காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் வீட்டு பூட்டை உடைத்து 40 சவரன் நகை ,50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . மாமல்லபுரத்தை அடுத்த பட்டிபுலத்தை சேர்ந்த இளங்கோவன் நேற்று இரவு மனைவி மற்றும் குழந்தைகளுடன் திருப்போரூர் முருகன் கோயிலுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு உடைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது . 40 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், பீரோவின் பூட்டை […]
Author: news-admin
மதுரையில், நீட் தேர்வு எழுதிவிட்டு, ஊர் திரும்பியபோது மாற்றுத்திறனாளி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் கமுதி அருகே பாப்பணம் கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சந்தியா ,மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் தேர்வு எழுதிவிட்டு, ஊர் திரும்ப பேருந்தில் வந்ததாக கூறப்படுகிறது . இந்நிலையில் , திருப்புவனம் பேருந்தில் வந்தபோது மயக்கமடைந்த அவர், மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி சந்தியா உயிரிழந்தார்.இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் விமானம் தீப்பிடித்து எரிந்து 41 பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . மாஸ்கோவில் உள்ள செரிமேடியேவோ விமான நிலையதிலிருந்து முர்மான்ஸ்க் என்ற இடத்திற்கு,ஏரோபிளோட் விமானம் பயணிகளுடன் நேற்று மாலை கிளம்பியது. திடீரென விமானத்தில் கோளாறு ஏற்பட உடனடியாக விமானத்தை தரையிறக்க விமானி முயன்றார். ஆனால் விமானம் முழுவதும் தீ மளமளவெனப் பரவியதால் 41 பேர் உயிரிழந்தனர் .மேலும் இந்த விமானத்தில் 73 பயணிகளுடன் 5 ஊழியர்கள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில்,மற்றவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப் படவில்லை.
அமேதி தொகுதியில் வாக்குபதிவு நடந்து வரும் இந்நிலையில் ராகுல் காந்தி ஏன் இங்கு வர இல்லை என ஸ்மிருதி இராணி கேள்வி எழுப்பி உள்ளார். 51 தொகுதிகளில், இன்று மக்களவை தேர்தலுக்கான 5ம் கட்ட வாக்குபதிவு நடைபெற்று வரும் நிலையில் உத்தரபிரதேச மாநிலம், அமேதி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ஸ்மிரிதி இராணி , ‘ காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராகுல் காந்தி ஏன் இங்கு இல்லை’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். ராகுல் காந்தி வராதது குறித்து காங்கிரஸ் கட்சி […]
நாளை முதல் தமிழகத்தில் ரமலான் நோன்பு தொடங்குகிறது. இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு மிகவும் புனிதமான ஒன்று .இந்நோன்பு இருப்பது அவர்களின் புனித கடமை ஆகும் . சூரியன் உதிப்பதற்குள் உணவருந்தி, மாலை வரை ஒருதுளி நீரைக்கூட குடிக்காமல் , 30 நாட்களையும் கழிப்பதே இதன் சிறப்பாகும். ரமலான் பிறை தோன்றியதால் இந்த ஆண்டின் ரமலான் நோன்பு நாளை அதிகாலை தொடங்குவதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசின் தலைமை காஜி தெரிவித்துள்ளார்.
நடிகர் அமிதாப் பச்சன் திடீரென உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். 76 வயதான பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது துல்லியமான நடிப்பால் ரசிகப்பெருமக்களை கட்டிப்போட்டவர் . அவருக்கு திடீரென நேற்று உடல்நிலை பாதித்ததால் , அவருடைய ரசிகர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் படுக்கையில் இருக்கிறேன். கவலைப்பட ஒன்றும் இல்லை. இதை அனைவரிடமும் தெரிவியுங்கள்’’ என்று பதிவிட்டுள்ளார் .
