பானி புயலின் தாக்கம் எவரெஸ்டையும் விட்டுவைக்காமல், அங்கு அமைக்கப்பட்டுள்ள 20 முகாம்கள் காற்றில் பறக்கவைத்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறி நேற்று ஒடிஸா மாநிலத்தின் வழியாக கரையைக் கடந்தது. ஒடிஸாவில் இந்த புயல் கரையை கடக்கும் போது பூரி, குர்தா, புவனேசுவரம் போன்ற மாநிலங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது கன மழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 1 மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் வீசிய சூறைக்காற்றால் ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ள நிலையில், பல்லாயிரக்கணக் கான […]
Author: news-admin
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் உருவாகிய 100 படம் வருகின்ற மே 9 _ம் தேதி திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சாம் ஆண்டன் இயக்கத்தில், அதர்வா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 100. இந்த படத்தில் முதல் முறையாக ஹன்சிகாவும் அதர்வாவும் இணைகின்றனர். ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில் யோகி பாபு, மைம் கோபி, ராகுல் தேவ், ராதாரவி, ஜாங்கிரி மதுமிதா, ஆகாஷ்தீப் சய்கல், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய […]
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் கோமாளி படத்தில் நடிகர் ஜெயம் ரவி 9 வேடத்தில் நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ”கோமாளி”. ஜெயம் ரவியும், காஜல் அகர்வாழும் முதல் முறையாக இணையும் இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஜெயம் ரவி 9 வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மற்றோரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இது குறித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், ‘‘இது ஜெயம் ரவிக்கு 24-வது படமாகும். இதில் நடிகர் ஜெயம் ரவி ராஜா, […]
துருக்கி நாட்டின், பலிகேசிர் மாகாணம் அருகே 16 குடியேறிகளுடன் வந்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியது. உள்நாட்டுப் போராலும், வறுமையாலும் சொந்த நாட்டை விட்டு தினந்தோறும் மக்கள் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக நுழைகின்னறனர். இந்த அகதிகள் ரப்பர் படகில் பாதுகாப்பற்ற முறையில் பயணம் மேற்கொள்வதாகவும், இவர்கள் செல்லும் சில படகுகள் நடுக்கடலிலேயே கவிழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், இன்று துருக்கி நாட்டில் உள்ள அயவலிக் மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் 16 அகதிகளுடன் வந்த […]
இமாச்சல பிரதேசம் மண்டியில் இன்று நிலநடுக்கம் அதிர்ஷ்ட வசமாக எவ்வித சேதமும் ஏற்பட வில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சலபிரதேச மாநிலத்திலுள்ள மண்டியில் இன்று காலை 4.32 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு சுமார் 4.2 ஆக பதிவாகியுள்ளது. உயிர்சேதத்தையும், பொருள் சேதத்தையும் ஏற்படுத்ததாக இந்நிலநடுக்கம் மண்டியில் வடகிழக்கு பகுதியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி, இந்த ஆண்டு புதிய சாதனை படைத்துள்ளது. மத்திய அரசு, சர்க்கரை உற்பத்தியை அதிகரிக்கும் வகையில்,பல்வேறு செயல்களில் இறங்கியது . இதனால் சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சென்ற ஏப்ரல் மாதம் வரை உள்ள காலத்தில் , 3 கோடியே 21 லட்சம் டன்களாக சர்க்கரை உற்பத்தியாகி பெருகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட, 10 சதவீதம் அதிகமாகும் .
தொற்று நோயின் தாக்கத்தினால் ஒரே மாதத்தில் 1859 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தொகையில் முதலிடத்தை பெற்றுள்ள சீனாவில் தற்போது தொற்று நோயால் பலர் பலியாகி வருகின்றனர். தொற்று நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு சிறந்த முறையில் சிச்சை அளித்து வரும் நிலையில், மிக முக்கிய ஓயாக கருதப்படும் வாந்திபேதி, எலிக் காய்ச்சல் போன்றவற்றிற்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும் ஹெபடைட்டிஸ் வைரஸ் தாக்கத்தினால் உருவாகும் காய்ச்சல், காசநோய், சிபிலிஸ், கொகோர்ரியா, எய்ட்ஸ், கால் மற்றும் வாய்ப்புண் போன்றவற்றுக்கு மட்டும் மார்ச் […]
திருச்சி, ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும், சித்திரை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்று. திருவிழாவின் 9ஆம் நாளான இன்று, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சீர் வரிசையாக கிளிமாலை கொண்டு வரப்பட்டது. இதை அணிந்த படி, நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அருளினார் . அப்போது ,பக்தர்கள் ‘கோவிந்தா… கோவிந்தா’ என பரவசத்துடன் தேரை இழுத்து தரிசனம் செய்தனர்.திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு […]
கனடா நாட்டில் , வீடு தீ பிடித்து எரிந்ததில் தாயுடன், 4 குழந்தைகள் உடல் எரிந்து இறந்தனர். கனடா நாட்டிலுள்ள , ஒண்டாரியோ நகரில் ,நேற்று வீடு ஒன்றில் திடீரென தீ பிடித்தது. தீ வேகமாக பரவியதால் , தாயுடம், 4 குழந்தைகள் பரிதாபமாக உடல் கருகி இறந்தனர் . பின் தகவலறிந்த மீட்புப் படையினர் தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்னுடைய இடத்தில் 12 கிலோ தங்கம் மற்றும் ரூ.13 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றினார்கள் என முதல்வர் இ. பி எஸ் நிரூபித்தால், நான் பதவி விலகுகிறேன் ; இல்லையேல் , இ. பி . எஸ் பதவி விலக தயாரா என கேள்வி கணை தொடுத்துள்ளார் . எனது வீடு மற்றும் கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.10 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டது. தங்கம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. ஆனால் 12 கிலோ தங்கம் மற்றும் ரூ.13 கோடிரூபாய் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டதாக […]
நாளை மறுநாள், நாடுமுழுவதும் மாணவர்கள் நீட் தேர்வு எழுத உள்ளநிலையில் தேர்வு மையங்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளன. பொது மருத்துவம், பல் மருத்துவம் போன்ற துறைகளில் சேர்வதற்காக, இந்திய அளவில் நடத்த பெறும் நுழைவுத்தேர்வு முறை நீட் தேர்வு ஆகும். இது இந்தியா முழுவதும் மே 5-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்வுமையங்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளன அதன் விவரத்தை கீழே காணலாம்.
இன்று புவனேஸ்வரில் பிறந்த பெண் குழந்தைக்கு ”பானி”என்ற பெயர் சூட்டப்பட்டது . ஒடிசா மாநிலம் புரி பகுதியை ,மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் தாக்கிய பானி புயல், புவனேஸ்வர் போன்ற மாவட்டங்களில் பெரிய சேதத்தை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் புவனேஸ்வர் அருகே அமைந்துள்ள ,மன்சேஸ்வர் ரெயில் பெட்டி பழுதுபார்க்கும் தொழிற்சாலையில், வேலை பார்க்கும் ஒரு பெண் தொழிலாளிக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டடு , ரெயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . அங்கு காலை 11.03 மணியளவில் அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்த […]
ஃபானி புயல் வலு குறைந்தது!!!
