ஆனந்த் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமை போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விஷால் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகிய படம் இரும்புத்திரை. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இந்த படம் சைபர் குற்றங்களை மையப்படுத்தி உருவாகியிருந்தது. கதாநாயகியாக சமந்தாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த படத்திற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகள் நடந்துவந்தன, தற்போது திரைக்கதையும் தயாராகி வருகிறது. இந்த படத்தை […]
Author: news-admin
வெள்ளகோவில் அருகே நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நூல்கள் எரிந்தன. திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள அகலரப்பாளையம் புதூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவர் டபுளிங் நூற்பாலை நடத்தி வருகிறார். இவரது நூற்பாலையில் குறைந்த எண்ணிக்கையில்லே தொழிலாளர்களே வேலை பார்த்து வருகிறார்கள்.இந்த நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலைக்கு சென்று நூற்பாலையில் வேலை செய்து கொண்டிருந்தனர். இந்த நூற்பாலைக்கு வெளியே டபுளிங் செய்த நூல் கோன்களில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. […]
இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் ‘அந்தாதுன்’ தற்போது இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் சித்தார்த்தும், திரிஷாவும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சித்தார்த்தும், திரிஷாவும் ஆய்த எழுத்து, அரண்மனை-2, தெலுங்கில் நூஒஸ்தனன்டே போன்ற 3 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தாதுன் படத்தில் ஆயுஷ்மேன் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்த இந்த படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்து வசூல் ரீதியாக நல்ல […]
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் தவறு இருந்ததால் பணத்தை திரும்ப கேட்டவருக்கு கூகுள் 10 பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை அனுப்பயுள்ளது. தனது கூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் தவறு ஏற்பட்டதால் ரெடிட் தளத்தில் சீடோஸ் என்ற பெயரில் உள்ள நபர் பணத்தை திரும்ப கேட்டிருக்கிறார். இதற்கு கூகுள் நிறுவனம் 80 டாலர்கள் மட்டுமே வழங்கியுள்ளதாகவும், மீதி பணத்திற்கு பதிலாக பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களை வழங்கியுள்ளதாகவும் வெளியாகியுள்ளது. பத்து பிக்சல் 3 ஸ்மார்ட்போன்களின் மொத்த விலை 9000 டாலர்களைவிட அதிகமாகும் (இந்திய மதிப்பில் ரூ.6,17,900) . […]
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில், இருவர் உயிரிழந்ததால் மயிலாடுதுறையில் பதற்றம் நிலவுருகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் கீழத்தெருவைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் அந்த ஊராட்சி கிராமத்தின் நாட்டாமையாக உள்ளார். அரசியல் கட்சி ஒன்றின் செயலாளராகவும் அவர் இருக்கிறார்.ஆனால் அவர் நாட்டாமையாக இருக்க தகுதி இல்லை என்று , அதே பகுதி வேல்முருகன் மற்றும் அவரது தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்றிரவு, […]
வோடோபன் நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு 12 ஜி.பி. டேட்டா வழங்கும் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. வோடபோன் நிறுவநம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு நீண்ட நாட்கள் வேலிடிட்டி வழங்கும் புதிய சலுகையை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் ரூ.999 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS உள்ளிட்டவை 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சலுகையில் பயனர்களுக்கு 12 GP டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த புதிய வோடபோன் சலுகை முதற்கட்டமாக பஞ்சாப்பில் மட்டுமே அறிவித்துள்ளது. மேலும் இச்சலுகை மற்ற வட்டாரங்களிலும் விரைவில் […]
ஹோண்டா நிறுவனத்தால் 2 மதத்திற்கு முன் வெளிவந்த CB300R பல முன்னணி நிறுவனத்தின் பைக்குகளுக்கு சவால் விட்டு வருகிறது. பிரபல நிறுவனமான ஹோண்டா நிறுவனம் இரண்டு மாதத்திற்கு முன் CB300R என்ற மோட்டார்சைக்கிளை இந்தியாவில் லாஞ்சிங் செய்தது. இந்தியாவில் இதன் விலை ரூ.2.41 லட்சமாகும். இந்த புது ரக பைக் இரண்டே மாதத்தில் இந்தியாவில் விற்று தீர்ந்த நிலையில் சுமார் 500 பைக்குகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து முன்பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பைக்கில் […]