ஸ்டாலினின் முதல்-அமைச்சர் கனவு பகல் கனவு. அது ஒருபோதும் பலிக்காது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் . வேலாயுதம்பாளையம், குன்னம் சத்திரம், க.பரமத்தி ஆகிய இடங்களில், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தீவிர பிரச்சாரம் செய்துவந்தார் . அப்போது தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி, கடந்த 5 ஆண்டுகளில் மூன்று கட்சிக்கு மாறியவர் என்றும் அவரை நம்பினால் அனைவரையும் நடுத்தெருவில் விட்டு விடுவார் என்றும் கூறினார் .இவர் எந்த […]
காங்கிரஸ், பிரதமர் மோடி தேர்தல் விதிகளை மீறியுள்ளார் என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. ராஜீவ்காந்தியைக் கறைபடியாதவர் என கூறி வந்த மோடி , தற்போது ”ஊழல்களில் முதன்மையானவர் அதனால் ,அவருடைய ஆயுள் முடிந்து விட்டது” என பேசியுள்ளார் என்று காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. மறைந்த ராஜீவ் காந்தியை , அவமதிக்கும் வகையில் மோடி பேசியுள்ளார் எனவும் ,புகாரில் கூறப்பட்டுள்ளது .
வேலூர்,தர்மபுரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் நேற்று மழை நன்றாக பெய்துள்ளது. அக்கினிநட்சத்திரம் ,தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் நிலையில் ,திருத்தணியில் 113 டிகிரியும், வேலூரில் 110 டிகிரியும் வெப்பம் பதிவாகியுள்ளது . தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , நேற்று மாலை வேலூரில், பலத்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது . அதே போல் ,தர்மபுரியில் நேற்று மாலை […]
இலங்கையில் இன்று முதல் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்படுகின்றன. இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது . கடந்த ஈஸ்டர் அன்று தேவாலயங்களிலும் , விடுதிகளிலும் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் 253 பேர் உயிரிழந்ததையடுத்து போலீசாரும் ராணுவத்தினரும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் பள்ளி வளாகங்களில் சோதனைகளை மேற்கொண்டனர் . சோதனைக்கு பின் , ஆபத்து ஏதும் இல்லை என்று தெரிவித்த தெரிவித்த நிலையில் பள்ளிகளைத் திறக்க அரசு ஆணையிட்டுள்ளது .போலீசார் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்கவரும் 17 வயதான கோலா கரடி!!!
சீன வனவிலங்கு பூங்காவில் உள்ள 17 வயதான கோலா கரடி சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது . தெற்கு சீனாவில் உள்ள குவாங்சோ நகர பூங்காவில் 60 கோலா கரடிகள் உள்ளன.அதிலும் , உகி என்ற 17 வயது கோலா கரடி, பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவருகிறது .பொதுவாக கோலா கரடிகள் 10 -12 ஆண்டுகள் வரை மட்டுமே உயிர் வாழும் தன்மையுடையது . மேலும் உகி கரடி , 6 தலைமுறைகளை சேர்ந்த கரடிகளுடன் வாழ்ந்து வருகிறது.அதனால் இதனை பூங்கா காப்பாளர்கள் […]
திருப்பூரில், மதுபோதையில் அரசு பேருந்து நடத்துநரை தாக்கிய இரு வாலிபர்கள் பொதுமக்களால் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது . ஈரோட்டில் இருந்து கிளம்பி ,திருப்பூரை வந்தடைந்த அரசு பேருந்து, பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தபோது , மதுபோதையில் இரு இளைஞர்கள் பேருந்து முன்பாக நடந்துச் சென்றுள்ளனர்.இதைக் கண்ட பேருந்து நடத்துநர் ராமசாமி அவர்களை நகர்ந்து செல்லும்படி கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த வாலிபர்கள் ,நடத்துநரை தாக்கியுள்ளனர் . இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் மற்ற பேருந்து ஓட்டுநர், நடத்துநர்கள் சேர்ந்து , இளைஞர்களை அடித்து உதைத்தனர்.திருப்பூர் தெற்கு […]
நீலகிரி மாவட்டம் கூடலூரில், சுற்றுலா பயணிகள் யானை சவாரியில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர் . கூடலூர் , முதுமலை புலிகள் காப்பகத்தில், சுற்றுலாபயணிகளை மகிழ்விக்க வனப்பகுதிக்குள், யானை சவாரி மற்றும் வாகன சவாரியை வனத்துறை நடத்தி வருகிறது . இந்நிலையில், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் , வாகனங்கள் மற்றும் யானைகளின் எண்ணிக்கையை 6 ஆக வனத்துறை, உயர்த்தியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
நாடுமுழுவதும் , நடைபெற்ற நீட் தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவு பெற்றது. நண்பகல் 12 மணி முதல் மாணவர்கள் , சோதனை நடத்தப்பட்டு,தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அணிகலன்களை மாணவிகள் கலற்றிய பின்னரே, தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆதார் கார்டு மற்றும் காலதாமதமாக வந்த மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் ,நீட் தேர்வு மிக எளிமையாக இருந்தது என்றும் இயற்பியல் மட்டும் சற்று கடினமாக இருந்தது என்றும் கூறினர் . நாடு முழுவதும் , நீட் தேர்வு முடிவுகள் […]
மதுரையில் உள்ள திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது. திருமங்கலம் , கரடிக்கலில் சுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு ஒரு அங்கமாக நடத்தப்பட்டது. அதில் கோவை, தேனி, நெல்லை, ராமநாதபுரம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சுமார் 500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிப்படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வாரி அளிக்கப்பட்டது .
