Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடியிடம் பேசுவேன்… ADMKவில் இனி பிளவு இல்லை… ஓபிஎஸ் அதிரடி முடிவு ..!!

அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்த பொதுக்குழு செல்லாது என அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்,  பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக வந்த தீர்ப்பால் எடப்பாடி தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது எனவும்  அறிவித்த உயர்நீதிமன்றம்,  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே பொதுக்குழுவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி ADMKஒரே அணி தான்… மீண்டும் சசிகலா… ஈபிஎஸ்_உடன் பேச்சு… ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி ..!!

நேற்று நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியதை அடுத்து அவர் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடம் வந்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கழகத்தினுடைய நிறுவன தலைவர், பொன்மன செம்மல், மக்கள் திலகம்,  புரட்சித்தலைவர் எம்ஜிஆர்,  காலமெல்லாம் ஏழை எளிய மக்கள் மீது அன்பும், வணக்கம்: பண்பும், பாசமும், பற்றும்,பரிவும் கொண்டு நல்லாட்சி நடத்திய   இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

100பேரை வச்சு இருக்கும் ஓபிஎஸ் …! தீர்ப்பில் எந்த பின்னடைவும் இல்லை… அதிரடி காட்டிய கேபி முனுசாமி

நேற்று அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து பேசிய கேபி முனுசாமி,   கடந்த 11 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவிலும் கொண்டு வந்த தீர்மானங்களை அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் முழுமனதாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஒரு 100 பொதுக்குழு உறுப்பினர்களை வைத்துக்கொண்டு நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றத்தினுடைய முழு தீர்ப்பு வந்த பின்பு அதற்கு முறையாக தலைமை கழகத்தில் இருந்து ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படும். இதில் பின்னடைவு என்பதற்கு எந்த வித […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பொதுக்குழுவுக்கு தடை விதிக்கவில்லை என்றால், எடப்பாடி சவுகரியமாக அமர்ந்துவிடுவார் – தீர்ப்பின் முழு விவரம் …!!

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன்,  ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக  பொதுக்குழு செல்லாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். அது மட்டுமல்லாமல் ஜூன் 23ஆம் தேதி முன்பிருந்த நிலையில்தான் இருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்றும் தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். மேலும் சட்டத்தின் ஆட்சி என்பது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, மாநிலத்தில் அரசை நடத்தக்கூடிய கட்சிகளுக்கும் பொருந்தும். அந்த கட்சியினுடைய உறுப்பினரின் உரிமை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

ரொம்ப மகிழ்ச்சியா பேசுனாங்க..! எனக்கு மனநிறைவா இருந்துச்சு… டெல்லி சந்திப்பு குறித்து மனம் திறந்த ஸ்டாலின்…!!

இந்தியாவின் புதிய குடியரசு தலைவராக திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசு தலைவராக ஜெதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டு, சில நாட்களுக்கு முன்பு தான் இருவரின் பதவியேற்பு விழாவும் நடைபெற்றது. இவர்களின் பதவியேற்பு விழாவிற்கு பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இதில் பங்கேற்க வில்லை. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் 1நாள் பயணமாக இன்று  தலைநகர் டெல்லி சென்று குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவரை இன்று காலை நேரில் […]

Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா…! லிஸ்ட் போட்ட தமிழக அரசு … பெரிய பட்டியலோடு டெல்லி போன ஸ்டாலின்…!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தற்போது பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசி வருகின்றார். இதில் தமிழக அரசு பேசிய கோரிக்கை பட்டியலையே மத்திய அரசிடம் வழங்க இருக்கின்றது. இது தொடர்பாக காலை செய்தியாளரை சந்தித்த முதல்வர் முக.ஸ்டாலின், மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே வைக்கப்பட்ட பழைய கோரிக்கைகளை நினைவுபடுத்த இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது இதோடு கூடுதலாக  புதிய கோரிக்கைகளை வைக்கும் வகையில் தமிழக அரசு பெரிய பட்டியலை போட்டுள்ளது. பிரதமர் மோடியுடனான சந்திப்பில் தமிழக முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

Breaking: பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் முக.ஸ்டாலின் சந்திப்பு …!!

