ந்து 110 இடங்களில் நடத்தி வருகின்றது. இந்த சோதனை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 110 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அனைத்து கட்சி கூட்டம்” 21 கட்சிகளுக்கு அழைப்பு…!!

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால் தமிழகம்  இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத இடம் அளிக்கப்படும் என்று உறுதியும் […]

Categories
உலக செய்திகள்

“இங்கிலாந்துக்கு  சரியான பதிலடி கொடுப்போம்” ஈரான் எச்சரிக்கை …!!

சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலை விடுவிக்கவில்லை என்றால் உரிய பதிலடியை கொடுப்போம் என இங்கிலாந்துக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியா நாட்டின் மீது பல்வேறு பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் தடையை மீறி சிரியாவுக்கு எண்ணெய் கொண்டு சென்றதாக ஈரானின் இருந்து வந்த  எண்ணெய் கப்பலை சூப்பர்டேங்கர் கிரேஸ் கிப்ரால்டர் கடற்பகுதியில் இங்கிலாந்து  சிறைபிடித்துள்ளது. இங்கிலாந்தின் இந்த செயலை கண்டித்த  ஈரான் சிரியாவிற்கு எண்ணெய் கொண்டு செல்லப்படவில்லை என்று கூறியுள்ளது.   மேலும் இங்கிலாந்து கப்பல் சர்வதேச கடல்பகுதியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அனைத்து கட்சி கூட்டத்தில் ம.நீ.ம சார்பில் கமல் பங்கேற்கிறார்…!!

முதலவர் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் மக்கள் நீதி மையத்தின் சார்பில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை  மத்திய அரசு நிறைவேற்றியது. தமிழகத்தில் இன்னும் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் இந்த இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு முதலவர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் , தலைமை செயலகத்தில் இன்று மாலை  ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகின்றது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அனைத்து கட்சி கூட்டம் பங்கேற்குமா ? மக்கள் நீதி மய்யம் ……. தீடிர் ஆலோசனையில் நிர்வாகிகள் ..!!

முதலவர் தலைமையில் இன்று நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் பங்கேற்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை  மத்திய அரசு நிறைவேற்றியது. தமிழகத்தில் இன்னும் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் இந்த இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக அரசியல் கட்சிகளுக்கு முதலவர் அழைப்பு விடுத்திருந்த நிலையில் , தலைமை செயலகத்தில் இன்று மாலை  ஆலோசனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“10 சதவீத இட ஒதுக்கீடு” முதல்வர் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகின்றது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 % இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும் என்ற சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியது. ஆனால் தமிழகம்  இந்த சட்ட மசோதாவை எதிர்த்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு தமிழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக 25 சதவீத இடம் அளிக்கப்படும் என்று உறுதியும் அளித்துள்ளது. ஆனாலும் தமிழகத்தில் 10 % […]

Categories
தேசிய செய்திகள்

பாஜகவில் இணைந்ததால் வீட்டை காலி செய்ய சொன்ன உரிமையாளர் …!!

தன்னுடைய வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர் பாஜகவில் இணைந்ததால் வீட்டை காலி செய்யும்படி சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது . பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றார். தற்போது இந்தியளவில் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. வாரணாசியில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா, உத்தர பிரதேச […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்கள் மகிழ்ச்சி ”செருப்பு கிடையாது இனி ஷூ” அமைச்சர் அதிரடி ….!!

6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு செருப்புக்கு பதில் ஷூ வழங்கப்படுமென்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில் , பள்ளி கல்வித்துறையை மேம்படுத்த தமிழக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார். மேலும் பேசிய அவர் , தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளியில் படிக்கும் 6_ஆம் வகுப்பு முதல் 12_ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ , மாணவிகளுக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

1_ஆ …. 2_ஆ …. 3_ஆ … 6 ஹாஷ்டாக் ….. இந்தியளவில் ட்ரெண்டிங்….. பிறந்தநாள் கொண்டாடும் தோனி…!!

இந்திய கிரிக்கெட் அணியின் தோனி இன்று தனது 38_ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் உலகளவில் அவருக்கு வாழ்த்து குவிந்து வருகின்றது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிமுகமாகி உலகளவில் தன்னை மிஞ்ச எவராலும் முடியாது என்று தன்னை நிலை நிறுத்திக் கொண்ட தோனி. தனது தலைமையின் கீழ் இந்திய அணிக்கு 50 ஓவர் உலக கோப்பை , T 20 உலக கோப்பை மற்றும் மினி உலக கோப்பை என அடுத்தடுத்து 3 ICC கோப்பையை பெற்றுக் […]

Categories
தேசிய செய்திகள்

#BIG BREAKING: செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் கைது…!!

