Categories
அரசியல் மாநில செய்திகள்

டிரம்பின் கதை தான்…. இபிஎஸ்-ஓபிஎஸ் க்கும் ஏற்படும்…. உதயநிதி விமர்சனம்…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் அதிமுகவினரும், திமுகவினரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நேற்று நடைபெற்ற அரசியல் விழாவில்  இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கையை பிடித்து உயர்த்தி மோடி பாஜக அதிமுக கூட்டணியை மறைமுகமாக உறுதிப்படுத்தினார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் மோடியால் கை உயர்த்தப்பட்ட டிரம்பின் கதி என்னவோ […]

Categories
மாநில செய்திகள்

சனிக்கிழமை பள்ளி விடுமுறை – வெளியான தகவல்…!!

9-12 மாணவர்களுக்கு சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்துகொண்டு வருகிறது. இதையடுத்து பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கபட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

சமையலர் பணிக்கு…. படையெடுத்த பட்டதாரிகள்…. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்…!!

சமையலர் பணிக்கு பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 54 கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் செயல்படும் மாணவ, மாணவிகள் விடுதி அறைகளில் சமையலர் பணிக்கான தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து காலியாக உள்ள 96 சமையல் காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மாதம் கள்ளர் சீரமைப்பு துறை வெளியிட்டது. இந்த நேர்முக தேர்வில் 96 பணியிடங்களுக்கு 2150 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 75,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி – அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக இந்தப் புதிய தொழில்  கொள்கை மற்றும் புதிய குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்படும் என ஆளுநர் உரையில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இவ்விரண்டு தொழில் கொள்கைகளையும் நாளை காலை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற இருக்கும் விழாவில் முதல்வர் வெளியிட இருக்கிறார். மேலும், தமிழகத்தில் புதிய தொழில் துவங்க 28 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையெழுத்தாகின்றன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தாஜா செய்த பாஜக…. கிருஷ்ணசாமியுடன் கௌதமி சந்திப்பு…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. எதிர் கட்சியினரும், ஆளும் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சனங்களோடு தேர்தல் பரப்புரையை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கூட்டணிக்கு வரமாட்டேன் தனித்து தான் போட்டியிடுவேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி யுடன் பாஜகவை சேர்ந்த கவுதமி பேச்சுவார்த்தை […]

Categories
மாநில செய்திகள்

மோடி தந்த கொடூர பரிசு…. “சிலிண்டர் விலை உயர்வு” மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் – ஸ்டாலின் விமர்சனம்…!!

விலை உயர்வை குறைத்து மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விலை விற்கப்பட்டு வருகின்றது. வீட்டு உபயோகத்துக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வீட்டு சிலிண்டர் விலை ரூபாய் 710 என்ற […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் அவதி: சிலிண்டர் மானியத்தை உயர்த்த வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்…!!

வீட்டு சமையல் எரிவாயு மானியத்தை உயர்த்தி வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப பொதுத்துறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விலை விற்கப்பட்டு வருகின்றது. வீட்டு உபயோகத்துக்கு 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டரும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் வீட்டு சிலிண்டர் விலை ரூபாய் 710 என்ற […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மார்ச்-15 க்குள்…. டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு…!!

டிஎன்பிஎஸ்சி வருடந்தோறும் மாணவர்களுக்கு காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது. குரூப் 1 முதன்மை தேர்வு சமீபத்தில் நடந்தது. இந்த குரூப் 1 முதன்மை தேர்வுக்கு எழுத்து தேர்வுக்கு தற்காலிகமாக தேர்வானவர்கள் அசல் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 16 முதல் மார்ச் 15ஆம் தேதி வரை அரசு இ-சேவை மையங்கள் மூலம் சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், இதற்கு தேர்வு கட்டணம் 200 ரூபாயை  மார்ச் […]

Categories
தேசிய செய்திகள்

போலீசார் நம் பைக்கிலிருந்து சாவியை எடுக்கலாமா…? அபராதம் வசூலிக்கலாமா…? இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

வாகன ஓட்டிகள் தடை செய்யப்பட்ட(No Entry ) பகுதியில் சென்றால் காவல்துறையினரால், வாகன ஓட்டிகளை மறித்து ஆவணங்களை சரி பார்த்து அபராதம் விதிக்க அதிகாரம் இருக்கிறது. ஆனால் வண்டியிலிருந்து சாவியை எடுக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், அனைத்து வகையான ஆவணங்கள் வைத்திருந்தாலும் மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 130 இன் கீழ் நகர்ப்புறங்களில் வெள்ளை சீருடை அணிந்த காவல்துறையினரும், கிராமப்புறங்களில் காக்கிச் சீருடை அணிந்த காவல்துறையினரும் வாகன ஓட்டிகளிடம் ஆவணங்களை […]

Categories
வேலைவாய்ப்பு

8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…. தமிழ்நாடு வழக்கு துறையில்…. அலுவலக உதவியாளர் பணி…!!

தமிழ்நாடு வழக்கு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம். பணி: அலுவலக உதவியாளர். காலியிடங்கள்: 16 . மேலாண்மை: தமிழ்நாடு வழக்கு துறை. கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: 18 வயது முடிந்தவர்கள். விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன். கீழே கொடுக்கப்பட்டுள்ள தளத்தில் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுபவும். அஞ்சல் முகவரி: அரசு […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் நிலச்சரிவில்…. சிக்கி 4 பேர் பலி…. 14 பேர் தேடும் பணி தீவிரம்…!!

இந்தோனேசியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்திருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் கிழக்கு ஜாவாவின் கிராமப்புற பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்சம் 4 பேராவது பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 14 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு தேவையான உபகரணங்களை எடுத்துவர முடியவில்லை. எனினும், மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு ஜாவா தேடுதல் மற்றும் மீட்பு முகமை […]

Categories
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறையில்…. ரூ.7 லட்சம் சம்பளத்தில் வேலை…!!

தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி: AgricultureExpert . சம்பளம்: ரூ.7.20 லட்சம். பணியிடம்: சென்னை. கல்வித்தகுதி: பிஎஸ்சி அக்ரிகல்ச்சர், எம்எஸ்சி அக்ரிகல்ச்சர். கடைசி தேதி: 19.2.2021 வயது வரம்பு: 63  க்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://tnsdma.tn.gov.in/pages/view/recuirtments.

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தீப்பெட்டி வைத்து விளையாட்டு” தீப்பிடித்து உடல் கருகி…. 3 வயது சிறுமி பரிதாப பலி…!!

தீப்பெட்டி வைத்து விளையாடிக்கொண்டிருந்த சிறுமி உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் வசிக்கும் தம்பதிகள் முருகன்-பால்மணி. கூலி தொழிலாளர்கனான இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் தங்களின் குழந்தைகளை பக்கத்து வீட்டில் ஒப்படைத்துவிட்டு வேலைக்குச் செல்வது வழக்கம். இதேபோல சம்பவத்தன்றும் முருகன் தம்பதி வேலைக்குச் சென்றிருந்துள்ளனர். அப்போது கடைசி மகள் லட்சுமி(5) தீப்பெட்டியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமியின் உடலில் தீப்பிடித்துள்ளது. இதையடுத்து எரிச்சல் காரணமாக குழந்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேர்தல் பணியில் மும்முரமாக அதிமுக…. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து மார்ச் முதல் அல்லது ஏப்ரல் இறுதியில் தேர்தல் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து அதிமுக விருப்ப மனு வழங்குவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுக கழகத்தின் சார்பாக வேட்பாளராக போட்டியிட விரும்புகின்றவர்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

அடிக்கடி மீன் சாப்பிடலாமா…? சாப்பிட்டா என்ன நடக்கும்…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

