முந்தைய அரசுக்கும் தற்போதைய அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை பிரதமர் சுட்டிக்காட்டி பெருமிதம் அடைந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி மத்தியில் ஆட்சி செய்த பிறகு பல்வேறு புதுப்புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தியாவை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றார். இவருடைய ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அகமதாபாத் நகரில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். பின்னர் பேசிய அவர் நாடு முழுவதும் ஆயிரம் கிலோ மீட்டருக்கு […]
Author: soundarya Kapil
நாட்பட்ட பொங்கல் பலகாரம் சாப்பிட்டு 2 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இரண்டு குழந்தைகள் பொங்கலுக்கு தங்கள் வீட்டில் செய்த பலகாரத்தை சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கலன்று செய்த வடை மற்றும் அதிரசம் ஆகியவை வீட்டிலிருந்துள்ளது. இதை யாஷினி(6) மற்றும் ஹரி(4) என்ற சிறுமிகள் எடுத்து சாப்பிட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நாட்பட்ட […]
வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நல்ல மழை பெய்தது. இதனால் ஏரிகள் மற்றும் குளங்கள் நிறம்பி வழிந்தன. இதனால் தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் இதுபோன்று எந்த வருடங்களிலும் ஜனவரி மாதத்தில் மழை பெய்யவில்லை என்று கூறபடுகிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலை […]
திமுக வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று திமுக எம்பி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று ஜெகத்ரட்சகன் எம்பி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கைப்பற்றும் எனவும், புதுச்சேரி […]
சென்னையில் குடியரசு தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் ஜனவரி 20, 22, 24, 26 ஆம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களிலும் 6 – 10 மணி வரை காமராஜர் சாலையில் கலங்கரை விளக்கம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்ணா சதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தம், வஜாலா சாலை விருந்தினர் மாளிகை […]
உங்களுக்காக நச்சுன்னு நான்கு டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவரைக்காய் – வாரம் இருமுறை சாப்பிட்டால் பித்தம் குறையும். இஞ்சி – இதிலுள்ள ஜிஞ்சரோல் என்ற ரசாயனம் ஆஸ்துமா, மைக்ரேன் தலைவலி, ரத்த அழுத்தம் சரி செய்ய உதவுகிறது. நெல்லிக்காய் – தலைமுடி வளர மற்றும் ஜீரண சக்தியை மேம்படுத்த உதவும். உடல் எடை குறைக்க – ஓட்ஸை தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
தமிழக ஏழை மக்களுக்கு இலவசமாக வீடு கட்டி தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்களின் 104 வது பிறந்த நாள் அதிமுகவினரால் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இதன் […]
எந்த வடிவத்தில் ஆஞ்சநேயரை வழிபட்டால் என்னென்ன பலன்கள் நமக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம். ஆஞ்சநேயர் சிவபெருமானின் வடிவமாக அவதரித்தவர் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆஞ்சநேயரின் சில வடிவங்கள் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. ஆஞ்சநேயரை வழிபட்டால் பல துன்பங்கள் விலகும் என்பது ஐதீகம். மேலும் எந்த வடிவத்தில் ஆஞ்சநேயரை வழங்கினால் என்ன என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். இப்படி வணங்கினால் அதற்கேற்ப பலன்கள் நமக்கு கிடைக்கும். 1.வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் தைரியம் வந்து சேரும். 2.பஞ்சமுக ஆஞ்சநேயரை […]
பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 29 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்க முயற்சிகளில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஆக்ஸ்போர்ட் மற்றும் பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்துகள் 90 சதவீதம் வெற்றியடைந்ததை அடுத்து பல்வேறு நாடுகளிலும் பைசர் தடுப்பு மருந்துக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது நார்வே நாட்டில் பைசர் […]
இளைஞர் ஒருவர் கபடி விளையாடிக்கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் கங்கன பள்ளியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அதே பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான நரேந்திரா தன்னுடைய அணியோடு சேர்ந்து விளையாடியுள்ளார். அப்போது கபடி ஆடி செல்கையில், எதிரணியினர் மடக்கி பிடித்த போது அவர்கள் அனைவரும் நரேந்திரா மீது விழுந்துள்ளனர். இதையடுத்து சற்று நேரத்தில் அவரிடமிருந்து வந்த கபடி, கபடி என்ற சத்தம் நின்று […]
நிரந்தரமாக கரப்பான் பூச்சியை வீட்டிலிருந்து ஒழிப்பது எப்படி என்று இப்போது பார்க்கலாம். பெரும்பாலும் நம்முடைய வீடுகளில் கழிப்பறை முதல் சமையலறை வரை எல்லா பக்கமும் தொல்லை கொடுப்பது இந்த கரப்பான் பூச்சிகள் ஆகும். இதை கண்டாலே சிலருக்கு அலர்ஜியாகி விடும். இதை எப்படியாவது ஒழித்து கட்ட வேண்டும் என்று நினைக்கிறோம். எனவே இதை நிரந்தரமாக ஒழிக்க எளிதான ஒரு வழியை இப்போது பார்க்கலாம். கரப்பாண்பூச்சியை ஒழிக்க ஒரு முட்டை வெள்ளை கருவில் இரண்டு ஸ்பூன் போரிக் பவுடர், […]
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 52 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகின்றது. இதனால் மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன நிலையில் இந்தியாவில் மக்களுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 52 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதால் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் […]
வேளாண் சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் அடுத்த 2024 வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்களின் போராட்டம் தொடர்கிறது. போராட்டக்களத்தில் பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனாலும் மத்திய அரசு விவசாயிகளின் போராட்டத்திற்கு இரக்கம் காட்டவில்லை. இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் […]
உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கனமழை பெய்து வந்தது. முன்புள்ள வருடங்களில் இல்லாதது போல இந்த வருடம் ஜனவரியில் நல்ல மழை கிடைத்துள்ளது. இதனால் குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பி வழிந்தன. பல இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. மேலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது . இந்நிலையில் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 70.5 […]
முகத்தில் இருக்கும் தழும்புகளை மறைக்க செய்ய வேண்டியது என்ன என்று இப்பொது பார்க்கலாம். முகத்தில் பருக்கள் ஏற்படுவது இளம் வயதில் ஹார்மோன் மாறுபாடுகளால் உருவாவது சகஜமான விஷயம்தான். இந்த பருவத்தில் வரும் பருக்கள் குறித்து சரியாக நாம் எதையும் செய்யாமல் விட்டு விடுவதால் தழும்புகள் வந்து விடும். இதனை நீக்க கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நம்முடைய வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு எளிய முறையில் நீக்க முடியும். தற்போது […]
பிப்ரவரி-26 ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டாம் & ஜெர்ரி திரைப்படம் வெளியாக உள்ளது. 90-ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த டாம் அண்ட் ஜெர்ரி திரைப்படமாக பிப்ரவரி 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தமிழிலும் வெளியாகிறது. வழக்கமான டாம் என்ற பூனைக்கும், ஜெர்ரி என்ற எலிக்கும் நடக்கும் சண்டை தான் கதை என்றாலும் திரைப்படத்திற்கு ஏற்றாற்போல் திரைக்கதை புதிய சுவாரஸ்யங்களும், திருப்பங்களும் நிறைந்ததாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
அரசு வேலைகளில் மாற்று திறனாளிகளுக்கான பணியிடங்கள் பட்டியலை மாற்று திறனாளிகள் துறை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள 40 சதவீதம் அல்லது அதைவிட அதிக இயலாமை உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான 3, 566 பணியிடங்களின் பட்டியலை மாற்றுத்திறனாளிகள் துறை வெளியிட்டுள்ளது. குரூப்ஏவில் 1, 046 பணியிடங்களும், குரூப் பியில் 5, 15 பணியிடங்களும், குரூப் சியில் 1, 724 பணியிடங்களும், குரூப் டியில் 281 பணியிடங்களும் இதில் அடங்கும். இதில் மனநலம் குன்றியவர்கள், ஆசிட் வீச்சால் […]
அரசு கலை, அறிவியல் கல்லூரி பணியாளர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் தங்கள் குறைகளை பதிவிட கூடாது என்று கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது தன்னுடைய பிரைவசி கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத பயனர்களின் கணக்குகள் நீக்கப்படும் என்று அறிவித்தது. இதனால் பயனர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி பணியாளர்கள் வாட்ஸ் அப் குழுக்களில் தங்கள் குறைகளை பதிவிட கூடாது என்று கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. வாட்ஸ் அப்பில் […]
ஆஸ்துமா பிரச்சினையின் தீவிரத்தை குறைப்பதற்கு எந்த உணவு வகைகளை எடுத்து கொள்ளலாம் என்று பார்க்கலாம். குளிர் காலத்தில் ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் பலரும் மூச்சு பிரச்சனையை சந்திக்க நேரிடும். இந்நிலையில் ஆஸ்துமா இருப்பவர்களின் நுரையீரலில் இருக்கும் பிரான்சியல் டியூப்புகள் உள் காயத்தால் சிவந்தும், வீங்கியும் காணப்படும். அதனால் ஆஸ்துமா உள்ளவர்கள் பகலில் எலுமிச்சை ஜூஸ், நெல்லிக்கனி எடுத்துக் கொள்ளலாம். அதில் உள்ள வைட்டமின் சி உள் காயத்தை குணமாக்கும். பிஸ்தா பருப்பு, கீரை ஆகியவற்றில் காணப்படும் விட்டமின் […]
ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் வேறு எந்த கட்சியிலும் இணைந்து கொள்ளாலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த் கட்சி தொடங்க போவதாக அறிவித்து பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். இது இவருடைய ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரஜினி […]
இளைஞர் ஒருவர் மது குடிக்க பணம் தராததால் தனது தாத்தாவை அடித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி அருகே வடக்கு சேர்பெட்டியை சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவர் பெற்றோர் குடிக்க பணம் தராததால் தன்னுடைய 85 வயது தாத்தாவை மரக் கட்டையால் சரமாரியாக அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் தன்னுடைய தாத்தாவை கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவரின் […]
நடிகர் கமல் மருத்துவர்கள் அறிவுரைப்படி காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கி வருகிறார். இந்நிலையில் நடிகர் கமலுக்கு முன்னர் ஏற்பட்ட காயம் காரணமாகவும், உணவு கட்டுப்பாடுகள் இருந்து விலகிய காரணமாகவும் […]
தூதுவளை இலை, காய், பூ, பழம் ஆகியவற்றில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்க்கலாம். இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் இந்த தூதுவளையாகும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ஒரு சிறந்த மூலிகை. இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி அளர்க்கம் என்று பல பெயர்கள் இருக்கின்றன. இது ஒரு கொடி வகை. சிறு முட்கள் நிறைந்து காணப்படும் இதன் இலை, காய், வேர் […]
நாளை பள்ளிகள் திறப்பையடுத்து வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன்வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. அமைச்சர் செங்கோட்டையன் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று உறுதியாக கூறினார். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி […]
அரசு பள்ளி மாணவர்கள் பழைய பஸ்பாஸ் இருந்தால் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன்வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. அமைச்சர் செங்கோட்டையன் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று உறுதியாக கூறினார். இதையடுத்து மாணவர்களின் […]
சொத்தைப்பல் வராமல் தடுப்பதற்கான வீட்டு வைத்தியமும், தடுக்கும் வழிமுறைகளையும் இப்போது பார்க்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பல் சொத்தை பிரச்சினை இருக்கிறது. பல் சொத்தையாக இருந்தால் தாங்க முடியாத கடும் வலி, ஈறு வீக்கம் ஆகியவை ஏற்படும். இதை தவிர்க்க சில வழிமுறைகளை கடைபிடிக்கலாம். சொத்தை வராமல் தடுப்பது: காலை மாலை இரண்டு வேளையும் பல் துலக்க வேண்டும். கடிக்கும் பகுதியை முன் பின்னாக துலக்க வேண்டும். நாக்கையும் சுத்த படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு […]
இன்று இரவு முதல்வர் எடப்பாடி அமித்ஷாவை நேரில் சந்தித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளன. இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து சசிகலா விடுதலை அதிமுக ஆட்சியில் மாற்றத்தை ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு நாள் பயணமாக இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். பின்னர் பிரதமர் மோடியை நேரில் […]
அமெரிக்க நிர்வாகத்தில் 20 இந்தியர்களுக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கி ஜோபைடன் கௌரவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் ஜோபிடன் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை தழுவினார். இருப்பினும் பைடனின் வெற்றியை ட்ரம்ப் ஏற்க மறுத்து வந்தார். இதையடுத்து அமெரிக்க நிர்வாகத்தில் இந்தியர்களை அமர்த்தப் போவதாக பைடன் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் அமெரிக்காவில் அமைய உள்ள பிடன் அரசு ஆரம்பத்திலேயே பல்வேறு சாதனை படைக்க காத்திருக்கிறது. அதில் முக்கியமாக இந்தியாவுடன் நல்லுறவை […]
மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதாக அபுதாபி நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் உலக நாடுகள் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காரணமாக ஆன்லைன் மூலம் அரபு நாடான அபுதாபியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஜனவரி 18-ஆம் தேதி முதல் திறக்கலாம் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டு இருந்தது. […]
இந்த 10 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள். அல்சர் என்பது வயிற்றில் வலியை ஏற்படுத்தும் புண்கள் ஆகும. இந்த பிரச்சனையால் வருடத்திற்கு 4.5 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நம்முடைய வயிற்றில் ஒரு பாதுகாப்பு அடுக்கு ஒன்று உள்ளது. இது வயிற்றில் உள்ள அமில சாறுகளை உணர்திறன் வாய்ந்த திசுக்களுக்கு வராமல் தடுப்பதால் வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதில் நல்ல செய்தி என்னவென்றால் சிகிச்சை மூலம் இதை சரி […]
பாத்ரூமில் இருந்து செல்போன் பேசுவதால் என்ன பிரச்சினை ஏற்படும் என்று இப்போது பார்க்கலாம். உலகம் முழுவதும் செல்போன் மயமாகிய இந்த காலகட்டத்தில் கழிப்பறையில் செல்போன் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெஸ்டன் பாத்ரூமை பயன்படுத்தும் பலரும் அங்கு எதற்கு சென்றார்களோ அந்த வேலையை முடிக்காமல், அங்கே நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்துவதில் மட்டுமே மும்முரமாக இருக்கின்றனர். இப்படி நீண்ட நேரம் கழிப்பறையில் அமர்ந்துகொண்டு செல்போன் பயன்படுத்துவதால் கீழ் மலக்குடல் ஆசனவாய் நரம்புகளில் அழுத்தம் அதிகரிப்பதாக மருத்துவர் ஜார்விஸ் […]
பிக்பாஸ்- 4 நிகழ்ச்சியின் டைட்டிலை நடிகர் ஆரி கைப்பற்றி வெற்றி வாகை சூட்டியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4ந் தேதிஆரம்பித்தது. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் இறுதிப்போட்டிக்கு ஆரி, பாலா, சோம், ரியோ மற்றும் ரம்யா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் நடிகர் ஆரி வெற்றி பெற்று டைட்டிலை கைப்பற்றியுள்ளார். பாலாஜி முருகதாஸ் இரண்டாவது போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்றைய கடைசி எபிசோட்ல் சோம் […]
தமிழக்தில் மக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகின்றது. நாடு முழுவதும் கொரோனா பரவி மக்களை படாதபாடு படுத்தி வருகின்றது. இந்நிலையில் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் முதலில் முன் களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி போட்டவர்களில் ஒரு சிலருக்கு ஒவ்வாமை போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுவதால் மக்கள் போட பயப்படுகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டு வரும் 2 ஆம் நாளில் […]
ஐஸ்கிரீமில் கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக சீன சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவின் வுகாண் நகரில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வேறு நாடுகளும் பொருளாதார இழப்புகளை சந்தித்துள்ளன. இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஒரு சில தடுப்பு மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் மக்களுக்கும் போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட […]
பேட்டரி பேருந்துகள் வாங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களின் வசதிக்காக அதிகளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. மேலு பேட்டரி பேருந்துகள் வாங்கும் திட்டம் இருந்தது. இந்நிலையில் தற்போது தமிழகத்திற்கு பேட்டரி பேருந்துகள் வாங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழக சட்ட பேரவை தேர்தல் நடக்க இன்னும் சிலமாதங்களே உள்ளன. எனவே 2021 தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்ற பிறகு […]
சென்னையில் இ-பைக் சேவை பயன்பாட்டிற்கு வர உள்ளதாக அதிரடி அறிவிய்ப்பு வெளியாகி உள்ளது. சென்னையில் இ-பைக் சேவை பயன்பாட்டிற்கு வர உள்ளது. இந்த பைக்கில் செல்ல முதல் பத்து நிமிடத்திற்கு ரூபாய் 10 கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அடுத்த ஒவ்வொரு நிமிடத்திற்கும் ரூ.1 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சேவைக்கு 3 மாத பயண அட்டை, ஒரு நாள் பயண அட்டை, ஒரு மாத பயண அட்டைகளும் வழங்கப்படும் என […]
தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் நடிகர் ரஜினி கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கட்சி தொடங்க போவதில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ஏ.கே ஸ்டாலின் […]
மருத்துவமனையில் நோயாளிகள் 5 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலியில் மருத்துவமனையில் விஷவாயு தாக்கியதில் 5 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் திடீரென மோனாக்சைடு கசிந்துள்ளது. இதனை சுவாசித்த நோயாளிகள் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் உடல் உபாதைகள் ஏற்பட்டு அனைவரும் சுயநினைவை இழந்துள்ளனர். இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் வந்து மற்றவர்களையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், இந்நிலையில் மருத்துவமனையில் விஷ வாயு கசிந்து நோயாளிகள் உயிரிழந்துள […]
13 வயது சிறுமி ஒருவர் 5 நாட்களில் 3 முறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் உமாரியா மாவட்டத்தில் 13 வயது சிறுமி 5 நாட்களில் மூன்று முறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 4ம் தேதி சிறுமியை கடத்தி சென்ற 7 பேர் கும்பல் இரண்டு நாட்கள் சிறுமி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் சில நாட்களுக்குப்பின் மீண்டும் பலாத்காரம் செய்யப்பட்ட […]
எய்ம்ஸ் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு அலர்ஜி ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இந்நிலையில் ஒரு சில தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் முதலில் முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டெல்லியில் உள்ள மத்திய அரசு மருத்துமனையில் கட்டாயமாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் […]
தான் திமுகவில் இணைந்ததாக வெளியான தகவல் தவறானது என்று கிருஷ்ணகிரி ரஜினி மக்கள் மன்ற செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களில் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கட்சி தொடங்கப்போவதில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில் தான் திமுகவில் இணைந்ததாக வெளியான தகவல் தவறானது என்று […]
நாளை முதல் சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் பிப்ரவரி 17 வரை சாலை பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் […]
மாணவர்களுக்கு குறைக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்துக்கான புளுபிரிண்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதையடுத்து பள்ளிகள் எப்போது திறப்பது என்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. இந்நிலையில் மாணவர்களுக்கு 19-ம் தேதி முதல் பள்ளி திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40% பாடத் திட்டத்தை அரசு குறைத்துள்ளது. தற்போது குறைக்கப்பட்டுள்ளன […]
வாட்ஸ்ஆப் வெப் மூலமாக பயன்படுத்தும் பயனர்களின் தொலைபேசி எண்கள் இணையத்தில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பில் பயனாளர்களின் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டு வணிக நோக்கில் அந்த தகவல்கள் பிற நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று அண்மையில் அறிவித்தது. இதற்கு ஒப்புதல் அளிக்காதவர்கள் பிப்ரவரி-8 ஆம் தேதிக்கு பிறகு வாட்ஸ்அப்பை உபயோகப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. இதையடுத்து வாட்ஸ்அப் இன் புதிய கொள்கைக்கு பயனாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனவே கொள்கையை மறுபரிசீலனை செய்வதாகவும், அதுவரை யார் கணக்கும் நீக்கப்படாது என்றும் […]
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி-19 ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளது. எனவே அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமர் மோடிநேரில் சந்திக்க உள்ளார். ஜனவரி 19ஆம் தேதி நிகழவுள்ள இந்த சந்திப்பு அன்று தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் 589 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழக முழுவதும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை 6 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு வைக்கப்பட்டது. எனவே டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் இருப்பு வைக்கபட்டது. பண்டிகை தினங்களில் வழக்கமாக அதிகமாக மது விற்பனை செய்யப்படும். இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் பொங்கல் விடுமுறை தினங்களில் மட்டும் மொத்தம் ரூபாய் 589 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 13-ஆம் […]
ஆன்லைன் மூலமாக மொய் பணம் செலுத்தும் முறை மதுரையில் நடந்த திருமணம் ஒன்றில் அரங்கேறியுள்ளது. காலங்காலமாக திருமண நிகழ்ச்சிகள், மற்றும் மற்ற விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சென்று விட்டு மோய் செய்துவிட்டு வருவது வழக்கம். மோய் பணத்தை ஒரு நோட்டு போட்டு எழுதி வைப்பார்கள். இந்த பழக்கம் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. “கல்யாணத்துக்கு போறோமோ இல்லையோ ஆனா மொய் நோட்டுல நம்ம பெரு இருக்கணும்” இந்த வார்த்தையை சொல்லும் தமிழ்நாட்டில் மொய் பணம் எந்த அளவுக்கு முக்கியம் என்று […]
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தில் 50% குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளிகள் திறப்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தது. தற்போது பள்ளிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டத்தில் 50% குறைக்கப்படுவதாக தமிழக […]
மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக சுகாதாரத்துறை செயலாளர் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. இதையடுத்து இந்தியாவில் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சியில் தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். முன் களப்பணியாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவும், கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டுள்ளார். மக்கள் பின் விளைவுகள் குறித்து அச்சப்பட்டு தடுப்பூசி […]
வாட்ஸ்அப் நிறுவனம் அனைவர் கணக்கிலும் பாலிசி விவரங்களை ஸ்டேட்டஸ் ஆக அப்டேட் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ்அப்பில் பயனாளர்களின் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டு வணிக நோக்கில் அந்த தகவல்கள் பிற நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் என்று அண்மையில் அறிவித்தது. இதற்கு ஒப்புதல் அளிக்காதவர்கள் பிப்ரவரி-8 ஆம் தேதிக்கு பிறகு வாட்ஸ்அப்பை உபயோகப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தது. இதையடுத்து வாட்ஸ்அப் இன் புதிய கொள்கைக்கு பயனாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனவே கொள்கையை மறுபரிசீலனை செய்வதாகவும், அதுவரை யார் கணக்கும் நீக்கப்படாது […]