தேவராட்டம் மற்றும் மிஸ்டர் லோக்கல் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. எம்.ராஜேஷ் இயக்கும் மிஸ்டர் லோக்கல் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் மே 1-ந் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் தீடீரென்று மே 17_ல் இப்படம் ரிலீசாகும் என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் என்ற மற்றோரு படத்தை தயாரித்துள்ளது. இந்த […]
காஞ்சி அருகே தனியார் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் கிணற்றை தூர்வாரிவிட்டு ஏறிய போது இரும்பு வடம் முறிந்து 5 தொழிலாளர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சியை அடுத்த ஆலாத்தூர் தனியார் பள்ளிக்குச் சொந்தமான இடத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தன. 70 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில், கிரேன் உதவியுடன் பெரிய மரப்பெட்டி மூலம் அப்பணியாளர்கள் கிணற்றுக்குள் இறங்கி பாறைகளைத் தகர்க்க வெடிகளைப் பொருத்தியுள்ளனர். பாறைகளை தகர்க்க வெடிகளைப் பொருத்திவிட்டு மேலே ஏறும்போது […]
ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் அதிவேகமாக கார் புகுந்து விபத்துக்குள்ளானது, இதில் ஒரு பெண் உள்பட ஒரு குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். ஜப்பானின் தலைநகரமான டோக்கியோவில் இகேபுகுரோ மாவட்டத்தில் சுரங்கப்பாதை ரெயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்த ரெயில் நிலையத்திற்கு தினந்தோறும் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வந்து செல்வதால், ரெயில் நிலையம் அமைந்துள்ள சாலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று மதியம் 12.30 மணி அளவில் இந்த சாலையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது அங்கு அதிவேகத்தில் வந்த […]
இணை இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதாநாயகனாக கலையரசன் நடிக்கவுள்ளார். இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் தற்போது வெளியாகி வெற்றி பெற்ற படம் பரியேறும் பெருமாள். இதைத்தொடர்ந்து அடுத்ததாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படம் இவரது தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்நிலையில் ரஞ்சித்துடன் இணை இணயக்குநராக பணியாற்றிய சுரேஷ் மாரி இயக்குகிறார். நீளம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கலையரசன், அரவிந்த் ஆகாஷ் போன்ற பல பிரபல நடிகர்கள் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் இன்று தொடங்கியுள்ள […]
திரிஷா நடிப்பில் உருவாகும் படத்தின் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது. இந்த படத்தில் திரிஷாவுக்கு அக்காவாக சிம்ரன் நடிக்கிறார் . ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். இதை தொடர்ந்து இவன் வேறமாதிரி, வலியவன் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது உருவாகும் இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்ஷன் படமாக தயாராகவுள்ளது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார், அவருக்கு அக்காவாக சிம்ரன் நடிக்கவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படத்தின் டைட்டில் இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. […]
உளுந்தூர்பேட்டை பகுதியில் பேருந்திலிருந்து கீழே விழுந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அடுத்துள்ள ஆசனூர் ராஜவீதியில் வசிப்பவர் சரவணன் வயது 34 . இவர் டெல்லியில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தந்தை குணசேகரன் என்பவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் அவரின் உடல்நிலையை கவனிப்பதற்காக டெல்லியிலிருந்து ரயில் மார்க்கமாக விழுப்புரம் வந்தடைந்தார். பின்னர் ரயில் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி உளுந்தூர்பேட்டை ஆசனுர் பஸ் நிறுத்தம் அருகே பேருந்தில் […]
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செய்தித்தொடர்பாளர் ஆர்.சரஸ்வதி டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் செயலாளராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்லில் அமமுகவுக்கு ஒரே சின்னம் ஒதுக்க முடியாது என்று ஆணையம் கைவிரித்தது.ஒருவரது கட்சியை பதிவு செய்தால்தான் அவர்களுக்கு ஒரே சின்னம் அளிக்க முடியும் என்று ஆணையம் விளக்கம் அளித்த நிலையில் .ஒரு வாரத்தில் தனது அமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய டி.டி.வி. தினகரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது […]