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் , வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் ,வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 14 சென்டி மீட்டர், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 7 சென்டி மீட்டர் மற்றும் […]
தமிழக அரசு, ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசா மாநிலத்திற்கு 10 கோடி நிதியுதவி வழங்க உள்ளது . முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஃபானி புயல், புனித நகரம் பூரி என பல நகரங்களை, கடுமையாக தாக்கி பாதிப்பை ஏற்படுத்திச் சென்றுள்ளதாக கூறியுள்ளார் .மேலும் ஃபானி புயலால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், கூறினார் . ஒடிசா மாநிலத்திற்கு, தமிழ்நாடு அரசின் சார்பில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி […]
வடகொரியா, ஏவுகணை சோதனை நடத்தி உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை பரிசளித்துள்ளது . வடகொரியாஅதிபர் , கிம் ஜோங் தலைமையில் சனிக்கிழமை இச்சோதனை நடத்தப்பட்டது. அந்த நாட்டின் அரசியல் எதிர்காலத்திற்கும், சுய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், இந்த ஏவுகணை சோதனை அவசியம் என்றும் வடகொரிய அரசு தெரிவித்துள்ளது. சென்ற பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபருடனான ‘வியட்நாம் பேச்சுவார்த்தை’ தோல்வியடைந்ததை அடுத்து வடகொரியா நடத்தும் முதல் ஏவுகணை சோதனை என்பது முக்கியமான தகவலாகும். கிம் ஜோங் உன்,இடையில் ரஷ்யா சென்று, அதிபர் புதினை சந்தித்துப் […]
ஃபால்கன் 9 ராக்கெட், அமெரிக்க நேரப்படி அதிகாலை 2.48 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தேவையான பொருட்களுடன் கூடிய விண்கலனை, ஃபால்கன் 9 ராக்கெட் மூலமாக , ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது. புளோரிடாவின் கேப் கனவெரலில் இருந்து அமெரிக்க நேரப்படி அதிகாலை 2.48 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. 2 ஆயிரத்து 500 கிலோ எடையுள்ள ஆராய்ச்சிப் பொருட்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை இது சுமந்து செல்கிறது . […]
நேற்று மாலை இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் திடீரென நில நடுக்கம் ஏற்பட்டது. நாகாலாந்தின் எல்லை பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் பதிவானது .அதில் 5 புள்ளி 4 ஆக பதிவாவாகியிருந்தது . இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அதிஷ்டவசமாக யாருக்கும் காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை. இந்திய வானிலை ஆய்வு மையம், தொடர்ந்து கண்காணித்து வருகிறது .
