Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான சிக்கன் சூப் வாங்க செய்வோம் …..!!

சிக்கன் சூப் தேவையான பொருட்கள் : சிக்கன் (எலும்புடன்)-கால் கிலோ வெங்காயம்- 1(நறுக்கியது) தக்காளி-1 இஞ்சி பூண்டு விழுது- 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தழை -ஒரு கைப்பிடி மஞ்சள்தூள்- கால் டீஸ்பூன் உப்பு- தேவைக்கேற்ப சீரகம்-அரை டீஸ்பூன் மிளகு தூள்-அரை டீஸ்பூன்   செய்முறை : வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.  சிக்கனை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.குக்கரில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு தாளிக்கவும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன ஒரு ஸ்டைல் …ஒரு பாட்டுக்கு ரூ10,00,00,000…வெளியானது அண்ணாச்சியின் புகைப்படங்கள் …!!

ஒரு பாடல் 10கோடி செலவில் உருவாகி வரும் சரவணா ஸ்டோர் உரிமையாளரின் புகைப்படங்கள் வெளியீடு . சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் நடிப்பில் உருவாக்கி வரும் படத்தின் பாடல் கட்சிகளின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது .சரவணா ஸ்டார் உரிமையாளர் அருளின் புரொடெக்சன் நம்பர் 1நிறுவனம் தயாரிப்பில் பெயரிடப்படாத திரைப்படத்தில் அறிமுக நாயகி கீர்த்திகா திவாரி ,பிரபு ,விவேக் ,விஜயகுமார் ,நாசர் ,கோவைசரளா உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள் . இந்தநிலையில் 10கோடி ரூபாய் செலவில் இந்த படத்தின்  ஒரே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

துக்க வீட்டுக்கு வா …மனைவியைக் கொன்று துக்க வீடாக்கிய கணவன் …!!

 திருமணம் ஆகி 4 மாதங்களில் குடிபோதையில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை  செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்  . சென்னை பள்ளிக்கரணை,பெரும்பாக்கம் பசும்பொன் நகரைச் சேர்ந்த அய்யனார் என்ற அந்த நபர் நாள்தோறும் குடித்து விட்டு வந்து மனைவி அஞ்சலியை அடித்து துன்புறுத்துவது வழக்கம் எனக்கூறப்படுகிறது .இவர்களுக்கு திருமணமாகி 4 மாதங்களே ஆகிறது .இந்தநிலையில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்வுக்கு வருமாறு அஞ்சலி ,அய்யனாரை அழைத்துள்ளார் .அதற்கு அவர் வர மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்புவிற்கு வில்லனான சுதீப்…ரசிகர்கள் எதிர்பார்ப்பு …!!!

சிம்புவிற்கு வில்லனாக சுதீப் நடிப்பதால் இப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.  நடிகர் சிம்பு நடிப்பில் “மாநாடு” படம் எடுக்கப்படும் என முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்புக்கு சிம்பு ஒத்துழைக்காததால் கோபமான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தையே டிராப் செய்வதாக அறிவித்தார்.இயக்குனர் வெங்கட் பிரபுவும்,வெப் சீரிஸ் ஒன்றை இயக்க சென்றார். இந்நிலையில் சிம்புக்கும் ,சுரேஷ் காமாட்சிக்கும் இடையே இருந்த மன வருத்தங்களை சிலர் முன்னின்று போக்கினர்.இதையடுத்து மீண்டும் படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டார்.வரும் ஜனவரி மூன்றாவது […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா தமிழ் சினிமா தேசிய செய்திகள் விளையாட்டு

பிரபலங்களின் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ்…!!

பிரபல ஆங்கில பத்திரிக்கையான போர்ப்ஸ் இந்திய பிரபலங்களின் 100 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் நடிகர்களை பின்னுக்கு தள்ளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். ஆண்டு தோறும் மக்களை கவர்ந்த பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்களை போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டுவருகிறது. அந்த வகையில் 2019-ஆம் ஆண்டு இந்திய பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.   வருமானம் புகழ் மற்றும் சமூக வலைத்தளத்தில் உள்ள வரவேற்பை கணக்கிட்டு 100 பேர் பட்டியல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐ.பி.எல். ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ரூ 58,25,00,000…!!

நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் 582,500,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது. இந்த ஏலத்தில் 8 அணிகளும் மொத்தமாக 1,403,000,000 ரூபாய்க்கு வீரர்களை ஏலம் எடுத்தது. இந்த ஏலத்தில் அதிகபட்ச விலையாக ஆஸ்திரேலியாவின் 13 வீரர்களை  582,500,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர். இதை தொடர்ந்து, இங்கிலாந்தை சேர்ந்த 6 வீரர்களை 177,500,00 ரூபாய்க்கும், மேற்கிந்தியதீவு அணியை […]

Categories
புதுச்சேரி பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் மூழ்கி உயிரிழந்த பரிதாபம் …!!