பல மாதங்களாக தேடி வந்த சமூக செயல்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களாக காணாமல் தேடப்பட்டு வந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், பிப்ரவரி 15-ஆம் தேதி மாயமானார். அன்று இரவு எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் ஏறிய முகிலனை அதற்கு அடுத்த நாளிலிருந்து காணவில்லை. அதன் பின் காவல்துறையினர் விசாரணை நடத்தியும், செயற்பாட்டாளர் அ. மார்க்ஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

100 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய பும்ரா…!!

இலங்கை அணிக்கெதிரான ஆட்டத்தில் 100_ஆவது  விக்கெட் வீழ்த்தி பும்ரா அசத்தியுள்ளார்.   உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.  44-வது லீக் ஆட்டமாக நடைபெற்ற இந்த போட்டியில்  டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.இதனை தொடர்ந்து களமிறங்கிய  இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது.   ஆட்டத்தின் 10_ஆவது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் 4_ஆவது பந்தில்இலங்கை அணியின் கருணாரத்னே 10 ரன்னில்ஆட்டமிருந்தார். கருணாரத்னே […]

Categories
தேசிய செய்திகள்

ஆட்சி கவிழ்ப்பு…. பாஜக 105 , காங்கிரஸ் கூட்டணி 105…..பரபரப்பாகும் கர்நாடகா …!!

கர்நாடகாவில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளதால் தேசியளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் இணைத்து ஆட்சி செய்து வருகின்றது. மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி முதல்வராக இருந்து வருகின்றார். ஆட்சி அமைத்த நாள் முதல் அங்கே காங்கிரஸ் கட்சிக்கும் , மதசார்பற்ற ஜனதா தளத்திற்கும் மோதல் இருந்து கொண்டே வந்தது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சி அமைக்க பாஜக முயன்று வருகின்றது. மேலும் மக்களவை தேர்தலில் அங்குள்ள 20 இடங்களில் 18 […]

Categories
தேசிய செய்திகள்

“கையில் பாப் கார்ன்” படம் பார்க்கும் ராகுல்….. வைரலாகும் வீடியோ ….!!

டெல்லியில் உள்ள தியேட்டரில் ராகுல் காந்தி படம் பார்ப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த 3_ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி , நான் காங்கிரஸின் தலைவர் கிடையாது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுங்கள். நான் எனது ராஜினாமா கடிதத்தை  கொடுத்து விட்டேன். காங்கிரஸ் தலைவராக இல்லை, காங்கிரஸ் காரிய கமிட்டி தாமதிக்காமல் புதிய தலைவரை உடனே தேர்வு  செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.இது  காங்கிரஸ் கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது.   மேலும் இதற்கான […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கவிழ்கிறதா கர்நாடக அரசு ? 11 MLA_க்கள் சபாநாயகருடன் சந்திப்பு …!!

கர்நாடகாவில் 11 MLA_க்கள் சபாநாயகரை சந்திக்க இருப்பது அரசியலில் தீடிர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இறுதியாக நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் தனி கட்சியாக 104 இடங்கள் பெற்ற பாஜக ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகின்றது. மாநிலத்தின் முதலமைச்சராக மதசார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி இருந்து வருகின்றார். இந்த ஆட்சி காங்கிரஸ் கட்சியில் 80 இடங்கள் , மதசார்பற்ற […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மருத்துவ படிப்பு கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு ….!!

மருத்துவ கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் முடிவு ஜூன் 5_ஆம் தேதி வெளியாகிய நிலையில் தமிழக அரசு மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பங்களை ஜூன் 7_ஆம் தேதி முதல் 20_ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்தது.மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப கடந்த மாதம் 22_ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்திருந்தது. இந்நிலையில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார். […]

Categories
பல்சுவை

“பெட்ரோல் கிடுகிடு உயர்வு” பொதுமக்கள் கவலை ….!!

பட்ஜெட் அறிவிப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரிய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் :  சர்வதேச […]

Categories
பல்சுவை

வரலாற்றில் இன்று ஜூலை 06..!!