நடிகை ஸ்ருதிஹாசன் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிப்பை தொடருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழில் பிரபல நடிகர்களுடன் சேர்ந்து நடித்த இவர் 2 ஆண்டுகளாக சினிமாவிலிருந்து விலகியிருந்தார். சமீபத்தில் இவர் தனது காதலனுடன் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆக போவதாக தகவல் பரவியது இதற்கு ஸ்ருதி மறுப்பு தெரிவித்தார். இது குறித்து தற்போது நடிகை ஸ்ருதஹாசன் விரைவில் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க […]
பா .ஜனதா காவல்துறையை தவறாக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பெங்களூரில் உள்ள அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் பண மதிப்பிழப்பிறகு பின் 2 ஆண்டுகளில் 50 லட்சம் மக்கள் வேலையை இழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் கட்சியான பா.ஜனதாவிற்கு வேலைவாய்ப்பின்மை பற்றிய விவகாரம் ஒரு சவாலாக உள்ளது. இந்நிலையில் தற்போது கோவாவில் நடந்த பா.ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் அப்பகுதியின் பா.ஜனதா அமைச்சர் ரானேவிடம் வேலைவாய்ப்பின்மை தொடர்பாக கூட்டத்திலிருந்த தர்சன் கோன்கார் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தர்சன் கூறுகையில் […]
எஸ்.ஏ.பாஸ்கரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் மெய் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் புதுமுக கதாநாயகனுடன் நடிக்கயிருக்கிறார். சித்திக், கமல்ஹாசன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன், ‘மெய்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து சார்லி, கிஷோர் ஆகிய இருவரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படம் குறித்து இயக்குனர் எஸ்.ஏ.பாஸ்கரன் கூறுகையில், படத்தில் நடிக்கும் கதாநாயகன் நிக்கி சுந்தரம் அமெரிக்காவில் படித்து வளர்ந்தவர். படத்திற்கு எர்த்தாற்போல தன்னை தயார்படுத்திக் […]
மதுபான கடைகள் விடுமுறை நாளில் மதுபானத்தை பதுக்கி அதிக விலைக்கு விற்றவர்கள் 40 பேரை போலீசார் கைது செய்தனர். மக்களவை தேர்தல் நாளில் மதுபான கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பதுக்கி அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை அதிகாரி சந்தோஷ் ஹதிமானிக்கு ரகசிய முறையில் தகவல் கிடைத்தது. காவல்துறை அதிகாரிக்கு கிடைத்த தகவலின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் சட்டவிரோதமாக பதுக்கி மதுபானம் விற்பனை செய்பவர்களை கைது செய்து மதுபாட்டில்களை […]
நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகும் படத்தில் பிரபல நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அருள்நிதி, இயக்குனர் பரத் நீலகண்டன் இயக்கத்தில் கே13 என்ற படத்தை நடித்து முடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அருள்நிதியின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அருள்நிதி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணே கலைமானே படத்தை இயக்கிய சீனு ராமசாமி இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை அஞ்சலி நடிக்கவுள்ளார். கிராமத்து […]
வேதாரண்யம் பகுதியில் புதிய பைக் வாங்கி வந்த இளைஞர் எதிரே வந்த பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கிராமத்தில் வசிப்பவர் வீரப்பன். அவருடைய மகன் சிவதாஸ் வயது 22 . இவர் புதிய பைக் வாங்கி அண்டர்காடு சாலை வழியாக வேதாரண்யத்திற்கு ஒட்டிச் சென்றார். அப்போது எதிரே விஜயராகவனும் , ஞானவிக்னேசும் ஓட்டி வந்த பைக் சிவதாஸ் மீது எதிர்பாரத விதமாக வேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் […]
நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் வாக்குச்சாவடியில் வானத்தை நோக்கி தூப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. பாராளுக்குமன்ற தேர்தலில் இரண்டாம் கட்ட வகுப்பதிவு, தமிழகத்தில் 32 பாராளுமன்ற தொகுதிக்கும் 18 சட்டமன்ற தொகுதிக்கும் அதைப்போல புதுச்சேரியில் ஒரு பாராளுமன்ற தொகுதிக்கும், மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.காலை 6 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். இந்நிலையில், அரக்கோணம் தொகுதி ஆற்காடு வாக்குச்சாவடி வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில் பொதுமக்கள் வாக்களிக்க திரண்டு வந்ததால், […]