வேலூர் மாவட்டம், ஆம்பூரில் தண்டவாளத்தைக் கடக்கும் போது 3 பேர், ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . வேலூர் மாவட்டம் கரும்பூரைச் சேர்ந்தவர், காலணி தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் சங்கர்.இவர், தனது சகோதரி பானுமதி மற்றும் 11 வயதான பேரன் நித்திஷ் ஆகியோருடன் சென்னை செல்வதற்காக இன்று அதிகாலை ஆம்பூர் ரயில் நிலையம் வந்த நிலையில் முதல் நடைமேடையில் இருந்து , இரண்டாவது நடைமேடைக்குச் செல்ல தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக , அதிவேகத்தில் வந்த […]
நேற்று நாமக்கல் மாவட்டத்தில் 102.2 டிகிரி வெயில் பதிவானதால் மக்கள் வீட்டிற்குள் முடங்கினர் . நாமக்கல் மாவட்டத்தில், போதிய மழை இல்லாததால் ஜனவரி மாதத்திலிருந்தே வெயில் பொதுமக்களை சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் கத்திரி வெயில் தொடங்கிதால், வெயிலின் தாக்கம் அதிகரித்தது. நேற்று நாமக்கல்லில் 102.2 டிகிரி வெயில் பதிவானதால் அனல் காற்று வீசியது. எனவே பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் சாலைகள் […]
மார்த்தாண்டம் அருகே பள்ளி மாணவி மாயமானார் . திருநெல்வேலி மாவட்டம் ,கீரிப்பாறை அருகே தடிக்காரண்கோனம் பகுதியினை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் அபிஷா .பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்த நிலையில் திடீரென காணவில்லை . இதுபற்றி விசாரணை நடத்தியதில், ராஜா என்பவர் அபிஷாவை கடத்தியது தெரிய வந்துள்ளது . இதனால் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவைத் தேடி வருகின்றனர் .
காஸ்மீரில் பாஜக பிரமுகர் பயங்கரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டார், பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் தேடி வருகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தின் பாஜக துணை தலைவரான குல் முகமது மிர் நவ்காமில் வீரிநாக் பகுதியில் வசித்து வருபவர். இந்நிலையில் நேற்று இரவு இவரது வீட்டுக்கு சென்ற தீவிரவாதிகள் குல் முகமது மிரை இரக்கமின்றி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றனர். மேலும் இதை தொடர்ந்து பரிதாப நிலையில் கிடந்த முகமதை அவரது உறவினர்கள் மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். […]
சேலத்தில் ,ஓடும் ரயிலில் நடந்த நகைபறிப்பு சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது . சேலம் ,சங்ககிரி அருகே மாவெலிபாளையம் என்ற ரயில் நிலையம் உள்ளது. இதன் அருகில் தரைவழி பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது . அதனால் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்ற நிலையில் கொள்ளையர்கள் சென்ற வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 4 ரயில்களில் ஏறி 24 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் . ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ரோகித் நாதன் ராஜகோபால் ,விசாரணை நடத்திய நிலையில் ,20 […]
தேர்தல் பிரசாரத்திற்காக பா.ஜ.க. வேட்பாளர் சாந்தனு தாகூர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி காயம் அடைந்துள்ளார். மேற்கு வங்காளத்தில் போங்கான் (தனி) தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சாந்தனு தாகூர் என்பவர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. இதனால் சாந்தனு தாகூர் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக கல்வானி என்ற பகுதிக்கு காரில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த போலீஸ் வேன் ஒன்று நிலைதடுமாறி சாந்தனு தாகூர் கார் மீது மோதியத்தில், சாந்தனு தாகூர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக […]
இன்று நாடுமுழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு ,மொத்தம் 155 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது.மொத்தம் , 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதுகிறார்கள். இந்த தேர்வை தமிழகத்தில் 1,40,000 பேர் எழுதுகின்றனர்.தமிழகத்தில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர் . இந்த ஆண்டு பிற்பகலில் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 5-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. […]
கரூரில் , மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில், சிசிடிவி கேமரா இயங்கவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது . தளவாபாளையம் குமாரசாமி பொறியியல் கல்லூரியில் ,கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், திருச்சி மாவட்டம் மணப்பாறை, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை போன்ற 6 தொகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது . இதற்கிடையே , நேற்றிரவு வேடசந்தூர் தொகுதி மின்னனு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் , சிசிடிவி கேமரா […]