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று டெல்லி சென்று குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் என அடுத்தடுத்து முக்கிய சந்திப்பை நிகழ்த்த இருக்கின்றார். காலையில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோரை சந்தித்த முதல்வர் மாலையில் பிரதமருடன் நடைபெறும் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறுகையில், நான் முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டு, மூன்று முறை டெல்லிக்கு வந்திருந்து பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டினுடைய பல்வேறு கோரிக்கைகளை எல்லாம் நான் எடுத்து வைத்திருக்கிறேன். அந்த கோரிக்கைகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமரை 2, 3தடவை சந்திச்சேன்…! இப்போ நியாபகப்படுத்தனும்… ஓஹோ… இதுக்குத்தான் சந்திக்கீங்களா ?

தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் இன்று டெல்லி சென்று குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் என அடுத்தடுத்து முக்கிய சந்திப்பை நிகழ்த்த இருக்கின்றார். காலையில் குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் ஆகியோரை சந்தித்த முதல்வர் மாலையில் பிரதமருடன் நடைபெறும் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், நான் முதலமைச்சராக பொறுப்பேற்று இரண்டு, மூன்று முறை டெல்லிக்கு வந்திருந்து பிரதமரை சந்தித்து, தமிழ்நாட்டினுடைய பல்வேறு கோரிக்கைகளை எல்லாம் நான் எடுத்து வைத்திருக்கிறேன். அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நேர்ல பேசாம…. போன்ல பேசிய ஸ்டாலின்…. OKசொன்ன மோடி.. ப்ரஸ்மீட்டில் நெகிழ்ந்தC.M ..!!

இன்று காலை டெல்லியில் குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின், இன்று மாலை 4 மணியளவில் பிரதமரை சந்திக்க இருக்கின்றேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால் ? 150 க்கும் மேற்பட்ட நாடுகளை சார்ந்த வீரர்கள் செஸ் வீரர்கள் கலந்து கொண்ட 44வது செஸ் ஒலிம்பிக் போட்டி சென்னையில் நடந்தது. இதனை பிரதமர்  தொடங்கி வைக்கணும்னு நாங்க வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு,  மாண்புமிகு […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு 1.5% வட்டி மானியம் – மத்திய அரசு அதிரடி முடிவு ..!!

பணவீக்கம் வேகமாக அதிகரித்து வந்ததால், சமீபத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விதத்தை அதிகரித்து இருக்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக,  வட்டியில் மானியம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. ஆகவே வட்டி எவ்வளவோ அதில் 1.5 சதவீதம் குறைவான வட்டியிலே விவசாயிகளுக்கு கடன் கிடைக்கும். 3 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுவோருக்கு கிடைக்கும் என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. விவசாயிகள் மூன்று லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினால் அவர்களுக்கு மற்றவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சர்வாதிகாரம் எடுபடாது…! பிளவுபடுத்த முடியாது…. குஷி மோடில் ஓபிஎஸ்…!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் எடப்பாடிக்கு பாதகமான தீர்ப்பு வந்துள்ளதை ஓபிஎஸ் அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பை தொடர்ந்து,  ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்தியலிங்கம்,  மனோஜ் பாண்டியன் உள்ளிட்டவர்கள் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீசெல்வம், கழகத்தினுடைய நிறுவனத் தலைவர் பொன்மனச் செம்மல், மக்கள் திலகம்,  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலமெல்லாம் ஏழை எளிய மக்கள் மீது அன்பும், பண்பும், பாசமும், பற்றும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடாவடி பழனிச்சாமி…! வீழ்ந்து போயிட்டார்…. தொண்டர்களை அரவணைக்கும்OPS.. வெளியான அறிக்கையால் அரண்டEPS ..!!

