Categories
மதுரை மாவட்ட செய்திகள்

‘தனியார் கடையில் மருந்து வாங்க பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ டீன் கடும் எச்சரிக்கை…!!

மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தனியார் கடையில் மருந்து வாங்க பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் வனிதா எச்சரித்துள்ளார். மதுரை மாவட்ட அரசு மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மருந்துகள் மருத்துவமனையின் மருந்தகங்களில் வழங்க வேண்டும் என்பது அரசின் கடமை. ஆனால் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள்  குறிப்பிட்ட மாத்திரைகளை தனியார் மருந்து கடைகளில் வாங்கிக்கொள்ளும்படி நோயாளிகளிடம் பரிந்துரைப்பதாக புகார்  எழுந்துள்ளது. இந்த  மருத்துவமனையில் ஏற்பட்ட  மின்தடை காரணமாக இறந்த 3 நோயாளிகளில் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் மற்றொரு பத்திரிக்கையாளர் கொலை…..!!!!

ஆப்கானிஸ்தானில் பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.  ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபுலின் கிழக்கு பகுதியில் வசித்து வரும் பெண்மணி  மீனா மங்கள். இவர் பத்திரிகையாளரும், அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கலாசார ஆலோசகராகவும் பணிபுரிகிறார். உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் செய்திவாசிப்பாளராகவும் பணிபுரிந்து வரும் இவர் தற்பொழுது மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வருடத்தில் நடந்த ஆப்கானிஸ்தானின் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக […]

Categories
உலக செய்திகள்

ஈரானில் நிலநடுக்கம்….. தெருக்களில் தஞ்சம் புகுந்த மக்கள்….!!!

ஈரானில் கெர்மான்ஷா மாகாணத்தில் இன்று மதியம் சுமார் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.   ஈரானில் உள்ள கெர்மான்ஷா மாகாணம் மலைகள்  சூழ்ந்த பகுதியாகும். இங்கு கடந்த 2016_ம் ஆண்டு நவம்பர் மாதம் சுமார் 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இந்த பகுதியில் இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை  கண்டு பயத்தில் மக்கள் அலறியடித்து தெருக்களுக்கு ஓடி வந்தனர்.

Categories
லைப் ஸ்டைல்

உடலுறவில் பெண்களை எவ்வாறு ஆண்கள் கடுப்பேற்றுகிறார்கள் தெரியுமா….??

முன்விளையாட்டுக்கு பெண்களை அவசரப்படுத்துவது அல்லது நேரடியாக செக்ஸில் ஈடுபடுவது பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காத விசியம் ஆகும். முதலில் முன்விளையாட்டுகளுக்கு  பெண்களின் உணர்ச்சியை தூண்ட வேண்டும், பின்பு செக்ஸூக்கு பெண் உறுப்பை தயார் செய்ய வேண்டும். பெண்கள் உடலுறவில் உச்சத்தை அடையும் போது அவர்களுக்கு பிடித்தமான விஷயங்களை  செய்வது அவர்களை முழுமையாக திருப்தியடையச் செய்யும். அழுக்கான கைகள், வெட்டப்படாத நகங்கள், உடன் துர்நாற்றம் உள்ளிட்டவை செக்ஸின் போது பெண்கலுக்கு வெறுப்பை உண்டாக்கும். அதனால் உடலுறவில் ஈடுபடும் முன் அடிப்படை சுகாதாரத்துடன் இருப்பது அவசியம் ஆகும். உடலுறவில் ஈடுபடும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் அருகே  ஏடிஎம்யை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது …!!!

பெண்ணாடம் அருகே  ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் மையூரில்  உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்-ல்  ராயதுரை என்பவர் பணம் எடுக்க சென்றார். அந்த நேரம் அங்கு வந்த  மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொண்டிருந்ததை பார்த்து அவரை தடுக்க முயன்றுள்ளார் .அப்போது  அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பியை அங்கேயே வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏறி விரைந்து தப்பிச் சென்றார். அந்த மர்ம […]

Categories
தேசிய செய்திகள் வானிலை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை…. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

வெப்பசலனம் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  சமீபத்தில் தான் தமிழகத்தை கஜா புயல் நிலைகுலையச்செய்தது. ஆனால், தற்போது வந்த பானி புயலால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில்,  வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் சுமார் இரண்டு நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கோவை, ஈரோடு, திண்டுக்கல், தேனி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற உள்மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையில் மேக மூட்டமாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் அருகே போலி மதுபான விநியோகம் தொடர்பாக 3 பேர் கைது…!!