பழைய குற்றாலம் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் நேற்று திடீரென காட்டுத்தீ பரவியது . நெல்லை மாவட்டம் ,வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் , எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க நேற்றிலிருந்து போராடி வருகின்றனர். வெயிலின் தாக்கம் அதிகமானதால் , தீப்பிடித்து இருக்கக்கூடும் எனவும் ,மூலிகைகள் மற்றும் செடிகளும் எரிந்து வருவதால், இயற்கை ஆர்வலர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில், ஹெச்ஐவி கிருமி தொற்று கொண்ட ஊசியால் எய்ட்ஸ் நோயை பரப்பிய மருத்துவரைபோலீசார் கைதுசெய்தனர். பாகிஸ்தானின் லர்கானா மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் முசாஃபர் கங்காரோ.இவர் ராட்டோரேடோவில் தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார் . இவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர் . தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு ஹெச்ஐவி கிருமி தொற்றுள்ள ஊசியை போட்டுள்ளார் .இதன் மூலம் 90 பேருக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது .அதில் 65 பேர் குழந்தைகள். இதனையறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் புகாரளிக்க காவல் துறையினர், அவனை கைது செய்து […]
திருமணமான புதுமண தம்பதிகளுக்கு முதல் இரவு என்பது வாழ்க்கையில் முக்கியமான நாள் ஆகும். அதற்காக முதல் நாளிலையே உடலுறவில் ஈடுபட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முதலில் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொள்ள வேண்டும். பின்பு உடலுறவை பற்றி பேசுதல்,அதன் பின் உடலுறவில் ஈடுபடவேண்டும். முதலிரவுக்கு முன்பு திருமணம் வேலைகள் மற்றும் சம்பிரதாயங்கள் என உங்கள் உடல் சோர்வடைந்து காணப்படும். இதனால் நீங்களே நினைத்தலும் முழுமையாக உடலுறவில் ஈடுபட முடியாது. ஆனால் முதலிரவின் போது எதிர்பார்க்க கூடாத ஐந்து விஷயங்கள் பற்றி இந்த தொகுப்பில் […]
காஞ்சிபுரம், அத்திவரதர் திருவிழா வரும் ஜூலை 1-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . காஞ்சிபுரம் மாவட்டம் , வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதர் திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது . இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளர் பணீந்திர ரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் அதிமானி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விவாதிக்கப்பட்டது .அப்போது ,வரும் […]
கன்னியாகுமரி, திற்பரப்பு அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர் . தொடர்ந்து பெய்த கனமழையால், கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில், தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. குளுகுளுவென கொட்டித்தீர்க்கும் அருவியில் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள், குளியலிட்டு மகிழ்ச்சியில் பூரிப்படைந்துள்ளனர் .
தாய்லாந்து நாட்டின் , புதிய மன்னராக மஹா வஜ்ரலங்கோன் முடி சூட்டப்பட்டார் . பொதுவாக மூன்று நாட்கள் நடைபெறும் முடிசூட்டு விழாவில், முதலில் தலைமை புத்த துறவி,வெள்ளை உடையணித்திருந்த மன்னரை , நாட்டின் பல்வேறு புன்னிய தீர்த்தங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரைக் கொண்டு, நன்னீராட செய்தார். அதன்பின் பௌத்த மற்றும் பிராமண முறைப்படி சடங்குகள் நடந்தன . பின்னர், இந்தியாவிலிருந்து வரவழைக்க வைக்கப்பட்ட வைரத்தால் ஆன 7.3 கிலோ தங்கத்தினால் ஆன மணிமுடி அரியணையில் அமரவைக்கப்பட்ட மன்னருக்கு சூட்டப்பட்டது.
நடிகர் அக்க்ஷய் குமார், வாக்களிக்காததால் சர்ச்சை எழுந்துள்ளது . மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த திங்கள் அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.அப்போது , இந்தி நடிகர் அக்க்ஷய் குமாரின் மனைவி வாக்களித்துவிட்டு சென்றார் . ஆனால் அக்க்ஷய் குமார் வரவில்லை. இது மக்களிடையே சர்ச்சையை உண்டாக்கியது . அக்க்ஷய் குமார், டுவிட்டர் பக்கத்தில், ‘குடியுரிமை பற்றி ஏன் தேவையில்லாத ஆர்வமும், எதிர்கருத்துகளும் பரப்பப்படுகின்றன’ என்று கேள்வி எழுப்பினார் . தேசத்தின் மீதான பற்றை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் , ‘இந்தியாவை வலிமையாக்க […]
ஜப்பான் மக்கள், தங்கள் புதிய மன்னருக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஜப்பானின் மன்னராக இருந்த அகிட்டோ, வயதான காரணத்தால் ,பதவி விலகியதால் மன்னரின் மூத்த மகன், நொருகிட்டோ புதிய மன்னராக பதவி ஏற்றார். டோக்கியோ நகரில் உள்ள அரண்மனையில் ,கூடும் மக்கள் மன்னரை வாழ்த்தி முழக்கமிட்டு வாழ்த்தி வருகின்றனர். மன்னரும், ராணியும் மக்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர் .