தர்மத்தை நம்பினேன்; மாட்சிமைமிக்க நீதிமன்றங்களை நம்பினேன்; கழகத்தை உயிராக நேசிக்கும் கழக கண்மணிகளைநம்பினேன்; தொண்டர்களை நம்பினேன்; உண்மையும், தர்மமும் என் பக்கம்தான் இருக்கிறது என்பதை உளமாற நம்பிய நாட்டு தமிழ்நாட்டு மக்களை நம்பினேன்; இவையாவிற்கும் மேலாக தமிழ்நாட்டு மக்களுக்காக இந்த அப்பழுக்கில்லாத இயக்கத்தை தோற்றுவித்து, வளர்த்தெடுத்து, பாதுகாத்து, தங்களது ஆயுளையே அர்ப்பணித்த இயக்கத்தின் காவல் தெய்வங்களான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரது ஆசிகளை நம்பினேன்; இந்த நம்பிக்கை இன்றைக்கு உண்மையாக இருக்கிறது. அடுத்தவர் வீட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ADMKவின் கசந்த காலங்கள்… இனி வசந்த காலங்களாக மாறும் – ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ..!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதிமுகவின் கசந்த காலங்கள், இனி வசந்த காலங்களாக மாறும் என ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ஒன்றரை கோடி தொண்டர்களையும், அரவணைத்து செல்வேன். கழகத்தை நம்பினேன், தர்மத்தை நம்பினேன்,  நீதிமன்றத்தை நம்பினேன் எனவும், எம்ஜிஆர் வகுத்த கட்சி விதிகளை துச்சமாக நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என நிரூபணம் ஆகி இருப்பதாகவும் ஓ பன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

சுயநலவாதிகளை சேர்த்த எடப்பாடி…! செம அடிஅடித்த நீதி தேவதை…. கெத்தாக பேசிய ஓபிஎஸ் அணியினர்…!!

அதிமுக பொதுக்குழு தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கோவை செல்வராஜ், தொண்டர்களால் ஒருமனதாக ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணன் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கட்சியை கட்டுப்பாட்டோடு நடத்த வேண்டும் என்று சொன்ன நேரத்தில், சில சுயநலவாதிகளை சேர்த்துக்கொண்டு எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஜூன் 23ஆம் தேதி இரண்டு பேரும் கையெழுத்திட்டு பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தன. அந்த நேரத்தில் தன்னிச்சையாக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னை தனி தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் […]

Categories
வானிலை

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு தொடர்சி மலை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து  வரும் நிலையில் நீலகிரி, கோவை , திண்டுக்கல், தேனி,  சேலம், தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்  நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் தூத்துக்குடி  உள்ளிட்ட 14  மாவட்டங்களில் நாளை  கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் – ஈபிஎஸ் சேர்ந்து முடிவெடுங்க…! நீதிபதி பரபரப்பு தீர்ப்பு… பெரும் ஷாக்கில்ADMK தலைமை..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த, அதிமுகவின் பொதுக்குழு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பை இன்று வாசித்தார். அதில், ஜூன் 23ஆம் தேதிக்கு முன்னர் இருந்த நிலை தான் இருக்க வேண்டும் என்றும்,  ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரும் இணைந்து தான் பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதற்கு 30 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்ற மிக முக்கியமான தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கி இருக்கிறார். இதனால் ஓபிஎஸ் இல்லத்தில் இருக்கக்கூடிய தொண்டர்கள் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: இபிஎஸ் பதவி செல்லாது…. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு …!!

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், ஜூன் 23ஆம் தேதியில் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒப்புதல் கொடுக்கப்பட்டு நடைபெற்ற பொதுக்குழு வரை இருந்த நிலையிலே இருக்க வேண்டும். செயற்குழு,  பொதுக்குழு கூட்டம் நடத்தக்கூடாது. இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்தது ரத்து. பொது குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பு ஓபிஎஸ்சுக்கு சாதகமான, மிக முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்படுகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: EPSயை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது இரத்து – நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு …!!

கடந்த மாதம் 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு கடந்த 10 மற்றும் 11ஆம் தேதி விசாரணை நடத்தபோது முதற்கட்டமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தங்கள் வாதங்களை முன் வைத்தனர். ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருப்பதாக தான் கருத முடியும். அந்த பதவி காலியானதாக எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#AIADMK: பொதுக்குழு வழக்கு… ஓபிஎஸ்க்கு ஆதரவான தீர்ப்பு… நீதிபதி அதிரடி ..!!