புதுச்சேரியில் கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டே மொட்டை மாடியில் இருந்து இளம்பெண் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் . பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரவணன்,செல்வி தம்பதியருக்கு 8மாத குழந்தை இருக்கும் நிலையில் புதுச்சேரியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார் செல்வி .திருப்பூரில் பணிபுரிந்து வரும் சரவணனுடன் 17ஆம் தேதி இரவு வீட்டின் மொட்டை மாடியில் நின்றவாறு செல்போனில் பேசிக்கொண்டிருந்த செல்வி தனது கவனக்குறைவால் அங்கிருந்து கீழே விழுந்து இறந்ததாக  கூறப்படுகிறது .மொட்டைமாடியில் சுற்றுச்சுவர் குறைவான உயரத்தில் இருந்ததால் செல்வி […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் நில நடுக்கம்..!! வட மாநிலங்களிலும் எதிரொலி…!!

தலைநகர் டெல்லியிலும் சில வட மாநிலங்களிலும் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரமான டெல்லி மற்றும் வட மாநிலங்களில் திடீரென நில அதிர்வு உண்டானது. மேலும், ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள இந்துகுஷ் என்ற மலை  பகுதியிலும் 190 கிலோமீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.3 என்று ரிக்டர் அளவுகோலில் பதிவானது. இதை தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் உள்ள என்.சி.ஆர். தேசிய தலைநகர் மண்டலம் மற்றும் சில வடமாநிலங்களிலும் நில அதிர்வு ஏற்பட்டது. இதன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரஜினி சுறுசுறுப்புடன் செயல்படுகிறார்- புகழ்ந்த டி .இமான் …!!!

ரஜினியின் சுறுசுறுப்புடன் செயல்படுகிறார் என இசையமைப்பாளர் டி .இமான் பெருமையாக பேசியுள்ளார். நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தர்பார். இந்தப்படம் வரும் பொங்கல் அன்று வெளியிடப்படுகிறது .இதை தொடர்ந்து இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தலைவர் 168 என்ற படம் தயாராகின்றது . ரஜினி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பும் பாடலும் துவங்கி இருக்கிறது. இப்படத்திற்கு இசை அமைப்பாளர் டி .இமான் இசையமைக்கிறார் . முதல் நாள் பாடலுடன் துவங்கிய தலைவர் 168 படப்பிடிப்பு குறித்து […]

Categories
வானிலை

தென் தமிழகத்தில் கன மழை… வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

இன்று சில இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது . ராமநாதபுரம்,திருநெல்வேலி,தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கிழக்கு திசை காற்றின் தாக்கம், வெப்பச்சலனம் காரணத்தால்,லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்வதற்கு  வாய்ப்புள்ளது என்றும், தென் தமிழகத்தில் சில இடங்களில் கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதில் தூத்துக்குடி,ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் சில  இடங்களில் கன மழை பெய்ய  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியை தற்கொலையில் திடீர் திருப்பம்….பேராசிரியர் கைது…!!

அரசுப் பள்ளி ஆசிரியை  கல்லூரி வகுப்பறைக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சபவத்தில் ஒரு புதிய திருப்பம். சென்னை பெரம்பூரில் இருக்கும்  மாநகராட்சி மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் ஹரி சாந்தி. நேற்று மதியம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரிக்கு போன இவர் கல்லூரியின் முதல் தளத்தில் இருக்கும் தெலுங்கு வகுப்பறைக்கு சென்றுள்ளார். காலை வழக்கம் போல் கல்லூரிக்கு வந்த ஊழியர்கள் வகுப்பறைக்குள் ஹரி சாந்தி மின் விசிறியில்  தூக்குபோட்டு தற்கொலை செய்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

‘பைக்கில் மின்னல் வேகம்’ – இரவில் செல்போன் திருடும் கும்பல்; 6 பேர் கைது!

மயிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் வந்து செல்போனை பறித்து திருடிச்செல்லும் கும்பலை காவல் துறை கைது செய்தனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் கடந்த சில மாதங்களாக சாலைகளில் நடந்து செல்பவர்களிடம் இருசக்கர வாகனத்தில் வந்து செல்போன்களை திருடிச் செல்வது அதிகரித்து வந்தது. இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு புகார் வந்த வண்ணம் உள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையாகக் கொண்டு காவல் துறை தீவிரமாகத் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று இரவு மயிலாடுதுறை காவல் […]

Categories
பல்சுவை

மாற்றமின்றி பெட்ரோல்… அதிகரித்த டீசல்… வாகன ஓட்டிகள் கவலை…!!