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் ரூபாயை அரசு வழங்கியது . சிங்கம்புணரி அருகே கே.உத்தம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி கருப்பையா. அவர் தனது மனைவி சின்னம்மாள் மற்றும் இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் சின்னம்மாள் வீட்டில் சமையல் வேலைகளை செய்துக் கொண்டிருந்தார்.அப்பொழுது எதிர்பாராதவிதமாக திடீரென சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதறியது . இதில் சின்னம்மாளும், தூங்கிக் கொண்டிருந்த 5 வயது மகன் வீரன் மற்றும் 2 வயது பெண் குழந்தை திவ்யதர்ஷினியும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நடந்து […]
தஞ்சையில், கோவிலில் சாமி கும்பிடும் போது 4 பவுன் செயின் திருடு போனது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் பிரதான சாலை தெருவைச் சேர்ந்தவர் திருஞானத்தின் மனைவி 75 வயதான சீதாலெட்சுமி . இவர் கரம்பயம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து பார்த்த போது கழுத்தில் இருந்த 4 பவுன் செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ந்தார். கோவிலில் சாமி கும்பிடும் போது, கூட்டத்தில் மர்ம நபர் யாரோ சீதாலெட்சுமியின் செயினை […]
ஒடிசாவில், பானி புயலால், நீட் நுழைவுத் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில், இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு மே 5-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று ஒடிசா மாநில அரசு கேட்டுக் கொண்டது. பானி புயலால் கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், இதை ஏற்று நாளை ஒடிசாவில் நடைபெற உள்ள நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. […]
குஜராத்தில் கோர்வாட் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதாக அவ்வூர் பெண்கள் தெரிவித்துள்ளனர். கோடை வெயிலால் இந்தியாவில் பல மாவட்டடங்களில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் கோர்வாட் கிராமத்தில் வறட்சி வேகமாக பரவிவருகிறது. இங்குள்ள பெண்கள் பகலில் வேலைக்கும், இரவில் தண்ணீரை தேடியும் அழைக்கின்றனர். இது குறித்து அந்த கிராம பெண்கள் கூறுகையில், ”பகலில் வேலைக்கு சென்று இரவு வீட்டுக்கு வரும் இந்த பெண்கள், வீட்டிற்கு வந்ததும் உடனே தண்ணீரை தேடி இரவு […]
சென்னை மெரீனா கடற்கரையில், அரிய வலம்புரி மற்றும் மாட்டு சங்குகளை சட்டவிரோதமாக விற்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவினர், மெரீனா கடற்கரை பகுதியில், தடைசெய்யப்பட்ட அரிய வகையான சங்குகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி , ஆய்வு செய்தனர். அப்போது அரிய வகை வலம்புரி மற்றும் மாட்டு சங்குகள் விற்பனை செய்யப்பட்டதை உறுதிசெய்து 136 சங்குகளை பறிமுதல் செய்தனர் . சங்கு விற்பனை செய்த 3 பேரை கைது செய்து,போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் , செயற்கையாக சுண்ணாம்புக் […]
திலீப் நடிப்பில் உருவாகும் மலையாள படத்தில் நடிகர் அர்ஜுன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரையுலகில் நடித்தால் ஹிரோவாகத்தான் நடிப்பேன் என்று சிலர் சுற்றித்திரிகின்றனர். ஆனால் அர்ஜுன் அப்படியில்லாமல், தமிழில் இரும்புத்திரை படத்தில் வில்லனாகவும், தெலுங்கில் நா பெரு சூர்யா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு தந்தையாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மலையாளத்தில் திலீப் நடிபில் தயாராகிவரும் ஜேக் டேனியல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் அர்ஜுன் சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்து கொண்டார். குடும்பக் கதையாக உருவாகும் இந்த […]
தூத்துக்குடியில் உள்ள பள்ளி வாகன பரிசோதனை மே மாதம் 7 -ம் தேதி நடைபெறவுள்ளது. தூத்துக்குடி வட்டாரத்தில் கல்வி நிறுவனங்களின் சார்பில் சுமார் 170-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், கூறுகையில் மாணவமாணவிகள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி ஆண்டு தோறும் வாகனங்களின் இயக்கத் தன்மை ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. அதேபோல் , இந்தாண்டு பள்ளி வாகனங்களுக்கான தரம் குறித்த ஆய்வு மே 7 ம் தேதி ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக மைதானத்தில், […]