மீன் என்பது அனைவருக்கும் பிடித்த ஒரு உணவாக இருக்கிறது. ஒரு சிலருக்கு மீன் பிடிக்கும் ஒரு சிலருக்கு மீன் பிடிக்காது. மீனில் புரதம், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.நிறைய பேருக்கு மீன் அடிக்கடி சாப்பிடலாமா? என்று சந்தேகம் எழுகின்றது. இது குறித்து நாம் இப்போது தெரிந்து கொள்ளலாம். மீனில் ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலங்கள் இருப்பது மூளை மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் உடல் எடையை சீராக பராமரிக்க உதவுகிறது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இடதுகை பேட்ஸ்மேன்களையும் வீழ்த்தி…. புதிய சாதனை படைத்த அஸ்வின்…!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் வரிசையில் தற்போது அஸ்வினும் சுழற்பந்து வீசுவதில் கலக்கி வருகிறார் . அதுவும் இந்திய மண்ணில் மற்ற நாட்டு வீரர்களுக்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். இந்நிலையில் அஸ்வின் நேற்றைய போட்டியின் போது ஜோ […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய…. வான்வழி தாக்குதலில்…. 19 தலீபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள நங்கார்ஹ்ர் மற்றும் லோஹர் மாநிலங்களில் தலிபான் பயங்கரவாதிகள் மீது அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் வான் வழி தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் நேற்று மதியம் 11 பயங்கரவாதிகள் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து ஹிஷாரத், ஷேர்ஜாத் மாகாணத்தில் நடந்த வான்வழித் தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் நிலக்கண்ணி வெடிகள் மற்றும் சாலையோர குண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர் என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் […]

Categories
உலக செய்திகள்

5000 வருடங்களுக்கும் பழமையான மது ஆலை…. எகிப்தில் கண்டுபிடிப்பு…!!

5000 வருடங்களுக்கும் பழமையான மது ஆலை ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எகிப்து நாட்டில் 5000 வருடங்களுக்கு முன்பு செயல்பட்டு வந்த மது ஆலையை தொல்பொருள் ஆராய்ச்சிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த மது ஆலை கிமு 3150 முதல் 2513 வரை இருந்த நார்மர் மன்னர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மது ஆலையானது வரிசையாக 40 பானைகள் பொருத்தப்பட்டு பழங்கள் மற்றும் தண்ணீர் கலந்து மதுபானம் தயாரிக்கும் வகையில்  அமைக்கப்பட்டு இருக்கிறது. இத்தகைய […]

Categories
உலக செய்திகள்

“விளையாடும் நேரத்தில்” வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு…. பாடம் நடத்தும் 12 வயது சிறுமி…. குவியும் பாராட்டு…!!

சிறுமி ஒருவர் வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கு பாடம்கற்பிக்கும் கற்பிக்கும் சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது எகிப்து தலைநகரை சேர்ந்தவர் ரீம் எல் கவ்லி(12). சிறுமியான இவர் தற்போது ஆசிரியராக மாறியுள்ளார். வீடு வீடாக சென்று 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார். சிறுமியினுடைய இந்த முயற்சி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. […]

Categories
லைப் ஸ்டைல்

உஷார்! மாலை நேரத்தில் உங்க வீட்டில்…. இதை செய்யாதீங்க…. பணம் சேராது…!!

மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு வைத்த பிறகு பெண்கள் வீட்டை சுத்தம் செய்ய கூடாது அவ்வாறு சுத்தம் செய்தால் வீட்டில் பண புழக்க இருக்காது என்று வாஸ்து சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி வீட்டை சுத்தம் செய்தாலும் அந்த குப்பையை வெளியே தள்ளக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. இது குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வேலைக்கு செல்லும் பெண்கள் வேலையை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு வருவார்கள். அப்படி வரும்போது எங்களுக்கும் இது பொருந்துமா ?என்ற கேள்வி சில […]

Categories
மாநில செய்திகள்

அம்மா பிறந்த நாளையொட்டி…. இன்று 123 ஜோடிகளுக்கு திருமணம்…. நடத்தி வைக்கும் முதல்வர்…!!

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி இன்று 123  ஜோடிகளுக்கு திருமணத்தை முதலவர் நடத்தி வைக்க இருக்கிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24-ஆம் தேதி வருவதால் கோடடபட இருக்கிறது. இதையடுத்து ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி கோவை சிறுவாணி சாலையில் உள்ள செட்டிபாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான பந்தலில் 123 திருமண ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இன்று திருமணம் நடைபெற இருக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும்  துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு தாலி […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த…. சூழியல் ஆய்வாளர் கைது – கனிமொழி கண்டனம்…!!

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த சூழியல் ஆய்வாளர் கைது செய்ததற்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் விவசாயிகளின் இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மேடையில் மயங்கி விழுந்த முதலமைச்சர் – பரபரப்பு…!!

முதலமைச்சர் விஜய் ரூபவானி மேடையில் மயங்கி விழுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. குஜராத் மாநிலத்தில் பிப்ரவரி 21ஆம் தேதியன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, வதோதராவில் உள்ள நிஜாம்புரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் ருபானி கலந்துகொண்டு பேசினார். அவர் பேசத்தொடங்கியபோதே உடல்நிலை சரியில்லாதது போல தோன்றினார். முதலில் வதோதராவில் உள்ள தர்சாலி, கரேலிபவுக் ஆகிய பகுதிகளில் உரையாற்றிவிட்டு நிஜாம்புராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வந்தார். இந்நிலையில் முதலமைச்சர் விஜய் ரூபானி குஜராத் மணிலா […]

Categories
தேசிய செய்திகள்

வருமானவரி தாக்கல் செய்ய…. இன்றே கடைசி நாள்…. நாளை ரூ.10000 அபராதம்…!!

வருமானவரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் உடனே கணக்கை தாக்கல் செய்யுமாறு வருமானவரி அலுவலகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி கணக்கு அந்த வருடத்தின் ஜூலை மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக முதலில் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பின்னர் டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்களின் கோரிக்கைக்கு இணங்க வருமான வரி அலுவலகம் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் வருமான வரி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: இனி வாகன ஓட்டிகளுக்கு பெரும் சோதனை…!!

ஒவ்வொரு நாளும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பதும் பின்னர் குறைவதுமாக இருந்து வந்தது. இதையடுத்து பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் இந்திய வரலாற்றில் முதல் முறையாக சதம் அடித்தது பெட்ரோல் விலை. மகாராஷ்டிரா மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 10.16 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநில மக்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதே நிலை தமிழகத்துக்கும் கூடிய விரைவில் வந்துவிடுமோ என்று […]

Categories
உலக செய்திகள்

மகளின் படுக்கையறையை எட்டிப்பார்த்த…. இளைஞரை துரத்தி பிடித்த தாய்…. குவியும் பாராட்டு…!!

தன் மகளின் படுக்கையறையை எட்டி பார்த்த இளைஞரை துரத்தி சென்று தாய் பிடித்துள்ள சம்பவம் பாராட்டுகளை பெற்றுள்ளது. அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் மகள் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த பெண் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது ஒரு இளைஞர் வீட்டில் தன் மகனின் படுக்கை அறையை எட்டிப் பார்த்ததை கண்டு கோபமடைந்துள்ளார். இதையடுத்து அந்த பெண் அந்த நபரை விரட்டி அவரை விரட்டி மடக்கி பிடித்து உள்ளார். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

தேவேந்திரகுல வேளாளர்குல மசோதா…. நாடாளுமன்றத்தில் தாக்கல்… இனிப்பு, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்…!!

தேவேந்திரகுல வேளாளர் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கரூரில் பிரதமர் மற்றும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேவேந்திரகுல வேளாளர் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடி உள்ளனர். 7 பட்டியலின உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் கரூரில் பிரதமருக்கும், தமிழக முதல்வருக்கும் கரூர் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் சங்கம் இணைந்து பேருந்து நிலையத்தில் வெடி வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள்

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின்…. குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் -முதல்வர் அறிவிப்பு…!!

விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் உணவு தயாரிப்பு நிலையத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், விஷ வாயு தாக்கி உயிரிழந்த சம்பவத்தில் பாக்யராஜ், முருகன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் இறந்த செய்தி கேட்டு மிகவும் மனவருத்தம் அடைந்தேன். அவர்களுடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த […]

Categories
உலக செய்திகள்

ஏலியன்ஸ் போல பிறந்த…. விசித்திரமான நாய்க்குட்டி…. ஆச்சர்யமான சம்பவம்…!!

நாய்க்குட்டி ஒன்று விசித்திரமான முறையில் பிறந்துள்ளது அனைவரிடையேயும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் உள்ள அக்லான் நின்ற மாகாணத்தில் ஒரு நாய் இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது. முதல் நாய்க்குட்டி வழக்கம் போல சாதாரணமாக இருந்துள்ளது .ஆனால் இரண்டாவது பிறந்த நாய்க் குட்டியானது முற்றிலும் வேறுபட்டு இருந்துள்ளது. அந்த நாய்க்குட்டி வெளிர் நிறம் உள்ளதாகவும், பிறந்தவுடனேயே சுவாசிக்க சிரமப்பட்டும் இருந்துள்ளது. அந்த னைக்குட்டியானது இரண்டு நீளமான பெரிய நாக்குகள் ஒட்டிக்கொண்டிருந்த நிலையில் இருந்துள்ளது. மேலும் அதற்கு ஒரு கண்தான் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்தால்…. உங்க பணத்துக்கு ஆபத்து…. எஸ்பிஐ எச்சரிக்கை…!!

எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு இன்ஸ்டன்ட் லோன் ஆப் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்போதெல்லாம் இந்த வகை மொபைல் ஆப்கள் 52 நிமிடங்களில் கடன் கொடுப்பதாக கூறிய விவரங்களை கேட்டு மோசடி செய்து வருகின்றனர். இதில் அதிகமாகவும் வட்டி வசூலிக்க படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த லோன் ஆப்கள் வங்கிக்கு போட்டியாக இருந்தாலும் வங்கிகளை விட அதிகமாக வசூலிப்பதாக வாடிக்கையாளர்களால் கூறப்படுகின்றது. இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வாடிக்கையாளர்களின் செல்போன் நம்பருக்கு ஒரு லிங்க் […]

Categories
தேசிய செய்திகள்

அனைத்து வேலை நாட்களிலும்…. அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும் – மத்திய அரசு அதிரடி…!!

அரசு ஊழியர்கள் அனைவரும் அனைத்து வேலை நாட்களிலும் பணிக்கு வர வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் வேகம் தற்போது சற்று குறைந்து வருகிறது. இதையடுத்து  பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கும் பணிக்கு வர மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. துணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேல் மட்டத்திலுள்ள அதிகாரிகள் மட்டுமே பணிக்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில் இனி அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“விசில் போடு மச்சி” வீரர்களை உற்சாக மூட்டிய விராட்… அதிர்ந்து போன அரங்கம்…. வைரல் வீடியோ…!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே சென்னையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நடந்தது. இதில் இந்திய கேப்டன் விராட் கோலி ரசிகர்களை நோக்கி விசில் அடிக்குமாறு சைகை காட்டியுள்ள காட்சி இணையத்தில் தற்போது வைரல் ஆகியுள்ளது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 63 ரன்கள் 5 விக்கட்டுக்களை இழந்து தவித்து வந்தது. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மைதானத்தில் இருந்த ரசிகர்களை நோக்கி விசிலடித்து வீரர்களுக்கு உற்சாகம் […]

Categories
லைப் ஸ்டைல்

முதல்ல தண்ணீரை இதுல வச்சி குடிங்க…. அப்புறம் சொல்லுங்க…. இவ்ளோ நன்மைகள் கிடைச்சதானு…!!

செம்பு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் 10 நன்மைகள் பற்றிய தொகுப்பு. நம் முன்னோர்கள் காலம் காலமாக செம்பு பாத்திரத்தில் தான் தண்ணீரை சேமித்து வைத்து குடித்தார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. நம்முடைய உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முதலில் தேவையானது குறையாத நீர்சத்து தான். இதை முன்னரே உணர்ந்தால் தான் தண்ணீர் சுவையற்ற பானமாக இருந்தாலும் அதை சத்தான பானமாக மாற்ற செம்பு நீரில் பிடித்து பயன்படுத்தினார்கள். அதிகாலையில் வெறும் வயிற்றில் செப்புப் […]

Categories
லைப் ஸ்டைல்

அடடே! இந்த பழத்தை சாப்பிட்டால்… இந்த 9 நன்மைகள் நிச்சயம்…!!

சப்போட்டா பழத்தை ஜூஸாகவும் அரைத்து குடிக்கலாம். அப்படியேவும் சாப்பிடலாம். குளிர்காலத்தில் உங்கள் உணவில் நீங்கள் பழம் சேர்க்க வேண்டும் என்றால் கண்டிப்பாக சப்போட்டா பழத்தை சேர்த்துக் கொள்ளலாம். இது சுவையானதும் ஆரோக்கியமானதும் கூட. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்கிறது. இதில் வைட்டமின் சி, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் இருக்கிறது. மருத்துவக்குணங்கள்: செரிமானத்தை தூண்டுகிறது. அழற்சி பண்புகளை கொண்டுள்ளது. எலும்புகளை வலுப்படுத்துகின்றது. சளி இருமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு. இரத்த அளவை கட்டுக்குள் வைக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு உற்சாகம் கொடுக்க…. கலக்கல் டான்ஸ் ஆடிய ஆசிரியர்கள்…. வைரல் வீடியோ…!!

பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக ஆசிரியர்கள் நடனமாடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து கொரோன சற்று குறைந்ததையடுத்து  மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புனேவில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் ஊரடங்கு முடிந்து பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது ஆசிரியர்கள் மற்றும் பள்ளியில் வேலை செய்யும் பணியாளர்கள் […]

Categories
பல்சுவை

“கடைசி வரையிலும்” ஆண்கள் பெண்களிடம் விரும்புவது…. இந்த விஷயங்கள் தான்…!!

பெண்களிடம் ஆண்கள் விரும்பும் விஷயங்கள்: மடியில் வைத்து தாலாட்ட வேண்டும். சாப்டியா என்று நலம் விசாரிக்க வேண்டும். அம்மாவை போல அன்பில் ஆள வேண்டும். உண்மைக்கு உருவமாக இருக்க வேண்டும். தவறுகளைத் திருத்தும் தேவதையே வரம் தரவேண்டும். அடிக்கடி அதட்ட வேண்டும். வெளிப்படையான இதயம் வேண்டும். குடும்ப குத்துவிளக்காக modern மகாலட்சுமியாகவும் கண்களுக்கு வேண்டும். துணையென்று வந்தால் தூணாக வேண்டும் . மார்போடு அரவணைத்து ஆறுதல் தர வேண்டும். குழந்தை போன்ற குணம் வேண்டும். படுக்கையில் குலைந்து […]

Categories
லைப் ஸ்டைல்

இதை அவ்ளோ சாதாரணமா நினைச்சிறாதீங்க…. உடல் எடையை குறைக்குமாம்…!!

உடல் எடை குறைப்பதற்கான சிறந்த டிப்ஸ் ஒன்றை இப்போது பார்க்கலாம். பெரும்பாலானோர் அதிகமான உடல் எடையை கொண்டிருப்பதால் உடல் எடையை குறைப்பதற்காக பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர். உடல் எடை அதிகரிப்பின் காரணமாக சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உடல் எடையை குறைக்கும் எளிதான ஒரு டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அது என்னவென்று பார்க்கலாம். அரிசி வேகவைத்த நீரை (கஞ்சி தண்ணீர்) சூடாக எடுத்து அதில் சிறிது உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து குடிக்கலாம். இதில் வெறும் […]

Categories
லைப் ஸ்டைல்

கொய்யா சாப்பிடுவதால்…. இவ்ளோ நன்மையையும் இருக்கு…. பிரச்சினையும் இருக்கு…. என்னனு நீங்களே பாருங்க…!!

கொய்யாப்பழத்தை  சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் மற்றும் ஆபத்துகள் இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம். பழங்களிலேயே விலை குறைவானதும், மிகுந்த சத்து உடையதும் உள்ளது கொய்யாப் பழம். இதில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் உடையது. இதை வெட்டி சாப்பிடுவதை விட நன்றாக கழுவிய பிறகு பற்களால் நன்றாக மென்று தின்பதே நல்லது. வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் மெட்ரோ கட்டணம்…. எவ்வளவு தெரியுமா…??

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் ரூ.70 உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் மூலமாக மாணவர்கள் முதல் தொழிலாளர்கள் வரை பயனடைந்து வருகின்றனர். ஏனெனில் குறைந்த கட்டணத்தில் விரைவாக செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லலாம். இந்நிலையில் சென்னையில் மெட்ரோ கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது குறைந்தபட்ச கட்டணம் ரூ.10  ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.60 ஆகவும்உள்ளது . இந்நிலையில்  அதிகபட்ச கட்டணம் ரூ.70 ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
Uncategorized

குறுக்கே வந்த நாயால்…. குளத்தில் விழுந்த ஆட்டோ…. பத்திரமாக மீட்கப்பட்ட ஓட்டுநர்…!!

நெல்லை தச்சநல்லூர் பகுதியில் வசிப்பவர் பரமசிவன். இவர் பயணிகள் ஆட்டோ வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார் . இந்நிலையில் இவர் வழக்கம்போல் இன்று காலை நெல்லை-மதுரை சாலை தச்சநல்லூரிலிருந்து நெல்லை சந்திப்பு நோக்கி பயணிகள் இல்லாமல் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். அப்போது ஆட்டோவின் குறுக்கே நாய் ஒன்று வந்துள்ளது. இதனால் பரமசிவம் ஆட்டோவை நிறுத்த திடிரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியுள்ளது. இதை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இனி மது விற்பனை கிடையாது? – நீதிமன்றம் அதிரடி…!!

பெண்கள், குழந்தைகளின் கண்ணீரை துடைக்கும் வகையில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மதுவிலக்கை அமல்படுத்தினால் குற்றங்கள் குறையும், தனிநபர் வருமானம் அதிகரிக்கும், பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதி அருகே டாஸ்மாக் வைக்க அது ஒன்றும் புத்தகக்கடை கிடையாது. மது விற்பனை மூலம் வருவாய் அதிகரித்து கொண்டே இருப்பதால் மாநிலமே மதுவில் மூழ்கி உள்ளது. இந்த யோசனையை தமிழக அரசு கேட்குமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

“என்னவள் கஷ்டப்படக்கூடாது” காதலர் தினத்தன்று…. மனைவிக்கு பரிசாக கிட்னி…. நெகிழ வைத்த கணவர்…!!

இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் காதலர்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள், இனிப்புகளை பரிமாறிக்கொள்வது வழக்கம். இந்நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத் பகுதியில் வசிப்பவர் வினோத்பாய் படேல். இவர் தன்னுடைய மனைவி ரீட்டாபென் படேல் நீண்டகாலம் வாழ வேண்டும் என்று அவருக்காக தன் கிட்னியை பரிசாக வழங்கியுள்ளார். ரீட்டாபென் படேல் கடந்த 3 வருடங்களாக சிறுநீரக செயலழிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து கடந்த மாதம் முதல் ரீட்டாபென்னுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டு வருகிறது. செயலிழந்த […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

வீடியோ: அடடே! சுட்டி குழந்தையோடு சேர்ந்து நாயும்…. பல்டி அடிக்கும் வேற லெவல் வீடியோ…!!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நாட்டின் மூலை முடுக்கில் உள்ளவர்கள் ஏதாவது ஒரு வீடியோவை பதிவு செய்து அதை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதில் ஒரு சில வீடியோக்கள் பிரபலமாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த ஒரு சில வீடியோக்கள் மட்டும் பார்ப்போரை ஈர்க்கும் வண்ணம் இருப்பதால் வேகமாக பரவி வருவது வழக்கம். இந்நிலையில் தற்போது வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சிறுமி ஒருவர் தான் செய்வதை எல்லாம் அவருடைய நாயும் அழகாக செய்கிறது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சென்னையில் மார்ச்-1 வரை தடை… உடனே அமல்…!!

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மார்ச் 1- ஆம் தேதி வரை போராட்டங்கள், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மார்ச் 1- ஆம் தேதி வரை போராட்டங்கள், ஆர்ப்பாட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிரிவு 41,சேனை நகர போலீஸ் சட்டம் 1888- இந்த கீழ் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் நடத்தக்கூடாது என காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உள்ளாடை முதல் உடல் பொலிவு வரை…. நம்ம ஊரு சந்தையில் நாட்டு பொருட்கள்…. கோவையில் அசத்தல்…!!

கோவை மாவட்டம் காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் “நம்ம ஊரு சந்தை” என்ற பெயரில் பாரம்பரிய அரிசிகள் மற்றும் மூலிகைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பாரம்பரிய அரிசிவகைகள், சிறுதானியங்கள், மரச்செக்கு எண்ணெய் வகைகள், நாட்டுச் சர்க்கரை, பனங்கருப்பட்டி, கற்கண்டு, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், கீரைகள், பழங்கள், நாட்டுக் கோழி மற்றும் வாத்து முட்டைகள், குழந்தைகளுக்கான உணவு வகைகள், மரபு இனிப்பு வகைகள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களுக்கு சமைக்க தெரியுமா…? கேட்ட பத்திரிகையாளரை…. வார்த்தையால் விளாசிய கனிமொழி…!!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் சட்டமன்ற தேர்தல் என்பதால் பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழியிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் உங்களுக்கு சமைக்க தெரியுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் நடிக்கும் நடிகை ஷாலினி…? அஜித் விளக்கம்…!!

நடிகை ஷாலினி திருமணத்திற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். அப்போது அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. இந்நிலையில் நடிகர் அஜீத்தை திருமணம் செய்த பிறகு அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். இதையடுத்து இவருக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஷாலினி 20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த செய்தி உண்மையில்லை என்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமர் & முதல்வர் சந்திப்பு…. இதற்காக தான் – அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்…!!

பிரதமர் மற்றும் முதல்வர் சந்தித்து ஆலோசனை நடத்தியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்திருந்தார். இதையடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் விழா முடிந்த பிறகு தனியாக முதல்வர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஆலோசனையில் கூட்டணி குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த […]

Categories
தேசிய செய்திகள்

உங்களுடைய செலவுகளை குறைத்து…. பணத்தை மிச்சப்படுத்த…. சூப்பரான டிப்ஸ்…!!

ப்ரீபெய்டு கார்டுகளைப் பயன்படுத்தி உங்களுடைய அன்றாட செலவுகளை வெகுவாகக் குறைக்க முடியும். அது எப்படி என்பது குறித்து இப்பொது பார்க்கலாம். கொரோனாவிற்கு பிறகு ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதுவும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அளவுக்கு அதிகமாக செலவு செய்கின்றனர். ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவற்றில் தேவைக்கு அதிகமாக செலவு செய்வதால் பலரும் பெரும் கடன் வலையில் மாட்டிகொள்கின்றனர். எனவே செலவுகளைக் கட்டுப்படுத்த எதாவது வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிரீபெய்டு கார்டு: செலவுகளைக் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தொடரும் அவலம்…. சாக்கடையை சுத்தம் செய்த போது…. விஷவாயு 3 தாக்கி பேர் பலி…!!

தனியார் நிறுவன பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது 3 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள காட்ராம்பாக்கத்தில் வெங்கடேஸ்வரா என்ற தனியார் கேட்டரிங் சர்விஸ் நிறுவனத்தில் உலா பாதாள சாக்கடையை சுத்தம் செய்வதற்காக நிறுவன உரிமையாளர் அந்த பகுதியை சேர்ந்த பாக்யராஜ் (40), முருகன்(40), ஆறுமுகம் (42) ஆகியோரை அழைத்து வந்துள்ளார். இதையடுத்து அவர்கள் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொட்டிக்குள் இருந்த மூவரும் […]

Categories

Tech |