அதி தீவிர புயலாக கரையை கடந்த ஃபானி தற்போது வலு குறைந்தது . தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி தாழ்வு மண்டலமாக மாறி, பின்னர் அது அதிதீவிர புயலாக உருவெடுத்தது. இதற்க்கு ஃபானி என்று பெயரிடப்பட்டது. இந்த ஃபானி புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்றது. […]
தேனி மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர், அரசு பொதுத்தேர்வில் 90 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்றுள்ள பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இந்தாண்டு, பிளஸ் 2 தேர்வில், 92.54 சதவீதம் பெற்று 15வது இடத்திலும், பத்தாம் வகுப்பில் 93.5 சதவீத தேர்ச்சி பெற்று 25 வது இடத்திலும் தேனி மாவட்டம் உள்ளது . தேர்ச்சி சதவீதம் குறைந்தற்க்கு காரணம் கண்டறிய அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் அல்லிநகரத்தில் நடந்தது. […]
எனது இடத்தில் வருமான வரித்துறை கைப்பற்றியதை ரூ.13 கோடி பணத்தை முதல்-அமைச்சர் நிரூபிக்க வில்லை என்றால் பதவி விலக தயாரா? என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனக்கு சொந்தமான இடத்தில் 12 கிலோ தங்கம், ரூ.13 கோடி பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றியதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிரூபித்தால் நான் பதவி விலக தயாராக இருக்கிறேன். நிரூபிக்க வில்லையென்றால் முதல்-அமைச்சர் பதவி விலகத் தயாரா என கேள்வி எழுப்பியுள்ளார். எங்கள் வீடு […]
நெல்லை ,சேரன்மாதேவியில் பெண்ணிடம் 6 பவுன் செயினை , பட்டப்பகலில் மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியிலுள்ள வைத்தி மேல வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்,பால் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது மனைவி தங்கம் ,சேரன்மாதேவி பேருந்துநிலையம் அருகே உள்ள நிறுவனம் ஒன்றில் பணியிலுள்ள நிலையில், மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். அப்போது பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை பறித்து […]
ஈரோடு மாவட்டலுள்ள , சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை யானைகள் சர்வ சாதாரணமாக பட்ட பகலில் கடந்து செல்வது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை பகல் பொழுதில் யானைகள் கடந்து செல்வதால் வாகனங்கள் கவனத்துடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆசனூர் அருகில் காரப்பள்ளம் வனப்பகுதியில் நேற்று மாலை வாகனங்கள் நிற்பதை பற்றி கவலைப்படாமல் யானையொன்று தனது குட்டியுடன் சாலையை கடந்து சாதாரணமாக சென்றது.இந்நிலையில் வனத்துறையினர் , வனவிலங்குகள் சாலையை கடப்பதால் கவனத்துடன் […]
சென்னை வில்லிவாக்கத்தில் குடிபோதையில் ஒருவர் கார் ஓட்டியதில் விபத்துக்குள்ளாகி இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை வில்லிவாக்கத்தில் குடி போதையில் ஒருவர் கார் ஓட்டியதில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். கார் மோதியதில் மூதாட்டி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மது போதையில் சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபர் தப்பி ஓட முயற்சி செய்தார். அப்போது பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். […]
விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் பேஸ் புக் களை குறி வைத்து நகைகளை கொள்ளையடித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தூரை சேர்ந்த நவீன்குமார் என்பவரை திருட்டு வழக்கில் காவல்துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திய போது இந்த மோசடி தெரிய வந்துள்ளது. இவர்கள் பேஸ் புக்கில் பெண்களிடம் நண்பர்களாகப் பழகி , பெண் குரலில் பேசியுள்ளனர் . பின்னர் தங்களுடைய நகைகளை ஒரு கோவிலில் வைத்து வணங்கினால் செல்வம் பொங்கும் என்றும் ,தங்களுக்கு செல்வம் பெறுகியதாகவும் கூறி அதே போல் வழிபட […]
சேலத்தில் , ரவுடி கதிர்வேல் நேற்று போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார் .இது தொடர்பாக, குற்றவியல் நீதித்துறை நடுவர்,திரு . சரவணபவன் விசாரணை நடத்திவருகிறார் . சேலம் அரசு மருத்துவமனையில், சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேலின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கதிர்வேலின், உடலை பார்வையிட்டு ஆய்வு செய்த சேலம் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர், சரவணபவன் என்கவுன்டர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் ரவுடிகளால் தாக்கப்பட்ட காவல் ஆய்வாளர் சுப்பிரமணி, உதவி ஆய்வாளர் மாரி ஆகியோரை மருத்துவமனையில் […]
புயல் கரையை கடக்க தொடங்கியதால் ஆந்திராவில் 2 துறைமுகங்களில் 10-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று ஒடிஸா மாநிலத்தின் புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்க துவங்கியது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், இந்த புயல் காலை 8மணி முதல் 11மணி வரை கரையை கடக்கும் எனறும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த […]
கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாரெழுந்துள்ளது. கொடைக்கானல் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும்.கோடை விடுமுறை காரணமாக இங்கு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது . இந்நிலையில் பேரிஜம் ஏரிக்கு செல்ல, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் வனத்துறையின் வாகனத்தில் செல்ல மட்டுமே தாங்கள் அனுமதிக்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். அதனால் அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் முருகன் கோவிலில், முக.ஸ்டாலினின் மனைவி துர்க்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார். தூத்துக்குடி வந்திருந்த திருமதி துர்காஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடிஅருணாவுடன் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்தார்.சுவாமி தரிசனத்தை முடித்த பின்னர் வெளியே வந்த அவரிடம் பத்திரிகையாளர்கள் திடீர் சுவாமி தரிசனம் பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ”இது வழக்கமான தரிசனம் தான்” என்று பதில் கூறினார்.மேலும் கோயிலுக்குச் செல்வது தனக்கு பிடித்தமான ஒன்று என்றும் கூறினார்.
