பொங்கல் பரிசுத்தொகை வாங்க சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற நாளை கடைசி நாள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று இன்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார். ஏற்கனவே பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த பொங்கல் பரிசை வாங்க முடியும். […]
Author: soundarya Kapil
கமலுக்கு தலைவருக்கான அந்தஸ்து இன்னும் வரவில்லை என்று கடம்பூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2021 வருடம் நடக்க இருக்க நிலையில் எதிர் கட்சியினரும், ஆளும் கட்சியினரும் தங்களை ஒருவருக்கொருவர் மாறி மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கட்சியினருக்கும், கமலுக்கும் இடையே வார்த்தை போர் மூண்டு வருகிறது. இபிஎஸ் அவர்கள் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்தால் குடும்பம் உருப்படாமல் போய்விடும் என்று விமர்சனம் செய்தார். அதற்கு பதிலடி […]
கொரோனாவை அடுத்து புதிதாக ஒரு வைரஸ் பரவி கேரளா மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் புதிய வைரஸ் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஷிகெல்லா எனப்படும் இந்த வைரஸ் தொற்று உள்ள நபருக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகள் முதலில் இருந்துள்ளது. ஆனால் சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேரளாவில் பரவிய இந்த வைரஸ் […]
செவிலியர் ஒருவர் தடுப்பூசி போட்டுக்கொண்ட கொஞ்ச நேரத்திலேயே கீழே மயங்கி விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பைசர் மற்றும் பயோடெக் நிறுவனங்களின் கொரோனா தடுப்பு மருந்துகள் மக்களுக்கு செலுத்தப்பட உள்ளது. இந்நிலையில் டென்னிசி பகுதியை சேர்ந்த டிப்னி டோவர் என்ற செவிலியர் ஒருவருக்கு முதன்முதலாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த செவிலியர் தடுப்பூசி குறித்து செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அவர் பேசியுள்ளார். பின்னர் தன் தலையை பிடித்துக்கொண்டு i am sorry என்று […]
மலைபாம்பிற்கு இறுதி சடங்கு செய்து புதைந்துள்ள சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மல்லபாடி நாடார் கொட்டாய் கிராமத்தில் அதிகாலையில் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. அப்போது அந்த வழியாக வந்த கார் சக்கரத்தில் மலைபாம்பு சிக்கியுள்ளது. இதனால் தலை நசுங்கி மலைப்பாம்பு உயரிழந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் மலைப்பாம்பை தூக்கி சென்று இறுதி சடங்குகள் செய்துள்ளனர். மேலும் பாடை கட்டி தூக்கி சென்று அதே […]
ஜப்பான் நாட்டின் முன்னேற்றம் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்கள் குறித்து இங்கே பார்க்கலாம். ஆசிய நாடுகளிலேயே வளர்ச்சியடைந்த நாடுகள் ஒன்று ஜப்பான். இந்த நாட்டு மக்கள் நேரம் தவறாமைக்கு பெயர் பெற்றவர்கள் ஆவர். இவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்றால் அந்த நேரத்தில் அதை சரியாக செய்து முடித்து விடுவார்கள். இதுதான் அவர்களின் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது இந்த நாடு குறித்து சுவாரஸ்யமான தகவல்களை இங்கே பார்க்கலாம். ஜப்பான் நாட்டின் […]
புதுவை முதல்வர் நாராயணசாமி புதிய வேளாண் சட்ட நகலை கிழித்து எரிந்து தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் பல வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வேளாண்சட்ட மசோதாவை எதிர்த்து புதுவையில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் புதுவை அண்ணா சிலை அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இதில் புதுவை முதல்வர் நாராயணசாமியும் […]
தமிழகத்தில் 40% குழந்தைகள் வளர்ச்சி குறைவாக பிறப்பதாக WHO அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பிறந்த குழந்தையின் எடை சராசரியாக 2.5 கிலோவாக இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் 40 சதவீதம் குழந்தைகள் 2 முதல் 2.2 கிலோ எடையுடன் தான் பிறக்கின்றன. குழந்தை முழுமையாக வளர்ச்சி அடைய 37 முதல் 40 வாரங்கள் வரை ஆகும். 28 முதல் 34 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர். எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். […]
அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு ஏற்கனவே ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வருடம் தை பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2021 ஜனவரி 4 ஆம் தேதியிலிருந்து ரூ.2500 மற்றும் ஒரு கிலோ அரிசி, ஒரு முழுக் கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, […]
சித்ரா மரணத்திற்கு நான் காரணமில்லை என்று ரக்சன் பேட்டி ஒன்றில் தனது வேதனையை தெரிவித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தன்னுடைய கணவர் ஹேம்நாத் என்பவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியது அவருடைய வருங்கால கணவர் தான் என்று உறுதி செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் […]