பெட்ரோல் விலை மாற்றமின்றியும் , டீசல் விலை உயர்ந்தும் விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கவலை  அடைந்துள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை தீடிரென சரியத் தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கமாக இருந்து வருகின்றது . இதனால் வாகன ஓட்டிகள் தினம் தினம் என்ன விலை இருக்குமோ என்று சற்று குழம்பியே இருக்கின்றனர். ஒருநாள் அதிகமாகவும், ஒருநாள் குறைவாகவும், ஒருநாள் ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையாகவும் இருந்து வருகின்றது. விலை நிர்ணயம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிக இராசிக்கு…”புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம்”….. திடீர் செலவு…..!!!!

விருச்சிக ராசி அன்பர்களே…!!  இன்று பிள்ளைகளால் பெருமை சேரும் நாளாக இருக்கும். முன்னோர் வழி சொத்துக்கள் கிடைப்பதில் இருந்த தாமதம் விலகும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். எதிர்ப்புகள் விலகி செல்லும். கொடுத்த வாக்கை காப்பாற்றி முடிப்பீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் இருக்கும். வரவு இருந்தபோதிலும் வியாபாரம் தொடர்பாக திடீர் செலவு கொஞ்சம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடனிருப்பது நல்லது. பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் இராசிக்கு…”பொன் பொருள் சேர்க்கை”… பணத்தை எண்ண வேண்டாம்..!!

துலாம் ராசி அன்பர்களே…!!!  இன்று தடைகள் அகலும் நாளாக இருக்கும். தக்க சமயத்தில் உங்களுக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவி செய்வார்கள். உங்களுடைய இல்லத்தில் நல்ல சம்பவம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஆடை ஆபரணங்கள் வாங்க கூடிய சூழ்நிலை இருக்கும். கூடுதலாகத்தான் உத்தியோகத்தில் உழைக்க வேண்டியிருக்கும். வரவேண்டிய பணம் வந்துசேரும். அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து முடிக்கக் கூடிய சூழல் அமையும். முயற்சிகள் அனைத்துமே வெற்றியை கொடுக்கும். வேலைகளில் கூடுதல் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி இராசிக்கு…”பணவரவு குறையும்”…. மனைவியின் அன்பில் மகிழ்வீர்…..!!!

கன்னி ராசி அன்பர்களே…!!! இன்று எவரிடமும் இனிய வார்த்தை பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை உருவாகும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலையம்சம்  உள்ள பொருள்கள் வாங்க கூடும். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள். பணவரவு எதிர்பார்த்ததைவிட குறையும். நிதானத்திற்கு மாறாக எந்த காரியத்தையும் செய்யாதீர்கள். இன்று நினைத்த காரியத்தை செல்வதற்காக நீங்கள் கடுமையாக உழைப்பீர்கள். மற்றவர்களிடம் உங்கள் கருத்துக்களை கூறும் பொழுது, அவர்கள் தவறாக அதை புரிந்து கொள்ள நேரிடலாம். ஆகையால் நீங்கள் கொஞ்சம் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு…”வியாபாரத்தில் லாபம்”…. குடும்பத்தாருடன் வாக்குவாதம்…!!!

சிம்ம ராசி அன்பர்களே…!!! இன்று கவனமுடன் செயல்படவேண்டிய நாளாக இருக்கும். நண்பர்களுடன் வாக்குவாதங்கள் கொஞ்சம் தவிர்ப்பது நல்லத. சுதந்திரமாக எதையும் செய்ய இயலாது. அலுவலகத்தின் மேலதிகாரிகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். இன்று தொழில் வியாபாரத்தில் போட்டிகள் உண்டாகும். எதிர்பார்த்த அளவு வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் என்ற எண்ணம் ஏற்படும். கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. எல்லாவித ஆவணங்களையும் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்லுங்கள். இன்று குடும்பத்தாருடன் சின்ன […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடக இராசிக்கு…”விவேகமாக செயல்படுவது வெற்றி”….. உத்தியோகத்தில் அலைச்சல்….!!!

கடக ராசி அன்பர்களே….!!! இன்று பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். குடும்பத்தில் அமைதி கூடும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண்  அலைச்சலை கொஞ்சம் சந்திக்க நேரிடும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பது நல்லது. விவேகமாக செயல்படுவது வெற்றியை கொடுக்கும். எதிர்பார்த்ததற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம் கொஞ்சம் கவனமாக இருங்கள். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள், பொறுமையாக நிதானமாக செய்யுங்கள். இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…”கணவன் மனைவிக்கிடையே நெருக்கம்”…… கடன்கள் வேண்டாம்….!!!