கடந்த மாதம் 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு கடந்த 10 மற்றும் 11ஆம் தேதி விசாரணை நடத்தபோது முதற்கட்டமாக ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தங்கள் வாதங்களை முன் வைத்தனர். ஜூன் 23ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. அதனால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருப்பதாக தான் கருத முடியும். அந்த பதவி காலியானதாக எடப்பாடி பழனிச்சாமி […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : புதுச்சேரியில் ஆகஸ்ட் 22-ல் பட்ஜெட் தாக்கல்

ஆகஸ்டு 10-ல்  ஆளுநர் உரையுடன் தொடங்கிய புதுச்சேரி சட்ட பேரவை கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது புதுச்சேரியில் நிதித்துறை பொறுப்பு வகிக்கும்  முதல்வர் ரங்கசாமி ஆகஸ்ட் 22- ல் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.  10,696 கோடிக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு வழக்கு…! தீர்ப்பில் சில திருத்தம் இருக்காம்… டக்குனு சொன்ன நீதிபதி …!!

ஜூலை 11ஆம் தேதி நடைபெறுகின்ற பொதுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை எதிர்த்து ஓ பன்னீர்செல்வம் தரப்பிலும், பொதுக்குழு உறுப்பினராக இருக்கக்கூடிய வைரமுத்து தரப்பிலும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. அந்த வழக்கை கடந்த 10, 11 ஆம் தேதியில் நீதிபதி ஜெயசந்திரன் விசாரித்து,  தீர்ப்பை தேடி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். அந்த வழக்கில் இன்றைய காலை 10:30 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என்று பட்டியலிடப்பட்டு  இருந்தது. ஆனால் காலை 10:30 மணிக்கு வழக்கமாக நீதிபதி ஜெயச்சந்திரன் வர தாமதமாகிய  நிலையில் சற்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

FlashNews: அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பு எப்போது நீதிபதியே சொன்ன முக்கிய தகவல் ..!!

அதிமுக பொதுக்குழுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில்   தீர்ப்பு வழங்கப்படும் நேரம் குறித்து நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை இரண்டு வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டு, வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது உச்ச நீதிமன்றம். உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழு வழக்கு; இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு…!!

அதிமுக பொதுக்குழுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் சற்று  நேரத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இந்த வழக்கை இரண்டு வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டு, வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது உச்ச நீதிமன்றம். உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கிராமங்களில் கொடை விழா…. இனி அனுமதியே வேண்டாம்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

திருச்சுழி தாலுகா வலைப்பட்டியில் உள்ள பட்டு அம்மன் கோவில் திருவிழா நடத்த அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, திருவிழா நடத்த போலீஸ் அனுமதி தேவை இல்லை.  கிராமங்களில் கோவில் திருவிழா நடத்த காவல்துறையினிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. கோவில் திருவிழாக்களில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு,  ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தால் மட்டுமே அனுமதி வாங்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது..!!

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்குனு சரித்திரம் இருக்கு…. சோதனை எல்லாமே படிக்கட்டு தான்… எந்த கொம்பனாலும் முடியாது…!

தர்மபுரிக்கு சுற்றுப்பயணம் செய்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி,  சில துரோகிகள் நம்மோடு இருந்து கொண்டு, நம் வெற்றிக்கு தொந்தரவு ஏற்படுத்தி விட்டார்கள். அதனால் நம் ஆட்சிக்கு வர முடியாது நிலை ஏற்பட்டு விட்டது. இப்போது தெரிந்து கொண்டோம், யார் துரோகி என்பதை கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் தெரிந்து கொண்டார்கள். ஆகவே அப்படிப்பட்ட துரோகிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கைகோர்த்துக்கொண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த நினைக்கின்றார்கள், உடைக்க நினைக்கின்றார்கள், ஒருபோதும் அதிமுகவை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

DMKபஸ்ல புது ரூல்ஸ்.. ! BJPஉடனே போய்டுச்சு..! அங்க 1 ஆளு கூட வரல… வேதனைப்பட்ட அண்ணாமலை பரபரப்பு பேட்டி…!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நடிகர் ரஜினி ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து அரசியல் பேசினோம் என கூறியதால்,  அய்யோ ரஜினி அவர்கள் நம்மளை பற்றி பேசி இருப்பாரா என்று திமுக உட்பட அதன் க்கூட்டணி கட்சிகள் பயத்தில் பேசி வருகின்றன.  அதனால் ரஜினி அவர்கள் அரசியல் பேசியதில் எந்த தவறும் இல்லை, ரஜினி அவர்கள் ஆளுநரை சந்தித்ததும் எந்த தவறும் இல்லை, ஆளுநர் அவர்கள் சாதாரண மனிதர்களையும் சந்திக்கின்றார். இது எல்லாம் பேசுவதற்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: அண்ணாமலைக்கு நன்றி; என் உடம்பில் திராவிட இரத்தம் ஓடுகிறது – பாஜகவில் நீக்கப்பட்ட சரவணன் கருத்து…!!

பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு,  அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று திமுகவினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: பாஜகவில் இருந்து சரவணன் நீக்கம் – அண்ணாமலை அதிரடி..!!

பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச்  சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு,  அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று திமுகவினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

செருப்பு இங்க தான் இருக்கு…. வந்து வாங்கிட்டு போங்க… கலகலப்பாக ட்விட் போட்ட பி.டி.ஆர்…!!

பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச்  சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு,  அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று திமுகவினர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாக்கடையிடம் பேசக்கூடாது…! பிணத்தை வச்சு அரசியல் செய்யுறாங்க… பாஜகவை டார்டாராக கிழித்த பிடிஆர்..!!!

பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச்  சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு,  அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இரவோடு இரவாக கட்சியில் விலகல்… அமைச்சரிடம் நேரில் மன்னிப்பு… டோட்டலா குளோஸ் ஆன பாஜக…!!

நேற்று நள்ளிரவு 12மணிக்கு மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை, அவரது இல்லத்தில் நேரடியாக சென்று சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்று காலையில் நடந்த விஷயம்  பத்திரிகையாளர்கள், செய்தியாளர்களுக்கு தெரியும். நம்முடைய ராணுவ வீரர், நாட்டுக்காக உயிர் நீத்த தம்பி லட்சுமணன் அவர்கள்… புதுப்பட்டியை சேர்ந்தவர் …. வருடைய உடல்  ஏர்போர்ட்டுக்கு வந்தது. நாங்க எல்லோரும்  பாஜக சார்பாக சென்றோம். பாஜகவோட மாவட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

4 கால் பாய்ச்சலில் BJP…! சிறைக்கு அஞ்ச மாட்டோம்… PTRமீது காலணி வீச்சில் நடந்தது என்ன ? பிஜேபி பரபரப்பு விளக்கம் ..!!

பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச்  சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு,  அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 11 மணி; இந்நிலையில் இந்த சம்பவம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பி.டி.ஆர் எங்கு சென்றாலும் எதிர்ப்போம் – மதுரை மாவட்ட பாஜக அறிவிப்பு ..!!

பயங்கரவாதிங்களின் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த டி.புதுப்பட்டியைச்  சேர்ந்த ராணுவ வீரர் லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய போது அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய பிறகு, பாஜக சார்பில் அஞ்சலி செலுத்த அனுமதி என்று கூறியதால் அமைச்சர் கார் முற்றுகையிடபட்டு,  அவரின் கார் மீது காலணி வீசப்பட்டது. இது தொடர்பாக  ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#Breaking: தேவையில்லாத ஆர்டர்லிகளை திருப்பி அனுப்ப டிஜிபி உத்தரவு ..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையின் போது ஆர்டர்லி முறை குறித்து நீதிபதி கடும் அதிர்ச்சியை தெரிவித்து இருந்தார். 75 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறோம். ஆனால் ஆங்கில ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது. உடனே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மீது நடவடிக்கை எடுக்காத எஸ்பிகளை கண்காணிக்க வேண்டும். இல்லை என்றால் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட நேரிடும் நேற்று தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி […]

Categories
Uncategorized

கோயில் சொத்தை அறநிலையத்துறை சொத்தாக கருதக் கூடாது – உயர்நீதிமன்றம் கருத்து

கோயில்சொத்துக்களை இந்து சமய அறநிலைத்துறை சொத்தாக கருதக்கூடாது. குத்தகைக்கு தர ஆணையருக்கு அதிகாரம் இருந்தால் அறங்காவலர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். அறநிலையத்துறை சட்டப்படி மட்டுமே கோயில் சொத்தை குத்தகைக்கோ,  வாடகைக்கோ விட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா …!!

காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரானா தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஏற்கனவே பிரியங்கா காந்திக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டு நிலையில் சோனியாவுக்கும் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் ..!!

தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக்கில் அரசியல் கட்சி பிரமுகர்களை நியமிப்பதா ? ஐகோர்ட் அதிருப்தி …!!

இட ஒதுக்கீடு முறையை பின்பற்றாத நியமனத்தால் ஏராளமான இளைஞர்களின் அடிப்படை உரிமை பறிப்பு. அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்காமல் விருப்பம் போல் டாஸ்மாக் பணியாளர்களை நியமிப்பதா? டாஸ்மாக்கில் விருப்பம் போல் அரசியல் கட்சி பிரமுகர்களை நியமிப்பதை ஏற்க முடியாது. டாஸ்மாக்கில் நியமனங்கள் நியமனதிற்கு எந்த விதியும் வகுக்காதது அதிர்ச்சி அளிக்கிறது. டாஸ்மார்க் நிறுவனம் தொடங்கி 19 ஆண்டுகள் ஆகியும் விதி வகுக்காததை அரசு கவனிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

 நான் தமிழக காங்.தலைவராக 101%  வாய்ப்பு – ப.சிதம்பரம் பேட்டி ..!!

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக நான் வர 101% வாய்ப்புள்ளது என ப சிதம்பரம் காரைக்குடியில் பேட்டி அளித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவராக நான் வருவது பற்றி அகில இந்திய காங்கிரஸ்தான் முடிவு எடுக்க வேண்டும். ரஜினி தான் அரசியல் பேசியதாக கூறியுள்ளார். அரசியல் பேசியதாக ஆளுநர் கூறவில்லை எனவும் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

#Breaking: தமிழக மீனவர்களை உடனே மீட்டு கொடுங்க; மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம் ..!!

இலங்கை கடற்படை கைது செய்த 9 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருக்கிறார். கடந்த பத்தாம் தேதி நாகையைச் சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார். எல்லை தாண்டி மீனை மீன்பிடித்ததாக கூறி 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது,  நீதிமன்றத்தில் ஆச்சார்படுத்தி சிறையில் அடைத்து இருக்கிறார்கள். அந்த 9 மீனவர்களையும் விடுவிக்க […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் சூப்பர் அறிவிப்பு – மத்திய அரசு அதிரடி ..!!

அகஸ்திய மலை யானைகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நெல்லை மாவட்டம் அகஸ்திய மலைப்பகுதியை யானைகள் காப்பகமாக அறிவித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் ஏற்கனவே நான்கு யானைகள் காப்பாக்கப் பகுதிகள் இருக்கும் நிலையில் மேலும் ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அகஸ்திய மலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அகத்திய மலையில் 1197 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் யானைகளுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

ஒரு வார்த்தை போதும்..! மத்திய அரசிடம் சொல்லிடுவோம்… தமிழக அரசை எச்சரித்த ஐகோர்ட்..!!

ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜேபிக்கு உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும்,  ஆனால் அரசிடம் இருந்தோ,  டிஜிபிடமிருந்தோ அது வருவதில்லை என்று நீதிபதி அதிருப்தியை தெரிவித்து இருக்கிறார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடப்படும் நிலையில்,  தற்போதும் ஆங்கிலேய ஆட்சியில் காலத்திலிருந்த ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடாக இருக்கிறது என கூறிய நீதிபதி, […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஆர்டர்லி முறையை ஒழிக்க எடுத்து நடவடிக்கை என்ன ? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி…!!

ஆர்டர்லி முறையை ஒழிப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய டிஜேபிக்கு உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.  மேலும் ஒரு வார்த்தை போதும் ஆனால் அரசிடம் இருந்தோ டிஜிபிடமிருந்தோ அது வருவதில்லை என்று நீதிபதி அதிர்ச்சி தெரிவித்து இருக்கிறார் நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன். காவலர்களுக்கு காவலர் குடியிருப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. காவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட பிறகும் அந்த இடத்தை ஒப்படைக்கவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது. காவல்துறை உத்தரவை எதிர்த்து, சம்மந்தப்பட்ட காவலர் தொடர்ந்து வழக்கில்,  இடத்தை காலி […]

Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள் விமர்சனம்

#VirumanFDFS: பரபரவென நகர்ந்த முதல் பாதி….. செண்டிமெண்ட், காதல், அக்ஷன்… பட்டைய கிளப்பிய விருமன்..!!

நடிகர் கார்த்திக் நடிப்பில் உருவான விருமன் திரைப்படம் இன்று ரிலீஸ் செய்யப்பட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  நடிகர் கார்த்தி, நடிகையாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஆகியோர் நடிப்பில் உருவான படம் விருமன்.  நடிகர் சூர்யாவின் 2D என்டர்டைன்மென்ட் நிறுவன தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கிய இந்தப் படதிற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று திரையரங்கில் வெளியாகிய இப்படத்தை,விருமனை உங்கள் வீடுகளில் அனைவரும் விரும்புவார்கள் என்று நம்புகிறேன் என்று நடிகர் கார்த்திக் ட்விட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2நாளில் முடிந்த வழக்கு…! வேகம் காட்டிய ஐகோர்ட்… தீர்ப்புக்காக ஓபிஎஸ், ஈபிஎஸ்.. பெரும் எதிர்பார்ப்பில் அரசியல் களம் ..!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்து வழக்குகள் இரண்டாவது நாளாக நேற்றைய தினம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உடைய நீதி அரசர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் இடைக்கால பொது செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி தன்னுடைய வாதங்களை தொடங்கினார்கள். சட்டப்படி பொதுக்குழு; அப்போது பொது குழுவானது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: கனியாமூர் கலவரம் – 69பேருக்கு ஜாமீன்…!!

கனியாமூர் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 69 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் அருகே சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 17ஆம் தேதி வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் கைது செய்யப்பட்ட 174 பேர்கள் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விழுப்புரம் மாவட்டம் முதன்மை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்ததனர். அந்த மனுக்கல் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் 69 பேருக்கு நிபந்தனை ஜாமீன் விதித்து விழுப்புரம் மாவட்ட […]

Categories
மாநில செய்திகள்

”பச்சை கொடி” காட்டிய கோர்ட்…! கனல் கண்ணன் எந்நேரமும் கைதாகலாம்.. அலற விட்ட போலீஸ் தரப்பு …

பெரியார் சிலை குறித்து கனல் கண்ணன் பேசியது சர்ச்சைகளுக்கு உள்ளான நிலையில் தற்போது அவரது முன் ஜாமின் பண்ணுவானது தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இந்து முன்னணி அமைப்பின் இந்துக்களின் உரிமை மீட்ப பிரச்சாரப் பயணம் நிறைவு விழாவை ஒட்டி சென்னை மதுரவாயிலில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற சினிமா “ஸ்டண்ட் மாஸ்டர்” ஸ்டண்ட் மாஸ்டர் கனல்  கண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பது குறித்து பேசி இருந்தார். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: கனல் கண்ணன் முன்ஜாமீன் இரத்து – அதிரடி காட்டிய நீதிபதி …!!

ஸ்ரீ ரங்கம் கோவில் முன்பு இருக்கும் பெரியார் சிலை குறித்து பேசிய விகாரத்தில் நடிகர் கனல் கண்ணன்  மீது பெரியார் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் குமரன் அளித்த புகாரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கனல்கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுதாக்கல்  செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி முன்பு ஆஜரான போலீஸ் தரப்பு, கனல் கண்ணன் பேசியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும்,  மேலும் அவருடைய பேச்சு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பு தள்ளிவைப்பு… நாளை மாலைக்குள்… ஐகோர்ட் அதிரடி …!!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கின்றது. அதிமுக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்தது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்து வழக்கில் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருக்கிறது. இது இரண்டு நாட்களாக நேற்று மதியம், இன்று காலை என்று இரண்டு நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு,  பொதுக்குழு உறுப்பினர் வைர முத்து தரப்பு மற்றும் எடப்பாடி பழனிசாமி மற்றும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: அதிமுக பொதுக்குழு வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு …!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. ஆவணங்களை நாளை மாலைக்குள் தாக்கல் செய்ய ஓபிஎஸ், இபிஎஸ் தரப்புக்கு உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. இபிஎஸ்,  ஓபிஎஸ் தரப்பு வாதங்களை இரண்டு நாட்களாக கேட்ட நிலையில் தீர்ப்பை தள்ளி வைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்

Categories

Tech |