தமிழக தேர்தல் ஆணையம் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2021-ஆம் வருடம் நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தற்போது மேற்கொண்டு வருகிறது. முன்னதாக தமிழக அரசியல் கட்சிகளும், தங்கள் சார்பில் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்து உள்ளன. பல சினிமா நடிகர்களும் அரசியலில் இறங்கியுள்ளனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையம் நெறிமுறைகளை […]
போக்குவரத்து விதிமுறைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு சென்னையில் புதிய முறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்துக்கள் ஏற்படும் போது உயிர்காக்கும் கவசமாக ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் இருக்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் விபத்துகள் ஏற்படும்போது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக சீட்பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். ஆனாலும் ஒரு சிலர் விதிமுறைகளை மீறி வருகின்றனர். இருப்பினும் காவல்துறையினர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ஹெல்மெட், கார்களில் சீட் பெல்ட் […]
கும்பல் ஒன்று மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகத்தை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்றார். வாரணாசி தொகுதி அலுவலகம் வாரணாசியின் ஜவகர் நகர் பகுதியில் உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதி அலுவலகத்தை புகைப்படம் எடுத்த நபர்கள் அந்த புகைப்படத்தை ஆன்லைன் விற்பனை தளமான OLX வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து யாருமே இதை கவனிக்காத நிலையில் பொதுமக்கள் பலரும் இதை கவனித்துள்ளனர். இதையடுத்து […]
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து கபரவல் சற்று குறைந்த நிலையில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் தற்போது அரசு மருத்துவ கல்லூரி […]
நடிகை சித்ராவின் மரணம் கொலை என்று அவரது தாய் விஜயா பரபரப்பு குற்றசாட்டை தெரிவித்துள்ளார். சீரியல் நடிகை சித்ரா தன்னுடைய வருங்கால கணவருடன் ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தற்போது சித்ராவின் கணவர் ஹேம்நாத் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனாலும் சித்ரா கொலை வழக்கில் இன்னும் மர்மம் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இதில் விஜய் டிவி பிரபலமான ரக்சனும் சித்ராவுடன் நெருக்கமாக இருந்த விடியோவை வைத்து […]
மாணவர்களுக்கு தொடர் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது. எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே பெரும் அச்சம் நிலவியுள்ளது. தற்போது […]
தற்போது கூடுதலாக இரண்டு புதிய அம்சங்கள் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் தற்போது பல்வேறு புதிய அம்சங்களை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கூடுதல் அம்சங்களை பெற்று பயனடைகின்றனர். வாட்ஸ்அப் இந்தியாவின் சிஇஓ அபிஜித் போஸ், வாட்ஸ்அப் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய திட்டங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும், இதற்காக SBI ஜெனரல் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதன்படி “sachet” என்ற புதிய ஹெல்த் […]
60 அரசு பள்ளி மாணவர்களுக்கு மறு கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன . இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன . தற்போது தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல் […]
சாஸ்த்ரா சீமா பால் (SSB ) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20 கடைசி நாளாகும். பணி: கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள்: 1522 கல்வித் தகுதி: மெட்ரிகுலேசன் பத்தாம் வகுப்பு டிப்ளமோ சம்பளம்: ரூபாய் 21,700 – 69,100 வயது: 27 பணியிடம்: இந்தியா முழுவதும் மேலும் விவரங்களுக்கு ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
இந்த விஷயங்கள் எல்லாம் உங்களிடம் இருக்கிறது என்றால் நீங்கள் நன்றாக இருப்பதாக அர்த்தம். 1.வசிக்க தலைக்குமேல் ஒரு கூரை. 2.இன்றைக்கு தேவையான சாப்பாடு 3.சுத்தமான ஆடைகள் இருப்பது 4.மற்றவர்கள் நன்மையை நீங்கள் விரும்புவது 5.சுத்தமான குடிநீர் கிடைப்பது 6.உங்கள் மீது அக்கறை கொள்ள ஒருவர் இருப்பது 7.முன்னேற நீங்கள் உழைப்பது 8.உங்களுக்கு ஒரு கனவு இருப்பது 9.நீங்கள் மூச்சு விடுகிறீர்கள் 10.சிறிய விஷயங்களுக்கு நன்றியுடன் இருங்கள். ஏனென்றால் அவை தான் நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமானவை .
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் அவருடைய உறவினரின் தண்டனை காலம் முடிவடைய உள்ள நிலையில் மூவரும் எப்போது விடுதலை ஆவார்கள் என்பது மக்களிடையே ஒரு பேசுபொருளாக இருக்கிறது. சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி இரவு ஒன்பது முப்பதுக்கு விடுதலை செய்யப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா விடுதலைக்கு முன் மறைந்த முன்னாள் முதல்வர் […]
வரும் டிசம்பர் 26ஆம் தேதி சென்னை -திருப்பதி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை – திருப்பதி மற்றும் திருப்பதி – சென்னை செல்லும் ரயில்கள் டிசம்பர் 26-ஆம் தேதி ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை சென்னை – திருப்பதி மற்றும் திருப்பதி – சென்னை ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் இந்த தேதிகளில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கோவில்கள் திறக்கப்பட்டன. ஆனால் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 22, 23, 24 ஆகிய தேதிகளுக்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் 21ம் தேதியே வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும் வரும் […]
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதுநிலை வேதியியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வானவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுநீரகங்களை கவனமாக பார்த்துக்கொண்டால் நாம் ஆரோக்யமான வாழ்க்கையை வாழலாம். நம் உடலின் மிக முக்கிய ஆதாரமான இரண்டு செயல்பாடுகள் செரிமானமும், கழிவு நீக்கமும் தான். இந்த இரண்டில் ஏற்படும் சிறு பாதிப்பும் போதுமான கவனிப்பு அளிக்கப்படாத நிலையில் நம் ஆரோக்கியத்திற்கு ஆபத்தாக மாறி விடலாம். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். குறிப்பாக உடலின் கழிவு நீக்க செயல்பாட்டில் முதன்மையாக விளங்குவது சிறுநீரகங்கள். இந்நிலையில் இவற்றை சரியாக பராமரிக்கவில்லை என்றால் அதற்கு நாம் கொடுக்கும் விலையும் கடுமையானதாக […]
மறைந்த ஜெயலலிதா அவர்களுக்கு ஜெயலலிதா பேரவை சார்பில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அதிமுக கட்சியின் முன்னாள் முதலமைச்சராக மறைந்த ஜெயலலிதா அவர்கள் இருந்தார். இந்நிலையில் அவர் இறந்ததால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். மேலும் அதிமுகவின் தற்போதைய கட்சி அம்மாவின் வழியிலே செயல்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் குன்றத்தூர் அருகே அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் மாநில அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதாவிற்கு கோயில் கட்டப்பட்டு […]
பிரதமரின் அலுவலகத்தை OLX தளத்தில் விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாரணாசி தொகுதியில் மக்களவை உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடியின் மக்கள் தொடர்பு அலுவலகத்தை சில மர்மநபர்கள் சிலர் புகைப்படம் எடுத்துள்ளனர். பின்னர் அதை ஓஎல்எக்ஸ் இணையதளத்தில் விற்பனைக்கு தருவதாக பதிவு செய்துள்ளனர். இந்த அலுவலகமானது ஜவகர் பகுதியில் உள்ள காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி ஆகும். இது பற்றிய தகவல் அறிந்த காவல்துறையினர் முதல்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை […]
மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் தப்பியோடியதால் மாட்டுவண்டியை போலீசாரே ஒட்டியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ராம தண்டலம் பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மண்ல் திருடுவதாக காவல்துறையினருக்கு பதகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து பட்டப்பகலில் மணல் திருட்டு குறித்து தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் காவல்துறையினர், தலைமைக் காவலர் பாஸ்கரன் தலைமையில் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் அங்கு கரையோரத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் மணல் […]
பெண்களின் நாள்பட்ட பிரச்சினையான வெள்ளைப்படுதலுக்கு சூரணம் தயாரிப்பதை பார்க்கலாம். உலக அளவில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று வெள்ளைப்படுதல் நோய். இதனை வெட்டை என்றும் சொல்வார்கள். குறிப்பாக 15 வயது முதல் 45 வயது வரை உள்ள பெண்களுக்கு ஏற்பட்ட வெள்ளைப்படுதல் நோய் ஏற்படுவது இயல்புதான். ஆனால் சிலருக்கு எப்போதுமே வெள்ளைப்படுதல் நாள்பட்ட பிரச்சினையாக இருக்கும். அவர்கள் தங்கள் உடலை ஒழுங்காக கவனித்துக் கொள்ள வேண்டும். இப்போது வெள்ளைப்படுதல் குணமாகும் மருத்துவம் நிறைந்த சூரணம் ஒன்றை தயார் […]
அடிக்கடி நூடுல்ஸ் சாப்பிடுவது நம் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பொதுவாக உலக அளவில் நம் இந்திய உணவிற்கு என்று ஒரு தனி பெரும்பான்மை மற்றும் அங்கீகாரம் உள்ளது. ஆனால் தற்போது அந்த நிலை இந்தியாவிலேயே மெல்ல மெல்ல மாறிவருகிறது என்பது வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக நாம் நம் பகுதியில் உள்ள கடை வீதிக்கு சென்று திரும்பும் போது பார்த்தால் பெரும்பாலும் சைனீஸ் வகை உணவு கடைகள் இருக்கின்றன. மக்களும் அதைத்தான் […]
அருவருப்பாக இருக்கிறான் என்று பெற்றோரால் கைவிடப்பட்ட சிறுவன் தற்போது படிப்பில் சிறந்து விளங்கி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார். நைஜீரியாவில் 3 வயது சிறுவன் ஒருவன் பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்ததால் அவருடைய பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளார். இந்நிலையில் அனாதையாக தெருவில் நிற்கும் அந்த சிறுவன் பெண் ஒருவரிடம் தண்ணீர் அருந்தும் காட்சி 5 ஆண்டுகளுக்கு முன் பதிவாகி இருந்தது. இந்த சிறுவனை அப்போது நைஜீரியா தெருவில் இருந்து காப்பாற்றியவர் டென்மார்க்கை சேர்ந்த Anja என்ற பெண்மணி ஆவார். இந்நிலையி அவர் சிறுவனின் […]
கொரோனா பரவல் காரணமாக புதிய அதிபர் பைடனின் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து பைடனின் இந்த வெற்றியை ஏற்க முடியாது என்று டிரம்ப் கூறி, பைடனுக்கு எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது அமெரிகாவின் புதிய அதிபர் ஜோ பைடன் […]
கட்டிடம் கட்ட பள்ளம் தோண்டியபோது முதல் உலகப்போர் பீரங்கி கிடைத்துள்ளது அபூர்வ கண்டுபிடிப்பு என்று கூறப்பட்டுள்ளது. கனடா நாட்டில் Amherstburg என்ற நகரில் கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அப்போது அங்கு கிடைத்தது வெடிகுண்டும் இல்லை, புதையலும் இல்லை. ஆனால் கிடைத்தது என்ன தெரியுமா? முதலாம் உலகப் போர் கால ஜெர்மனிய பீரங்கி ஒன்று கிடைத்துள்ளது. தொடப்பட்ட பள்ளத்தில் வெடிகுண்டு பீரங்கி கிடைத்துள்ளது ஒரு அரிய அபூர்வ கண்டுபிடிப்பு என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற பீரங்கிகள் […]
காதல் தம்பதிகள் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த மகாவைகுண்டம் என்பவர் கரிசூழ்தால் என்பவரை பல வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக இந்த தம்பதியினர் நாகர்கோவில் அருகே வசித்து வந்துள்ளனர். காதலித்துத் திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக இருந்தாலும் இருவருக்கும் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில் சில மாதங்களாக இருந்துள்ளனர். மேலும் பல கோவில்களுக்கு சென்று வேண்டியும், மருத்துவமனையில் சென்று […]
சமையல் எண்ணையை சில்லறை விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி சமையல் எண்ணெய் தயாரிக்கப்படுவதாக தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்துள்ளது. இந்த வழக்கானது நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதிகள் சமையல் எண்ணெயின் தரத்தை ஆய்வு செய்ய மொத்தம் எத்தனை ஆய்வுகள் உள்ளன? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் சமையல் எண்ணெய் ஆய்வில் கடந்த 5 வருடங்களாக […]
தேவைப்பட்டால் நவல்னியை கொன்றிருப்போம் என்று ரஷ்ய அதிபர் புதின் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவர் அலெக்சி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர் ஆவார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ரஷ்யாவின் வம்சக் நகரில் விமானம் மூலம் பயணித்தார். அப்போது விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானம் தரையிறக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உடல்நிலை மிகவும் […]