தி.மு.க பிரமுகர் வெட்டி கொலை செய்ப்பட்டதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. மதுரை சிந்தாமணியை சேர்ந்த திமுக பிரமுகரான பாண்டி, அங்குள்ள வாக்குச் சாவடியில் இன்று வாக்களிப்பதற்காக சென்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த 5 மர்ம நபர்கள் பாண்டியை நடுரோட்டில் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இந்நிலையில் பல வெட்டு காயங்களுடன் அருகில் இருந்த வீட்டுக்குள் ஓடிய அவரை துரத்திச் சென்று மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர் . இதில் சுயநினைவின்றி உயிருக்கு போராடிய அவரை […]
கன்னியாகுமரி விரவநல்லூர் வாக்குசாவடியில் பா.ஜனதா, அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் இன்று நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் சுறுசுறுப்பாக தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். மேலும் சினிமா பிரபலங்கள் பலரும் வாக்களித்தனர். இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதியில் பூதப்பாண்டியை அடுத்துள்ள வீரவநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் பா.ஜனதா மற்றும் அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் நேரமாக நேரமாக பெரியதாகி இறுதியாக மோதலில் முடிந்தது. இந்த மோதலில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் […]
பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள வாக்குசாவடியில் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிகியுள்ளது. தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பாராளுமன்ற தேர்தலும், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெற்றுவருகிறது. இதில் பதற்றமான 8,293 வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பிற்காக கூடுதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 30 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவினை கண்காணிக்க கேமராக்கள் பொறுத்தபட்டுள்ளன. வெயிலை பொருள்படுத்தாமல் சுறுசுறுப்பாக மக்கள் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் ”பண்ருட்டி அருகே திருவதிகையில் உள்ள வாக்குசாவடியில் வாக்குபதிவு இயந்திரத்தின் பட்டன்கள் உடைந்ததால் அந்த […]
வேலூர் தொகுதியில் எங்கள் வேட்பாளர் செலவிட்ட தொகையினை தேர்தல் ஆணையம் பொறுப்பேற்றுக்கொள்ளுமா என்றும் கேள்வி எழுப்பினர் வேலூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதால் வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்துசெய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதையடுத்து இன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சீமான் சாலிகிராமத்தில் உள்ள தொடக்க பள்ளி வாக்குச்சாவடிக்கு சென்று மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் வேலூர் தொகுதியில் தேர்தல் ஆணையம் பொறுப்பற்ற தன்மையுடன் செயல்பட்டுள்ளது.அத்தொகுதியில் முறைகேடு […]
துணை நடிகரான ரோபோ சங்கரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் உட்பட 13 மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் உற்சாகத்துடன் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள காவிரி பள்ளியில் ஓட்டுப்போடுவதற்காக காலை 6.30 மணியிலிருந்து காத்திருந்தார் நடிகர் ரோபோ சங்கர். ஆனால் […]
அனைத்து தேர்தல் அதிகாரிகளும் இன்று ஒரு நாளாவது அவர்களது பணிகளில் நேர்மையாக செய்ல்ப்பட்டு வாக்குப்பதிவினை முடிக்க வேண்டும் என்று திருமாவளவன் வேண்டுகோள்விடுத்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுகிறார். அரியலூர் மாவட்டத்திலுள்ளா அங்கனூர் எனும் கிராமத்தை சேர்ந்த இவர் இன்று காலை அங்கனூர் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் தனது தாயாருடன் வரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்தார். பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , தற்போது […]
அழகு சாதன பொருள்களின் விளம்பர படத்தில் நடிக்கமாட்டேன் என்று நடிகை சாய்பல்லவி தெரிவித்துள்ளார். பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழில் கரு, மாரி 2 என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். சாய்பல்லவி தற்போது சூர்யாவுடன் நடித்த என்ஜிகே திரைப்படம் மே 31-ந் தேதி திரைக்கு வரயிருக்கிறது. இந்நிலையில் தற்போது சாய் பல்லவிக்கு அழகு சாதனப்பொருள் நிறுவனத்தின் விளம்பரம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதற்கு அந்த நிறுவனம் நடிகை சாய்பல்லவிக்கு சம்பளமாக ரூ.2 கோடி […]