கரையைக் கடக்க துவங்கியது பானி புயல் ஒடிசாவில் இடைவிடாது பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள பானி புயல் அதிதீவிர புயலாக மாறியுள்ள நிலையில் இன்று ஒடிஸா மாநிலத்தின் புரி மாவட்ட தெற்கு கடலோரப் பகுதியின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலிக்கு இடையே கரையைக் கடக்க துவங்கியது. கரையை கடக்கும் போது, 1 மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்றும், இந்த புயல் காலை 8மணி முதல் 11மணி வரை கரையை கடக்கும் எனறும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்த புயல் கரையைக் கடக்க […]
அருப்புக்கோட்டை அருகே கார் விபத்தில் சிக்கிய பெண் பலியான சம்பவத்தில் குற்றவாளியான கார் ஓட்டுநர் கைதாகியுள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த ,சங்கரேசுவரி, குருவலட்சுமி,முருகேசுவரி செல்வி ஆகியோர் விறகு ஏற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர் . சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி சென்றபோது அந்த வழியே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியதில் நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இவ்விபத்தில் சிக்கியவர்களை விரைந்து சென்று அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் முன்பே குருவலட்சுமி இறந்து விட்டார். இதையடுத்து பலத்த காயமடைந்த மூவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் […]
ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில்விநாயகம்ப்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் வாடகை பாத்திரக்கடையி ன் உரிமையாளர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 5_ம் தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குபதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். மார்ச் 14 _ம் தேதி தேசிய புலனாய்வு துறைக்கு மற்றபட்ட இந்த வழக்கு நேற்று விசாரணை […]
சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் பகுதிகளில் நீர் பற்றாக்குறையால் மிளகாய் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் ,மங்காம்பட்டி, கூட்டுறவுப்பட்டி போன்ற கிராமங்களில் சுமார் 50 ஏக்கர்களில் மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் போதிய தண்ணீர் இல்லாததால் மிளகாய் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையில் உள்ளனர் .
கன்னியாகுமரி மாவட்டம் , உதயகிரி கோட்டையில், சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கோடை விடுமுறை தொடங்கிய நிலையில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். அதிலும் உதயகிரி கோட்டையை பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி பயணிகள் பலர் வந்துள்ளனர். இங்கு மான்கள் மற்றும் சிறுவர்கள் விளையாட தேவையான அம்சங்கள் உள்ளது .
ஆத்திகுளம் அருகில் கண்மாயில் குளிக்க சென்ற 9-ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஆத்திக்குளத்தை சேர்ந்த அஜய் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளி விடுமுறை காரணமாக தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கண்மாய்க்கு குளிக்கச் சென்றார்.நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது அவர் ஆழமான பகுதிக்கு சென்று கரைக்கு வரமுடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புப்படை […]
பானி புயலுக்காக சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் 233 ரயில்களை ரயில்வே நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்திய பெருங்கடலில் கடந்த ஏப்ரல் 25_ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, புயலாக மாறியது. அதற்க்கு ‘பானி’ என்று பெயரிடப்பட்டு தொடர்ந்து கண்காணித்து வந்தது இந்திய வானிலை ஆய்வு மையம். ‘பானி’ புயல் அதி தீவிர புயலாக மாறியுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் பெரும் புயலாக மாறிய பானி புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை என்றும், […]
திண்டிவன சாலையில் நின்று கொண்டிருந்த பெண் மீது ஆம்னி பஸ் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் புதுவை பகுதியை சேர்ந்தவர் மாலதி. இவரது மகன் கேரள மாநிலதில் வேலை பார்த்து வருகிறார். மாலதி அவரது மகனை பார்க்க செல்வதற்காக பஸ்சில் டிக்கெட் முன்பதிவு செய்தார். இதற்காக இரவு புதுவையில் இருந்து திண்டிவனத்துக்கு வந்த மாலதி திண்டிவனம்-சென்னை நெடுஞ்சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தார். இந்நிலையில் அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த மாலதி மீது மோதியது. […]
எந்தவொரு ஆணும் தன் வாழ் நாள்களில் சுயஇன்பம் காணாமல் வாழ்வது மிகவும் கடினமாகும். ஆண்கள் தான் சுயஇன்பத்தை சரியான முறையில் செய்கிறேன் எனறு நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான வசியம் ஆகும். ஏனென்றால் நாம் அப்படி செய்யும் அதில் அதிகமான தவறுகள் நிறைய உள்ளன. இனி அதுபோல் தவறு செய்யமல் இதை தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அடிக்கடி சுய இன்பம் கண்டால் அது உங்களது ஆணுறுப்பில் உள்ள ஆண் குழியின் வழியை விரிவடைய செய்து, தொற்று நோயை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது.ஆண்குறி முறிவு […]
சேலம் அருகில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்றில் திடீரென தீப்பற்றியது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே காமராஜ் நகரை சேர்ந்தவர் ஸ்ரீதர் தனது குடும்பத்தினருடன் காரில், ஜலகண்டாபுரத்தில் உள்ள சொந்தக்காரர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நிலையில் பெட்ரோல் கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட குடும்பத்தினர் ஐவரும், காரில் இருந்து இறங்கி ஓடினர் . அதிஷ்டவசமாக இவ்விபத்திலிருந்து 5 பேரும் உயிர் தப்பினர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து போனது.
அமெரிக்காவில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் சீனாவையும், இந்தியாவையும் சேர்ந்தவர்கள் என்று உள்நாட்டு பாதுகாப்பு துறை தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்தகவளின் படி அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 11.7 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் 5.8 லட்சம் மாணவர்கள் படித்து வரும் நிலையில், இந்தியா மற்றும் சீனாவை கணக்கிடும் போது 49.5 சதவீதம் மாணவர்கலும் பயின்று வருகின்றனர். மேலும் இந்த துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 75 சதவீதம் மாணவர்கள் முதுநிலை […]
கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில், இன்று வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகு சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த சுற்றுலாப் பயணிகள்,வேறுவழியின்றி கடற்கரையில் நின்றபடியே திருவள்ளுவர் சிலையை கண்டு ரசித்தனர். மீண்டும் கடல் சீற்றம் குறைந்த உடன் படகு சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
ஒகேனக்கல் அருகில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒகேனக்கல்லை அடுத்துள்ள ஜருகு பகுதியை சேர்ந்தவர் முனுசாமி.இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.ஈரோட்டில் இருந்து உறவுக்கார பெண் ஒருவர் பள்ளி விடுமுறையைகாக இவரது வீட்டிற்கு வந்துள்ளார். சம்பவத்தன்று ஒகேனக்கலை சுற்றிப் பார்க்க இருவரும் சென்றுள்ளனர். ஒகேனக்கல் அடுத்த பண்ணப்பட்டி சாலையில் இருவரும் பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம […]
சுரைக்காயில் அதிகஅளவில் நீர்ச்சத்து உள்ளது. இதில் இரும்புச்சத்து, புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் வைட்டமின் பி1, பி2, சி, கால்சியம், மெக்னிசியம், பொட்டாசியம், சோடியம் போன்ற பல சத்துகள் நிறைந்துள்ளன .உடலில் ஏற்படும் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தருவதில் சுரைக்காய் முக்கிய பங்காற்றுகிறது .சுரைக்காய் பித்தத்தை குறைக்கும் தன்மையுடையது . இதனுடைய விதைகள் ஆண்மையை பெருக்கும் தன்மையுடையது . சுரைக்காயில் அதிகஅளவில் கலோரிகள் இல்லாததால் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. சுரைக்காயில் அதிக அளவில் நார்ச்சத்துகள் இருப்பதால் செரிமான […]
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்தின் , அணைப்பாளையம் சாலை மிகவும் பழுதடைந்துள்ளதால் மக்களுக்கு சிரமமேற்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்தின் , அணைப்பாளையத்தில் இருந்து, புறவழிச்சாலைக்கு வரும் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. குண்டும், குழியுமாக உள்ள இந்த சாலை வழியே செல்லும் வாகனங்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகிறது . அணைப்பாளையம் வழியாக புறவழிச்சாலைக்கு ஏராளமான வாகனங்கள் வருகின்றன. சாலையில் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள், விளைபொருட்களை கொண்டு வர மிகவும் சிரமப்படுகின்றனர். நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருங்கைக்கீரையை வாரத்தில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தப்பட்ட தொந்தரவுகளை தவிர்க்கலாம் . சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு ,எலுமிச்சைச்சாறு சேர்த்து குழைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிராது. ஆவாரம் பூவை இரவு படுக்கும் முன் கண்களில் கட்டிக்கொண்டு படுத்தால் கண்நோய் குணமாகும் . திப்பிலியை நெய்யில் வறுத்து பொடி செய்து ஒரு சிட்டிகை அளவு தேனில் கலந்து குடித்தால் இருமல் நீங்கும். ஓமத்துடன் சிறிது சீரகம் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் […]
ஈரோட்டில் கந்துவட்டி கொடுமையால், ஜவுளி தொழிலாளி ஸ்ரீதர் தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் , பழைய பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் ஈரோட்டில் ஜவுளி தொழில் செய்து வருகிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் நாற்பதாயிரம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மொத்தம் வட்டித்தொகையாக 60 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் .இவர் 30 ஆயிரம் ரூபாயை முதலில் செலுத்திவிட்டார் .பின்னர் மீதமுள்ள பணத்தையும் உடனடியாக செலுத்துமாறு நிதி நிறுவனம் மிரட்டியதால் மனமுடைந்த ஸ்ரீதர் […]
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் நினைவு சின்னமாக விளங்கும் சார்மினார் கோபுரம் நேற்று இரவு சேதமடைந்துள்ளது. ஐதராபாத்தின் அடையாள சின்னமாக விளங்கும் சார்மினார் கோபுரம் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் முகம்மது குலி குதுப் ஷாவால் என்ற மன்னரால் கட்டப்பட்டது. 1591_ம் ஆண்டு கட்டப்பட்டு 428 வயதான இந்த கோபுரம் 160 உயரமுள்ளது. சமீபத்தில் இந்த கோபுரத்தை இந்தியாவிலுள்ள தொல்பொருள் ஆய்வு நிறுவனம் ஒன்றால் புதுப்பிக்கப்பட்டது. நான்கு கோபுரங்களை கொண்டதால் சார்மினார் என பெயரிடப்பட்ட இந்த கோபுரத்தின் தூண் ஒன்று நேற்று இரவு சேதமடைந்து கீழே விழுந்தது. […]
விருதுநகர் மாவட்டம் ,சாத்துாரில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த இ.டி.ரெட்டியபட்டியில் நேற்று இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது. சாத்துாரில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த இ.டி.ரெட்டியபட்டியில் நேற்று இலவச கண்பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு அமிர்தா பவுன்டேசனின் நிறுவனர் உமையலிங்கம் அவர்கள் தலைமை தாங்கினார் . விருதுநகர், ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் துணை முதல்வர் பசுபதி அவர்கள் கண்தானத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார் .சிவகாசி, அணில்குமார் கண் மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் மக்களுக்கு கண்பரிசோதனை செய்து ஆலோசனைகளும் வழங்கினரர்கள் […]
இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை சிறைப்பிடித்த அந்த நாளை பாகிஸ்தான் ஆண்டு தோறும் கொண்டாட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பினரால் புல்வாமா பகுதியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமான படை வீரர்கள் பிப்ரவரி 26-ஆம் தேதி பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் […]
. திண்டுக்கல்லில், தக்காளி இறக்குமதி குறைந்ததால் ஒரு கிலோ ரூ.36க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் , நத்தம், ஒட்டன்சத்திரம், பழநி, வத்தலக்குண்டு பகுதிகளில் 1,800 ஹெக்டேர் நிலப்பரப்பில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. அங்கிருந்து மதுரை, சேலம், கேரளா, ஆந்திராவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் சமீபகாலமாக ,வெயிலின் காரணமாக தக்காளி சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதால் சாகுபடி குறைந்து வருகிறது.மேலும் கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.28 க்கும் ,நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.30 க்கும் விற்றது. மேலும் நேற்று கிலோவுக்கு ரூ.6 […]
கொட்டாம்பட்டி அருகில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அடுத்துள்ள குன்னாரம்பட்டியை சேர்ந்தவர் துரைப்பாண்டி. 60 வயதான இவர் விவசாயியாக உள்ளார் . சம்பவத்தன்று துரைப்பாண்டியும், அவரது மனைவியும் சேக்கிபட்டியில் உள்ள தங்களது தோட்டத்திற்கு சென்றுள்ளார். இதனால் துரைப்பாண்டி வீடு பூட்டிக்கிடப்பதை அறிந்த மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் உள்ள வைக்கப்பட்டிருந்த 21 பவுன் நகைகள் […]
ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு துறையினர் திருச்சி பாலக்கரையில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருபுவனம் தூண்டில்விநாயகம்ப்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் வாடகை பாத்திரக்கடையி ன் உரிமையாளர் ஆவார். இவர் கடந்த பிப்ரவரி 5_ம் தேதி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் 16 பேர் மீது வழக்குபதிவு செய்து 11 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு மார்ச் 14 _ம் தேதி தேசிய புலனாய்வு […]
கடுமையான வெயில் மற்றும் பலத்த காற்றின் விளைவால் நீண்ட நேரம் மின்சாரமின்றி தேனி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடைகால ஆரம்பநிலையிலேயே தேனியில் பலத்த காற்றும் கடுமையான வெயிலும் மக்களை பாதிப்புக்குள்ளாக்கியது. காலையிலிருந்து காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் சாலையில் இருந்த மணலும் காற்றோடு கலந்து , இருசக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்களின் கண்களில் விழுந்ததால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினார்கள். பலத்த காற்று வீசியதால் தேனியில் உள்ள கடைகளில் இருந்த பெயர் பலகைகள் அனைத்தும் தூக்கிவீசப்பட்டது .இதனால் காலையில் இருந்தே அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. […]
KTM நிறுவனம் தனது புதிய RC 125 CC மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்த்ரியா மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம் கே.டி.எம். தனது RC 125 மோட்டார்சைக்கிளை இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. புதிய KTM RC 125 மற்றும் KTM. டியூக் 125 மாடல்களில் 124.7 CC லிக்விட் கூல்டு என்ஜினை கொண்டுள்ளது. இது இந்தியாவில் அறிமுகமானதும் KTM RC 125 விலை குறைந்த RC மாடலாக இருக்கும். இந்த பைக் பூனேவில் சோதனை செய்யப்படும் […]
திருநெல்வேலி,பாளையங்கோட்டை அருகே சமையல் செய்தபோது உடையில் தீ பிடித்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பெருமாள்புரம், என்.எச்.காலனியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மனைவி 80 வயதான முத்தம்மாள்.இவர் சற்று மனநிலை பாதிக்கபட்டவர்.அவர் வீட்டில் அடுப்பில் சமையல் செய்த போது திடீரென உடையில் தீப்பிடித்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார் . இச்சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .
இந்திய ராணுவத்தினர் இமயமலையில் பனிமனிதனின் காலடித்தடங்களை கண்டதாக தகவல் வெளியாகியுள்ளது . இமயமலை பனிபிரதேசங்களில் பனிமனிதன் வாழ்வதாக நம்பப்படுகிறது. நேபாளத்தில் வசிக்கும் மக்கள் பனி மனிதனை கடவுளாகவே வழிபடுகின்றனர். இந்நிலையில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் இமய மலையில் ஏறும் போது மர்மமான மிகப்பெரிய காலடித் தடங்களைப் பார்த்துள்ளனர். இக்காலடி தடங்களை ஆராய்ந்த இந்திய ராணுவத்தினர், அவை எட்டியின் காலடித் தடங்கள் என்று டுவிட் செய்துள்ளனர். மேலும் மகாலு முகாம் அருகில் எட்டியின் கால்தடம் இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேபாள அதிகாரிகள், ராணுவத்தின் இந்த கூற்றை […]