மிதுன ராசி அன்பர்களே…!! இன்று வருமானம் உங்களுக்கு இருமடங்காக உயரும். அதாவது புதிய ஒப்பந்தங்கள் நல்லபடியாக வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும். நண்பரிடம் இருந்த பகை மாறும். துணிந்து காரியங்களை செய்து மனமகிழ்ச்சி கொள்வீர்கள். காரிய வெற்றியும் பெறுவீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும்.  அடுத்தவருடன் ஆலோசனை சொல்ல போய் பிரச்சனை வரக்கூடும், அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் அன்பாக பேசுங்கள் நன்மையைக் கொடுக்கும். அக்கம்பக்கத்தினர் உடன் வீண் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு…”சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம்”…. சகோதரர்களின் ஒத்துழைப்பு….!!

ரிஷப ராசி அன்பர்களே…!!  இன்று அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் ஏற்படும்.  அருகில் உள்ளவர்களின் ஆதரவு உங்களுக்கு கூடும். குடும்பத்தில் பெரியவர்களால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு மறையும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகிச்செல்லும். இன்று மாணவர்கள், ஆசிரியர்களின் உதவியுடன் பாடங்களில் சந்தேகம் நீங்கி தெளிவாக படிப்பது நல்லது. மனதில் உற்சாகம் பிறக்ககும். சமூகத்தில் உங்களுக்கு அந்தஸ்து அதிகாரம் கிடைக்கும். இன்று வேகத்தை விட்டு விவேகமாக செயல்படுவது வெற்றியைக் கொடுக்கும். கூடுமானவரை காரியங்களை செய்யும் பொழுது நிதானத்துடன் செய்யுங்கள். இன்று […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ இராசிக்கு…”தேவையற்ற செலவு”….. கணவன் மனைவிக்கிடையே அன்பு…!!

மேஷ ராசி அன்பர்களே…!! இன்று செய்தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள். அதுமட்டுமில்லாமல் வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். வெளியூர் பயணம் உங்களுக்கு சிறப்புவாய்ந்த தருணத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். இன்று அடுத்தவர்கள் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவு கொஞ்சம் இருக்கும். எதிலும் கவனம் இருக்கட்டும். கலைத் துறையை சார்ந்தவர்களுக்கு அனைத்து வகையிலுமே நன்மைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். இன்றைய நாள் ஓரளவு […]

Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

வரலாற்றில் இன்று டிசம்பர் 20…!!

இன்றைய தினம் : 2019 டிசம்பர் 20 கிரிகோரியன் ஆண்டு : 354_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 355_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு  : 11 நாட்கள் உள்ளன.   இன்றைய தின நிகழ்வுகள்:  69 – நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெசுப்பாசியான் உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு உரோம் நகரை அடைந்தான். 217 – முதலாம் கலிஸ்டசு 16-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் உடனடியாகவே இப்போலிட்டசு எதிர்-திருத்தந்தையாக அறிவிக்கப்பட்டார். 1192 – மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் இளவரசன் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான். 1334 – பன்னிரண்டாம் பெனடிக்ட்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச படம் பகிர்ந்தவர்கள் லிஸ்ட் தயார்… மாவட்டங்களுக்கு அனுப்பியாச்சு.. ஏடிஜிபி ரவி பேட்டி…!!

தமிழகத்தில் சிறுவர்கள் ஆபாச படங்களைப் பகிர்பவர்களின் பட்டியல் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காவல் துறை கூடுதல் இயக்குனர் ரவி சென்னையில் சிறார்களின் ஆபாசபடங்களை பகிர்ந்த 30 பேர் கொண்ட பட்டியல் காவல் ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். தற்காத்துக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பவுலிங்கை வலுப்படுத்த… 3 வீரர்களை போட்டி போட்டு வாங்கிய CSK..!!

I P L-  2020 ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஹாசில்வுட் உட்பட மூன்று முக்கிய வீரர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் ஏலத்தில்  வாங்கியுள்ளது .  ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2008-ஆம்  ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு இந்தியாவில்   நடத்தப்பட்டு வருகிறது. 13-வது I P L போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே  மாதங்களில் நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின்  ஏலம் கொல்கத்தாவில் மாலை 3.30 மணிக்கு தொடங்கி  நடைபெற்றது . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கேப்டன் ஆன கே.எல். ராகுல்..!! உற்சாகத்தில் ரசிகர்கள்…!!