நாளை தேர்தல் நடைபெற உள்ளதால், தியேட்டர்களில் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பெருமளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்கள் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் வாக்களிக்க எதுவாக நாளை அவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளிக்க […]
கிராமத்து கிரிக்கெட் வீரர்களை சென்னைக்கு அழைத்து வந்து விருந்து மற்றும் விருது கொடுத்து அவர்களை சிவகார்த்திகேயன் நெகிழ வைத்துள்ளார். இயக்குனர் பொன்ராம், இயக்குனர் எம்.பி.கோபி அவர்களின் சொந்த ஊர் உசிலம்பட்டி. இந்த ஊரில் அவர்கள் படித்த அரசு மேல் நிலைப்பள்ளியில், உசிலம்பட்டி வட்டார இளைஞர்களுக்காக ஒரு மாபெரும் இரண்டு நாள் கிரிக்கெட் போட்டி நடத்தியுள்ளார்கள். இந்த கிரிக்கெட் போட்டியில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டார்கள். இதில் வெற்றி பெற்ற அணியை திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் சென்னைக்கு அழைத்து வந்து ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் […]
தேர்தல் வாக்குப்பதிவுக்கான அணைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார் . நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை நேற்றோடு முடிவடைந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துவருகின்றன.இதையடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களை சந்திக்கையில் ,தேர்தல் விதிமீறல் தொடர்பாக, 4 ஆயிரத்து 400 வழக்குகள் பதிவு செய்ப்பட்டிருக்கின்றது , வருமானவரித்துறையின அறிக்கையின்படியே வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்று தெரரிவித்தார். […]
பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தும் வகையில் மீன்சுருட்டி , ஆண்டி மடத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாகவே பொதுமக்களிடம் போலீசார் துண்டு பிரசுரங்களை வழங்கியும், பல விழிப்புணர்வு ஊர்வலங்களை நடத்தியும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தின.ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 290 வாக்குச் சாவடி மையங்களில் 35 மையங்கள் பதற்றமானவை என்றும், அதில் நெருக்கடியான மையம் 2 எனவும் […]
தேசிய கட்சிகளால் தமிழக மக்களுக்கு எந்த வித பயனும் இல்லை என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை நேற்றோடு முடிந்தது.இந்நிலையில் நேற்று வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சந்தானகிருஷ்ணன்மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வெற்றிவேல் ஆகியோரை ஆதரித்து அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். இதில் திரு.வி.க. நகர், வியாசர்பாடி, கொளத்தூர், பெரம்பூர் ,வில்லிவாக்கம், அயனாவரம் […]
கோடை விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக பலரும் தனது கிராமங்களுக்கு செல்வதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோடை விடுமுறை, தேர்தல், புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து விடுமுறை என்பதால், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த கிராமங்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதற்க்கென அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நேற்று 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கபட்டுள்ளன. இந்நிலையில் நேற்று ஆயிரக்கணக்கான பயணிகள் கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூர் பகுதிகளில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரவு […]
அரசியலுக்கு வந்துப்பார் என்று சவால் விட்டவர்கள் இப்போது ‘ஏன்டா வந்த? என்று கேட்கின்றனர். ‘என்னத்தான்டா பிராப்ளம் உங்களுக்கெல்லாம்? என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் இன்று மாலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆதிக்கவாதிகளும் வேண்டாம்- அடிமைகளும் வேண்டாம்! ஊழலற்ற ஆட்சி அமைய எங்களுக்கு வாக்களியுங்கள்! என்னும் அதிமுக விளம்பரத்தையும், மோடியின் ஆட்சி […]
நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று டுவிட் செய்துள்ளார். அவர் டுவிட்டரில் கூறியதாவது, மாம்பழமோ? மாபெரும் பழமோ? பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் வாதிகளுக்கு தேர்தல் தேத்துதல் பணம், வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள் அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம் மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு… மாம்பழமோ? மாபெரும் பழமோ?பழம் தின்று கொட்டை போட்ட […]
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகைகளில் ஒருவரான சாய் பல்லவி தான் மேக்கப்பை விரும்பாத காரணத்தை கூறியிருக்கிறார். பிரேமம் படத்தில் மலர் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்த சாய் பல்லவி. தமிழில் கரு, மாரி 2 என இரண்டு படங்களில் நடித்துயிருக்கிறார். தற்போது சூர்யாவுடன் நடித்த என்ஜிகே திரைப்படம் மே 31-ந் தேதி திரைக்கு வரயிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் சாய் பல்லவி அளித்த பேட்டியில், ’நான் ஒருபோதும் அழகு சாதன பொருள்களின் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன். அழகு சாதன பொருட்களையும் […]
மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் ‘பியார்’ படத்தில் யோகிபாபு பேய்களை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராகவா லாரன்சின் உதவி இயக்குனரான மில்கா எஸ்.செல்வகுமார் தற்போது இயக்கி கொண்டிருக்கும் படம் சண்டி முனி. இப்படம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து மில்கா எஸ்.செல்வகுமார் ‘பியார்’ என்ற புதிய படத்தை இயக்கஉள்ளார். இதில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் இவருடன் வாசு விக்ரம், ஆர்த்தி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கஉள்ளார். இது ஒரு காதலுடன் கூடிய நகைசுவை கலந்த திகிலூட்டும் திரைப்படமாகும். மேலும் எஸ்.செல்வகுமார் கூறுகையில், […]
தமன்னா நடிப்பில் தேவி 2 விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தெலுங்கில் வெற்றி பெற்ற ஹாரர் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான படம் ‘அனந்தோ பிரம்மா’. இது ஒரு ஹாரர் காமெடி படமாகும். இந்த படத்தில் டாப்சி, வெண்ணிலா கிஷோர், ஸ்ரீனிவாஸ் ரெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால் இந்த படத்தை மற்ற மொழிகளிலும் ரீமேக்காக தயாரிப்பதற்கு நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அனந்தோ பிரம்மா படத்தை தமிழில் ரீமேக்காக தயாரிக்கவுள்ளனர். இந்த படத்தில் டாப்சி நடித்த […]
கோபி நயினார் இயக்கத்தில் உருவாக இருக்கும் அடுத்த படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கயிருக்கிறார். கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில்வெளிவந்த படம் அறம். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாகவும் கோபி நயினார் அறிவித்தார். ஆனால், அதற்கு முன்னதாக ஒரு படம் இயக்கவுள்ளார். அந்த படத்தில் கதாநாயகனாக பாபி சிம்ஹா நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை விரைவில் துவங்க போவதாக கோபி நயினார் அறிவித்துள்ளார். இது ஒரு ஆக்ஷன் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாகும் இந்த படம் பற்றிய […]
சல்மான்கான் தற்போது நடித்துள்ள படம் ‘பாரத்’ இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் சல்மான்கான் நடித்துள்ளார். இந்தி சினிமா துறையில் பிரபலமான நடிகர் சல்மான்கான் இவர் ஒரு படம் நடிப்பதட்க்கு ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிவருகிறார். இவருக்கு தற்போது 53 வயது ஆகிறது இன்னும் இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்களும் வெளிவருகின்றன. இந்நிலையில் சல்மான்கான் இந்தியில் ‘பாரத்’ என்ற படம் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில்நல்ல வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தில் கத்ரினா கைப், திஷா பதானி, தபு ஆகியோர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் […]
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பெரிய உச்சத்தை தொட்ட நடிகர் தான் சிவகார்த்திகேயன். இவர் முதல் முறையாக தயாரித்த படம் கனா இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 2-வது முறையாக சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா. கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்த படத்தில் சின்னத்திரை பிரபலமான ரியோ ராஜ், ஆர்ஜே விக்னேஷ்காந்த், ராதா ரவி, நாஞ்சில் […]
சமீர் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் படத்தில் சின்னத்திரை ஹிரோயின் நாயகியாக நடித்துள்ளார். சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்படும் வாணிபோஜன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆஹா’ சீரியலில் மூலம் அறிமுகமானார். பின்னர் ‘தெய்வமகள்’ சீரியலில் நடித்தார். இந்த சீரியலின் மூலம் பிரபலமானார். இந்நிலையில் வாணி தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். சமீர் இயக்கம் இப்படத்தில் தருண் பாஸ்கர் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். இது குறித்து வாணி கூறுகையில் “தனக்கு தெலுங்கு மொழி சரியா தெரியாது என்றாலும் கூட படக்குழுவினர் […]