. இன்றைய தினம் : 2019 ஜூலை 06 கிரிகோரியன் ஆண்டு : 187_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 188_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 178 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள் :   1044 – புனித ரோமப் பேரரசன் மூன்றாம் என்றி அங்கேரி மீது படையெடுத்தான். 1189 – முதலாம் ரிச்சார்டு இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான். 1348 – கறுப்புச் சாவுக்குக் காரணமான யூதர்களைப் பாதுகாப்பதற்கான ஆணை ஓலையையை திருத்தந்தை ஆறாம் கிளெமெண்டு வெளியிட்டார். 1411 – தனது மூன்றாவது செல்வம் தேடும் பயணத்தை முடித்துக் கொண்டு நாஞ்சிங் திரும்பிய மிங் சீனத் தளபதி செங் ஹே, தனது பயணத்தின் போது இலங்கையில் மிங்-கோட்டைப் போரில் கைது செய்த இலங்கை மன்னன் அழகக்கோனை யொங்கில் பேரரசரிடம் […]

Categories
மாநில செய்திகள்

“தலையில் இடி விழுந்தது போல் இருந்தது” வைகோ ஆவேசம் …!!

தீர்ப்பை பார்த்ததும் எனக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது என்று என்று மதிமுக பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்தது. மேலும் ஒரு ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

“MP கனவு கம்பி எண்ண வச்சுருச்சே” வைகோ குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்

எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே என்று வைகோ வழக்கின் தீர்ப்பு குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். கடந்த 2009 தி.மு.க ஆட்சி காலத்தில்  நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய மதிமுக வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் , விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும்  பேசியதாக தேச துரோக வழக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம்  விசாரித்து வந்த நிலையில் வைகோ […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பட்ஜெட் அறிவிப்பு “பெட்ரோல் , டீசல் கிடுகிடு உயர்வு” பொதுமக்கள் அதிர்ச்சி …!!

பட்ஜெட் அறிவிப்பை அடுத்து பெட்ரோல் டீசல் விலை கிடுகிடுவென உயர்வதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இன்று மக்களவையில் 2019_2020_க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலாசீதாராமன் தாக்கல் செய்தார். அதில் சாலை வசதிகளை மேம்படுத்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த்தப்படுமென்று அவர் தெரிவித்தார். இதனால் இன்று இரவு முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்கின்றது. நெடுஞ்சாலைத்துறை காண கூடுதல் வரி மற்றும் கூடுதல் கலால் வரி இரண்டுமே ஒரு ஒரு லிட்டருக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 1 ரூபாய் அதிகரிக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் மகிழ்ச்சி “ரூ 1,00,000 கடன் பெறலாம்” பட்ஜெட்டில் அறிவிப்பு

மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் அதிகபட்சமாக  தலா ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.   இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின்  2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில்  மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் பொறுப்பு நிதியமைச்சர் பியூஸ்கோயல் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டை தொடர்ந்து இந்த முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.     அப்போது பேசிய நிர்மலா சீதாராமன் கூறுகையில் , பெண்கள் […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கல்வி கொள்கையை உலகின் சிறந்தாக மாற்ற திட்டம்….. நிர்மலா சீதாராமன்

புதிய கல்வி கொள்கையை உலகின் சிறந்ததாக மாற்ற திட்டம் உள்ளதாக  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில்  மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பேசினார்.அப்போது அவர் கூறுகையில் , புதிய தேசிய கல்வி கொள்கையை அரசு கொண்டு வர உள்ளது. உலகின் சிறந்த கல்வி […]

Categories
தேசிய செய்திகள்

“சில்லரை வணிகர்களுக்கு  ஓய்வூதியம்” நிர்மலா சீதாராமன் தகவல்…!!

பிரதான் மந்திரி கரம் யோகி மான் தன் யோஜனா என்ற பெயரில்  சில்லரை வணிகர்களுக்கு  ஓய்வூதிய திட்டம் வழக்கப்படுமென்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில்  மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து , பட்ஜெட் உரையை வாசித்து வருகின்றார். இதில் 3 கோடி சில்லரை […]

Categories
தேசிய செய்திகள்

“நாடு முழுவதும் சம அளவில் மின்சாரம்” நிர்மலா சீதாராமன் உறுதி ….!!

நாடு முழுவதும் சம அளவில் மின்சார வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். பாஜக புதிதாக பொறுப்பேற்ற நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டார்.கடந்த ஏப்ரலில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2019_ 2020_க்கான முழு பட்ஜெட்டை மக்களவையில்  மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து , பட்ஜெட் உரையை வாசித்து வருகின்றார். அதில் , அனைத்து பங்குதாரர்களுடனும் கலந்தாலோசித்து விமானத் துறை, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாடாளுமன்றத்தில் குரல் ஒலிக்குமா…? வைகோ அதிரடி பதில் …!!

நாடாளுமன்றத்தில் என்குரல் ஒலிக்காது என்றவர்களுக்கு எதுவும் நான் கூற விரும்பவில்லை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதிலளித்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. வைகோ மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடும் சூழலில் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

“புதிய இந்தியாவை உருவாக்க மோடி அரசு முயற்சி ” நிர்மலா சீதாராமன் பேச்சு …!!

புதிய இந்தியாவை உருவாக்க மோடி அரசு முயற்சி செய்து வருகிறது என்று மக்களவையில்  நிர்மலா சீதாராமன்  தெரிவித்தார். இன்று மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை   தாக்கல் செய்தார். அபோது பேசியவர் , உணவு பாதுகாப்புக்காக கடந்த 5 ஆண்டுகளில் 2 மடங்கு பணம் செலவிடப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட பொருளாதார நாடு என்ற நிலையை எட்டும். சிறு மற்றும் குறு தொழில்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுதான் தற்போது எடுக்கப்பட்டுள்ள முதல் இலக்கு என்றார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள்” வைகோ பேட்டி …!!

இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள் மற்றும் வாழ்க்கையில் முக்கியமான நாள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரித்த  சிறப்பு நீதிமன்றம்  வைகோ குற்றவாளி என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கின் தண்டனையாக ஓராண்டு சிறை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வைகோ சிறைத்தண்டனை நிறுத்தி வைப்பு” சிறப்பு நீதிமன்றம் உத்தரவு …!!

தேச துரோக வழக்கில் வைகோ_வுக்கு ஓராண்டு சிறை தண்டனை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்ததுசிறப்பு நீதிமன்றம். 2009_ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில்  நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் மத்திய அரசுக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர் . இந்திய  இறையாண்மை _க்கு எதிராக பதியப்பட்ட இந்த வழக்கை MLA , MP_க்களை விசாரிக்கும்  சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. காலை 10.30 மணிக்கு நீதிபதி தீர்ப்பை வாசிக்கும் போது  மதிமுக வழக்கறிஞர்கள்  மல்லை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சிறை செல்லும் வைகோ” குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு ….!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திமுக ஆட்சி காலத்தில் வைகோ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக ஆயிரம் விளக்கு காவல் துறையினர் 2009_ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு MP மற்றும் MLA_க்கள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் அவர் மீது குற்றம் நிரூபணமாக்கப்பட்டு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை வெளியிட்ட நீதிபதி சாந்தி , உங்களுக்கான தண்டனையை அறிவிக்கப்பிக்கின்றேன் இன்று அறிவிக்கவா அல்லது திங்கள்கிழமை அறிவிக்கவா என்று […]

Categories
தேசிய செய்திகள்

மும்பை அணை உடைப்பால் பலி எண்ணிக்கை 18_ஆக அதிகரிப்பு …!!

மஹாராஷ்டிரா_வில் பெய்த கன மழையில் அணை  உடைந்து வெள்ளநீர் புகுந்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 18_ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அதி தீவிரமடைந்து , வெளுத்து வாங்கி வருகின்றது. கடந்த சில நாட்களாக கொட்டும் கன மழையால் தலைநகர் மும்பை வெள்ள நீரில் தத்தளிக்கின்றது . கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவு மழையின் அளவு பதிவாகியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் அங்குள்ள ரத்னகிரி மாவட்டத்தின் திவாரே அணை அதிக நீர் வரத்தால் கடந்த […]

Categories
உலக செய்திகள்

துனிசியா நாட்டில் சோகம் …. படகு மூழ்கி 80க்கும் மேற்பட்டோர் பலி …!!

துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளாகி 80க்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துனிசியா நாட்டில் இருந்து ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள்  சிலர்  ஐரோப்பியாவை நோக்கி படகில் பயணம் செய்தனர். சுமார் 80_க்கும் அதிகமானோரை ஏற்றிக்கொண்டு அதிக பாரத்துடன் சென்ற படகு எடை தாங்காமல் நடுவழியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு நீரில் மூழ்குவதை பார்த்த மீனவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீனவர்கள் தொடர்ந்து முயற்சித்தும் 4 பயணிகளை மட்டுமே கரைக்கு மீட்டு […]

Categories

Tech |