நாட்றாம்பள்ளி அருகில்  போலி மதுபானம் விநியோகம் தொடர்பாக  3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம்  நடுபட்டு காக்கங்கரை  பகுதிகளில், காரில் போலி மதுபானங்களை  விநியோகிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அந்த பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீசாரின் கண்காணிப்பில் ஏரியூர் கிராமத்தில் சிலர்  சிறிய அறை அமைத்து, போலி மதுபானங்கள் தயாரித்து விநியோகம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சோதனை செய்ததில் மதுபானங்களின்  மூலப்பொருட்கள், ஸ்டிக்கர்கள்,1000 மதுபாட்டில்களைபோலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டு  பறிமுதல் செயப்பட்டது . விசாரணையில்  அவர்கள் சட்டவிரோதமாக கடந்த 6 […]

Categories
மாநில செய்திகள்

ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி 1 கோடி பணம், சொத்து ஆவணம் பறிப்பு….!!

சென்னை துரைப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ஒரு கோடி பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது தாகிர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். முகமது தாகிரிடம் துரைப்பாக்கத்தை சேர்ந்த சிலர் புறம்போக்கு நிலம் தொடர்பாக கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் முகமது தாகிரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கார் மரத்தில் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலி…மேலும் 7 பேர் காயம்…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கார் மரத்தில் மோதிய விபத்தில்  பெண் ஒருவர் பலியானதோடு மேலும் 7 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இறப்பு வீட்டிற்கு துக்கம் விசாரிப்பதற்காக செல்வதற்காக திருப்பூரிலிருந்து சிவகிரிக்கு காரில் 8 பேர் சென்றுகொண்டிருந்தனர் .அப்போது  கார் கிருஷ்ணன் கோவில் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.  இதில் காரின் முன்பக்கம் பலத்த சேதமடைந்த நிலையில்  பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும்  விபத்தில் பலத்த காயமடைந்த 7 பேரை அக்கம் பக்கத்தினர் […]

Categories
மாநில செய்திகள்

1முதல் 5 வரை படிக்கும் குழந்தைகளுக்கு சத்துணவில் தினமும் பால் வழங்க தமிழக அரசு யோசனை…..!!

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் தினமும் பால் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜரால் பள்ளிக்கூடங்களில் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. இது காலப்போக்கில் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. தற்போது பள்ளி சத்துணவில் மாணவ-மாணவிகளுக்கு 13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. இதில் 1 முட்டையும் வழங்கப்படுகிறது. தற்போது 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில் ஒரு […]

Categories
ஆட்டோ மொபைல்

புதிய மாறுபட்ட நிறம்…. புதிய தோற்றம்…. களமிறங்கும் TVS மோட்டார் சைக்கிள்….!!

TVS மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது ரேடியான் 110CC மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது.  TVS மோட்டார் நிறுவனம் தனது ரேடியான் 110CC மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில் தற்போது TVS ரேடியான் 110 மோட்டார்சைக்கிள் டைட்டானியம் கிரே மற்றும் வொல்கானோ ரெட் என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது. TVS ரேடியான் 110CC புதிய நிற மாடல்களின் விலை ரூ.50,070 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.   மேலும் இது மற்ற நிற வேரியண்ட்களை விட ரூ.1,200 அதிகம் […]

Categories
டெக்னாலஜி

ஆப்பிள் நிறுவனத்தை சீண்டும் சுந்தர் பிச்சை….. தனியுரிமை விளக்கம்…!!

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் தனியுரிமை பற்றி தகவல் தெரிவித்துள்ளார்.  தனியுரிமை என்பது விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கக் கூடியவர்களுக்கு மட்டுமே கிடைப்பது போன்று இருக்கக் கூடாது என்று கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இவர் பேசியது, விலை உயர்ந்த சேவைகளை வழங்கும் ஆப்பிள் நிறுவனத்தை சீண்டக்கூடிய வகையில் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் கிடைக்கும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இது பற்றி அறிக்கை ஒன்று எழுதி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பறிமுதல் செய்ப்பட்ட மதுபானங்களை விற்ற காவல் ஆய்வாளர் பணியிடைமாற்றம்…!!!

வழக்குகளில் பறிமுதலான மது பானங்களை வெளியில் விற்ற காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு பணியிடைமாற்றம்  செய்ப்பட்டுள்ளார்.  விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மதுவிலக்கு தனிப்படை பிரிவில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கணபதி. இவர்கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு  பறிமுதல் செய்ப்பட்ட  மதுபானங்களை காவல் நிலையத்தில் இருந்து எடுத்து வெளியில் விற்று வந்ததாக அவர் மீது புகார் எழுந்ததையடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.  இந்நிலையில் பணியிடைமாற்றம் செய்ப்பட்ட பின்னர் அவர்  கோட்டகுப்பம் மதுவிலக்கு காவல்நிலையத்திற்கு சென்று சக காவலர்களிடம்  தகராறில் ஈடுபட்டதாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

நாகை மாவட்டம் எலிகளால் நாசமாகும் பருத்தி சாகுபடி…விவசாயிகள் வேதனை…!!