இயக்குனர் ஜித்து ஜோசப் இயக்கும் திரில்லர் படத்தில் கார்த்தியும் , ஜோதிகாவும் இணைந்து நடிக்கிறார்கள். கடந்த ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான ”காற்றின் மொழி” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து நடிகை ஜோதிகா அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கவுள்ளார். தற்போது அறிமுக இயக்குனர் எஸ்.ராஜ் இயக்கத்திலும், குலேபகாவலி படத்தை இயக்கிய இயக்குனர் கல்யாண் இயக்கத்திலும் ஜோதிகா நடித்து வருகிறார். இந்நிலையில் ஜோதிகா ஜித்து ஜோசப் இயக்கும் திரில்லர் படத்தில் ஜோதிகா இணைந்துள்ளார். இப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இந்த […]
பிரபுவின் 225-வது படமாக ‘காலேஜ் குமார்’ என்ற படம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடத்தப்பட்டது. பிரபு 1982-ல் சங்கிலி என்ற படத்தில் அறிமுகமாகி 37 வருடங்களாக நடித்து வருகிறார். இவர் 37 வருடங்களில் 224 படங்கள் நடித்துள்ளார். தற்போது 225-வது படமாக ‘காலேஜ் குமார்’ என்ற படம் தயாராகிறது. இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரையுலகினர் பலரும் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக ராகுல் விஜய்யும், கதாநாயகியாக பிரியாவட்லமனி நடிக்கிறார். எல்.பத்மநாபா […]
வீரகுமார் இயக்கத்தில் உருவாகும் திரில்லர் படத்தில் நடிகை வரலட்சுமி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை வரலட்சுமி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என்று பல்வேறு மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தனி கதாநாயகியாக ‘டேனி’, ‘வெல்வெட் நகரம்‘, ராஜபார்வை போன்ற படங்களில் நடித்துவருகிறார். மேலும் கன்னித்தீவு, கன்னிராசி, நீயா 2, காட்டேரி, தெலுங்கில் தெனாலிராமன் பி.ஏ.பி.எல், கன்னடத்தில் ரணம் ஆகிய படங்களில் நடித்துவருகிறார். இந்நிலையில் நடிகை வரலட்சுமி வீரக்குமார் இயக்கத்தில்`சேஸிங்’ படத்தில் நடிக்கவுள்ளார். வரலட்சுமியின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் […]
ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் நித்யா மேனன் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜமவுலி பாகுபலி படத்தை தொடர்ந்து இயக்கும் படம் ஆர்ஆர்ஆர். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதில் கதாநாயகியாக நடிக்க ஆலியாபட், டெய்சி இருவரும் நடிக்க ஒப்பந்தமானார்கள். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தால் டெய்சி படத்திலிருந்து விலவிலகிவிட்டார் அவருக்கு பதிலாக மற்றொரு ஹீரோயினை தேடி வருகின்றனர். இந்நிலையில் நித்யாமேனன், ஷரத்தா கபூர், பரிணிதி சோப்ரா எனமூன்று பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களில் […]
நிதின் கட்கரி 8 வழி சாலை அமல்படுத்துவோம் என கூறியபோது தமிழக முதலமைச்சர் தடுக்காதது ஏன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் திமுக சார்பில் ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின் , மோடி குஜராத் மாநிலத்தை மிக சிறந்த மாநிலமாக […]
எம்எல்ஏ-க்கள் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீடிரென அதிரடி சோதனையில் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேப்பாக்கத்தில் உள்ள எம்எல்ஏக்கள் தங்கும் விடுதியில் நேற்றிரவு, 10 மணியளவில், எம்எல்ஏக்கள் விடுதியில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்ததை அடுத்து, தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள், திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இதில் விடுதிகளில் உள்ள சி-பிளாக் பகுதியில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் குறிப்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறையிலும் நடைபெற்றது.சுமார் 2 மணிநேரம் […]
திருச்செந்தூரில் வாக்காளருக்கு பணப்பட்டுவாடா செய்ய எடுத்துச் செல்லப்பட்ட பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செயப்பட்டது. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைதேர்தலுக்கு வாக்குப்பதிவு வருகின்ற 18ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தப்பட்டு பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயமொழி மத்திமான்விளை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன […]