Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு…. விடிய விடிய பேருந்து ஓடும்… எம்டிசி அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகையையொட்டி 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று எம்டிசி  நிர்வாகம் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் இருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்பும் பயணிகளுக்காக சென்னையிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதன்படி கோயம்பேடு, கேகே நக,ர் தாம்பரம், சானடோரியம், மாதவரம், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து இன்று முதல் நாளை மறுதினம் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை மாநகரின் பல்வேறு பகுதியில் வசிக்கும் […]

Categories
லைப் ஸ்டைல்

கொய்யாப்பழத்தில் இவ்ளோ விஷயம் இருக்கா…? என்னனு நீங்களும் தெரிச்சிக்கோங்க…!!

கொய்யாப்பழத்தை  சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் மற்றும் ஆபத்துகள் இருக்கிறது என்று இப்போது பார்க்கலாம். பழங்களிலேயே விலை குறைவானதும், மிகுந்த சத்து உடையதும் உள்ளது கொய்யாப் பழம். இதில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் உடையது. இதை வெட்டி சாப்பிடுவதை விட நன்றாக கழுவிய பிறகு பற்களால் நன்றாக மென்று தின்பதே நல்லது. வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் […]

Categories
மாநில செய்திகள்

பறவைக்காய்ச்சல் எதிரொலி…. முட்டை விலை தொடர் சரிவு…!!

பறவைக்காய்ச்சல் எதிரொலியாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை தொடர்ந்து சரிந்து வருகின்றது. நாடு முழுவதும் மக்கள் இன்னும் கொரோனாவிலிருந்தே இன்னும் மீண்டு வராத நிலை நிலையில், உருமாறிய கொரோனா, பறவைக் காய்ச்சல் என்று வரிசை கட்டி வருகிறது . இந்நிலையில் கேரளா மற்றும் வாடா இந்திய மாநிலங்களில் பரவிய பறவை காய்ச்சல் எதிரொலியாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இதையடுத்து கேரளாவிற்கு செல்ல வேண்டிய மூன்று கோடி முட்டைகள் தேங்கியுள்ளதால் முட்டை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வந்துட்டேனு சொல்லு…. திரும்பி வந்துட்டேனு சொல்லு…. பரபரப்பை கிளப்பிய தமிழருவி மணியன்…!!

தமிழருவி மணியன் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தொடருவதாக அறிவித்து புதிய பரபரப்பை கிளப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் “போகிறேன், இனி வரமாட்டேன்” என்ற வாசகத்துடன் அரசியலிலிருந்து விலகுவதாக தமிழருவி மணியன் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தொடருவதாக அறிவித்து […]

Categories
லைப் ஸ்டைல்

முடி உதிர்தலை கட்டுப்படுத்த…. சில டிப்ஸ்கள் இதோ…!!

முடி உதிர்தலை கட்டுப்படுத்த உதவும் சில எளிய டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம். நமது வாழ்க்கை முறை பல அம்சங்களை கொண்டு உள்ளது. நாம் சாப்பிடும் உணவுகள் நம் தலைமுடியை எவ்வாறு பாதுகாக்கும். அதே நேரத்தில், நாம் சாப்பிடும் உணவுகளால் நம் தலை முடியின் வளர்ச்சியை எவ்வாறு அதிகப்படுத்தலாம் என்பதை யோசிக்க வேண்டும். ஒரு சில முடி இழைகளை இழப்பது என்பது சாதாரணமாகக் கருதப்பட்டாலும், நீங்கள் ஏராளமான முடிகளை அதும் அவை கொத்து கொத்தாக உதிரத் தொடங்கும்போதுதான் நமது […]

Categories
உலக செய்திகள்

மாயமான விமானத்தின்…. கருப்பு பெட்டிகள் கண்டுபிடிப்பு…. வெளியான தகவல்…!!

மாயமான ஏர் விமானத்தின் கருப்பு பெட்டிகள் கடல்பகுதியில் மீட்புக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் கடல் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று ஸ்ரீவிஜயா ஏர் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் பயணிகளுடன் மாயமானது. இதையடுத்து விமானம் விழுந்து நொறுங்கிய கடல் பகுதியில் தேர்தல் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். அப்போது போர்க்கப்பல் அந்த விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சிக்கனல்களை வைத்து கண்டுபிடித்துள்ளது. இது குறித்து தேடல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் பாகுஸ் புரூஹீடோ கூறுகையில், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“4 ஆண்டுகளுக்கு பின்” ஆசையாக பிள்ளைகளை பார்க்க சென்ற நபர்…. செருப்பால் அடித்த அத்தை…!!

நபர் ஒருவர் 4 ஆண்டுகளுக்கு பின் தனது பிள்ளைகளை பார்க்க சென்றபோது அத்தை அவமானப்படுத்தியதால் மாயமாகியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியில் வசிப்பவர் ரஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகின்றார். இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்பு இந்த தம்பதியினருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ரஜினிகுமாரின் மனைவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

17 வருடங்களுக்கு பிறகு…. “மீண்டும் விருமாண்டி” ரசிகர்கள் மகிழ்ச்சி…!!

17 வருடங்களுக்கு பிறகு நடிகர் கமலின் விருமாண்டி படம் வெளியாக உள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது. நடிகர் கமலஹாசன் நடிப்பில் 2004 ஜனவரியில் வெளியான படம் விருமாண்டி. இதில் கதாநாயகியாக அபிராமி நடித்திருந்தார். மேலும் பசுபதி, நெப்போலியன் ஆகியோரும் இந்தபடத்தில் நடித்துள்ளனர். இந்த  படத்துக்கு முதலில் வேறு பெயர் வைத்த போது ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக படத்திற்கு விருமாண்டி என்று பெயர் வைத்தனர். இந்த படம் அப்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும் அதிக […]

Categories
டெக்னாலஜி

வாட்ஸ்அப் செய்த தேவையில்லாத வேலை…. ட்ரெண்ட் ஆகி வரும் சிக்னல் ஆப்…!!

வாட்ஸ் அப் செய்த தேவையில்லாத வேலையின் காரணமாக தற்போது சிக்னல் செயலியானது நல்ல டிரெண்ட் ஆகி வருகின்றது. வாட்ஸ் அப் செயலியில் புதிய பிரைவசி மற்றும் பாலிசி மாற்றம் வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தியதால் உலகம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வாட்ஸ் அப்புக்கு மாற்றாக புதிய செயலியை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். பிரைவசி மாற்ற விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து சிக்கனல் மெசேஜிங்க் செயலியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக சிக்னல் ஆப்பானது இந்தியா, ஆஸ்திரேலியா, […]

Categories
உலக செய்திகள்

என்னது வட்டி இல்லாம வீட்டுக்கடனா…? எங்கப்பா கொடுக்குறாங்க…? வாங்க பார்க்கலாம்…!!

ஒரு நாட்டில் வீட்டுக்கடனுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கப்படுகின்றதாம் அதை பற்றி இங்கே பார்க்கலாம். நாம் வீடு வாங்கவோ, கட்டவோ வீட்டுக்கடன் வாங்க இந்தியாவை பொறுத்தவரை, குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வாங்க திட்டமிடுவது என்பது புத்திசாலித்தனம். வங்கிகளும் வீட்டுக் கடனுக்கான சில சலுகைகளை வழங்குகின்றன. வட்டி தள்ளுபடி, பிராசஸிங் கட்டணம் சலுகை, பண்டிகைக் கால சலுகைகள் என வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக சலுகைகளை வழங்கி வருகின்றது. ஆனால் நாம் கடன் வாங்கும் முன் குறைந்த வட்டிக்கு எங்கு […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்…. சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!!

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் வெளியூர்களில் இருந்து மக்கள் பொங்கல் பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புவது வழக்கம். இதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு பேருந்து மற்றும் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு, தாம்பரம், கே.கே நகர், மாதவரம், பூவிருந்தவல்லி ஆகிய ஐந்து பேருந்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியுள்ளது. சென்னையிலிருந்து 270 சிறப்பு பேருந்துகள் உட்பட 2226 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. […]

Categories
தேசிய செய்திகள்

பழையதை மாற்றி…. வண்ண வாக்காளர் அட்டை பெற…. செல்போனிலில் விண்ணப்பிப்பது எப்படி…?

பழைய வாக்காளர் அட்டையை புதிய வண்ண அட்டையாக மாற்ற செல்போனில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம். நம்முடைய பழைய வாக்காளர் அடையாள அட்டை கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால் சமீபகாலமாக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை வண்ண அடையாள அட்டையாக உள்ளது. அதை மாற்றி புதிய அடையாள அட்டையாக நீங்களே உங்களுடைய செல்போன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதில் உங்களுடைய பெயர் முகவரி உள்ளிட்டவற்றை மாற்றி புதிய வண்ண வாக்காளர் அட்டையை பெற முடியும். இதற்கு முதலில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்! வங்கிகளில் நூதன முறையில் திருட்டு…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!

வங்கிகளில் நூதனமான முறையில் பணம் திருடப்படுவதால் எச்சரிக்கையாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி கேட்டு கொண்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்களின் பெர்சனல் தகவல்கள் திருடுவதற்காக வங்கிகளின் toll free நம்பரை போல் போலியான toll free நம்பர் மூலம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு மோசடி நடப்பதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இது குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகளின் toll-free எங்களைப் போன்றே இருக்கும் வேறு எண்கள் வாயிலாக வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு மர்ம கும்பல் மோசடி செய்வது […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்…. ரயில் சேவை தொடக்கம்- தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட உதகை – மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை இன்று முதல் மீண்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே ஆடர்லி பகுதியில் விழுந்த மண் சரிவை அகற்றும் பணி நடந்ததால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. தற்போது தண்டவாளம் சீரமைக்கப்பட்டு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டதையடுத்து இன்று முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால்…. அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் – கமலஹாசன்…!!

தமிழகம் வெற்றிநடை போட்டிருந்தால் நான் அரசியலுக்கு வைத்திருக்க மாட்டேன் என்று கமல் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இந்நிலையில் தமிழகம் வெற்றி நடை போட்டு இருந்தால் நான் அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன் என மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டி…. நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்….!!

ஜல்லிக்கட்டு போட்டியை பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது. ஆனால் கொரோனா விதிமுறைகளின்படி போட்டியை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போது மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் ஜனவரி-14 , பாலமேட்டில் ஜனவரி-15, அலங்காநல்லூரில் ஜனவரி-16ம் தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்நிலையில் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர் ஒகே சொல்லிட்டாங்க…. வரும் 20 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை முடிவு…!!

வரும் ஜனவரி-20 ஆம் தேதி பள்ளிகள் திறக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இந்த வருடம் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதையடுத்து பள்ளி திறப்பு குறித்து […]

Categories
லைப் ஸ்டைல்

கை, கால் வலி மற்றும் அல்சர் நீங்க…. இது மட்டும் போதும்…!!

கை, கால் மற்றும் அல்சர் போன்றவற்றை நீக்க என்ன செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம். பெரும்பாலும் நம்மில் எல்லோருக்கும் கை கால் வலி எப்போதுமே இருக்கும். குறிப்பாக முதியவர்களுக்கு திகமாக இருக்கும். வேலை செய்தாலும் சரி, வேலை செய்யாவிட்டாலும் சரி நமக்கு கை கால் வலி என்பது எப்போதுமே இருக்கும். அதே போல உணவு பிரச்சினை சிலருக்கு வயிற்றில் புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதை நீக்குவதற்கான ஒரு தீர்வை இங்கே பார்க்கலாம். தேவையான பொருள்: சீரகம் […]

Categories
லைப் ஸ்டைல்

பிரஷை எப்போது மாற்ற வேண்டும்…. உங்களுக்கு தெரியுமா…??

தினமும் பயன்படுத்தும் பிரஷை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்று பார்க்கலாம். நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பிரஸ் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? சிலர் பல மாதங்களுக்கு மாற்றாமல் அப்படியே பயன்படுத்தி வருகிறார்கள். பல் துலக்க பயன்படுத்தும் பிரஸ் மாற்ற வேண்டிய தருணம் எப்போது என்பது நம்மில் பலரும் கவனிக்கத் தவறுகிறோம். இதில் நம்முடைய உடல் நலமும் இருக்கின்றது. மருத்துவரின் பரிந்துரைப்படி 12 முதல் 16 வாரங்களுக்கு ஒருமுறை […]

Categories
மாநில செய்திகள்

ஜன-11 முதல் ஜன-14 வரை…. மழை பிச்சி எடுக்கும்…. வெதர்மேன் சூப்பர் அப்டேட்…!!

தமிழகத்தில் ஜனவரி-11 முதல் ஜன-14 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை எப்போதாவது ஒரு சில ஆண்டுகளில் தான் மிகப்பெரிய அளவில் ஜனவரியில் மழையை ஏற்படுத்தும். பொதுவாக ஜனவரியில் பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இருக்காது. மழை பெய்யும் வாய்ப்பு கூட பெரிதாக இருக்காது. இவ்வகையில் இப்போது வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை நீடித்து வருகிறது. சில இடங்களில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் காலையில் இதை சாப்பிட்டு வாங்க…. அப்புறம் பாருங்க…. இதோட அருமை…!!

வெந்தயத்தை சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம். நாம் அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ளும் பொருளில் வெந்தயமும் ஒன்று ஆகும். இதில் விட்டமின் ஏ, சி, இரும்புச்சத்து, விட்டமின் பி, சி, மெக்னீசியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் பொட்டாசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் நிறைந்துள்ளது. வெந்தயத்தில் உள்ள வைட்டமின் சி சத்து சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. 1.வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு உடல் சூட்டினால் […]

Categories
உலக செய்திகள்

“சேற்றில் தென்பட்ட மனித விரல்” தகவல் கொடுத்ததால் ஓடி வந்த போலீசார்…. காத்திருந்த அதிர்ச்சி…!!

சேற்றில் புதைந்திருந்த மனித விரலை எடுத்த காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. இங்கிலாந்தில் பெண் ஒருவர் தன்னுடைய செல்லப்பிராணியுடன் தனது குடியிருப்பு பகுதியில் உள்ள வயல்வெளி பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு சேறு நிறைந்த பகுதியில் மனிதனின் கால் விரல் தெரிந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக தன்னுடைய செல்போனில் அந்த புகைப்படத்தை எடுத்த பெண் தன்னுடைய வீட்டிற்கு வேகமாக வந்து காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் யாரையும் கொன்று […]

Categories
தேசிய செய்திகள்

PF பணம் பணம்…. இவ்ளோ பயன்கள் இருக்கா…? நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது…!!

PPF திட்டத்தின் பயன்கள் மற்றும் சிறப்பம்சங்களை குறித்து இங்கே  பார்க்கலாம். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து முதலீடு செய்ய நினைத்தால் அதை PPF திட்டத்தில் முதலீடு செய்வதுதான் சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இந்தியாவில் அதிக வட்டி வருமான வழங்கும் திட்டங்களில் PPF ம் ஒன்று. முதலில் இதனுடைய சிறப்பம்சம் என்னவென்றால் அதிகமான வட்டி. இரண்டாவது சிறப்பம்சம் என்னவென்றால் 100% பாதுகாப்பான முதலீடு. 15 -20 வருடங்கள் வரை நீண்ட காலம் இப்படி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மதுபோதையில் ரயிலில் தூங்கிய பெண்…. பின்னர் நடந்த அதிர்ச்சி…!!

மின்சார ரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரத்தில் மின்சார ரயிலில் தூங்கிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டை அடுத்த பரனூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் குடிபோதையில் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் ஏறியுள்ளார். இதையடுத்து அவர் ரயிலில் நன்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அது நள்ளிரவு நேரம் என்பதால், தாம்பரம் பணிமனையில் தற்காலிக ஊழியர்கள் சுரேஷ், அப்துல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்ட…. நபர் உயிரிழப்பு – அதிர்ச்சி…!!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவி வருகிறது. இது ஒருபுறம் இருக்க உருமாறிய கொரோனா, பறவைக்காய்ச்சல் என வரிசையாக மக்களை ஆட்டம்  வருகின்றது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட தன்னார்வலர் ஒருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. தீபக் மராவி என்பவர் கடந்த மாதம் 12ஆம் தேதி தடுப்பூசி போட்டு விட்டு வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்தால் மருத்துவமனைக்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நாசா செல்ல இருக்கும் ஏழை மாணவியின்…. “ஒரு வேண்டுகோள்” நிறைவேறியதால்…. பாராட்டிய கிராமம்…!!

நாசா செல்ல இருக்கும் ஏழை மாணவி ஒருவர் தனது பொதுநலத்திற்காக மக்களின் பரட்டை பெற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிக்கும் மாணவி ஜெயலட்சுமி(16). இவர் ஏழ்மையான குடும்பத்தில் சார்ந்தவர் என்பதால் அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். மேலும் இவர் சர்வதேச தேர்வில் கலந்துகொண்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவில் கடந்த வருடம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மாணவி ஜெயலட்சுமி காலையில் தன் வீட்டு வேலையை முடித்துவிட்டு பள்ளிக்கு செல்வது வழக்கம். பள்ளி முடிந்த பிறகு கூலி வேலைக்கு சென்று […]

Categories
மாநில செய்திகள்

பறவைக்காய்ச்சல் எதிரொலி – 2 கோடி முட்டைகள் தேக்கம்…!!

பறவைக்காய்ச்சல் எதிரொலியால் நாமக்கல் மண்டலத்தில் 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளது. கொரோனாவிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி வருகின்றது. இந்நிலையில் பறவைக்காய்ச்சல் எதிரொலியால் நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் 2 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. கேரளாவில் பறவைக்காய்ச்சலால் முட்டை நுகர்வு குறைந்ததால் நாமக்கல்லில் இருந்து விற்பனைக்குச் செல்லும் முட்டைகள் குறைந்துள்ளன. நாமக்கல் மண்டலத்தில் முட்டைகள் கொள்முதல் விலை கடந்த இரண்டு நாட்களில் 50 காசுகள் குறைந்து தற்போது ரூ.4.60 ஆக நிர்ணயம் […]

Categories
தேசிய செய்திகள்

Alert: புதிய சிக்கல் – இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிரடி அறிவிப்பு…!!

ஸ்டேட் பேங்க் யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ளும் தளத்தை மேம்படுத்த போவதாக வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நாட்டுபவத்தை வழங்குவதற்காக யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்ளும் தளத்தை மேம்படுத்த போவதாக தெரிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் யுபிஐ தொடர்பான சிக்கல்களை சந்திக்க நேரிடும். அதுவரை யோனோ, யோனோ லைட், நெட் பேங்கிங் ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சாமி கும்பிட்டு வாரோம்” கோவிலுக்கு சென்ற குழந்தைகள்…. பின்னர் நடந்த துயரம்…!!

குழந்தைகள் இருவர் கோவிலுக்கு சென்றபோது குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் பகுதியில் வசிப்பவர் முத்து. இவர் மகள் கீர்த்தனா ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் அதே பகுதியை சேர்ந்த கேசவன் என்பவரின் மகள் மகாலட்சுமி. இவர் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவரும் அதில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றுள்ளனர். இதையடுத்து வெகுநேரமாகியும் குழந்தைகள் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அவர்களின் பெற்றோர் பல இடங்களில் […]

Categories
உலக செய்திகள்

கணவரின் இறுதி சடங்கு முடிந்து…. வீடு திரும்பிய மனைவி…. காத்திருந்த இன்ப அதிர்ச்சி…!!

உயிரிழந்து விட்டதாக நினைத்த கணவர் ஒருவர் மீண்டும் உயிரோடு இருந்துள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டுராஸ் நாட்டில் வசிக்கும் தம்பதிகள் ஜூலியோ -விக்டோரியா. இவர்கள் அங்குள்ள பகுதியில் ஒரு குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று ஜூலியோ தன்னுடைய வீட்டில் இருந்து வழக்கமாக வாக்கிங் சென்றுள்ளார். இஇந்நிலையில் ஜூலியோ எதிர்பாராவிதமாக காட்டுப்பாதையில் மயங்கி விழுந்துள்ளார். இதனால் வெகுநேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த விக்டோரியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது கொரோனாவால் இருந்த முதியவரின் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க சொந்தமா வீடு கட்ட போறீங்களா…? இந்த அட்டகாசமான வாய்ப்பை…. மிஸ் பண்ணிராதீங்க…!!

சொந்தமாக வீடு கட்டவோ அல்லது வாங்கவோ நினைப்பவர்களுக்கு எஸ்பிஐ வங்கி அசத்தலான சலுகைகளை அறிவித்துள்ள்ளது. 2021 ஆம் வருடம் ஆரம்பித்துள்ள நிலையில் பலருக்கும் இந்த வருடம் எப்படியாவது வீடு கட்டி விட வேண்டும் என்று அல்லது வீடு வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் .அப்படி வீடு வாங்கவோ அல்லது கட்டவோ திட்டம் ஏதாவது இருந்தால் இதுதான் சரியான வாய்ப்பு. இப்போது வீட்டு கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வது சிறந்தது. வீடு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி மலையில்…. ஏழுமலையானை கும்பிட்டு வந்தபோது…. நடந்த செம ஷாக்…!!

திருப்பதி தேவஸ்தான அறையில் தங்கியிருந்தவர்களின் நகை மற்றும் பணம் திருட்டு போயுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். எனவே பக்தர்களுக்கு வசதியாக தங்கும் விடுதிகள், உணவகங்கள், அன்னதானம் உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்ய திருப்பதிக்கு  சென்றுள்ளனர். அங்குள்ள திருப்பதி தேவஸ்தானத்தின் GNC காட்டேஜில் அறையை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் […]

Categories
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் மீண்டும் ஒரு துயரம்…. “அடுத்தடுத்து நிலச்சரிவு” குழந்தைகள் உட்பட 11 பேர் பலி…!!

கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போயிங் ரக  விமானம் விமான ஊழியர்கள் 12 பேர் உட்பட 62 பேருடன் புறப்பட்டது.  புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் கடலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்தவர்கள் யாரும் உயிர் தப்பியிருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகமே இன்னும் நீங்கவில்லை. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

SBI வாடிக்கையாளர்களே! உங்கள் பணத்திற்கு ஆபத்து…. எச்சரிக்கையாக இருங்கள்…!!

கடன் ஆப் மோசடி குறித்து எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது அதிகாரப்பூர்வமற்ற டிஜிட்டல் தளங்கள் மற்றும் செல்போன் செயலிகள் மூலமாக உடனடி கடன் வழங்குவதாக கூறி பல கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து வாடிக்கையாளர்கள் கவனமுடன் இருக்குமாறு எஸ்பிஐ வாங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கியின் டுவிட்டர் பக்கத்தில், உடனடி கடன் மோசடி குறித்து வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எஸ்பிஐ அல்லது வேறு பெயரில் அதிகாரப்பூர்வமற்ற லிங்குகளை […]

Categories
தேசிய செய்திகள்

“எங்களுக்கு மழை வரணும்” நாய்களுக்கு திருமணம் செய்து…. கோலாகலமாக கொண்டாடிய மக்கள்…!!

மழை வேண்டி கிராமவாசிகள் நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் மூடநம்பிக்கையை உணர்த்துவதாக உள்ளது. கல்வியறிவு என்பது நம் நாட்டில் உயர்ந்தாலும் மூடநம்பிக்கை என்பது மக்களுக்கு இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மழை இல்லாமல் வாடிய கிராமவாசி மக்கள் மழை வேண்டி நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம். உத்தரபிரதேச மாநிலம் நிவாரி மாவட்டத்தில் ஒரு குக்கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் உள்ள கிராமவாசிகள் மழை வேண்டி இரண்டு நாய்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி! “உயிரைக்கொல்லும் கொடிய வைரஸ்” மருத்துவமனை வார்டுகளிலே எளிதாக பரவுதாம்…!!

உயிரை கொல்லும் கொடிய வைரஸ் மருத்துவமனையிலேயே எளிதாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்க மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டுகளில் நோயாளிகளிடையே புதியதாக ஒரு மர்மமான உயிர்கொல்லி பூஞ்சை பரவி வருவதாக  அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.  Candida auris  என்று அழைக்கப்படும் இந்த கொடிய உயிர் கொல்லி பூஞ்சையானது மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகிறது. இந்த நோய் முதன் முதலாக 2009ஆம் வருடம் ஜப்பானில் பரவியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் சமீபகாலமாக உலக அளவில் வேகமாக பரவி வருவதாக அமெரிக்க […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“வீட்டிலேயே பிரசவம்” அலட்சியத்தின் உச்சக்கட்டம்…. அழுகி பிறந்த குழந்தை…. கர்ப்பிணிக்கு நேர்ந்த துயரம்…!!

கர்ப்பிணி ஒருவர் வீட்டில் பிரசவம் பார்த்தபோது உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பட்டியில் வசிக்கும் தம்பதிகள் விஜயவர்மன்- அழகம்மாள். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அழகம்மாள் கர்ப்பம் தரித்துள்ளார். இதையடுத்து விஜயவர்மன் அண்ணன் விக்கிரமராஜா அக்குபஞ்சர் மருத்துவம் பார்த்து வந்ததால் அழகமாளுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார் .அதற்கு அவருடைய பெற்றோரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் மருத்துவமனைக்கு சென்றால் அங்கு கொடுக்கும் மாத்திரை, மருந்து சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு…. ஒரு இனிப்பான செய்தி…. முதல்வர் அறிவிப்பு…!!

ரேஷன் கடைகளில் கருப்பட்டியையும் சேர்த்து வழங்க பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். சென்னையில் நாடார் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில், முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டுள்ளார். அப்போது பேசிய அவர், பனை பொருட்கள் தயாரிப்பில் ஏராளமானவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பனை பொருட்களின் நன்மைகள் எனக்கு நன்றாகத் தெரியும். அதைத் தான் தினமும் என் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருக்கிறேன். தினமும் காலையில் கொத்தமல்லி காபியில் பனங்கருப்பட்டியை சேர்த்து தான் குடித்து வருகின்றேன். அப்போது பனங்கருப்பட்டியை நியாயவிலை கடைகள் […]

Categories
தேசிய செய்திகள்

நீங்கள் சிலிண்டர் இப்படி புக்கிங்க் செய்தால்…. ரூ.500 தள்ளுபடி செய்யப்படும்…!!

சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் போது கேஷ் பேக் சலுகையை எப்படிப் பெறுவது என்று பார்க்கலாம். கொரோனா பாதிப்புக்குப் பிறகு அனைவருக்கும் நிதி நெருக்கடி நிலவுகிறது. இந்நிலையில் சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், சிலிண்டர் வாங்குவது கொஞ்சம் சிரமம். வீட்டு உபயோகத்துக்கான சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்து வாங்குவதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. தற்போது செல்போன் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் இப்போது அதிகமாக முன்பதிவு செய்கின்றனர். செல்போன் ஆப் மூலமாக முன்பதிவு செய்வதற்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“பாய் பிரண்டு தான் வேணும்” மனைவி கூறியதால்…. வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு…. தற்கொலை செய்த கணவர்…!!

கணவர் ஒருவர் தனது மனைவி ஆண் நண்பருடன் வாழ போவதாக கூறியதால் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் சாமுண்டிபுரம் நாகாத்தம்மன் கோவில் அருகே‌ வசித்து வரும் தம்பதிகள் பாண்டியராஜன் (27) – சித்ரா (21). இவர்களுக்கு 5 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகின்றது. பாண்டியராஜன் லோடுமேனாக வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி பனியன் கம்பெனியில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மறு அறிவிப்பு வரும் வரை – திடீர் உத்தரவு…!!

நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை மத்திய சுகாதார அமைச்சகம் ஒத்தி வைத்துள்ளது. நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வரும் 17ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் அறிவித்தார். இந்நிலையில் தேதி குறிப்பிடப்படாமல் முகாமை மத்திய சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் 16ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்க உள்ளதால் ஒரே நேரத்தில் மூன்று தடுப்பு […]

Categories
மாநில செய்திகள்

போடு செம! மாணவர்களுக்கு ஏப்ரல் வரை – முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!

கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை இலவச டேட்டா வழங்க முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் கல்லூரி வகுப்புகள் ஆன்லைனில் நடைபெறுவதால் இணைய வசதிக்காக கல்லூரி மாணவர்களுக்கு ஏப்ரல் வரை தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் […]

Categories
லைப் ஸ்டைல்

அடேங்கப்பா! செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடித்தால்…. இந்த 10 நன்மைகள் நிச்சயம் கிடைக்கும்…!!

செம்பு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு ஏற்படும் 10 நன்மைகள் பற்றிய தொகுப்பு. நம் முன்னோர்கள் காலம் காலமாக செம்பு பாத்திரத்தில் தான் தண்ணீரை சேமித்து வைத்து குடித்தார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. நம்முடைய உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த முதலில் தேவையானது குறையாத நீர்சத்து தான். இதை முன்னரே உணர்ந்தால் தான் தண்ணீர் சுவையற்ற பானமாக இருந்தாலும் அதை சத்தான பானமாக மாற்ற செம்பு நீரில் பிடித்து பயன்படுத்தினார்கள். அதிகாலையில் வெறும் வயிற்றில் செப்புப் […]

Categories
தேசிய செய்திகள்

அலர்ட், அலர்ட்! அழைப்பை எடுக்க வேண்டாம்…. Debit, Credit Card மோசடி…!!

தடுப்பூசி குறித்து வரும் போன் அழைப்பு, எஸ்எம்எஸ், போலியான லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது . தற்போது நாடு கொரோனா பரவி வருகின்றது. இதை பயன்படுத்தி ஆன்லைனில் கொரோனா தடுப்பூசி முன்பதிவு செய்ய கோரி சைபர் குற்றவாளிகள் போல் அழைப்பின் மூலம் தனிநபரின் ஆதார் எண், வங்கி கணக்கு எண், கிரெடிட், டெபிட் கார்டு எண் போன்றவற்றை பெற்று பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். தடுப்பூசி குறித்து வரும் போன் அழைப்பு, எஸ்எம்எஸ், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட தயார் – குஷ்பூ…!!

ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட தயாராக இருப்பதாக குஷ்பூ தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன இதனை இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இதையடுத்து யாரிடமும் ஆதரவு கேட்கும் நிலையில் பாஜக இல்லை. திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட தயார் […]

Categories
தேசிய செய்திகள்

எல்ஐசி பாலிசியை புதுப்பிக்க வாய்ப்பு – எல்ஐசி நிறுவனம்…!!

காலாவதியான எல்ஐசி பாலிசிகளை மீண்டும் புதுப்பிக்க எல்ஐசி நிறுவனம் வாய்பளித்துள்ளது.  கொரோனா பரவல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு காலாவதியான எல்ஐசி பாலிசிகளை புதுப்பிப்பதற்கு எல்ஐசி நிறுவனம் அவகாசம் வழங்கியுள்ளது. இதற்கான சிறப்பு முகாம் கடந்த 7.1.2021 அன்று தொடங்கியது. இந்த முகாம் வரும் 6.3.2021 வரை நடைபெறுகிறது. இந்த முகாமில் பாலிசிதாரர்கள் தங்கள் பாலிசிக்களை புதுப்பித்துக் கொள்ளலாம். இதில் காலாவதியான பாலிசியை மீண்டும் தொடங்க எல்ஐசி வாய்ப்பளித்து உள்ளது. அதன்படி காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க சிறிது கட்டணம் […]

Categories
தேசிய செய்திகள்

FlashNews: தொடரும் தற்கொலை – சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக விவசாயி ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 45 நாட்களாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு விவசாயிகள் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லியில் விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், ரத்து செய்ய வலியுறுத்தியும் சென்னையில் பெருமாள்(68) என்பவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி…. சென்னை – கோவை சிறப்பு ரயில் – தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன்பிறகு தளர்வுகள் அளிக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வருகிற 12, 13ம் தேதிகளில் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

மதுரை-சென்னை இடையே…. வரும் 10 ஆம் தேதி முதல்…. தேஜஸ் ரயில் இயக்கப்படும்…!!

தேஜஸ் ரயில் வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் மீண்டும்  மதுரையிலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து சென்னைக்கு முற்றிலும் குளிரூட்டப்பட்ட அதிநவீன தேஜஸ் சொகுசு ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் கொடைரோடு மற்றும் திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று சென்றது. இந்த 2 ரயில் நிலையங்களிலும் பிளாட்பாரத்தில் கடைகள் இல்லை. ரயிலுக்கு உள்ளேயும் உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்படாது என்பதால் பயணிகள் இந்த ரயிலில் செல்வதை தவிர்த்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனாவால்…. இந்தியாவில் 90 பேர் பாதிப்பு – மத்திய அரசு…!!

இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் தோன்றிய உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியாவில் தற்போது வரை மொத்தம் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் சுகாதார மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இது குறித்த அறிக்கையில், நவம்பர் 25 முதல் டிசம்பர் 23 நள்ளிரவு வரை சுமார் 33,000 பயணிகள் பிரிட்டனிலிருந்து பல்வேறு இந்திய விமான நிலையங்களில் இறங்கினர். இந்த பயணிகள் அனைவரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் […]

Categories

Tech |