இருமருகல் அருகில் உள்ள கிராமங்களில் எலிகளின் தொல்லையால்  600 ஏக்கர் அளவில் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. நாகை கடைமடை சுற்றுவட்டார பகுதியில் பெய்த கன மழையால்  குறுவை நெல் சாகுபடி கடந்த ஏழு ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடியில் மகசூல் கிடைக்காததால் விவசாயிகள் குறைந்த நீரில் பயிரிடக்கூடிய பருத்தி சாகுபாட்டில்  ஈடுபட்டனர் .ஆனால் எலிகளால் சுமார் 600 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட பருத்தி அனைத்தும் நாசமாகி உள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் நெல் சாகுபடியை அடுத்து பயிரிடப்படும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சின்ன பையன் நான்…. இதை நான் எதிர் பார்க்கவே இல்லை…!! நடிகர் தனுஷ்…!!

சினிமா உலகில் கால்பதித்து 17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷ் அறிமுகப்படமான ‘துள்ளுவதோ இளமை’ இந்த படம் திரைப்படம் 2002ம் ஆண்டு மே 17ம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி 17 வருடங்கள் ஆகின்றது. தனுஷின் சகோதரர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் தனுஷ் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை இந்த படம் ஏற்படுத்தியுள்ளது. தனுஷின்  திரையுல வாழ்க்கை 17 ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்…பறக்கும் படை அதிரடி..!!

மதுரை பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல்  எடுத்துச் செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் பகுதியில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.  திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக திருப்பரங்குன்றம் தொகுதிக்கு  உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தெப்பகுளம் அருகில்  தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, திருச்சி கனரா வங்கியிலிருந்து […]

Categories
லைப் ஸ்டைல்

விந்து வெளியேறிய பிறகு உடல் சோர்வு அடைவது ஏன் தெரியுமா…??

விந்து என்பது மிகச் சிறிய அளவில் (150 மி.கிராம் அளவு) சர்க்கரை சத்துள்ள, மூக்குச் சளி போன்ற ஒரு திரவம் மட்டுமே. அது ஆண் உயிரணுக்களுக்குப் போதுமான சத்தே தவிர இதனால் உடல் சோர்வு உண்டாகும் என்று நினைப்பது தவறு. சுய இன்பத்திற்குப் பிறகு உங்கள் உடல் களைப்புக்கு காரணம் என்னவென்றால், பாலுணர்வு என்பது குறிமலரின் வாயிலாக உடலில் ஏற்படும் ஒருவித இன்பப்பரப்புதான். அப்போது இரத்தஓட்டம் அதிகரிப்பதோடு, உடல் தசைகளும், நரம்புகளும் முறுக்கேறுகின்றன. விந்து வெளியேறும் பொழுது ஆண்குறி முனையில் அழுத்தம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

லாரியில் மணல் கடத்திய இருவர் கைது…!!

ஆந்திரா வழியாக சென்னைக்கு லாரி மூலம் மணல் கடத்திய ட்ரைவர், கிளீனரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை திருவள்ளுவர் மாவட்டம் ஆரணி காவல்உதவி ஆய்வாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் போலீசார் சின்னம்பேடு அகரம் கூட்டுச் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுவாயல் வழியாக  சின்னம்பேடு நோக்கி ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று அசுர வேகத்தில் வாகன சோதனை சாவடியில் நிற்காமல்  சென்றது. உடனே அந்த லாரியை போலீசார் விரட்டிச் சென்று சோதனை […]

Categories
லைப் ஸ்டைல்

தாம்பத்திய உறவில் ராஜாவாக இருக்க…. இதை சாப்பிடுங்கள் ஆண்கள்…..!!

தாம்பத்திய வாழ்க்கைக்கு பலம் கூட்டுவதற்கு அதிகப்படியான மருந்துகள் மெடிக்கல் ஷாப்பில் விற்கப்படுகின்றன. ஆனால் இந்த மருந்துகள் எல்லாம் கெமிக்கல் பொருட்களால் தயாரிக்கப்படுகிறது. இதனால் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் அபாயமுள்ளது. ஆனால் நாம் அன்றாட வாழ்க்கையில் தினமும் உணவில் பயன்படுத்தி வந்த ஒரு பொருள் பக்க விளைவு இல்லாமல் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும் என்றால் நம்ப முடிகிறதா, ஆம் நம்பத்தான் செய்ய வேண்டும். அதுதான் வெந்தயம். இதனால் தான் நமது முன்னோர்கள் உணவுப் பொருட்களில் வெந்தயத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். வெந்தயத்தை […]

Categories
டெக்னாலஜி

இந்த போன்களில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாதாம்….!!

இந்த போன்களில் தனது வாட்ஸ்அப் சேவையை நிறுத்த போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.  பிளாக்பெரி இயங்குதளத்தில் வாட்ஸ்அப் செயலியை 2017 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டது. முதலில் உள்ள ஆண்ட்ராய்டு 2.3.3 மற்றும் விண்டோஸ் 7 போன் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவையை 2016 ஆம் ஆண்டே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து விண்டோஸ் போன் இயங்குதளங்களில் வாட்ஸ்அப் சேவையை இந்த ஆண்டு டிசம்பர் 31, 2019-தில் இருந்து நிறுத்தப்படும் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகு வாட்ஸ்அப் சேவையை விண்டோஸ் 10 இயக்குதளங்களில் பயன்படுத்த […]

Categories
உலக செய்திகள்

ஜப்பான் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…. மக்கள் பீதி….!!

ஜப்பானின் கியூஷு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியூஷ் தீவில் திடிரென்று சக்தி வாந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் மியாசகி பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் மியாசகி நகரில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் தனது வீடுகளில் இருந்து வெளியேறினார். உள்ளூர் நேரப்படி காலை 8.48 மணியளவில் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கமல்ஹாசனின் சூலூர் பிரச்சாரத்திற்கு தடை கோரி மனு…!!!

கமலஹாசன் பிரச்சாரம் செய்ய கூடாதென்று இறந்துபோன மக்கள் நீதி மையம் உறுப்பினர் பாலமுருகனின் மனைவி மனு அளித்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்ய கூடாதென்று இறந்துபோன மக்கள் நீதி மையம் உறுப்பினர் பாலமுருகனின்  மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து பின் செய்தியாளர்களை சந்திதித்த அவர் கூறியதாவது,    கடந்த மாதம் 18ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்துக்கு சென்ற தனது கணவர் பின்பு சடலமாக வீட்டிற்கு திரும்பினார் என்றும் தனது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே பேருந்து தீ விபத்து…உயிர்தப்பிய பயணிகள்…!!

ஓசூர்அருகே தனியார் பேருந்து தீப்பிடித்த  விபத்தில் 20 பயணிகள் அதிஷ்டவசமாக  உயிர்தப்பியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 20 பயணிகளுடன் பெங்களூரில் இருந்து திருப்பூர்க்கு பயணித்த  தனியார் பேருந்து ஒசூர்_ கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக  தீப்பிடித்து எரிய தொடங்கியது. பேருந்து ஓட்டுனர் உடனடியாக வாகனத்தை நிறுத்தியதால்  அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.பின்னர் தீயணைப்பு துறையினர் விரைந்து பேருந்தில் பற்றிய தீயை அணைத்து பேருந்தை அகற்றினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சியில் ஏ.டி.எம் வாகனத்தில் திடீர் தீவிபத்து…!!

திருச்சியில் பணம் நிரப்பும் ஏ.டி.எம் இயந்திர வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.  திருச்சியில் உள்ள  வங்கி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவதற்காக 1 கோடி ரூபாயை  சிஸ்கோ என்ற தனியார்  நிறுவனத்தின் வாகனத்தில் எற்றி  ஏ.டி.எம். மையங்களில் அனுப்பப்பட்டது.  இந்நிலையில் சேதுராமன் காலனி என்ற இடத்தை கடந்து செல்லும்போது  பணம் நிரப்பும் ஏ.டி.எம். எந்திர வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் வருவதற்கு முன்பே  அப்பகுதி மக்கள்  தீயை அணைத்ததுடன், பணப்பெட்டியினை வண்டியில் இருந்து தனியாக அகற்றினர்.திடீரென […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை”அ.தி.மு.க பிரமுகருக்கு வலைவீச்சு…!!

கிளியல் பகுதியை சேர்ந்த 18 வயது பெண்ணை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கிய அ.தி.மு.க பிரமுகரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.   கன்னியாகுமரி களியல் பகுதியில் வசித்து வரும்  18 வயது பெண் அங்கு உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார் .அக்கடைக்கு தொடர்ந்து வந்த சுனில் குமார் என்ற நபர் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி  தனியாக அழைத்துச் சென்று தனது நண்பரான அ.தி.மு.க பிரமுகர் சுஜின் ராஜையும் வரவழைத்து  இருவரும் அந்த பெண்ணை பாலியல் […]

Categories
உலக செய்திகள்

உடல் வலிமைக்காக அணிலை உண்ட தம்பதியினர்….. இறுதியில் மரணம்…!!!

மங்கோலியா அருகே உடல் வலிமைக்காக அணிலை உண்ட தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நம்மில் பலபேர் பல்வேறு முயற்சிகளை செய்து  வருகின்றோம். நம்முடன் நெருங்கியவர்கள், நண்பர்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க ஏதாவது டிப்ஸ் கொடுத்தால் அதன் படி  செய்வோம். அதே போல் மங்கோலியா நாட்டில் வசிக்கும் மக்களில் சிலர் உடல் வலிமையடைய  அணிலை சமைக்காமல் பச்சையாக சாப்பிட வேண்டும் என்ற நம்பிக்கையுடையவர்கள். மங்கோலியா மற்றும்  ரஷ்யாவின் எல்லை பகுதியில் சகானூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் தம்பதியினர் […]

Categories
தேசிய செய்திகள்

வாக்களிப்பதை உணர்த்தும் நடன நிகழ்ச்சி….5000 பெண்கள் பங்கேற்பு….!!!

ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்தும் வகையில் இமாச்சலபிரதேசத்தில் நடன நிகழ்ச்சி ஒன்று நடந்தது.   ஒவ்வொரு இந்தியனும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்பது ஜனநாயக கடமையாகும். இதை அனைவருக்கும் உணர்துவதர்கு இமாச்சல பிரதேசம் குலு என்ற இடத்தில் ஒரு உணர்ச்சி பூர்வமான நடன நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 5000 பெண்கள் கலந்து கொண்டு பாரம்பரிய உடையில் நடமாடினர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை முக்கிய இடங்களில் இன்று மின்தடை…!!

சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை முக்கிய மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.   மாதம் ஒருமுறை மின்சார இணைப்பின் பராமரிப்பில் மின் சேவை நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். மேலும் அதன் பராமரிப்பு பணிகளை சீர்படுத்திவிட்டு மீண்டும் அதின் சேவையை தொடர்வார்கள். அந்த வகையில் இன்று சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையில் உள்ளசோத்துபெரும்பெடு,சிறுனி,சோழவரம் பகுதி, காரனோடை ஆத்தூர் & தேவநேரியம் & ஆங்காடு, ஓரக்காடு & புதூர், கிண்டி : தொழிற்பேட்டை […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

இன்று காலை 9:30 மணியளவில் +1 எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியீடு…!!!

இன்று காலை சரியாக 9:30 மணி அளவில் 11_ ஆம் வகுப்பு எஸ்எஸ்எல்சி  தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது. கடந்த மாதம் பள்ளி கல்வித்துறை 10_ ஆம் வகுப்பு மற்றும்  +2 எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை  வெளியிட்ட  நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு +1 முடிவுகள்  வெளியிடப்படவுள்ளதாக ஏற்கனவே  அறிவித்ததையடுத்து அதற்கான பணி நடைபெற்று வருகிறது.மாணவர்கள் தங்கள் பதிவு எண் மற்றும் பிறப்பு தேதியை பயன்படுத்தி  tnresults.nic.in , dge.tn.nic.in என்னும் இணையதளம் மூலம் தங்கள் முடிவுகளை பதிவிறக்கம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வெயிலை தணிக்க நாகை மாவட்டத்தில் தர்பூசணி அறுவடை…!!

வேதாரண்யம் பகுதியில் தர்பூசணி அறுவடை அமோகமாக நடைபெற்று வருகிறது. வேதாரண்யம் அருகே செம்போடை ,புஷ்பவனம், தேத்தாகுளம் ,கத்தரிப்புலம், பெரியகுத்தகை ஆகிய பகுதியில் குறைந்த தண்ணீர் மூலம்  அதிக விளைச்சல் பெறக்கூடிய தர்பூசணிகள் ஏராளமாக  பயிரிடப்பட்டுள்ளது. இப்போது கோடைகாலம் என்பதால் தர்பூசணிக்கு எதிர்பார்ப்பு  இருப்பதால் விவசாயிகள் அனைவரும் தர்பூசணி அறுவடையில் ஈஈடுபட்டுள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் தர்பூசணி கிலோ ரூபாய் 15க்கு விற்கப்பட்டு வருகிறது. இங்கு விளையும் தர்பூசணிகலில் அதிக  நீர்ச்சத்து இருப்பதால் மக்கள் வெயிலின் தாக்கத்தை தணிக்க இந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் காய்கறிகளின் விலை இருமடங்காக உயர்ந்தது !!

தூத்துக்குடியில் காய்கறிகளின் இருமடங்காக அதிகரித்துள்ளது. தூத்துக்குடி சந்தைக்கு ,  திண்டுக்கல், நெல்லை, ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் விளையும்  காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன .ஆனால் கடும் வறட்சியின்  காரணமாக உற்பத்தி குறைந்ததோடு, காய்கறி வரத்தும்  குறைந்துள்ளது. இதன் விளைவாக தக்காளி, கேரட்,அவரை ,பீன்ஸ்  உள்ளிட்ட காய்கறிகளின் விலை இரு மடங்கு உயர்ந்துள்ளது .இதனால் பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வீட்டுக் கிணற்றில்  தூர்வாரும்போது விஷவாயு தாக்கி  கூலித் தொழிலாளி பலி !!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வீட்டுக் கிணற்றில்  கூலித் தொழிலாளி தூர்வார இறங்கியபோது விஷவாயு தாக்கி  உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . பேர்ணாம்பட்டு அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்பவரது வீட்டில் 30 அடி ஆழமுள்ள தூர்ந்து போன  கிணற்றை தூர்வாருவதற்கு, வடிவேல் என்பவர் தனது உதவியாளர்கள்  இருவருடன் வந்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும் எவ்வித பாதுகாப்புமின்றி ,இடுப்பில் கயிற்றைக் கட்டிக்கொண்டு வடிவேலுவும் அவரது உதவியாளர் பரத்தும்  கிணற்றில் இறங்கியதாக கூறப்படுகிறது . கிணற்றில் பாதி அளவு இறங்கும் […]

Categories
சினிமா தேசிய செய்திகள்

நடிகர் அக்க்ஷய் குமார் ஒடிசாவுக்கு நன்கொடை!!!

ஒடிசாவுக்கு  புயல் பாதிப்பு நிவாரண நிதியாக  நடிகர் அக்க்ஷய் குமார் ஒரு கோடி ரூபாயை வழங்கினார். ஒடிசா மற்றும் மேற்கு வங்கம்  பானி புயலால் ,  பலத்த சேதம் அடைந்த நிலையில் புயல் பாதித்த மக்களுக்காக அரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பல உதவிகளை செய்துவருகின்றனர். இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்க்ஷய் குமார் ,முதலமைச்சர் நிவாரண நிதிக்கு  1 கோடி ரூபாயை  நன்கொடையாக கொடுத்துள்ளார் .  

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

7 வயது சிறுமி சிறுமியிடம் அத்துமீறிய 55 வயது கொடூரன் !!

ராமநாதபுரம், அருகே 7 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டார் . ராமநாதபுரம் பெரியபட்டினம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி, பள்ளிக்கு செல்லும் வழியில் செய்யது அப்துல் காதர்  வீட்டு வளாகத்தில் பழம் பறிக்க சென்றுள்ளார். அப்போது 55 வயதான  செய்யது, என்பவர் ,மிட்டாய் வாங்க  பணம் தருவதாக கூறி சிறுமியை வீட்டிற்குள் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.   இதைப்பற்றி சிறுமி, தனது பாட்டியிடம் கூறியுள்ள நிலையில் , கீழக்கரை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மினி பஸ் கவிழ்ந்ததில் 20 பேருக்கு காயம் …

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே, மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர் . ஆலங்குளதிற்கு  சென்று கொண்டிருந்த மினி பஸ் , துத்திக்குளம்  சாலை அருகே வளைவில் அதிவேகத்தில் திரும்பியபோது,  கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில்   ஓட்டுனர் அருள்ராஜ், நடத்துநர் பால்ராஜ் மற்றும் 23 பயணிகள் காயமடைந்தனர். ஆலங்குளம் அரசு மருத்துவமனை மற்றும் பாளையங்கோட்டை மாவட்ட மருத்துவமனைகளில், அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் .இதுக்குறித்து  ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர் .

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை !!!

உச்சநீதிமன்ற வளாகத்தை சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது . உச்சநீதிமன்றத்தில்   பணிபுரிந்த முன்னாள் பெண் ஊழியர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது  கடந்த மாதம் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். இது  குறித்து விசாரத்த நீதிபதிகள் பாப்தே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா போன்ற மூவர் அடங்கிய விசாரணை குழு, தலைமை நீதிபதிக்கு எதிரான புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி நிராகரித்தது.   இதனால் ,வழக்கறிஞர்கள் மற்றும் பெண் உரிமை ஆர்வலர்களும் இணைந்து போராட்டம் நடத்துவதால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு உதவி வழங்குவதில் தமிழகம் முதலிடம் … எடப்பாடி பழனிசாமி !!!

விவசாயிகளுக்கு காப்பீடு திட்டத்தின் மூலம் உதவி வழங்குவதில் தமிழகம் முதலிடம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து பெருங்குடி பகுதியில் வாக்கு சேகரிக்கும் போது,  விவசாயிகளுக்கு உதவி வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று கூறினார் . மேலும் விவசாயிகளின் நலம்காத்து ,குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க நீர் நிலைகள் மேம்பாடு திட்டம் ஆகியவை  அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஏய்ம்ஸ் மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதியில் அமைக்கப்படும் என்றும்  அறிவித்தார்.  

Categories
உலக செய்திகள் வானிலை

நேற்றிரவு பபுவா நியூ கினியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் …பொதுமக்கள் பீதி !!!

நேற்றிரவு பபுவா நியூ கினியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது . பசிபிக் கடலின் தென்மேற்கு பகுதியில் உள்ள பபுவா நியூ கினியா நாட்டில் பலோலோ நகர் அருகே  பெரியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ள நிலையில் , கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டது. வீடுகளை விட்டு வெளியேறிய  மக்கள் திறந்தவெளியில் தஞ்சம் புகுந்தனர்.  அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் பபுவா நியூ கினியா  நாடும் ஒன்று ஆகும் .அதிஷ்டவசமாக சேதமேதும் ஏற்படவில்லை .

Categories
தேசிய செய்திகள்

இந்தியா- பிரான்ஸ் கடற்படையினரின் கூட்டுப் போர் பயிற்சி இன்று தொடங்குகிறது …

இன்று  இந்தியா மற்றும் பிரான்ஸ் கடற்படையினரின் கூட்டுப் போர் பயிற்சி தொடங்கவுள்ளது .  அணு ஆயுதம் தாங்கி நீர் மூழ்கிக் கப்பல்களும், ரபேல் விமானங்கள் என பல்வேறு ஜெட் போர் விமானங்களும், போர்க்கப்பல்களும் இப்பயிற்சியில் இடம் பெறவுள்ளன. இந்தியப் போர்க்கப்பலான விக்ரமாதித்யாவும் , இந்தப் பயிற்சியில் பங்கேற்கிறது.  பிரான்ஸ் போர்க்கப்பலான சார்லஸ் டி காலும் பங்கேற்கிறது . முதல் கட்டமாக கோவா கடற்பகுதியிலும், இரண்டாம் கட்டமாக ஜிபோட்டி கடல்பகுதியிலும் வருகிற 10ந்தேதி வரை பயிற்சிகள் நடைபெறும் என கடற்படை அதிகாரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

செல்வம் வளம் கொழிக்கும் அட்சய திருதியை திருநாள் இன்று!!!

அட்சய திருதியை முன்னிட்டு தமிழகத்தில் , நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்டிவருகின்றனர் .  செல்வம் வளம் கொழிக்கும் திருநாளாக கருதப்படும் அட்சய திருதியை திருநாள் இன்று .  தங்கள் பழைய நகைகளை கடைகளில் கொடுத்து மாற்றவும், புதியநகைகள் வாங்கவும் மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்  . கூட்ட நெரிசலைத் தவிர்க்க நகைக்கடைகளில் முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று சுமார் 30 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ,இன்று கூடுதலான நேரம் கடைகள் திறந்திருக்கும் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

புதிய படமான  Spider-Man, Far From Home   டிரெய்லர் வெளியீடு !!

புதிய படமான  Spider-Man, Far From Home   டிரெய்லர் வெளியானது. மார்வெல் காமிக்ஸ் சூப்பர் ஹீரோவான ஸ்பைடர் மேனின் புதியபடமான Spider-Man, Far From Home வெளியாகியுள்ளது . ஸ்பைடர் மேனாக நடித்துள்ள டாம் ஹாலந்து லண்டன் வெனிஸ் நகரங்களில் தமது புதிய படத்தின் டிரெய்லர் பற்றிய  ரசிகர்களின் கருத்தை அறிய ஆர்வமாக உள்ளார்  . இந்த  படம் ஜூலை 2ம் தேதிக்கு வெளியாகும் எனத்தெரிகிறது .

Categories
அரசியல் மாநில செய்திகள்

25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதி மு.க. ஸ்டாலின்-துரைமுருகன் புகழாரம்!!!

மு.க. ஸ்டாலின் , இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என துரைமுருகன் புகழாரம் சூட்டியுள்ளார் . தூத்துக்குடி ஸ்பிக் நகரில் , திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன் , ”ஸ்டாலினுக்கு இணையான அரசியல் தலைவர் தமிழகத்தில் யாரும் இல்லை” என புகழ்ந்தார் .   அதோடு,  மு.க. ஸ்டாலின் இன்னும் 25 ஆண்டுகளில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாகக் கூட வரலாம். அதற்க்கான வாய்ப்பு அதிகமுள்ளது  எனவும்  கூறினார்.

Categories
கல்வி தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் , 99 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் இரண்டாம் இடம் …

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் , 99 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது . சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று பிற்பகல் இணையதளத்தில் வெளியானது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ-மாணவிகளில் மொத்தம் 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் . திருவனந்தபுரம் மண்டலம்  99.85 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தேர்ச்சி விகிதத்தில்முதலிடம் பிடித்துள்ளது.  99 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் இரண்டாம் இடத்தையும், 95.89 சதவீத […]

Categories
தேசிய செய்திகள்

நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது-விசாரணை குழு!!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று  நிராகரிக்கப்பட்டது . உச்சநீதிமன்றத்தில்   பணிபுரிந்த முன்னாள் பெண் ஊழியர், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது  கடந்த மாதம் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். இது  குறித்து விசாரத்த நீதிபதிகள் பாப்தே, இந்திரா பானர்ஜி, இந்து மல்கோத்ரா போன்ற மூவர் அடங்கிய விசாரணை குழு, தலைமை நீதிபதிக்கு எதிரான புகார் அடிப்படை ஆதாரமற்றது என்று கூறி நிராகரித்தது. மேலும் விசாரணைக்குழுவின் அறிக்கையை வெளிப்படையாக வெளியிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“டம்பளர் திருடிய காவலர் பணியிடைமாற்றம்” காவல் கண்காணிப்பாளர் அதிரடி…!!

அறந்தாங்கி அருகே தண்ணீர் டம்ளரை திருடியதற்காக காவலர்  பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி  அடுத்துள்ள மேற்பனைக்காடுபேட்ட பகுதியில்  தண்ணீர் பந்தல் வைக்கப்பட்டுள்ளது. இப்பந்தலில் வைக்கப்பட்ட  தண்ணீர் டம்ளர்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக காணாமல் போகி உள்ளது. இதைத்தொடர்ந்து  அப்பகுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது.இந்த நிலையில் கடந்த சனி கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் இரண்டு காவலர்கள்  தண்ணீர் டம்ளரை திருடிச் செல்லும் காட்சி அந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.  இதையடுத்து தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வறட்சியின் காரணமாக விலை உயர்ந்த காய்கறிகள்….மக்கள் அவதி !!!

தேனி சந்தையில் ,வறட்சியின் காரணமாக,காய்கறிகள் விலை பெரிதும்  உயர்ந்துள்ளது. வறட்சியின் காரணமாக கடந்த ஒரு மாத காலமாக காய்கறி சாகுபடி பாதிக்கப்பட்டு உள்ளதால்  காய்கறி விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. பெரும்பாலான காய்கறிகள் விலை பெரிதும்  உயர்ந்துள்ளது.தேனி உழவர் சந்தையில் , நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.36-க்கும்  அவரைக்காய் ரூ.74-க்கும்  விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெண்டைக்காய் ரூ.24 , பட்டர் பீன்ஸ் ரூ.135 , கத்தரிக்காய் ரூ.22,   புடலங்காய் ரூ.30 ,  பாகற்காய் ரூ.38 , […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளத்தில் வெள்ளரி சாகுபடி ….

தூத்துக்குடி , ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூரில் குளத்தில் விளையும்   வெள்ளரிகள்  நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளது செய்துங்கநல்லூர்.விவசாயிகள், இங்குள்ள குளத்தில் நீர் வற்றும்போது  வெள்ளரி சாகுபடி செய்கின்றனர் . இந்த வெள்ளரிகள் தூத்துக்குடி ,நெல்லை, குமரி ஆகிய  மாவட்டங்களுக்கு  அனுப்பிவைக்கப்படுகிறது .  

Categories
மாநில செய்திகள்

மத்திய சிறைகளில் போதை மறுவாழ்வு மையம் -சிறைத்துறை முடிவு !

தமிழ்நாட்டிலுள்ள  மத்திய சிறைகளில் போதை மறுவாழ்வு மையங்களை அமைக்க சிறைத்துறையினர் திட்டவகுத்துள்ளனர். தமிழ் நாட்டில் மொத்தம் 14 மத்திய சிறைகள் உள்ள நிலையில்   சிறைவாசிகளில் பலர்  போதை பழக்கதிற்கு  அடிமையாக உள்ளனர். சிறை வளாகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவது சவாலாகவே இருந்துவரும் நிலையில்  தேசிய சமூக பாதுகாப்பு நலத்துறையுடன் சிறைத்துறையினர் இணைந்து, சிறைகளில் போதை மறுவாழ்வு மையம் அமைக்க  திட்டமிட்டுள்ளதாக, சிறைத்துறை கூறியுள்ளது .

Categories
கல்வி தேசிய செய்திகள்

சிபிஎஸ்இ  10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று மாலை 3 மணிக்கு வெளியீடு!

சிபிஎஸ்இ  10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படவுள்ளது . நாடு முழுவதும் சிபிஸ்இ  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 2 முதல்  மார்ச்  29 வரை நடைபெற்றது.அதில் 29 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.இந்நிலையில் தேர்வுமுடிவுகள் இன்று   மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது . தேர்வு முடிவுகளை www.cbseresults.nic.in மற்றும் cbse.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

Categories
தேசிய செய்திகள் வானிலை

ஃபானிக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்வு !

ஒடிசாவில் ஃபானி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ,பானி புயலால் பாதிக்கப்பட்ட பூரி நகரின் சாலைகளை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஒடிசா அரசு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்  ஒரு லட்சம் பேர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. முதலமைச்சர் நவீன் பட்நாயக், பாதிக்கப்பட்ட மக்களுக்கு,  நிவாரணத் தொகை, உணவு ,உறைவிடம் போன்றவற்றை அறிவித்துள்ளார். இந்நிலையில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக கூடியுள்ளது .

Categories

Tech |