சந்திர கிரகணத்தின் போது சந்திரனின் மீது மோதிய விண்கல் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சந்திர கிரகணத்தின் போது விண்கல் ஒன்று சுமார் 61 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் சந்திரனின் மீது மோதியுள்ளது என்றுஸ்பெயின் நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 45 கிலோ எடை கொண்ட இந்த விண்கல் சந்திரனில் 15 மீட்டர் பள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ள ஸ்பெயின் நாட்டு அறிஞர்கள் இந்த கல் வால் நட்சத்திலிருந்து விழுந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில், மீனவர்கள் கடல் சீற்றம் குறைந்ததால் , மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். நாகை மாவட்டத்தில், பானி புயல் முன்னெச்சரிக்கை காரணமாக 9 நாட்களுக்கும் மேலாக நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமலிருந்த நிலையில் , புயல் கரையை கடந்துவிட்டதால் இன்று மீன்பிடிக்க சென்றனர். இன்று நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர் மற்றும் நம்பியார் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் போலீசாரைத் தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே , காவல் நிலைய சார்பு ஆய்வாளர் மாயவன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை மாயவன் நிறுத்தி சோதனையிட்டுள்ளார் .அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த அப்துல்லா மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் மாயவனை தாக்கியுள்ளனர் . இதனால் ,அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தது, மிரட்டல் விடுத்தது, ஹெல்மெட் அணியாமல் […]
ஒடிசாவை கடந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திய பானி புயலுக்கு வங்காளி படமெடுத்து ஆடும் பாம்பு என்று அர்த்தம். கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி அது புயலாக மாறினால் அதற்கு பெயர் வைப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் உருவாகி நேற்று ஒடிசாவை தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்திய புயலுக்கு பானி என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்த பெயரை இந்தியாவின் அண்டை நாடான வங்காள தேசம் சூட்டியது. பானி என்றால் வங்காளி மொழியில் படமெடுத்து […]
கண் கவரும் மேகமலை!!!
தேனி மாவட்டத்திலுள்ள மேகமலை, தன் பசுமை கொஞ்சும் அழகால் ,சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. மலை என்றாலே அழகுதான்.அதுவும் மரங்கள்,செடிகளால் பசுமை போர்த்தி காணப்பட்டால் சொல்லவே வேண்டாம். தேனி மாவட்டத்தில் சின்னமனூரில் உள்ளது மேகமலை. இது திரும்பும் இடமெல்லாம் பசுமை போர்த்தி அழகாய் உள்ளது .இது 34 கிலோ மீட்டர் தூரத்துக்கு 18 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது . இங்குள்ள இறைச்சல் பாறை அருவி மிகவும் அற்புதமாக உள்ளது .மேலும் மேகமலையைச் சுற்றி ஐந்து அணைகள் உள்ளன .வட்டப்பாறை […]
புளோரிடாவில் இருந்து 136 பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து 136 பயணிகளை ஏற்றிச்சென்ற போயிங் 737 ரக விமானம், தரையிறங்கும் போது நிலை தடுமாறி விமான நிலையம் அருகே உள்ள ஆற்றில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஜாக்சன்வில்லில் உள்ள கடற்படை விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் நிலை தடுமாறி ஜான்ஸ் ஆற்றில் விழுந்ததாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். […]
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், மக்கள் வாடிவதங்கினர். புயல் ஒடிசாவுக்கு சென்றதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள்ளது .இது வரும் 29ஆம் தேதி வரை நீடிக்க உள்ளதால் , அனல்காற்றுடன் வரும் 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கவுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .