Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஓடும் ரயிலில் மர்ம நபர்கள் கைவரிசை… போலீஸ் வலைவீச்சு…!!

கோவை- சேலம் இடையே செல்லும் ரயிலில் பெண்ணிடம் நகையை திருடிச் சென்ற  மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வசித்து வருபவர் காமராஜ். இவர் கோயமுத்தூரில் உள்ள ஆர்.எஸ்.புரத்தில்  ஒரு பழக்கடைஒன்றில்  கேஷியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சிவகாமி (வயது 48).  இவர் சேலத்தில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று மதியம் புறப்பட்டார். கோவை ரயில் நிலையத்தில் ஆலபுழா- மத்தியபிரதேசம் செல்லும் பெக்காரோ ரயிலில் புறப்பட்டனர். கைப்பையில் வைத்திருந்த  நெக்லஸ். மோதிரம் மற்றும் தங்க நாணயம் என […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க தயார்..!! பிரபல நடிகை..!!

ஜெயலலிதா அவர்களின் வேடத்தில் நடிக்க தயாராக உள்ளேன் என்று பிரபல நடிகை  தெரிவித்துள்ளார். ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தின் மூலம் திரையில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். இவர் மேலும் சில படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தற்போது தனது உடல் எடையை குறைத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் எனக்கு மிகவும் பிடித்தது சாப்பாடு இதனால் என் உடல் எடை கூடியுள்ளதாக சிலர் கூறினார்கள். இதை தவிர்க்க என் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து எனது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை…. இரணியில் சோகம் …!!

இரணி  அருகே 8_ஆம்  பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் இரணி  காரங்காட்டில் உள்ள நுள்ளிவிளையைச் சேர்ந்தவர் பால்ராஜ். அஜிஷா எனும் இவரின் மகள்  நாகர்கோவிலில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளுக்கு  இறுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. அஜிஷா நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு இறுதிதேர்வினை  எழுத சென்றிருக்கிறார் . தேர்வு எழுதி முடித்தி விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிய அஜிஷா சிறிது நேரம் விளையாடி வந்துள்ளார்.திடீரென அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அவரது […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராயிக்கு வந்த ஆசை…!!!

தமிழ், இந்தி படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராய் தற்போது ஹாலிவுட் படங்களில் நடிக்க ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.  எந்திரன் படத்தை அடுத்து  தற்போது ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு வரஉள்ளார். இந்த படத்தை பொன்னியின் செல்வன் நாவலை வைத்து திரைப்படமாக்கும் முயற்சியில் மணிரத்னம் உள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் ஐஸ்வர்யா ராயின் கவனம் முழுவதும் ஹாலிவுட்டின் பக்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய சாதனை படைத்த ஆளப்போறான் தமிழன்…!!!

மெர்சல் படத்தில் உள்ள ஆளப்போறான் தமிழன்’ பாடல் தற்போது யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் `மெர்சல்’. இந்தப்படம் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாகும். `மெர்சல்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள `ஆளப்போறான் தமிழன்’ பாடலும் சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பபை பெற்றது. கடந்த நவம்பர் மாதம் வெளியாகிய இந்த பாடல் யூடியூப்பில் வெளியாகியது. தற்போது இந்த பாடல் யூடியூப்பில் புதிய சாதனையை படைத்துள்ளது, இதுவரை இந்த பாடலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 100 மில்லியனை தாண்டியுள்ளது. இந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர மக்கள் கோரிக்கை…!!

பண்ருட்டியில் பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி அறையில் இயங்கும் ரேஷன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே காட்டாண்டி குப்பம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 500க்கு அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களாக  இந்த பகுதி ரேஷன் கடை பழுதடைந்த நிலையில்  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இயங்கி வருகிறது. இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் எங்கள் பகுதிக்கு ரேஷன் கடைக்கான கட்டிடம்  கட்டப்படவில்லை […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

தவறாக நடக்க முயன்ற வாலிபர் ஆவேசத்தில் அறைந்த குஷ்பு…!!!

தவறாக நடந்து கொண்ட வாலிபர் குஷ்பு கன்னத்தில் அறைந்ததால் அந்த இடத்தில் பரபரப்பு நிலவியுள்ளது.   2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. இந்நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் இன்று நடைபெற்றது. ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், தெலங்கானா, பீகார், அசாம், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 91 தொகுதிகளில், 1285 பேர் களத்தில் உள்ள நிலையில், இதில் 89 பேர் பெண்கள் உள்ளனர். எல்லா தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்று […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சத்தியமங்களம் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை…!!

