தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், எனது அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கிறேன். ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும் என்று வாழ்வதல்ல வாழ்க்கை, ஆண்டொன்று போனால் வளர்ச்சி என்பது இன்னும் பல மடங்கு கூடும் என்று வாழ்வதுதான் வாழ்க்கை. அந்த வகையில் கடந்த ஆண்டு என்பது தமிழ்நாட்ட பொறுத்த வரைக்கும், அனைத்து துறைகளிலும் வளர்ச்சியும், எழுச்சியும் கொண்ட ஆண்டாகவே அமைந்திருந்தது. […]
Author: news-admin
கால்வாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்வாய் நீரினை பயன்படுத்துவோர்க்கான சங்க தேர்தல் தமிழ்நாடு பாசனதாரர்கள் நீர் பாசன அமைப்பு சார்பாக நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இந்த தேர்தலை உதவி ஆட்சியர் தேர்தல் அதிகாரியாக இருந்து நடத்தினார். மேலும் உதவி அதிகாரியாக விக்னேஸ்வரன் இருந்தார். இந்த வாக்குப்பதிவானது காலை 6 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இதற்காக 21 பூத் அமைக்கப்பட்டிருந்தது. இதில் வாக்களிக்க 34 கன்மாய் […]
கொள்ளிடம் ஆற்று மதகுப் பகுதியில் சிக்கிய வாலிபரை தீவிரமாக தேடும் பணி நடந்து வருகின்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கபிஸ்தலம் அருகே இருக்கும் திருவைகாவூர் தெற்கு தெருவில் வசித்து வரும் ரவி என்பவரின் மகன் தினேஷ். இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது மாடுகளை ஓட்டிக்கொண்டு கொள்ளிடம் ஆற்றுக்கு சென்றிருக்கின்றார். அப்போது மாடு தண்ணீரை தாண்டி செல்வதை பார்த்த தினேஷ் தண்ணீரை கடக்க முயன்றார். இதில் தினேஷ் மதகு பகுதியில் சிக்கிக்கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் அவர் […]
சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களின் 164 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் இன்றோடு ஐந்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்தும், தேர்தல் அறிக்கையில் 311ஐ நிறைவுறுத்த வலியுறுத்தியும 5 நாட்களுக்கு முன்பு டிபிஐ வளாகத்தில் இந்த போராட்டம் தொடங்கியது. 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், இந்த போராட்டத்தில் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். நேற்று அமைச்சர்களுடன் பேச்சு […]
அரிசி இருப்பில் முரண்பாடு கண்டறியப்பட்டதால் ரேஷன் கடை ஊழியருக்கு 26,000 அபராதம் விதிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அகரதிநல்லூர், இளவங்கார்குடி, விளம்பல், தியானபுரம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேஷன் கடைகளில் எடை எந்திரம் சரியாக இயங்குகின்றதா? எனவும் பொருட்களின் இருப்பு விவரம் குறித்தும் பதிவேடு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தார். அப்போது தண்டலை ஊராட்சி விளமல் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில் […]
கோவில் நிலத்திற்கு பட்டா கொடுக்கக் கூடாது என கூறுவதற்கு நீதிபதிக்கு என்ன அருகதை இருக்கிறது ? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது நீதிபதியை அமைதிக்கும் பேச்சு அல்லவா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பூவை பூ என்றும் சொல்லலாம், புஷ்பம் என்றும் சொல்லலாம் என்றார் போல என்பது போல மழுப்பலான பதிலை கூறியுள்ளார். தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக […]
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பல்வேறு பண்டிகைகளுக்கும், கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வருடம் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவதற்காக புதுச்சேரி கோலாகலமாக தயாராகி வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக புதுச்சேரிக்கு வருகின்றனர். புத்தாண்டு பண்டிகை காரணமாக புதுச்சேரியில் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரைக்கு வருவார்கள் என்ற காரணத்தினால் கடற்கரை சாலை முழுவதும் கடலில் இறங்காதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தப் பகுதியில் […]
கேரளாவில் முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் போன்றோருக்கு உடனடியாக கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளாவில் மீண்டும் கொரோனா கண்காணிப்பு பிரிவு தொடங்கப்பட்டது. மேலும் கூட்ட நெரிசலான பகுதிகளில் முக கவசம் அணிய அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ கடனுதவியை வழங்கினார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் திட்டத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இதை அடுத்து திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்று 1144 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 46 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டிலான கடனு உதவியை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி […]
சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பிஎஃப் 7 தீவிரமடைந்து வருகிறது. இந்த கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பல்வேறு நாடுகளும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அந்த வகையில் சீனாவில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு நடவடிக்கைகளை விதிப்பது பற்றி பரிசீலனை செய்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அரசும் இந்த நடவடிக்கை குறித்து பரிசீலனை செய்து வருகிறது. இதன்படி சீனாவில் இருந்து வரும் பயணிகள் கொரோனா நெகடிவ் சான்றிதழை கொண்டு வர வேண்டும். […]
சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பிஎஃப் 7 வேகமாக பரவி வருவதால் பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயம் ஆக்கியுள்ளது. மேலும் பிரெஞ்சு மக்கள் சீனாவிற்கு செல்வதை தவிர்க்குமாறு பிரான்ஸ் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸ் சுகாதார அதிகாரிகள் கூறியதாவது, புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடுகளை அடையாளம் […]
கரும்பு வெட்டு கூலிகளை சர்க்கரை ஆலைகளே ஏற்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முன் வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சிரியரிடம் வழங்கினார்கள். இந்த கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். இதில் குறிப்பாக கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனவும் ஆட்கள் கிடைப்பதில்லை எனவும் வெட்டுக் கூலியும் அதிகமாக இருக்கின்றது […]
குடிசை வீட்டை சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீரில் காகித ஓடம் மிதக்க விட்டு பொதுமக்கள் போராட்டம். புறம்போக்கு இடத்தில் வீடு கட்டி வசித்து வருபவர்களை நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசு காலி செய்ய வலியுறுத்தியது. அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் 35 வருடங்களுக்கு மேலாக வசித்து வந்த 37 வீடுகளில் இருக்கும் 100-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து வெளியேறினர். மேலும் அவர்கள் மாற்று இடம் கேட்டு வீட்டு மனைக்கு விண்ணப்பித்திருந்தார்கள். இதில் இடம் தேர்வு செய்யப்பட்டு இடம் கேட்டு விண்ணப்பித்த 21 […]
தீபாவளி சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்டவருக்கு 5 வருட சிறை தண்டனையும் இழப்பீடு தொகையை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள டவுன் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்ற 2018-19 ஆம் வருடத்திலிருந்து தீபாவளி சீட்டு நடத்தினார். இவர் தீபாவளி சீட்டில் 2 கிராம் தங்கம், 25 கிராம் வெள்ளி, அரை கிலோ இனிப்பு, பட்டாசு பெட்டி, பித்தளை, சில்வர் பாத்திரம் வழங்குவதாக கூறினார். இதனால் ஏஜெண்டுகள் மூலம் சுமார் 204 […]
கோவில் நிலத்திற்கு பட்டா கொடுக்கக் கூடாது என கூறுவதற்கு நீதிபதிக்கு என்ன அருகதை இருக்கிறது ? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பேசியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. இது நீதிபதியை அமைதிக்கும் பேச்சு அல்லவா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பூவை பூ என்றும் சொல்லலாம், புஷ்பம் என்றும் சொல்லலாம் என்றார் போல என்பது போல மழுப்பலான பதிலை கூறியுள்ளார். தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் சார்பாக […]
லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசியை அடுத்திருக்கும் புலிவாய் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மனைவி எல்லம்மாள். இவர் தனது குடும்பத்துடன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் அருகே வசித்து வருகின்றார். இவருக்கு சென்ற 2008 ஆம் வருடம் ஒரு ஏக்கர் 6 சென்ட் நிலத்தை இவரது தந்தை தான செட்டில் ஒன்றாக கொடுத்திருக்கின்றார். இந்த நிலத்திற்கான பட்டா இவரின் பெயரில் இருந்திருக்கின்றது. இந்த நிலையில் 36 சென்ட் […]
பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு ஒளிரும் வில்லை போலீசார் சார்பாக வழங்கப்படுகின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்திலிருந்து பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள், சேலம், எடப்பாடி, திருச்செங்கோடு, நாமக்கல், ஈரோடு, சங்ககிரி, பவானி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 3 லட்சம் பக்தர்கள் நடைபயணமாக காங்கேயம் வழியாக தைப்பூசத்திற்கு செல்வார்கள். அவ்வாறு பக்தர்கள் நடைபயணம் செல்லும் போது விபத்து ஏற்படக்கூடாது என்பதற்காக போக்குவரத்து போலீஸ் சார்பாக ஒளிரும் வில்லைகள் வழங்கப்பட்டது. இதன் காரணமாக இரவு நேர நடைப்பயணத்தின் […]
போக்குவரத்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 535 பேர் கைது செய்யப்பட்டார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லவன் சாலையில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முன்தினம் பல வருடங்களாக வலுவையில் இருக்கும் பண பயன்கள், பஞ்சபடி, பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியத்தொகை உள்ளிட்டவை வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களில் சில அரை நிர்வாணத்தில் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு உடலில் நாமத்தை வரைந்து பிச்சை எடுத்தும் நூதன முறையில் […]
குத்துச்சண்டை போட்டி சாகச நிகழ்ச்சியில் பெட்ரோல் கேன் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயில் இருக்கும் தனியார் உள்விளையாட்டு அரங்கில் குத்துச்சண்டை வீரர்கள் ஒரே மேடையில் போட்டியிடும் நிகழ்ச்சியானது நடந்தது. இந்த போட்டியில் குத்துச்சண்டை வீரர் பாலிஷ் சதீஸ்வரர் என்பவர் இளம் குத்துச்சண்டை வீரர்களுக்கு முன்பாக நெருப்பில் சாகசம் செய்தார். அப்போது எதிரில் இருந்து நெருப்பு பந்து அவர் மீது தூக்கி வீச இதனை அவர் கையால் தடுத்து தீயை அணைக்கும் சாகசத்தில் ஈடுபட்டார். […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓராண்டா? இரண்டா 50 ஆண்டுகளுக்கு மேலாக… கற்றறிந்த சான்றோர்களே… பள்ளி, கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கின்ற என் பாசத்திற்குரிய தம்பி, தங்கைகளே…. ஒரு பூனை பாலை நீங்கள் காய்ச்சி சட்டியில் வைக்கும் போது…. சூடாக நீங்கள் வைத்து விட்டீர்கள் என்றால் ? அது பசியில் வந்து குடிக்கும். குடிக்கும் போது அது சுட்டு விட்டால், வெள்ளையாக எதை பார்த்தாலும் தன் வாழ்நாளில் கிட்ட […]
கர்நாடகா பெங்களூருவிலுள்ள நீலச்சந்திரா பகுதியில் இளைஞர் ஒருவர் கால்டாக்சி ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சென்ற சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆனால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த நவம்பர் 4ம் தேதி திருவள்ளூர் பகுதிக்கு ஓடிவந்து அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் இளம் பெண்ணை காணவில்லை என்று பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் […]
முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகையாக தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ஆயிரம் ரூபாய் பணம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியினை ஜனவரி 9-ம் தேதி சென்னையில் தொடங்கி வைக்க இருக்கிறார். இந்நிலையில் தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, பொங்கல் பரிசினை பொங்கல் பண்டிகைக்கு முன்பாக தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் நியாய விலை கடைகளுக்கு ஜனவரி 13-ஆம் […]
ஆங்கில புத்தாண்டு மற்றும் அரையாண்டு தொடர் விடுமுறை முடிந்து பயணிகள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்புவதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற 1.1.2023 அன்று வரை நாகர்கோவில், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, ஈரோடு, சேலம் மற்றும் திருச்சி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கு தினசரி இயங்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் புதுச்சேரி, ஈரோடு, கோயம்புத்தூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு தினசரி இயக்கக்கூடிய […]
மும்பையில் நடந்த தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பில் கடந்த 24-ஆம் தேதி சீரியல் நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தாயார் வனிதா ஷர்மா அளித்த புகாரின் அடிப்படையில், துனிஷாவின் காதலரும் சக நடிகருமான ஷீசன் முகமது கான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஷீசனை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். கடந்த 27-ம் தேதி உடற்கூறு ஆய்வுக்கு பின், துனிஷா சர்மாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையில் துனிஷா மற்றும் ஷீசனின் மொபைல் […]
கலப்படம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் நொய்டா மேரியான் பயோடெக் நிறுவனத்தில் மருந்து உற்பத்தி நிறுத்தம். Dok-1 Max மருந்தை எடுத்துக் கொண்டதால் தங்கள் நாட்டில் 18 குழந்தைகள் இறந்ததாக உஸ்பெகிஸ்தான் குற்றம் சாட்டியது. நொய்டா மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மருந்தை ஆய்வுக்கு அனுப்பினர் மருந்து தர கட்டுப்பாடு அதிகாரிகள். ஆய்வில் மருந்தில் கலப்படம் இருந்தது கண்டறியப்பட்டதால் அனைத்து மருந்து தயாரிப்பையும் நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பை பொருத்தவரை தங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை என்று மேரியான் பயோடெக் […]
நாமக்கல் பட்டாசு வெடிப்பு விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்திருக்க கூடிய நிலையில் தற்போது மேலும் ஒருவர் பலியாகி இருக்கிறார். நாமக்கலில் நாட்டு வெடி பட்டாசு வெடி விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.பட்டாசு பட்டாசு கடை உரிமையாளர் தில்லை குமார், மனைவி பிரியா, தாய் செல்வி, பெரியக்காள் உள்ளிட்டோர் பலியாகியுள்ளனர்.