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரான கே எல் ராகுல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக  நியமிக்கப்பட்டுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டிக்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளிட்ட 8 அணிகள் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்க நெஸ்  வாடியா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். இவர் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ஆவார். அவர் கூறுகையில், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“திறமைக்கு வயது தடையில்லை” 48 வயதை கடந்த வீரரை வாங்கிய கொல்கத்தா அணி…!! 

கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் 48 வயது நிரம்பிய பிரவின் தாம்பேவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.  2008 ஆம் ஆண்டு T 20 கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல். தொடங்கப்பட்டது. வருகின்ற 2020-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 13 ஆவது ஐ.பி.எல். போட்டி நடைப்பெறவுள்ளது. இந்த போட்டிக்கான ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. இந்த ஏலம் தொடங்கிய நேரத்தில் இருந்தே அணிகளின் உரிமையாளர்கள் போட்டிப்போட்டு வீரர்களை தன் வசப்படுத்தி […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்டத்திற்கு மட்டும்தான் பொங்கல் பரிசாம்!

உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு வழங்க கூடாது என தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திண்டுக்கல்லை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவர் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.  பொங்கல் பண்டிகைக்கு பரிசாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1000 ரூபாய் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்தால் […]

Categories
பல்சுவை

சுற்றுலா பயணிகளை கவர்ந்த 20 அடி உயர பிரட்கேக்…!!

கொடைக்கானலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தனியார் நட்சத்திர ஹோட்டலில் தயாரிக்கப்பட்டுள்ள 20 அடி உயரம் கொண்ட ஐரோப்பிய ஜிஞ்சர் பிரட்கேக் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சில நாட்களே உள்ள நிலையில் கொடைக்கானல் வன்னமட்டுவப்பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் ஐரோப்பியர்களால் விரும்பி சுவைக்கப்படும் 20 அடி உயர ஜிஞ்சர் பிரட்கேக் தயாரிக்கப்பட்டுள்ளது.  கொடைக்கானலில் நூற்றாண்டுகளை கடந்து நிற்கும் ஜேர்மன் சர்ச் சிலை முன்னோட்டமாக கொண்டு இந்த கேக் உருவாக்கப்பட்டுள்ளது.   இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

ஓ இப்படியும் பிரியாணி இருக்குதா… சுவையான இடியாப்பம் பிரியாணி செஞ்சி அசத்துங்க…!!

சிக்கன் பிரியாணியில் சிறிது மாற்றம் செய்து அரிசிக்கு பதிலாக இடியாப்பத்தை பயன்படுத்தி செய்யும் ஒரு சுவையான உணவு.மேலும் இதை எப்படி செய்வது என்பதை பார்க்கலாம். இடியாப்பம் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்; சிக்கன் – 300 கிராம்                                                          […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான நாட்டுக் கோழி குழம்பு ரெடி …!!

நாட்டுக் கோழி குழம்பு தேவையான பொருட்கள் : நாட்டுக் கோழி- அரை கிலோ சின்ன வெங்காயம் -15 தக்காளி- 3 தேங்காய் பால்- 1 கப் மஞ்சள் தூள்- 1 டீஸ்பூன் மசாலா தூள் –1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்- 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள் -4 டேபிள் ஸ்பூன் சோம்பு- 1 டீஸ்பூன் பச்சை -மிளகாய் 2 கறிவேப்பிலை -1கொத்து கொத்தமல்லி –தழை ஒரு கைப்பிடி எண்ணெய்தேவைக்கேற்ப உப்பு- தேவைக்கேற்ப செய்முறை : […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் நகை பறிப்பு….”டிக்கெட் பரிசோதகரிடமே கைவரிசை” போலீஸ் விசாரணை!!!

ஓடும் ரயிலில் மகளீர் டிக்கெட் பரிசோதகரிடம்  4 சவரன் தங்க நகையைப் பறித்துச் சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை, கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராகப் பணிபுரிந்து வரும் பெண்மணி ரெஜினி. இவர் தாம்பரம் போகும் ரயிலில் ஏறிய பயணிகளிடம் வழக்கம் போல் பயணச்சீட்டை பரிசோதனை செய்துகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரெஜினியின் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடும் ரயிலில் இருந்து குதித்து தப்பி சென்றுள்ளார். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் டெல்லி….. அவதியில் பொதுமக்கள்……..!!!!

டெல்லியில் போராட்டம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட்டுள்ளது.   புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து நாடு எங்கிலும் பல்வேறு போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கமாநிலத்தின் சில இடங்களில் இதுவரை இச்சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் ஏற்பட்டுள்ளன. மேலும்,வியாழக்கிழமை அன்று  திருத்தப்பட்ட சட்டத்திற்கு எதிராக பீகாரில் இடதுசாரி கட்சிகள் சார்பாக முழு அடைப்பு அறிவித்துள்ளன, மும்பை மற்றும் நாட்டின் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான செட்டிநாடு சிக்கன் குழம்பு ரெடி ..!!

செட்டிநாடு சிக்கன் குழம்பு தேவையான பொருட்கள் : சிக்கன்- அரை கிலோ பெரிய- வெங்காயம் 1 தக்காளி- 3 இஞ்சி பூண்டு -விழுது ஒன்றரை டீஸ்பூன் கொத்தமல்லித்- தழை ஒரு கைப்பிடி கறிவேப்பிலை- 2 கொத்து மிளகாய் தூள்-1 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள்- அரை டீஸ்பூன் உப்பு -தேவைக்கேற்ப எண்ணெய்-தேவைக்கேற்ப வறுத்து அரைக்க: தேங்காய் துருவல் – அரை கப் காய்ந்த மிளகாய் – 6 கசகசா – 2 டீஸ்பூன் தனியா – 5 டேபிள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பியூஸ் சாவ்லாவுக்கு ரூ. 6,75,00,000…!! போட்டி போட்டு வாங்கிய CSK…!!

கொல்கத்தாவில் நடைபெறும் ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பியூஸ் சாவ்லாவை 6.75 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. 2008 ஆம் ஆண்டு T 20 கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல். தொடங்கப்பட்டது. வருகின்ற 2020-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 13 ஆவது ஐ.பி.எல். போட்டி நடைப்பெறவுள்ளது. இந்த போட்டிக்கான ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. இந்த ஏலம் தொடங்கிய நேரத்தில் இருந்தே அணிகளின் உரிமையாளர்கள் போட்டிப்போட்டு வீரர்களை தன் வசப்படுத்தி கொண்டு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

சீனாவிலும் வெளியாகும் “மாமாங்கம்” …!!!படக்குழுவினர் மகிழ்ச்சி …!!!

சீனாவிலும் ” மாமாங்கம்” திரைப்படம் வெளியாக இருப்பதால் படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .  நடிகர் மம்முட்டி நடிப்பில்தற்போது வெளியான படம் மாமாங்கம் .வரலாறு பேசும் படமாக உருவான இப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது .சுமார் 45 நாடுகளில் 2000 தியேட்டர்களில் வெளியான இந்த  படம் வசூல் ரீதியாக முன்னேறிவருகிறது .   இந்நிலையில் மாமாங்கம் படத்திற்கு மற்றொரு சிறப்பு பெருமை ஒன்று சேர்ந்துள்ளது. ஆம்.. தங்கல்,பாகுபலி,2.0 படங்களை தொடர்ந்து […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான இறால் சேப்பங்கிழங்கு புளி குழம்பு ரெடி …!!

  இறால் சேப்பங்கிழங்கு புளி குழம்பு தேவையான பொருட்கள் : இறால்-கால் கிலோ சேப்பங்கிழங்குகால்- கிலோ புளி-1 எலுமிச்சை அளவு பெரிய வெங்காயம்-3 தக்காளி-1 பச்சை மிளகாய்-2 மிளகாய் தூள்-1 டேபிள் ஸ்பு ன் தனியாத் தூள்-1 டேபிள் ஸ்பு ன் மஞ்சள் தூள்-அரை டீஸ்பு ன் உப்பு-தேவைக்கேற்ப சீரக தூள்-அரை டீஸ்பு ன் வெந்தய பொடி-அரை டீஸ்பு ன் கடுகு-அரை டீஸ்பு ன் இஞ்சி பு ண்டு விழுது-1 டீஸ்பு ன் கறிவேப்பிலை-1 கொத்து கொத்தமல்லி […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான சேப்பங்கிழங்கு வறுவல் ரெடி …!!

சேப்பங்கிழங்கு வறுவல் தேவையான பொருட்கள் : சேப்பங்கிழங்குகால் கிலோ மிளகாய்த் தூள்1 டேபிள் ஸ்பு ன் மல்லித் தூள்1 டேபிள் ஸ்பு ன் மஞ்சள் தூள்அரை டீஸ்பு ன் சோம்பு1 டீஸ்பு ன் உப்புதேவைக்கேற்ப எண்ணெய்தேவைக்கேற்ப செய்முறை : சேப்பங்கிழங்கை நன்றாக கழுவி விட்டு இட்லி தட்டில் வைத்து, ஆவியில் வேக வைக்கவும். வெந்ததும் தோலை உரித்து விட்டு வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின சேப்பங்கிழங்கு, […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொடூர கொலை…பட்டப்பகலில் இளம்பெண் கழுத்தறுப்பு …போலீஸ் தீவிர விசாரணை …!!

பட்டப்பகலில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை கோரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரிஷ்வானா பானு. கணவரை பிரிந்த இவர் கடந்த 2ஆண்டுகளாக பெற்றோருடன் வசித்து வருகிறார் .இந்தநிலையில் வீட்டின்  மேல்தளத்தில் உள்ள தனது அறையில் கழுத்தறுபட்ட நிலையில் ரிஷ்வானா பானு சடலம் கிடந்துள்ளது. இதனால் தகவலறிந்து வந்த தல்லாகுளம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தந்தை மாயமாகி உள்ள […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான சேப்பக்கிழங்கு ரோஸ்ட் தயார் ….!!

                                                      சேப்பக்கிழங்கு ரோஸ்ட் தேவையான பொருட்கள் : சேப்பங்கிழங்கு-கால் கிலோ கடலை மாவு-3 டேபிள் ஸ்பு ன் அரிசி மாவு-2 டேபிள் ஸ்பு ன் மிளகாய்த் தூள்-1 டேபிள் ஸ்பு ன் பெருங்காயத் தூள்-அரை சிட்டிகை தயிர்-2 டேபிள் ஸ்பூன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கேஸ் டேங்கர் லாரி …சின்னாபின்னமான சரக்கு வாகனம்…உயிர் தப்பிய அதிசயம் …!!

 கேஸ் டேங்கர் லாரி சாலையோரத்தில்  நின்று கொண்டிருந்த மினி சரக்கு வாகனம் மீது கவிழ்ந்த விபத்தால் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது . செங்கல்பட்டு அருகே சென்னையில் இருந்து மதுராந்தகத்தை நோக்கி கேஸ் நிரப்பிய டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது .பரளுரில் உள்ள சென்னை ,திருச்சி நெடுச்சாலையில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி, தடுப்பு சுவரின் மீது ஏறி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த டாடா எஸ் வாகனத்தின் மீது கவிழ்ந்தது . விபத்தின் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான சேப்பங்கிழங்கு மோர் குழம்பு செய்ய தயாரா …!!

                                                                   சேப்பங்கிழங்கு மோர் குழம்பு தேவையான பொருட்கள் : கெட்டியான புளித்த தயிர்-1 கப் பூசணிக்காய்-1 கப் சேப்பங்கிழங்கு-கால் கிலோ வெண்டைக்காய்-100 கிராம் தேங்காய் துருவல்-கால் கப் சீரகம்-அரை டீஸ்பு ன் […]

Categories
தேசிய செய்திகள்

நண்பரின் மனைவி பலாத்காரம்….. சைக்கோ கில்லர் கைது ….!!

தெலங்கானாவில் நண்பனின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்த சைக்கோ கில்லர் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் ராமையம்பேட்டையை சேர்ந்த அருண் என்பவரே அந்த சைக்கோ கொலையாளி. இவர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் ராமையம்பேட்டையில் கடந்த வாரம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த நிலையில்,அருண் என்னும் சைக்கோ கில்லரை கைது செய்தனர். அருண் சிறையில் அறிமுகமான […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான சேப்பங்கிழங்கு மசாலா குழம்பு ரெடி …..!!

சேப்பங்கிழங்கு மசாலா குழம்பு தேவையான பொருட்கள் : சேப்பங்கிழங்கு-கால் கிலோ பொpய வெங்காயம்-2 தக்காளி-2 பச்சைமிளகாய்-2 இஞ்சி பு ண்டு விழுது- 1 டீஸ்பு ன் மிளகாய்த் தூள்-1 டேபிள் ஸ்பு ன் தனியாத்தூள்-1 டேபிள் ஸ்பு ன் மஞ்சள்தூள்-அரை டீஸ்பு ன் கறிவேப்பிலை-1 கொத்து உப்பு-தேவைக்கேற்ப கொத்தமல்லி தழை-1 கைப்பிடி அளவு சோம்பு-அரை டீஸ்பு ன் எண்ணெய்-தேவைக்கேற்ப   செய்முறை : சேப்பங்கிழங்கை நன்கு கழுவி தோலை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷின் 40வது படத்திற்கு தலைப்பு முடிவாகவில்லை…ரசிகர்கள் ஏமாற்றம்…!!!

தனுஷின் 40வது படத்திற்கு தலைப்பு முடிவாகவில்லை என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷின் 40வது படம் எடுக்கப்பட்டு வருகிறது.இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடித்து வருகிறார் .இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடந்துமுடிந்து தற்போது தமிழ்நாட்டில் நடந்து வருகிறது .படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தின் பெயர் சுருளி ,அதனால் இந்த பெயரே படத்தின் தலைப்பு என வதந்திகள் பரவின.ஆனால் இப்படத்தை இயக்கும் நிறுவனமான ஒய் நாட் ஸ்டூடியோஸ் அந்த தலைப்பை மறுத்துள்ளது . […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் வந்த நபர் …நாங்கள் போலீஸ் …நகை அபேஸ் …!!

ஆட்டோவில் சென்ற நகை  கடை  வியாபாரியை வழிமறித்து, போலீஸ்  என கூறி 650 கிராம் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொள்ளாச்சியை சேர்ந்த சின்னையா  என்பவர்  நகைக்கடை ஒன்றை நடத்திவருகிறார் . இவர் கோவையில் தங்க நகைகளை வாங்கி விட்டு ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தார். அப்போது, பெரியகடை வீதி போலீஸ்  நிலையம் அருகாமையில் சித்தி விநாயகர் கோயில் பக்கத்தில்  நின்று  கொண்டிருந்த 2 நபர்கள் , அந்த  ஆட்டோவை […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான சாம்பல் பூசணி ஜூஸ் ரெடி ….!!

                                                                  சாம்பல் பூசணி ஜூஸ் தேவையான பொருட்கள் : சாம்பல் பூசணித் துருவல்- 1 கப் வெள்ளரிக்காய்த் துருவல்-அரை கப் கேரட் துருவல்-அரை கப் நெல்லித் துருவல்-அரை கப் தயிர் -கால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொல்கத்தாவில் ஐ .பி.எல். ஏலம்… தமிழக வீரருக்கு 4,00,00,000….!!!

ஐ.பி.எல். ஏலத்தில் கொல்கத்தா அணி தமிழக வீரரும், சுழல்பந்து வீச்சாளருமான வருண் சக்ரவர்த்தியை 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.   2008 ஆம் ஆண்டு T 20 கிரிக்கெட் போட்டியான ஐ.பி.எல். தொடங்கப்பட்டது. வருகின்ற 2020-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 13 ஆவது ஐ.பி.எல். போட்டி நடைப்பெறவுள்ளது. இந்த போட்டிக்கான ஐ.பி.எல். வீரர்களுக்கான ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது. இந்த ஏலம் தொடங்கிய நேரத்தில் இருந்தே அணிகளின் உரிமையாளர்கள் போட்டிப்போட்டு வீரர்களை தன் வசப்படுத்தி கொண்டு வருகின்றனர். […]

Categories
ஆன்மிகம் இந்து திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விழாக்கள்

கார்த்திகை தீப திருவிழா- அண்ணாமலையார் கோவிலில் ரூ 2.25 கோடி வசூல்…!!

கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில்  உண்டியல் காணிக்கையாக ரூ 2.25 கோடி வசூலாகி உள்ளது. திருவண்ணாமலையில் அமைந்துள்ள அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப தீருவிழா கடந்த 1ம் தேதி தொடங்கி 10 நாட்களாக நடைபெற்றது. இந்த தீப திருவிழாவில் 25 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், இன்று காலை கோவிலில் அமைந்துள்ள உண்டியல்கள் மற்றும் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள உண்டியல்கள் அனைத்தும் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டது. உண்டியல்கள் கணக்கிடும் பணிகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திருவான்மையூரில் தொடர் கொள்ளை “சிசிடிவியால் சிக்கிய திருடன் “கைது !!!

தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த நபரை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர். சென்னை திருவான்மையூரில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றுவந்தது.இதில் பணம்,நகை மற்றும் செல்போன்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது . இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தரமணி துரைப்பாக்க உதவி ஆணையர் ரவி அவர்களின் தலைமையில் தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர் . சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள 150-க்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.அதில் கிடைத்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹிட்மேன், ராகுல் வெறியாட்டம்… நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ… தொடரை சமன் செய்த இந்தியா..!!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா   107 ரன்கள் வித்தியாசத்தில் அபார  வெற்றி பெற்றது.  இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினம் உள்ள ACA -VDCA  அரங்கத்தில் நேற்று மதியம் 1: 30 மணிக்கு நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற  வெஸ்ட் இண்டீஸ் அணி  முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரரான ஹிட்மேன் ஷர்மா மற்றும் கே.ல்.ராகுல் களம் இறங்கினர். […]

Categories

Tech |