 தஞ்சாவூர் அருகே தொழிலாளி வயிற்று வலி காரணமாக விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம்  கபிஸ்தலம் அடுத்துள்ள  சத்தியமங்களம் ஊராட்சியில் வாழ்க்கை கிராமத்தைச் சேர்ந்த  ராமலிங்கம்  (வயது 60) . இவர் விவசாயக்கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில்  தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். மேலும் வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த கூலித்தொழிலாளி வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். மயங்கிய ராமலிங்கத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி  இறந்தார். இச் சம்பவம் குறித்து அவரது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சில அரசியல் கட்சிகளுக்கு இளையராஜா கண்டனம்…!!!

நடிகர்களின் புகைப்படத்தை பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு இசையமைப்பாளர் இளையராஜா கண்டனம். பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் களத்தில் சில அரசியல் கட்சிகள், பிரச்சார யுக்திக்காக நடிகர்களின் புகைப்படங்களைப் பயன் படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்படி பயன்படுத்தும் போது சம்பந்தப்பட்ட நடிகர்கள் அது குறித்து அறிக்கை மூலமாக இதற்கு விளக்கம் அளிப்பார்கள். அதே போல் இந்தத் தேர்தலில் சில அரசியல் கட்சிகள் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்துவதாக தெரியவந்தது. இது சர்ச்சையாவதற்குள் அதை தடுப்பதற்காக, இளையராஜா தரப்பு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சில […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீயணைப்புத்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை…!!

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தீயணைப்புத்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்துள்ள வன்னியம்பட்டி ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் வீரராஜ் வயது 45 . இவர் விருதுநகர் மாவட்டம் அருகே உள்ள கள்ளிக்குடி தீயணைப்பு நிலையத்தில் அலுவலராக வேலை செய்து வருகிறார்.நேற்று வீரராஜ் வேலைக்கு சென்றதால் அவரது மனைவி சங்கீதா இரவு 10 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு அருகிலுள்ள உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தார். இதனை தினமும் நோட்டமிட்ட கொள்ளையர்கள் இரவு வீட்டிற்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தர்பார் படத்துடன் மொத இருக்கும் யோகி பாபு…!!!

யோகி பாபு தற்போது புதிதாக கதாநாயகனாக நடிக்க இருக்கும் படத்திற்கு அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறாராம். யோகி பாபு தற்போது அவர் கைவசம் 18 படங்களுக்கு மேல்  வைத்திருக்கும் தமிழ்த் திரையுலகின் முன்னணி காமடி நடிகர். தற்ப்போது இவர் காமெடியுடன் கூடிய கதாநாயகன் வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்நிலையில் யோகி பாபு கதாநாயகனாக நடித்த  ‘தர்மபிரபு’படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப்படம் மே மாதம் திரைக்கு வரவுள்ளது,மேலும் இதை தொடர்ந்து  ‘கூர்கா’, ‘ஜாம்பி’ போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தம்பதியினரிடம் கைவரிசை..! போலீஸ் வலைவீச்சு…!!

அவனியாபுரம் அருகே  பைக்கில் சென்ற பெண்ணின் கழுத்திலுள்ள  நகையை மர்மநபர்கள் பறித்து சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. மதுரை மாவட்டம் அருகே மேல அனுப்பானடியில் வசித்து வரும் சுந்தரராஜனும்  மனைவி ராஜேஸ்வரியும்  மோட்டார் சைக்கிளில் சிந்தாமணி பகுதி வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில்  வந்த 2 பேர், ராஜேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த  2 சரவன் தங்க நகையை பறித்து சென்றனர். இதில் நிலைதடுமாறிய தம்பதியினர் இருவரும் மோட்டார்  சைக்கிலிருந்து  கீழே விழந்தனர். இதில் படுகாயமடைந்த  ராஜேஸ்வரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பெண்ணிடம் நகை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோடை வெயிலில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த பூங்கா…!!

 கோடை கால வெயிலில் குளிர்ச்சி அளித்து வரும் ஐந்திணை மரபணு பூங்காவிற்கு பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் அருகே தோட்டக்கலைத்துறை சார்பில், அமைக்கப்பட்ட ஐந்திணை மரபணு பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பூங்கா கடந்த வருடம் திறக்கப்பட்டது. அங்கு சினிமா ‘சூட்டிங்’ எடுக்கவும் அனுமதித்துள்ளனர். இங்கு அமைந்துள்ள  நிலங்களின் சிறப்பிற்கு ஏற்றார் போன்று ஐந்திணை பூங்கா அமைக்கப்பட்டது.குறிச்சி பூங்கா சேலம் ஏற்காட்டிலும், முல்லை பூங்கா திண்டுக்கல் சிறுமலையிலும், நெய்தல் பூங்கா நாகப்பட்டினம் திருக்கடையூரிலும், மருதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓட்டுக்கு பணம் கொடுப்பது குற்றம்” விளம்பர பலகை வைக்க கோரிய மனு தள்ளுபடி…

ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என விளம்பர பலகை வைக்க கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கு பதிவாக நடைபெறுவதாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு பொதுமக்களும், தொண்டர்களும் உற்சாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சரவணன் இயக்கத்தில் திரிஷா…. கதை எழுதும் ஏ.ஆர்.முருகதாஸ்…!!!!

சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் கதையை எழுதுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சரவணன். இதை தொடர்ந்து இவன் வேறமாதிரி, வலியவன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். மேலும் கன்னடத்தில் சக்ரவியூகா என்ற படத்தை இயக்கினார். இதனிடையே ஒரு விபத்தின் காரணமாக சில காலம் ஓய்வில் இருந்தார். தற்போது மீண்டும் பணிக்கு திரும்பி விட்டார். இந்த படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆக்‌ஷன் படமாக சரவணன் இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். திரிஷாவுடன் இணைந்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பட வாய்ப்பு இல்லாததால் அனுபமா செய்த காரியம்…!!!

மலையாளத்தில் பிரேமம், தமிழில் கொடி படத்திலும் நடித்து பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன் புது முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.  மலையாளத்தில் வெளியாகிய பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான சாய்பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டியன். இவர்கள் மூவருமே தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துவருகின்றனர். இந்நிலையில் சாய் பல்லவிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. மாரி 2 படத்தில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இதேபோல் கோடி படத்தில் தனுஷ் ஜோடியாக அனுபமா நடித்துள்ளார், ஆனால் இந்த படம் சரியாக போகவில்லை. தெலுங்கில் 4 படங்கள் நடித்துள்ளார், […]

Categories
அரசியல் செய்திகள் சென்னை மாவட்ட செய்திகள்

“கருத்துக் கணிப்பு வெளியிட தடை” தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு…!!!

பாராளுமன்ற தேர்தலில் கருத்து கணிப்பு வெளியிட தடை தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு உத்தரவு 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு   7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது .  இந்நிலையில் தமிழகத்தில் வருக்குன்ற 18 ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்கு பதிவாக 40 பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு நடைபெறுகின்றது காலை  இந்நிலையில் மதுரை மக்களவை தொகுதியில் மட்டும் காலை ஏழு […]

Categories
Uncategorized அரசியல்

அரசியலுக்கு வர ரஜினிக்கு பயம் இல்லை!! பவர் ஸ்டார் கருத்து….!

தேர்தலுக்கு வர நடிகர் ரஜினிகாந்துக்கு பயமில்லை என நடிகர் பவர்ஸ்டார் கூறியுள்ளார். தமிழகத்தில் நடைபெறும் மக்களவை மற்றும் 18 சட்டபேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்  வாக்குப்பதிவு ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெறுகின்றது . இந்த தேர்தல் ஐந்து முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது . திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , மக்கள் நீதி மைய்யம் , நாம் தமிழர் கட்சி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை களம் காண்கின்றது நாடாளுமன்றத் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அரசு மருத்துவமனை ஊழியருக்கு கத்திக்குத்து…!!

  சிவகங்கை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து ஊழியர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் நேரு பஸார்  தெருவில் வசித்து வருபவர் தமிழ்செல்வன். அவர்  அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் வேலையில் ஈடுபட்டிருந்த போது, அவரைநோக்கி வேகமாக வந்த ஒக்கூரைச்  சேர்ந்த அருண்குமார் என்ற வாலிபர் தான்  மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழ்ச் செல்வனை சரமாரியாக குத்தினார்.   இதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து  சரிந்து விழுந்த தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மணல் கொள்ளை மாட்டுவண்டிகள் பறிமுதல்”

சேத்துப்பட்டு-ஆரணியில் மணல் கடத்திய மாட்டு வண்டி சேத்துப்பட்டை அடுத்த உள்ள ஓதலவாடி கிராமம் அருகே உள்ள செய்யாறு  குப்பம் கிராமத்தை சார்ந்த ராமஜெயம் வயது 38 ஆறுமுகம் 68, சந்தோஷ் 21 ஆகிய மூவரும் மூன்று( 3) மாட்டு வண்டிகளில் தனித்தனியாக மணலினை கடத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த  இன்ஸ்பெக்டர் நரசிம்மன், சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் 3 மாட்டு வண்டிகளையும் மூவரையும் மடக்கிப்பிடித்து அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராமலிங்கம் […]

Categories
அரசியல் செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“தமிழகம் வருகிறார் மோடி “

  வரும் 13ம் தேதி ராமநாதபுரம் வருகை தருகிறார் பிரதமர் மோடி    தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராமநாதபுரத்தில்மோடி வருகிற 13-ந்தேதி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதன் பிறகு ராமநாதபுரம் பாரதிநகர் அம்மா பூங்கா அருகில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து முரளிதரன் மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கூறியதாவது: வருகின்ற 13-ந் தேதி காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டரின் மூலம் ராமநாதபுரம் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விடுதியில் மாணவர் தற்கொலை..!போலீசார் தீவிர விசாரணை…!!

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில்  பொறியியல் கல்லூரி மாணவர் பெண்  வேடமிட்டபடி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரியில்  கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த எபின் ராபர்ட் என்ற மாணவர் எந்திரவியல் 3 ‘ஆம் ஆண்டு படித்து வந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி இருந்த எபினுக்கு நீண்ட நாட்களாகவே பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் தெரிவித்தனர். விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில்  பெண்கள் அணியும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கிணற்றில் குளித்த மாணவன் பலி “

கோத்தகிரி  வட்டாரம் அருகே கிணற்றுக்குள் சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசாரால் வழக்குப்பதிவு செய்ப்பட்டு  விசாரணை நடைபெற்று வருகிறது. சண்முகம் இவர் கோத்தகிரி அருகில் உள்ள போத்திமுக்கு கம்பியூர் பகுதியை சேர்ந்தவர். கூலித்தொழிலாளி. இவரது மகன் சக்திவேல் ஆறு வயது.  இவன் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். சக்திவேல் நேற்று பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பின்னர் விளையாடசென்றுள்ளான் . ஆனால் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. […]

Categories
அரசியல் கரூர்

“8 வழி சாலை” மேல்முறையீடு ? ஜான் பாண்டியன்.

வளர்ச்சியை முன்னோக்கியது.8 வழிச்சாலை திட்டம் ஆகவே தமிழக அரசு சார்பில் ஆளும்  ஆ .தி .மூ க சார்பில் மேல்முறையீடு செய்வதில் எந்தவித தவறுமில்லை என்று ஜான் பாண்டிணன் கூறியுள்ளார். கரூரில் ஜான்பாண்டியன் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது:- தேவேந்திர குல வேளாளர்களை  பற்றி இதுவரை பேசிடாத தி.மு.க. தேர்தல் சமயத்தில் பேசுவது தேர்தல் ஆதாயத்திற்காக தான்.இது முரணானது . தி.மு.க விற்கு தோல்வி பயம் […]

Categories
அரசியல்

“:ரூ .77 ஆயிரம் பறிமுதல் பறக்கும் படை அதிரடி விசாரணை “

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகிலுள்ள  புளியம்பட்டி வியாபாரியிடம் தேர்தல் பறக்கும் படை ரூ :77 ஆயிரம் பறிமுதல் செய்து தாசில்தார் கணேசனிடம் ஒப்படைப்பு. ஈரோடு மாவட்டத்திலுளா  அந்தியூர் அருகே அத்தாணி எனும் பகுதியில் வாகனசோதனையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செல்வராஜ் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு ஏற்றும் வண்டியினை சோதனை செய்தபோது சின்னராஜ் 46 என்பவர் இவர் புளியம்பட்டியை சார்ந்தவர் இவர் புளியம்பட்டியில் இருந்து  அந்தியூர் வழியாக அருகிலுள்ள சென்னம்பட்டியில் வாழைக்காய் வாங்கசெல்வதாகவும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விரைவில் மங்காத்தா 2 இயக்குனர் வெங்கட் பிரபு தகவல்….!!!

வெங்கட் பிரபு இயக்கி அஜித் நடித்த படம் மங்காத்தா. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் எடுப்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளிவந்த படம் மங்காத்தா. இந்த படத்தில் அஜித் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து வெங்கட் பிரபு எங்கு சென்றாலும் அஜித்துடன் அடுத்த படம் எப்போது என்று கேட்டுவந்துள்ளனர். அதற்க்கான பதிலை தற்போது வெளியிட்டுள்ளார்.   தற்போது அதற்க்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன் உறுதியாகிவிடும் என்று […]

Categories
Uncategorized அரசியல்

தொட்டில் ஆட்டி தீவிர வாக்கு சேகரிப்பு

  வயல்வெளியில் வேலை பார்த்த கொண்டிருந்த  பெண்கள் தங்களது குழந்தைகளை மரக்கிளையில் தொட்டிலில்  கட்டி போட்டிருந்தனர். அங்கு வாக்கு திரட்ட சென்ற மன்சூர் அலிகான் குழந்தைகளின் தொட்டிலை  ஆட்டி வாக்கு சேகரித்தார் . திண்டுக்கல் மக்களாவை  தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான்  நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர்  மக்களிடையே பாரம்பரிய முறையில் அம்மியில் இயற்கையான மசாலா அரைப்பது, இளநீர் ,தேநீர் விற்பது, மீன் பிடிப்பது  காய்கறி முதலியவற்றை என வித்தியாசமானவகையில் மக்களிடையே செய்து பிரசாரத்தில் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தல அஜித்தின் நடிப்பை பார்த்து மிரண்டு போன தயாரிப்பாளர் போனிகபூர்…!!!!

நேர்கொண்ட பார்வை படத்தின் சில முக்கிய காட்சிகளை பார்த்த போனிகபூர், அது குறித்து டுவிட் செய்துள்ளார். பிங்க்’ படத்தை மையமாக கொண்டு நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் தல அஜித் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் , ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் போனிகபூர் தயாரிப்பில், சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய வினோத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போலீஸ் அதிகாரியாக நடித்த விவேக் பட அனுபவம் குறித்து விளக்கம்…!!!

விவேக் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. தற்போது இப்படம் குறித்து படவிழாவில் நடிகர் விவேக் பேசியுள்ளார். விவேக் இளங்கோவன் இயக்கத்தில் விவேக் நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. இந்த படத்தைதிகா சேகரன், வருண், அஜய் சம்பத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் விவேக் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் சார்லி, பூஜா தேவரியா, தேவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த விழாவில் நடிகர் விவேக் கலந்துக்கொண்டார். அப்போது நடிகர் விவேக் கூறுகையில், நான் காமெடி படங்களில் […]

Categories
அரசியல்

“173 தங்ககட்டிகல் பறிமுதல் “

173 தங்ககாட்டிகள் போலீசாரால் பறிமுதல் செய்ப்பட்டு தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்ப்பட்டது. கும்மிடிப்பூண்டி அருகில், ஆரம்பாக்கம் செக்போஸ்டில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது. ஆந்திராவில் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த,  ஜீப் ஒன்று போலீஸ் அதிகாரிகளால் மறக்கப்பட்டது. அந்த ஜீப்பில், துப்பாக்கியோடு இரண்டு பாதுகாவலர்கள் உடன் இருந்தனர்.போலீசார், அந்த ஜிப்பினை சோதனை செய்தபோது போது, அதில், தலா, 1 கிலோ எடைகொண்ட, 175 தங்கக் கட்டிகள் இருப்பதனை சோதனை மூலம் அறிந்தனர். இவ்விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கியினால் அங்கீகாரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்து கடவுள்களை விமர்சித்த வீரமணிக்கு ராஜ்கிரண் விளக்கம்…!!!

இந்து கடவுள்களை விமர்சிப்பதாக திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு சமூக வலைத்தளத்தில் ராஜ்கிரண் பதில் அளித்துள்ளார். ராஜ்கிரண் கூறியது, கடவுள் இல்லை என்பது உங்கள் நம்பிக்கையாக இருக்கலாம் ஆனால் . கடவுள் உண்டு என்பது எங்கள் நம்பிக்கை. மதங்கள் பல்வேறு  இருக்கலாம் ஆனால் அனைவரின் குறிக்கோளும் ஒன்றுதான், அது மனிதனை மேன்மைப் படுத்துவதுதான். அன்பும், மனித நேயமும் மனிதனை மேன்மைப்படுத்தும் என்பதுதான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. அந்த வகையில் இந்து மதம் ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர், சிவபெருமான், விநாயகபெருமான், முருக பெருமான்  போன்ற அவதார தெய்வங்களாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை…!

சென்னை அருகே உள்ள பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியர் தூக்கு போட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அடுத்து பாண்டியன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நாகர்கோயிலைச் சேர்ந்த ஜெனிஃபர் என்ற ஆசிரியை பணியாற்றி வந்ததார். இவர் கடந்த ஒரு வருட காலமாக பள்ளி வளாகத்திலேயே தங்கி 9, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொருளியல் பாடம் எடுத்து வந்தார். இந்நிலையில் அவர் தங்கிய அறையில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குபோட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்சேதுபதியை இன்னொரு சிவாஜி என்று கூறிய இயக்குநர் சேரன்..!!!

விஜய்சேதுபதியை இன்னொரு சிவாஜி என்று புகழ்ந்து தள்ளிய இயக்குநர் சேரன்.  ஆரண்ய காண்டம் படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி சில்பா என்ற திருநங்கை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தை திரையுலக பிரபலங்கள் மட்டுமன்றி பலரும் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் இயக்குநர் சேரன் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மும்பை புறப்படுவதற்கு முன் ரஜினியை சந்தித்த பிரபல இயக்குனர்..!!

மும்பை கிளம்பிய ரஜினியை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் உருவாகும் படம் தர்பார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிக்காக ரஜினிகாந்த் இன்று மும்பை செல்கிறார். மும்பை கிளம்புவதற்கு முன்பு இவரை பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சந்தித்துள்ளார். சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் ரஜினியின் வீடு உள்ளது. அங்கு சென்ற கே.எஸ்.ரவிக்குமார், ரஜினியுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாராட்டு மழையில் நனைந்து போன தல அஜித்…!!!!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நீளமான வசனத்தை தல அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி அசத்தியுள்ளார்.   அஜித்குமார் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’ இப்படத்தை ‘சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய வினோத் இயக்குகிறார். இந்த படத்தின் உச்சக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடத்தப்பட்டது. இதற்காக பிரமாண்டமான ஒரு கோர்ட்டு மாதிரியான அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.   அதில், தல அஜித் வழக்கறிஞராக விவாதம் செய்யும் காட்சிபடப்பிடிக்கப்பட்டது. நீளமான வசனத்தை தல அஜித் ஒரே ‘டேக்’கில் பேசி அசத்தியுள்ளார். அதைப்பார்த்த ஒட்டு மொத்த படக்குழுவும் கைதட்டி அவருடைய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

குடிமகன் பட இயக்குனருக்கு பிரபல நடிகர் பாராட்டு..!!!

குடிமகன் படத்தை பார்த்து விட்டு அப்படத்தின் இயக்குனருக்கு நடிகர் பாக்கியராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.  சத்தீஷ்வரன் இயக்கத்தில், ஜெயக்குமார் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘குடிமகன்’. இப்படத்தில் ஜெனிபர் நாயகியாகவும், மாஸ்டர் ஆகாஷ், பாவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் ஆகியோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகரும்,இயக்குனருமான பாக்கியராஜ் இப்படத்தை பார்த்து விட்டு பாராட்டுகள் தெரிவித்துள்ளார். கதை மேல் நம்பிக்கை வைத்து இந்த படத்தை சத்தீஸ்வரன் இயக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘குடிமகன்’ திரைப்படத்திற்கு மூன்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நடிக்க தயாராகியுள்ள கருவாப்பையா கார்த்திகா…!!!

தூத்துக்குடி படத்தின் மூலம் பிரபலமான நடிகை கார்த்திகா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி விட்டார்.   ‘தூத்துக்குடி’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளவர் கார்த்திகா. இந்த படத்தில் “கருவாப்பையா கருவாப்பையா” என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் பெரிதும் இடம் பிடித்தவர் கார்த்திகா. இதை தொடர்ந்து தைரியம், மதுரை சம்பவம், ராமன் தேடிய சீதை, நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தங்கையின் படிப்பு காரணமாக மும்பையில் சில வருடங்கள் கார்த்திகா வாழ்ந்து வந்தார். தற்போது தங்கையின் படிப்பு முடிந்துள்ள நிலையில் அவர் சென்னை திரும்பியுள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையால் விமானநிலையத்தில் பரபரப்பு..!!

சேலத்தில்  உள்ள விமான நிலையத்தில் பெண் பயணியிடம் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜப்பான் நாட்டை சேர்ந்த பெண் பயணி ஒருவர் சென்னைக்கு  செல்வதற்காக சேலம் விமான நிலையத்தில் காத்திருந்தார். அவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அவரது கைப்பை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனைக்குட்படுத்தப்பட்ட போது வெடிபொருள் இருப்பது போன்று சிக்னல் அலாரம் ஒலித்தது, அதனால் அவரை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. உடனே வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மோப்ப நாய் உதவியுடன் அவர்கள் சோதனை செய்தனர். அப்போது அந்தப் பெண்ணின் கைப்பையில் ரசாயனம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வசந்தபாலன் இயக்கத்தில் விஷ்ணு விஷால்..!!!

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.  வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’ இந்த இரண்டு படங்களுமே நல்ல வெற்றியை தந்தது. இதையடுத்து ‘ஜெயில்’ என்ற படத்தை தற்போது வசந்தபாலன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துவருகிறார். விரைவில் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது.   இந்நிலையில் வசந்தபாலன் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் கவனம் செலுத்திவருகிறார். இதில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்தப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. இதற்கான […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டிட கான்டிராக்டர் வீட்டில் கொள்ளை…!

கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டிட கான்டிராக்டர் வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடித்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகே சுப்பிரமணியம்பாளையம் என் .பி .சி நகரில் வசித்து வரும் கட்டிட கான்டிராக்டர் கார்த்திக் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து பட்டப்பகலில் மர்ம ஆசாமிகள் புகுந்தனர். வேலைக்காரியான மூதாட்டியை தாக்கி விட்டு வீட்டில் இருந்த 33 சவரன் நகைகள் மற்றும் இருபது ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.இச் சம்பவம் குறித்து கட்டிட காண்டிராக்டர் துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதிக்கும் நடிகை அமலா…!!!

தமிழ் பட உலகில் 1980-களில் முன்னணி நடிகையாக இருந்த அமலா மீண்டும் நடிக்க உள்ளார். அமலா தனது தமிழ் திரையுலகில் மைதிலி என்னை காதலி, வேலைக்காரன், மெல்ல திறந்தது கதவு,  அக்னி நட்சத்திரம், வேதம் புதிது, கொடி பறக்குது போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்நிலையில் அமலா 1992-ல் தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகிவிட்டார்.   அதன்பின்பு ஐதராபாத்தில் உள்ள விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பில் இணைந்து செயல்பட்டார். தற்போது மீண்டும் அமலா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பி.எம்.நரேந்திரமோடி படத்தை பாராட்டிய காஜலுக்கு பலர் எதிர்ப்பு…!!!!

நடிகை காஜல் அகர்வால் பி.எம்.நரேந்திரமோடி படத்தை வரவேற்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதை பலரும் கண்டித்து வருகின்றனர். தேர்தல் சமயத்தில் இந்த படத்தை திரையிட கூடாது என்று காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரித்தனர். தேர்தல் கமிஷனையும், நீதிமன்றத்தையும் அணுகினர் ஆனால் படத்துக்கு தடை விதிக்கவில்லை. இந்த படத்தில் விவேக் ஓபராய் நரேந்திர மோடி வேடத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் தல அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து பி.எம்.நரேந்திரமோடி படம் திரைக்கு வரஇருக்கிறது இதற்க்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் விவேக் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

படம் நடிக்க பயமாக இருக்கிறது……இலியானா கருத்து…!!!

முன்னணி நடிகையான இலியானா படம் நடிக்க பயமாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.    இது குறித்து இலியானா கூறுகையில், சமூக வலைத்தளத்தை பயன்படுத்து மக்கள் அதிகமாக நடிகர்-நடிகைகள் பற்றி தெரிந்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதில் அவர்கள் எங்கே செல்கிறார்கள் இப்போது படத்தில் நடிக்கிறார்களா இல்லையா இப்போது யாருடன் இருக்கிறார்கள் அவர்களுக்கு குடும்பம் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துக்கொள்ள நினைக்கிறார்கள்.   ஒரு சர்வேயில் பிரியங்கா சோப்ரா, பிரீத்தி ஜிந்தா,தீபிகா படுகோனே ஆகியோரை விட என்னைத்தான் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அதிகமாக தேடி வந்தனர் என்றனர் இலியானா. சில மாதங்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை விமானநிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை !.. சோதனையில் 65 லட்சம் மதிப்புள்ள தங்க விநாயகர் சிலை மீட்பு !!….

  பிரான்சில் இருந்து ரூ.65 லட்சம் மதிப்புள்ள தங்க விநாயகர் சிலைகலை  சென்னைக் மீனம்பாக்கம் விமானத்தில் கடத்திய வாலிபர் கைதுசெய்யப்பட்டார் . பிரான்சில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.65 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ தங்க விநாயகர் சிலையை கடத்தி வந்த நபரை சுங்க அதிகாரிகள் சோதனை செய்து பின் சிலைகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்க்கொண்டனர் . சென்னை மீனம்பாக்கம்  விமான நிலையத்திற்கு  பிரான்சில் இருந்து வந்த விமானத்தாய் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர் .  அப்போது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜ்மீர் தர்காவில் சூர்யாவின் சிறப்பு பிரார்த்தனை….!!!

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 38 படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். இந்நிலையில்  சூர்யா அஜ்மீர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள படம் என்.ஜி.கே. செல்வராகவன் இயக்கிய இந்த படத்தில்,சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத்சிங் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதை தொடர்ந்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் கே.வி.ஆனந்த்தும்,சூர்யாவும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால், ஆர்யா மற்றும் சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சூர்யா 38’ படத்தின் புதிய தகவல் படக்குழு வெளியீடு…!!!!

சுதா கோங்கரா இயக்கத்தில் உருவாகும் சூர்யா38 படத்தின் புதியதகவல் வெளியாகியுள்ளது. சுதா கோங்கரா இயக்கத்தில் உருவாகும் ‘சூர்யா38’ படத்தின் பூஜை இன்று நடந்தப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு நாளை சென்னையில் தொடங்கவுள்ளது. இப்படம் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா என்டர்டெயின்மெண்ட்டின் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கவுள்ளார்கள்.   இப்படத்தின் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளார். நாடு முழுவதுமுள்ள திறமை வாய்ந்த நடிகர், நடிகைகளும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.          நிக்கேத் பொம்மிரெட்டி ஒளிப்பதிவு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அலாவுதீனின் அற்புத கேமராவின் உரிமையை கைபற்றிய தயாரிப்பாளர்….!!!

நவீன் இயக்கி நடித்துள்ள படம் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ இந்த படத்தின் உரிமையை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கைப்பற்றியிருக்கிறார். இயக்குனர் நவீன் ‘மூடர் கூடம்’ படத்தை தொடர்ந்து தற்போது எழுதி, இயக்கி உள்ள படம்  ‘அலாவுதீனின் அற்புத கேமரா’. இப்படத்திலும் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். அனந்தி ‘கயல்’ படத்தின் மூலம் பிரபலமானவர் இவர் இப்படத்தில் பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால் வில்லனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இப்படத்திற்கு கே.ஏ.பாட்ஷா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரகுல் ப்ரீத் சிங் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு…!!!!

 ரகுல் ப்ரீத் சிங் இந்தியில் நடித்திருக்கும் படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  நடிகை ரகுல் பிரீத்தி சிங் தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக என்.ஜி.கே படத்திலும், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மற்றறொரு படத்திலும் நடித்து வருகிறார். இந்தியில் டெ டெ பியார் டெ என்ற  படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடித்துள்ளார். இந்த படம் முடிந்து விரைவில் திரைக்கு வரும் நிலையில் உள்ளது. ஆனால் அந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். இது […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

அரசியல் ஆசையில் நடிகை ஸ்ருதி ஹாசன்…!!!

பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் சினிமாவில்  நடிக்காமல் விலகி இருப்பதற்கு விளக்கம் அளித்துள்ளார்.  நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த 2 வருடமாக நடிப்பில் இருந்து விலகியுள்ளார். இதற்கு காரணம் அவர் ஒரு இசை ஆல்பம் தயாரித்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில் நடிக்கவில்லை தவிர நடிப்பில் இருந்து நான் ஒய்வு பெற வில்லை. இன்னும் சில நாள்களில் ஒரு தமிழ் படத்தில் நடிக்கவுள்ளேன். இந்தி  படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். என் தந்தை கமல்ஹாசன் அரசியலில் நுழைந்த பின் எனக்கும் அரசியல் மீது ஆர்வம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் திருடியாக நடிக்கும் கயல் ஆனந்தி..!!

நவீன் இயக்கம் அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் ஆனந்தி திருடியாக நடித்துள்ளார்.    இயக்குனர் நவீன் ‘மூடர் கூடம்’ படத்தை தொடர்ந்து தற்போது எழுதி, இயக்கி உள்ள படம்  ‘அலாவுதீனின் அற்புத கேமரா’. இப்படத்திலும் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். அனந்தி கயல் படத்தின் மூலம் பிரபலமானவர் இவர் இப்படத்தில் பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக நடித்துள்ளார் ஆனந்தி.   மேலும் இப்படத்தில் தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்  வில்லனாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இப்படத்திற்கு கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள […]

Categories

Tech |