Categories
உலக செய்திகள்

ஜனவரி 26 …உலகில் பல்வேறு நாடுகளின் அரசு விழாக்கள்..!!

1947  ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்று இருந்தாலும், இந்தியாவிற்கு என்று  நிரந்தர அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு அமலுக்கு வந்தது. 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி தான், இந்த நாளை இந்தியாவின் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம்.இதேநாளில்  இந்தியா போன்று மேலும் பிற நாடுகளும் அரசு விழாக்களை  கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். உலகின் மிகச்சிறிய கண்டமாகவும் உலகின் மிகப்பெரும் தீவுகள் ஆஸ்திரேலியாவில் முதன் முதலாக பிரிட்டிஷ் குடியேறிகள் வந்திறங்கிய நாளை நினைவு கூறும் விதமாக ஜனவரி 26ம் […]

Categories
தேசிய செய்திகள்

நாட்டின் 71வது குடியரசு தினம்…. அசாமில் 2 இடங்களில் குண்டு வெடித்ததால் பரபரப்பு

நாடு முழுவதும் குடியரசு தின விழா சிறப்பாக  கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அசாமில் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலம் திப்ரூகார், சொனாரி ஆகிய இரு வெவ்வேறு  இடங்களில் குண்டு வெடித்துள்ளது. சீக்கிய மதவழிப்பாட்டு தலம் சந்தை அருகே 2 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் 71வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள்  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மாஃபியா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அருண் விஜய் மற்றும் பிரசன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாஃபியா ‘ படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப் பட்டுள்ளது. தடம் மற்றும் சாஹோ படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் இப்படம் ‘மாஃபியா ‘. `துருவங்கள் பதினாறு‘ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார். குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் மற்றும் […]

Categories
வணிக செய்திகள்

குடியரசு தின விழா – பி.எஸ்.என்.எல் சிறப்பு சலுகை

குடியரசு தினத்தை முன்னிட்டு ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. நாட்டின் 71ஆவது குடியரசு தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனம் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி 1,999 ரூபாய்க்கான பிளான் பயன்படுத்துவோர், அப்பிளானின் வேலிடிட்டியை 345 நாட்களிலிருந்து 71 நாட்கள் அதிகரித்து 436 நாட்களுக்கு பயன்படுத்தலாம். இந்த பிளானில் ஏற்கனவே தினமும் 3 ஜி.பி டேட்டாவும், அளவில்லா அழைப்புகளும், தினமும் 100 குறுஞ்செய்திகளும் இருந்து […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு

சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. வெளவ்வால் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டு உயிரிழப்பை உண்டாக்கும். இந்த வைரசால்  சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மக்கள் வைத்த கோரிக்கை – எம்.பி ஞானதிரவியம் நிறைவேற்றுவாரா..?

எம்.பி ஞானதிரவியிடம் மக்கள் வைக்கும் கோரிக்கை: திசையன்விளைலிருந்து புதிய ரயில் பாதை ஏற்படுத்தி, அதை நாங்குநேரி அல்லது வள்ளியூர் ரயில் நிலையத்துடன் இணைக்க வேண்டும். இதுபோன்று கன்னியாகுமரியிலிருந்து புதிய ரயில் பாதை ஏற்படுத்தி, அஞ்சுகிராமம் வழியாக உவரி, கூடங்குளம், திருச்செந்தூர் அல்லது தூத்துக்குடி ரயில் நிலையத்தை இணைக்க கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

விரட்டி பிடித்த விவசாயி … அலறிய நோயாளிகள் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ..! 

ராசிபுரம் அருகே தன்னை கடித்த பாம்புடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குள்ளப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் விவசாயம் செய்து ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் ஆடு மேய்த்து கொண்டிருந்தப்போது திடீரென கட்டுவிரியன் பாம்பு ராமசாமியை கடித்தது. இதில் காயமடைந்த ராமசாமி பாம்பை விடாமல் துரத்திச்சென்று அடித்துக் கொன்று, பாம்புடன் ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தார். பின்னர் மருத்துவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு

2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசியல், கலை, அறிவியல், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்டவைகளுக்காக பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்துவருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பத்ம விபூஷண் விருதானது ஏழு பேருக்கும், பத்ம பூஷண் 16 பேருக்கும், பத்ம ஸ்ரீ 118                   பேருக்கும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இரண்டே நிமிடங்களில் 40 நாடுகளின் பெயர்கள்… 4 வயது சிறுவன் அசத்தல்..!!

 நான்கு வயது சிறுவன் 40 நாடுகளின் பெயரை சொல்லி அசத்தல்: தூத்துக்குடி  மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் உமாதேவி தம்பதியினரின், நான்கு வயது சிறுவன் ஹரிஸ், தேசியக் கொடிகளை பார்த்து அந்த கொடிகளுக்குரிய  நாட்டின் பெயரைச் சொல்லி அசத்துகிறார். தனியார் பள்ளியில் படித்து வரும் அந்த சிறுவனிடம் 40 நாடுகளின் கொடிகளை ஆசிரியர்கள் காண்பித்தனர்,  இரண்டு நிமிடத்தில் அந்த நாட்டின் பெயரை சொல்லி சிறுவன் அசத்தியுள்ளார். விரைவில்  உலகில் உள்ள அனைத்து நாடுகளின்  பெயர்களையும், நாட்டின் […]

Categories
ஆன்மிகம் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…… மனக் கஷ்டம் நீங்கும்……அந்தஸ்து மற்றும் கௌரவம் உயரும்….!

மீனம் ராசி அன்பர்களே…!! நீங்கள் சொந்தப் பணியில் இன்று ஆர்வம் கொள்வீர்கள். உறவினர் செயலை குறை சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் மிதமாகத் தான் இருக்கும். பணியாளர்கள் பணி சுமையினால் அவதிப்படக் கூடும் . வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். இன்று நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை ஆலோசித்து செய்யவும். அடுத்தவர்களைப் பற்றி பேசுவதையும் தவிர்த்து விடுங்கள். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில்லை கொஞ்சம் தாமதமாக இருக்கும் கவலைப்பட வேண்டாம் . எல்லாமே உங்களுக்கு சரியாகும். மனக் […]

Categories
ஆன்மிகம் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு …..கூடுதல் வருமானங்கள் கிடைக்கும் ….மகிழ்ச்சி அதிகரிக்கும் …!

கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள் திட்டமிட்ட பணிகளை நிறைவேற்றுவதற்கு முன் ஏற்பாடுகளை செய்வீர்கள். தொழில் முறையில் உள்ள அனுகூலங்களை யாரிடமும் சொல்ல வேண்டாம். எப்பொழுதுமே ரகசியத்தை உங்களுடைய மனதில் வைத்துக் கொள்வது நல்லது. கூடுதல் வருமானத்தால் தேவைகள் அனைத்தும் நிறைவேற கூடும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட நினைப்பவர்கள் அதற்கான ஆலோசனைகளில் ஈடுபடுவது நல்லது. வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டிய நிலைமை இருக்கும். கொடுத்த கடனை வாங்க முயற்சிகளை […]

Categories
Uncategorized ஆன்மிகம் ஜோதிடம்

மகரம் ராசிக்கு….செலவின் எண்ணிக்கை அதிகரிக்கும்….கவனமாக செயல்படுங்கள்…!

மகரம் ராசி அன்பர்களே…!! இன்று அறிமுகம் இல்லாதவர்களிடம் எந்த நெருக்கமும் வைக்காதீர்கள். தொழிலில் தாமதமின்றி சரி செய்வது அவசியம். பண வரவை விட நிர்வாக செலவின் எண்ணிக்கை அதிகரிக்கும். பணியாளர்கள் பணியின் நிமிர்த்தமாக வெளியே செல்லக் கூடும். உணவுப் பொருள்களை தயவு செய்து தரம் அறிந்து உண்ணுங்கள். பெற்றோர்கள் மற்றும் உறவினர்களின் அரவணைப்பு அதிகமாகும். பயணங்களில் எதிர்பாராத விதமாக  தடைகள் இருக்கும். யோசித்து செய்யும் காரியங்கள் சாதகமான பலன்களை கொடுக்கும். புதிய ஆர்டர் விஷயமாக வெளியூர் செல்ல […]

Categories
ஆன்மிகம் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…..பாராட்டுகள் பெறுவீர்கள்….நிம்மதி அதிகரிக்கும் …!

தனுசு ராசி அன்பர்களே…!! இன்று நீங்கள்  உங்களுடைய  செயல்களினால் நண்பரிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் அதிக உழைப்பினால் சாதனை புரிவீர்கள். உபரி பண வரவு சேமிப்பாகும். குடும்பத்தில் வாழும் பெண்களின் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். இன்று தெய்வ வழிபாடு சிறக்கும். இன்று சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரியிடம் இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு கூடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக ராசிக்கு..உதவிகள் கிடைக்கும்…மதிப்பு கூடும்..!!

விருச்சிக ராசி அன்பர்கள், இன்று  அக்கம் பக்கத்தினர் அன்பு பாராட்ட கூடும்,  தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணியில் ஈடுபடுவீர்கள், வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவார்கள். பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று  எதிலும் முன்னேற்றம் காணப்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள், முக்கிய நபர்களின் அறிமுகமும், உதவியும் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும், மரியாதை கூடும்,  திட்டமிட்ட காரியங்கள் நன்றாக நடந்து முடியும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த படி சிறப்பாக நடக்கும். […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு.. மன அமைதி கூடும்.. எதிர்ப்புகள் விலகி செல்லும்..!!

துலாம் ராசி அன்பர்கள்,  இன்று ஒருமுக த்தண்மையுடன் பணியில் ஈடுபடுகிறார்கள் தாமதமான பணி எளிதில் நிறைவேறும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக போட்டிகள் குறையும், வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நல்ல செயல் மனதை மகிழ்விக்கும் , இன்று  எதிர்பார்த்த தகவல் தாமதமாகத்தான் வந்து சேரும். கூட இருப்பவரிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் பொழுது கவனமாக இருங்கள், பொருளாதாரம் உயரும்,  எதிர்ப்புகள் விலகி செல்லும், கடன் தொடர்பான பிரச்னைகள் தீரும். பல வகையான யோகங்கள் இன்று ஏற்படும். மன குழப்பம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு.. சீரான வளர்ச்சி உண்டு.. வாக்குவாதம் வேண்டாம்..!!

கன்னி ராசி அன்பர்கள், இன்று உங்கள் பேச்சு, செயலில் தடுமாற்றம் ஏற்படலாம், நண்பனின் வழிகாட்டுதல் நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி உண்டாகும், பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும்.  நேரத்திற்கு உண்பதால் ஆரோக்கியம் சீராக இருக்கும். இன்று பிறருடன் பழகும் போது நிதானம் இருக்கட்டும். இன்று தொழில் முன்னேற்றம் காணப்படும், பொருளாதார  முன்னேற்றமும் இருக்கும், பழைய பாக்கிகளை வசூலிப்பதில்  வேகத்தை கொடுக்கும். இன்று  எந்த ஒரு விஷயத்தையும் தெளிவாகவும் சுய சிந்தனையுடன் செய்வீர்கள், அதனால் சாதகமான […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு.. எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்..ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்..!!

சிம்ம ராசி அன்பர்கள், இன்று மனதில் நம்பிக்கை குறைவதற்கு ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானதாக இருக்கும். ஆதாயம் சீராக இருக்கும், பணியாளர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்க பெறுவார்கள், இன்று  அதிகமான விஷியங்களில்  தலையிட வேண்டாம். அதாவது பிரச்சனை உள்ள விஷியங்களில்  தயவுசெய்து தலையிட வேண்டாம், மன தெம்பு கொஞ்சம் இருக்கும், வீடு வாகனம் வாங்கும் எண்ணமும் கைகூடும். வாக்குவன்மையால் காரியத்தை சிறப்பாக சிறப்பாக செய்வீர்கள், ஆன்மிக எண்ணம் இருக்கும். தொழில் வியாபாரம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக ராசிக்கு… மேலிடத்தில் அதிகாரம் கிடைக்கும்…

 கடகம் ராசி அன்பர்களே….!!  இன்று யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் .சுய லாபத்திற்காக சிலர் உதவுவதற்கு முன் வருவார்கள் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும் .அளவான பணவரவே  கிடைக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். இன்று உச்சத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள் நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும். நிர்வாகத்திறமை வெளிப்படும் .மேலிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் . குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையும்  காணப்படும். தேவையான நிதி உதவி கிடைக்கும். சிக்கலான  […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… காதல் கைகூடும்!! திருமணம் இனிதே நடந்தேறும்…

 மிதுனம் ராசி அன்பர்களே….!! இன்று வாழ்வில் வளர்ச்சிக்கான வாய்ப்பு உருவாகும். உண்மை நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் அமோக லாபம் கிடைக்கும். பெண்கள் வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும் .இன்று எந்த ஒரு விஷயத்தையும் சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று எதிர்ப்புகள் நீங்கும் அனுகூலமான பலன்களை எதிர் பார்க்கிறீர்கள் .தைரியம் கூடும் .சகோதரர் வகையில் மிக நல்ல பலனை எதிர்பார்க்கலாம் .நிணைத்த  வசதிகள் கிடைக்கும். எதிலும் லாபம் உண்டாகும். அன்பும் பாசமும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷபம் ராசிக்கு… திருமணம் கைகூடும்…

ரிஷபம் ராசி அன்பர்களே!!..  இன்று உறவினரின்  பாசத்தை கண்டு நிகழ்வீர்கள் . தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி சிறப்பாக இருக்கும். வருமானம் சுமாராக தான் இருக்கும் .பெண்கள் பிள்ளைகளின் வளர்ச்சி குறித்து ஆலோசிப்பீர்கள் .திட்டுமிட்ட  வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள. இன்று வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் சென்று கலந்து கொள்ள நேரிடும். சிலருக்கு திருமணம் கைகூடும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளால் நன்மை கிடைக்கும். இன்று எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும்.இன்று விரும்பிய […]

Categories
ஆன்மிகம் சினிமா ராசிபலன்

மேஷம் ராசிக்கு…அரசாங்க அனுகூலம் ஏற்படும்!!…

 மேஷம் ராசி அன்பர்களே !!.. இன்று இனிய வார்த்தையால் பிறரை கவவீர்கள். வாழ்க்கை தரம் உயரும் அளவில் இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற நண்பர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிக்கும் விதத்தில் வருமானம் வரும் .குடும்ப சுப விசய பேச்சுக்கள் நடந்தேறும்.இன்று பணவரவு அதிகமாகவே இருக்கும். இன்று பழைய கடன்களை திருப்பிச் செலுத்தக்கூடிய நிலை உருவாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த ராஜாங்க ரீதியான சிரமங்களில் இருந்து விடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர் நிலைமையும் மேம்படும்  .அரசாங்க அணுகுலம் […]

Categories
மாநில செய்திகள்

எனக்கு 60 – உனக்கு 22 இது ஒரு மாதிரியான காதல்..! கணவர் போலீசில் புகார்

உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில்  60 வயதான  மூதாட்டிக்கும்  22 வயது இளைஞனுக்கும் ஏற்பட்ட காதல் தொடர்பாக மூதாட்டியின் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிரகாஷ் நகர் காவல்நிலையத்திற்கு வினோதமான அதிர்ச்சி அளிக்கக்கூடிய புகார் ஒன்று வந்தது. அதாவது 7 குழந்தைகளுக்கு தாயான 60 வயது மதிக்கத்தக்க எனது மனைவியும் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனும் காதலித்து வருகிறார்கள். இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும்  60 வயது   மூதாட்டியின் கணவர் […]

Categories
அரசியல் திருப்பூர் மாவட்ட செய்திகள்

சசிகலா வெளியே வந்தால் அதிமுகவில் மாற்றம் நிகழும்’! – எம்.எல்.ஏ. தனியரசு

சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் சசிகலா எடுக்கும் முடிவு அதிமுகவில் பெரிய தாக்கமும் மாற்றமும் நிகழலாம் என எம்.எல்.ஏ. தனியரசு தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இதில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் திருப்பூர் தெற்கு, வடக்கு பல்லடம், காங்கேயம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஆய்வு கூட்டத்தைத் தொடர்ந்து காங்கேயம் சட்டப்பேரவை உறுப்பினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நாற்றிலா நடவு மூலம் அதிகம் மகசூல்.. கண்டறிந்த பொறியியல் பட்டதாரி..!!

நாற்றிலா நடவு மூலம் அதிக மகசூல் அளிக்கும் விதைகளை பொறியியல் பட்டதாரி ஒருவர் வழங்கி வருகிறார். திருச்சி மாவட்டம் சிறுகமணியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி வெங்கடேசன் என்பவர் நாற்று இல்லா நடவு எனும் நடைமுறையை அறிமுக படுத்தியுள்ளார் அதாவது கேப்சூல்  எனப்படும் மாத்திரை உறைகளில் விதைகளை அடைக்கும் இவர் அவற்றை வீசி எறிவதன் மூலமோ அல்லது மண்ணில் புதைப்பதன்  மூலமோ  நடவு செய்யலாம் என்கிறார். மாத்திரை உறைகளுக்கு பதிலாக பொட்டலங்களில் விதைகளை வைத்து அன்பளிப்பாக கொடுக்கும் வகையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உலக சாதனைக்காக .. புதிய முயற்சி கண்ட மாணவர்கள்..!!

அண்ணா பல்கலைக்கழகத்தில்  ரோபோக்கள் மூலம் மர கன்றுகளை நடுவதில்  உலக சாதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் இயங்கி வரும் தனியார் ரோபோடிக் நிறுவனத்தில் பயின்று வரும் 326 மாணவர்கள், 326 ரோபோக்களை கொண்டு கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். தாங்கள் வடிவமைத்த ரோபோடிக் கருவியின் மூலமாக மா,நெல்லி, புளி, வேம்பு உள்ளிட்ட நாட்டு மரக்கன்றுகளை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில நட்டனர். உலக வெப்பமயமாதல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இரண்டு வயது குழந்தை கடத்தல்… இளம்பெண் மாயம்..!!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இரண்டு வயது குழந்தை கடத்தல்: இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். பல்லடம் அடுத்த அரசன் காட்டைச் சேர்ந்த சுடலை ராஜன் என்பவரின் குழந்தை மகாலட்சுமி, கடத்தப்பட்ட குழந்தையாகும், மனைவியை பிரிந்து வாழும் சுடலை ராஜன் மற்றும் அவரது தந்தை மாரியப்பனும்  குழந்தையை  பராமரித்து வந்துள்ளனர். இந்நிலையில் பழனி முருகன் கோவிலுக்கு சென்ற மாரியப்பன், அங்கிருந்து இளம் பெண் ஒருவரை  அழைத்து வந்துள்ளார், அந்த இளம்பெண் மாரியப்பன் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் இருந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஹைட்ரோ கார்பன் திட்டம்.. பாமக அன்புமணி ராமதாஸ் பேட்டி..!!

ஸ்டாலினுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் என்றால் என்னவென்றே தெரியாது என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டதே ஸ்டாலின் தான் என்றும்  பாட்டாளி மக்கள் கட்சி  இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், வாலஜாவில் முப்படை சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அவர் செய்தியாளர்களை சந்தித்து , காஞ்சிபுரத்தில் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்களை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

Categories
கட்டுரைகள் தேசிய செய்திகள்

குடியரசு தினம் என்றால் என்ன? யார் உண்மையான குடிமக்கள் …!!

உனது விதியை படைப்பவன் நீயே என்பதை புரிந்து கொள்.உனக்குத் தேவையான எல்லா வலிமையும் , உதவியும் உனக்குள்ளேயே கூடிக் கொண்டிருக்கின்றன இது சுவாமி விவேகானந்தரின் பொன் மொழிகளில் ஒன்று. நமது நாட்டுக்கு எப்போது சுதந்திரம் வந்தது என்று கேட்டால் சின்னக் குழந்தை கூட விடை சொல்லிவிடும். ஆனால் குடியரசு தினம் பற்றிக் கேட்டால் பல பெரியவர்களே சரியாகப் பதில் சொல்ல இயலாமல் விழிப்பர். நமது மன்னர்கள் ஒற்றுமையாய் இல்லாமல் இந்தியாவைச் சிறு சிறு மாநிலங்கலாய் பிரித்து ஆண்டதால் தான் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா – பிரேசில் …. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து..!!

இணைய பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவம் போன்ற  15 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது. பிரேசில் அதிபர் குடியரசு தின விழாவில் கலந்து கொல்வதற்காக இன்று இந்தியா வந்துள்ளார். அவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர். இதனை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் பிரேசில் அதிபரின்  முன்னிலையில் இருநாட்டு அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அவர், சுகாதாரம், மருத்துவம், இணைய பாதுகாப்பு உட்பட 15 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

JAN 26 ஏன் குடியரசு தினம் கொண்டாடுகின்றோம் ?

அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்…. இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு நிகழ்வு விழா என்று சொன்னதும் இளைஞர்கள் முதல் பெரிய ஞானிகள் வரை தனது முகநூல் பக்கம் அல்லது இன்னும் சமூக வலைதளங்களில் தன் வாழ்த்துக்களை போட்டு மூவர்ணக் கொடியை போட்டு ஹேப்பி ரிபப்ளிக் டே என்று சொல்லிவிட்டால் அன்றுடன் அந்த விழா முடிந்து விட்டது , தன் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு சாதாரணமான நிகழ்வு அல்ல. மிகவும் சிறப்பான மிகுந்த பெருமைமிகுந்த […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் ஆணையம் உத்தரவு.. பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் பணிகள் தீவிரம்..!!!

9 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது, அதனுடைய வார்டு மறுவரையறைப் பணிகள், பிப்ரவரி இரண்டாம் வாரத்திற்குள் முடித்து அரசாணை வெளியிட வேண்டும் என்று, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.  சென்னை, கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில், வார்டு மறுவரையை பணிகள் குறித்து அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் வார்டு மறுவரையரைப் பணிகள், பிப்ரவரி இரண்டாம் வாரத்திற்குள் முடித்து அதற்கான அரசாணை வெளியிட வேண்டும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தாயை கழிவறையில் அடைத்து கொடுமை – வளர்ப்பு மகன், மருமகள் கைது!

மூதாட்டியை கழிவறையில் வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு மகன், மருமகள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோட்ஸ் நகரைச் சேர்ந்தவர் மரியமிக்கேலம்மாள் (95). இவரது வளர்ப்பு மகன் நிகோலஸ் (42), மருமகள் இந்திரா (34). இதனிடையே, நிகோலஸ் இந்திராவுடன் சேர்ந்த தனது வளர்ப்பு தாயை கொடுமைப்படுத்திவந்ததாக மாவட்ட சமூக நலத் துறை அலுவலர்களுக்கு புகார்கள் வந்தன. இந்தப் புகாரின்பேரில், சமூக நலத் துறை அலுவலர்களும், காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான காவல் துறையினரும் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு .. உச்சநீதி மனறத்தில் புதிய மனு..!!!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரானார் முகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்.  இதனையடுத்து பிப்ரவரி 1ந் தேதியன்று 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்நிலையில், கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததை எதிர்த்து, குற்றவாளி முகேஷ் குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்றம் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

முகத்தின் வசீகரம் நீடிக்க!! ஐஸ் கட்டிகளை பயன்படுத்திப்பாருங்கள்!!..

வசீகரமான முகம் பெற உதவும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால் நமது முகத்தின் வசீகரம் அதிகரிக்கும் .இப்போது ஐஸ் கட்டிகளின்  பயன்கள் பற்றி பார்க்கலாம்!! முகப்பருக்களை போக்க;. ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்வதால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி சருமம் மிருதுவாகிறது முகப்பருவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 10 நிமிடங்கள் ஐஸ் கட்டியை கொண்டு மசாஜ் செய்யவேண்டும். தழும்புகள் மறைய;. தினமும் 15 நிமிடங்கள் தழும்புகள் உள்ள இடங்களில் ஐஸ் கட்டிகளை […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

துளசியில் இவ்வளவு நன்மைகள் உள்ளனவா?

துளசி… இதில் துளசி கருந்துளசி ,செந்துளசி, கல்துளசி ,முள்துளசி ,முதலிய பல இனங்கள் உள்ளன.அவற்றின் நன்மைகள் குறித்து இத்தொகுப்பில் காண்போம்!!. 1. துளசிப் பூங்கொத்துடன் வசம்பு திப்பிலி சம அளவு எடுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வர குழந்தைகளுக்கு ஏற்படும் கக்குவான் இருமல் குணமாகும். 2. இலைகளை புட்டு போல அவித்து சாறு பிழிந்து 10 மில்லி காலை மாலை என இரு வேளை குடித்து வர பசியை அதிகமாக்கும்.இதயம் கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும், ரத்தம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் – கோவை ஆட்சியர் ராஜாமணி..!!

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்க்க தீவிர முன்னெச்சரிக்கை, கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க  தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார். தேசிய வாக்காளர் தினத்தையொட்டி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேரணியை தொடங்கி வைத்த பிறகு இதனை அவர் தெரிவித்தார்.

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினத்திற்கும் – சுதந்திர தினத்திற்கும்… என்ன வித்தியாசம்..?

ஜனவரி 26ஆம் நாள் குடியரசு தினத்தை கொண்டாடும் நிலையில் , குடியரசு தினத்திற்கும் , என்ன வித்தியாசம் என்பது குறித்து பார்க்கலாம். நாளை நாம்  குடியரசு தினத்தை கொண்டாட ஆயத்தமாகி வருகிறோம், நாடே ஆயத்தமாகி வருகிறது.குடியரசு தினத்திற்கும், சுதந்திர தினத்திற்கும் என்ன வித்தியாசம் என்றால் சுதந்திர தினம் தான் முதலில் வந்தது. ஆகஸ்ட் 15, 1947 இல் வந்தது தான் சுதந்திர தினம் . ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் விடுதலை அடைந்தோம், ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் சுதந்திரம் பெற்றோம்  அதை தான் நாம் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வெற்றிலையின்!! மருத்துவ பயன்கள்..

வெற்றிலை அனைத்து விசேஷ வீடுகளிலும் உணவிற்குப் பின்கொடுப்பார்கள்   அதில் எவ்வளவு நன்மை இருக்கிறது  என்பது குறித்து இத்  தொகுப்பில் காண்போம். இரண்டு வெற்றிலையோடு ஒரு மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கிவேண்டும். பின் தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு நன்றாகக் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிமுக அமைச்சர் சர்ச்சை – கே.சி. கருப்பணன்..!!

திமுக வெற்றி பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வளர்ச்சி நிதி குறைத்து வழங்கப்படும் என்று கே.சி.கருப்பன் என்று கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய அவர் இதனை கூறினார். சத்யமங்கலத்தின்  ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றி இருந்தாலும் இங்கு எந்த வளர்ச்சி பணியும் நடக்காது என்று அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார். திமுக வெற்றி பெற்ற இடங்களில் குறைவாகவே நிதி ஒதுக்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்தார். ஏதாவது […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் நோய்: உலகம் முழுவதும் 1354 பேர் பாதிப்பு

கொரோனா வைரஸ் நோயினால் உலகம் முழுவதும்  1354 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகநாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. வெளவ்வால் மூலம் இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்த வைரசுக்கும் வெளவாலுக்கும் நேரடியாக எந்த தொடர்ப்பு இல்லை. ஆனால் வெளவாலை உணவாக சாப்பிடும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த கொடிய வைரஸ் பரவியுள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்பட்டு உயிரிழப்பை உண்டாக்கும். இந்த வைரசால்  சீனாவில் உள்ள ஹுபேய் மாகாணம் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பனைமரம் நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகளை கொடுக்குதா.!! ஆச்சர்யம்.!!

பனை மரத்தில் எண்ணற்ற மருத்துவ பயன்கள் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதிலுள்ள பணம்பழம், நுங்கு, பதநீர் போன்றவற்றின் மருத்துவ பயன்கள் குறித்து இத்தொகுப்பில் காண்போம் நுங்கை தோள்கள் சாப்பிட்டுவர சீதக் கழிச்சல் விலகும். தோல் நீக்கி நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடை காலத்தில் ஏற்படும் வேர்குரு நீங்கும். பனங்கிழங்கிற்கு  உடல் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை உண்டு. தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடல் அழகு பெறும் உடல் பலமும் அதிகரிக்கும். சுண்ணாம்பு சேர்த்து […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சுண்டைக்காய் சாப்பிடுவதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!!!

சுண்டைக்காய் கோழையகற்றியாகவும் வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படுகிறது.. காச நோய் இருப்பவர்கள் தினமும் 20 சுண்டை வற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டால் நோய் கட்டுப்படும் .அதேபோன்று சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மையுடையது கல்லீரல் மண்ணீரல் நோய்களை நீக்க உதவுகிறது. பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு ,ஈளை ,காசம்,, இருமல் மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி, முதலியன தீரும். சுண்டைக்காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து இரவு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

முருங்கையில் இவ்வளவு நன்மைகளா!!……

பொதுவாக முருங்கை என்பது அதிக மருத்துவ குணம் கொண்ட ஒரு தாவரம் என்று நம் அனைவருக்கும் தெரியும்…அதன் தனிப்பட்ட மருத்துவ குணங்களை பற்றி இத்தொகுப்பில் காண்போம்!! முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, பி, சி,புரதம், இரும்புச்சத்து உள்ளது. 1. முருங்கை இலையை எடுத்து அதில் மிஞ்சிய காம்புகளை மட்டும் நறுக்கி மிளகு சேர்த்து ரசம் வைத்து உட்கொள்ள கைகால் அசதி நீங்கும்.உடல் பலம் பெரும். 2. முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துவர ரத்தசோகை நோய் தீரும் வளரிளம் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

பிரண்டைத் துவைல்ல இத்தனை விஷயம் இருக்கா? தெரியாம போச்சே!!….

வெண்ணெயை கையில் வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகிறான்”என்ற பழமொழிக்கேற்ப நம் அருகிலிருக்கும் மூலிகைகளின் மருத்துவக் குணங்களை அறியாமல் கண் இருந்தும் குருடாய் அழைக்கிறோம்!!!. பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருண்டைப் பிரண்டை, என உள்ளது பிரண்டை சதுரப்பிரண்டை, களிப் பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை என பல வகைகள் உள்ளது. முப்பிரண்டை கிடைப்பது அரிது. இது ஒரு காயகல்பம் இதன் தண்டு, வேர் ,பழம், அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டது. சிலர் உடல் மெலிந்து காணப்படுவார்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆமணக்கின்!! அதிசய பயன்கள்…

ஆமணக்கு வேரை தேன் கலந்து பிசைந்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு ஊற வைத்து காலையில் அதனை வடிகட்டி குடித்து வர தேவையற்ற ஊளைச் சதை குறைந்து உடல் மெலியும். ஆமணக்கு வேரை நிழலில் உலர்த்தி தூள் செய்து சம அளவு சர்க்கரை கலந்து ஒரு சிட்டிகை அளவு காலை மாலை இருவேளை உட்கொண்டு வர உடல் வலி குறைவதுடன் மூளையும் வலுவடையும். சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட்டுவர உடல் உஷ்ணத்தால் உண்டான கண் […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினம்- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!!

இந்தியாவின் 71 வது குடியரசு தின விழா நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார், பின்னர் அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெட் போல்சனர் பங்கேற்க உள்ளார். இந்நிலையில் டெல்லி நகரம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

சுளுக்கு மற்றும் கழுத்து வலி நீங்க!! அற்புதமான 6 வழிகள்…

1.  புளிய மர இலையை அவித்து அதை சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு வைத்து கட்டிவர சுளுக்கு குணமாகும். 2. புளிய மர இலையை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் குணமாகும். 3. முருங்கைக் கீரையை உணவுடன் உட்கொண்டு வர கழுத்து வலி படிப்படியாக குறையும். 4. பிரண்டை வேரை நிழலில் நன்கு உலர்த்தி பொடியாக்கி நெய் விட்டு லேசாக வறுத்து 1.2 […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிரியாணி திருவிழா..போட்டி போட்ட பக்தர்கள்..!!

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே முனியாண்டி கோவிலில் நடைபெற்ற மெகா பிரியாணி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயிலில் 85வது ஆண்டு பிரியாணி  திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து , ஸ்ரீ முடியாண்டி விலாஸ்  ஓட்டல் நடத்திவரும் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதனை ஒட்டி  நடத்தப்பட்ட ஊர்வலங்களில் பெண்கள் தேங்காய், பழம், பூ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன் – காமெடி கதாநாயகன் யோகிபாபு

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக நடிக்கும் யோகிபாபு, இனி வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன் என உறுதியோடு கூறியுள்ளார். தமிழ் திரைப்பட உலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக உயர்ந்துள்ளர் யோகிபாபு. இவர் பிரபல நடிகர்கள் ரஜினி , விஜய் மற்றும் அஜித் என அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் மட்டும் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததுள்ளார். இப்பொழுது யோகிபாபு கைவசமாக பதினாரு படங்கள் வைத்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் பன்னி குட்டி மற்றும் மண்டேலா ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

தெலுங்கானாவில் முதியோர் இல்லத்தில் துன்புறுத்தப்பட்ட 73 பேர் மீட்பு

தெலுங்கானாவில் முதியோர் இல்லத்தில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத்தில் நகரம் என்ற கிராமத்தில் முதியோர் இல்லம் ஒன்று செயல்பட்டு வருகிறது.இந்த இல்லத்தில் முதியோர்கள்  மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகள் இங்கு உள்ளார்.இந்நிலையில் அந்த முதியோர் இல்லத்தில் உள்ளவர்கள் மனிதநேயமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர்.  எனவும் அவர்கள் சங்கிலியால் கட்டி வைத்து துன்புறுத்தப்படுகின்றனர் என போலீசாருக்கு புகார் வந்தது. இதனடிப்படையில், போலீசார் முதியோர் இல்லத்திற்கு சென்றனர்.அங்கு சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு அறையில் […]

Categories

Tech |