பீகார் மாநிலம் புத்த கயாவில் “புத்த மஹோத்சவம்” எனப்படும் புனித போதனை நிகழ்ச்சியானது கடந்த டிச.29 ஆம் தேதி தொடங்கியுள்ளது. இவற்றில் திபெத்திய புத்த மத குருவான தலாய் லாமா பங்கேற்று சொற்பொழிவு ஆற்றினார். இன்று டிச 31ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போதனை நிகழ்ச்சியில் 50 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக தலாய் லாமா சென்ற 22ம் தேதி கயாவுக்கு வருகை புரிந்தார். இந்நிலையில் சீனப் பெண் ஒருவர், […]
நாம் தமிழகர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திராவிட மாடல் என சொல்லுறாங்களே… ஆம் அவரு மாடல் தான். அப்படின்னா சாம்பிள் பிஸ்.. பொம்மை கடைக்கு போ… துணிக்கடைக்கு போ… வாசலில் ஒரு பொம்மை இருக்கோம். புடவை கடைக்கு போ… ஒரு பொம்மை இருக்கும். அதற்கு பெயர் என்ன ? மாடல். அதுபோல் இது ஒரு பொம்மை. இது ஒரு மாடல். தம்பி மாடலை நீ மாதிரியாக தான் பார்க்க […]
தேனி மாவட்ட ஆட்சியர் சோலார் மின் மோட்டார் செயல்பாடு பற்றி ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டத்திலுள்ள பூமழைக்குண்டு, வேப்பம்பட்டி ஊராட்சியில் வேளாண்மை பொறியியல் துறை சார்பாக சோலார் மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இதன் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது வேளாண்மை துறை சார்பாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றது. சோலார் மின் மோட்டார் மூலம் சுமார் 8 மணி நேரம் பாசனத்திற்கு தடையில்லாமல் தண்ணீர் […]
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யாவின் படைகள் போர் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்தது. இருப்பினும் இரு தரப்பிலும் பெரிய அளவிலான உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்தப் போரில் ரஷ்ய இராணுவம் உக்ரைனில் சில பகுதிகளை கைப்பற்றியுள்ளது. ரஷ்ய இராணுவம் கடந்த மார்ச் மாதம் உக்ரைனின் கெர்சன் பகுதியை கைப்பற்றிய நிலையில் அதனை உக்ரைன் படை கடந்த மாதம் போராடி மீட்டது. இந்நிலையில் உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் பகுதியில் 6 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமியை அவரது தாய் தூங்க வைத்துவிட்டு அருகில் இருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் கதவை தட்டி கூச்சலிட்டார். உடனடியாக அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான ரஞ்சித் என்பவர் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடி வந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் வனப்பகுதியை ஒட்டி புதுப்பீர்கடவு கிராமம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் யானை கிராமத்திற்குள் நுழைந்து தெருவில் நடந்து வந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளே சென்று கதவை பூட்டி கொண்டனர். அந்த யானை கிராமத்தில் ஒவ்வொரு வீதியாக நடந்து சென்றதை பார்த்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூத்தம்பட்டி பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வந்துள்ளார். இதற்காக அய்யாவு அப்பகுதிகளில் இருக்கும் வீடுகளில் பழைய கஞ்சி தண்ணீரை சேகரித்து வருவது வழக்கம். கடந்த 2020-ஆம் ஆண்டு ஒரு வீட்டில் பழைய கஞ்சி தண்ணீரை சேகரிக்க சென்ற போது குளியல் அறையில் குளித்து கொண்டிருந்த 8 வயது சிறுமியை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அச்சத்தில் சிறுமி கூச்சலிட்டதும் அய்யாவு அங்கிருந்து தப்பி […]
மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல வருடங்களாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி(77). கடந்த 2020 -ஆம் ஆண்டு இவர் தலைமையிலான ஜனநாயக லீக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. அந்த தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி ஆங் சான் சூகி ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து ஆங் சான் சூகி வீட்டு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் மீது கிளர்ச்சியை தூண்டியது, ஊழல் முறைகேடு போன்ற பல்வேறு […]
தென் கொரியாவின் தலைநகரான சியோல் அருகே கியோங் பகுதியில் தரைக்கு மேலே செல்லும் குகை பாதையில் முன்தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த விபத்தில் ஆறு பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் இருந்து வெளியான நச்சுப் புகையை சுவாசித்த 20 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தீயணைப்பு படையினர் அவர்களை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் காமராஜர் அணை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக சிறுத்தை ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் நடமாடுகிறது. கடந்த 24-ஆம் தேதி சிறுத்தை சடையாண்டி கோவில் அருகே மானை அடித்து கொன்று இழுத்து சென்றதை சில விவசாயிகள் பார்த்துள்ளனர். இதேபோல் ஆடு, நாய்களையும் சிறுத்தை அடித்து கொன்றதால் விவசாயிகள் அச்சமடைந்தனர். இதுகுறித்து அறிந்த வனத்துறையினர் கால் தடயங்களை ஆய்வு செய்து சிறுத்தை […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தா.புதுக்கோட்டை பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூட பேருந்து சர்வீசுக்காக பழனிக்கு சென்று விட்டு சத்திரப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை துரைராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நல்லதங்காள் ஓடை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் துரைராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்த நேரம் பேருந்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருவாடானை தாலுகா கட்டவிலாகப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, திருவாடானை பகுதியில் இந்த வருடம் நெல் விவசாயத்திற்காக நகைகளை அடகு வைத்தும், கூட்டுறவு வங்கியில் பயிர் கடன் பெற்றும் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலையில் தற்போது பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் கருகிப் போய்விட்டது. இதன் காரணமாக தற்போது எங்களது வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அரசு இழப்பீடு நிவாரணம் […]
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரபாவதி அறிவுறுத்தலின்படி, காரைக்குடி அருகே அமைந்துள்ள கோட்டையூர், பாரி நகர், ஸ்ரீராம் நகர் போன்ற பகுதிகளில் சாலையோர கடைகள், பாஸ்ட்புட் உணவகங்கள், பஜ்ஜி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீடிர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடைகளில் கெட்டுப்போன புரோட்டா, சிக்கன் பிரியாணி மற்றும் செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட காளான், மீன் போன்றவை பறிமுதல் செய்து அவை அழிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 6 […]
நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், உயிர் காப்பீடு போல பயிர் காப்பீடு அவசியம். பயிர் இல்லையேல் உயிர் இல்லை. எனவே உயிர் காப்பீடை விட பயிர் காப்பீடு முக்கியம். வேளாண் குடி மக்களுக்கு பயிர் காப்பீடு முக்கியம். நீங்கள் ஏதாவது நினைத்தால், ஒரு ஏக்கர் கரும்பு அழிந்து விட்டதா ? இந்தா ஆயிரம் ரூபாய் வைத்துக் கொள்ளுங்கள் என தமிழக அரசியல்வாதிகள் கொடுக்கின்றார்கள். ஆயிரம் ரூபாய்க்கு பிறந்த […]
தர்ஷா குப்தா கதறி அழுத வீடியோ வைரலாகி வருகின்றது. பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. இப்படத்தில் நடிகர் சதீஷ் உடன் இணைந்து தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி பி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் […]
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ரிஷப் பந்த் தில்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை ஹம்மத்பூர் ஜால் பகுதியில் இந்த சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு மீது மோதி தீ பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் ரிஷப் பந்திற்கு முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்தாமி காயம் அடைந்த ரிஷப் […]
அஜித் ரசிகர்கள் கோரிக்கையை முன்வைத்து வருகின்றார்கள். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கின்றார். பிரகாஷ்ராஜ், […]
மேற்கு வங்கத்தில் நடந்த அரசு விழாவில் கலந்துகொள்ள தான் நேரடியாக வரமுடியாமல் போனதற்காக வருந்துகிறேன் என பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்து உள்ளார். காணொலி காட்சியின் மூலம் பிரதமர் பேசியதாவது, இன்று மேற்கு வங்கத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் நேரில் வர திட்டமிடப்பட்டு இருந்தேன். எனினும் சில சொந்த வேலைகள் காரணமாக என்னால் நேரடியாக வர முடியாமல் போனதற்கு மேற்கு வங்கத்திடமும் மாநில மக்களிடமும் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். […]
அமெரிக்க அரசு, வரும் ஜனவரி மாதம் ஐந்தாம் தேதியிலிருந்து சீன மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, பல நாடுகள் சீனாவிலிருந்து வரும் மக்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவும் சீன பயணிகளுக்கு கொரோனா பரிசோதனையை கட்டாயமாக்கியிருக்கிறது. இது பற்றி நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பிற்கான அமெரிக்க மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், சீன நாட்டிலிருந்து அமெரிக்கா வருபவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக […]
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரபல நடிகை ரியாகுமாரி மரணத்தில் திடீர் திருப்பமாக அவரது கணவரே சுட்டுக் கொன்று விட்டு கொள்ளையர்கள் கொன்றதாக நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. திரை உலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரியாகுமாரி. இவர் கடந்த புதன்கிழமை தேசிய நெடுஞ்சாலையில் கணவர் பிரகாஷ் குமார் மற்றும் 2 1/2 வயது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தபோது கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கணவர் புகாரளித்திருந்தார். இந்நிலையில் ரியா குமாரியின் பெற்றோர் அளித்த புகாரின் கீழ் பிரகாஷ் குமாரை […]
கொல்கத்தாவின் கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் ஒரு பகுதியாக, நாட்டிலேயே முதன்முறையாக ஹூக்ளி ஆற்றில் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இந்த சுரங்கப் பாதை அமைக்கப்பட்டவுடன், மெட்ரோ ரயில்கள் வெறும் 45 வினாடிகளில் 520 மீட்டர் நீருக்கு அடியில் அமைக்கப்படும் சுரங்கப் பாதையை கடந்து சென்று விடும். இந்த கொல்கத்தா சுரங்கப்பாதை ஆற்றுப்படுகையின் கீழ் 13 மீட்டரும், தரைப் பகுதியில் இருந்து 33 மீட்டர் ஆழத்திலும் அமைந்திருக்கிறது. கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டமானது தகவல் தொழில்நுட்ப […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி அமைந்துள்ளது. இங்கு சீனியர் வேளாளராக வெள்ளைச்சாமி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சாலிகிராமத்தை சேர்ந்த சக்திவேல், தரகர் பொம்மையா என்பவரது உதவியுடன் போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் விவசாய கடன் பெற்றுள்ளார்m இதற்கு வெள்ளைச்சாமி உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு சென்னை சி.பி.ஐ பொருளாதார குற்றப்பிரிவு, போலி ஆவணங்களை பயன்படுத்தி விவசாய கடன் பெற்று தொகையை […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் சுப்புராயலு நகரில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணபதி மோட்டார் சைக்கிளில் குருவிநத்தத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சதீஷ்குமார் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கணபதியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் குப்புபிள்ளைசாவடி தெற்கு தெருவில் திருமணமான வினோத் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான வினோத் ராஜ் உடல்நிலை சரியில்லாத 17 வயது சிறுமியை ஆட்டோவில் அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வந்துள்ளார். அந்த சிறுமியும், வினோத்ராஜும் பேசி பழகி வந்தனர். கடந்த 2020-ஆம் ஆண்டு வினோத் ராஜ் சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியை தனது மனைவி என குறிப்பிட்டு, எனது மனைவியை வெளியே அனுப்புங்கள் என தெரிவித்துள்ளார். இதனை […]