நபர் ஒருவர் தனக்கு வெங்காயம் தர மறுத்த உணவு பரிமாறியவரை குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் வசித்து வருபவர் ரியாசத் அலி(59). கூலித் தொழிலாளியான இவர் 30 வருடங்களாக டெல்லியிலேயே தங்கி தினமும் கிடைக்கும் வேலைகளை செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பத்திஷ்பூர் பெரி என்ற பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு கூலித் தொழிலுக்காக இவர் சென்றுள்ளார். அங்கு அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சாப்பிட கேண்டீன் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. […]
மத்திய சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அலாவுதீன் தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் நாசர்(42). இவர் மத்திய சிறையில் கைதியாக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தான் இருந்த அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து அவருடைய நாசரின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது […]
தமிழக முதல்வர் எடப்பாடி ஒரு ஜெராக்ஸ் என்று செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. திமுகவும் தன்னுடைய பங்கிற்கு பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்களை ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் பிரபல நடிகர்களான ரஜினி, கமல் மற்றும் பார்த்திபன் ஆகியோரும் அரசியலில் இறங்கியுள்ளனர். இதனால் வரும் சட்டமன்ற தேர்தல் […]
பெண் ஒருவர் தன் வீட்டில் தினமும் திருடுபவரை பழிவாங்கும் விதமாக செய்த செயல் தற்போது வைரலாகி வருகிறது. கனடாவில் உள்ள ஹெமில்டன் நகரில் வசிப்பவர் லூரி பிரிங்கில். இவர் தினமும் ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். எனவே ஆன்லைன் பார்சிகள் வீடு தேடி வரும். இவர் பெரும்பாலும் அமேசான் நிறுவனத்தில் தான் பொருட்களை ஆர்டர் செய்து வந்துள்ளார். கனடா நாட்டில் தற்போது கொரோனா காரணமாக ஆன்லைன் டெலிவரி செய்யப்படும் பொருட்கள் வீட்டு வாசலிலேயே கொண்டு […]
யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகெங்கும் புகழ் பெற்ற யோகாசனக் கலை 5000 வருடங்கள் பழமையானது ஆகும். இது இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறையாகும். இது உடலுக்கு மட்டுமில்லாமல் மன ஆரோக்கியத்திற்கும் முக்கியமாக இருப்பதால் உலக மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் யோகாசனத்தை விளையாட்டு போட்டியாக முதன்முறையாக மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் இளைஞர்கள் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அதிகாரபூர்வமாக இந்த அறிவிப்பை […]
பழ வியாபாரி ஒருவர் பழம் வாங்க வந்த ஈபி அலுவலர் ஒருவரை செமையாக கலாய்த்துள்ளது சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர் எலக்ட்ரிசிட்டி போர்டு அலுவலகம் வெளியில் தள்ளுவண்டியில் வைத்து வாழைப்பழம் விற்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது ஈபி அலுவலர் ஒருவர் வந்து வாழைப்பழம் என்ன விலை? என்று கேட்டுள்ளார். அதற்கு வியாபாரி சார் இத நீங்க எதுக்கு வாங்க போறீங்கன்னு தெரிஞ்சா தான் நான் விலை செல்ல முடியும் என்றுகூறியுள்ளார் . அதற்கு அந்த ஈபி அலுவலர் என்னப்பா […]
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு காரணம் கூறப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கொரோனா பரவல் காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் 15ஆம் தேதியிலிருந்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையயடுத்து ஐந்தருவி, புலியருவி மற்றும் பழைய குற்றாலம் ஆகிய அருவியில் குளிக்க நேரக்கட்டுப்பாட்டுடன் பயணிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் குற்றாலம் மெயினருவி மற்றும் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படடுள்ளது. […]
ராங்க் நம்பர் என்று கூறி பல பெண்களிடம் ஆபாசமாக பேசி வந்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் தர்மபுரி நகர காவல் நிலையத்தில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தர்மபுரியை பகுதியை அடுத்த நூலஅள்ளி பகுதியில் வசிக்கும் ரவி என்பவர் தன்னுடைய செல்போனில் தொடர்பு கொண்டு மூன்று தினங்களாக ஆபாசமாக பேசுவதாகவும், ராங் நம்பர் என்று கூறி போன் மூலம் ஆபாசமாக மெசஜ்கள் […]
இன்று இந்த 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்அறிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது மீண்டும் தீவிரமடைந்து உள்ளது. ஒரு வாரத்திற்கும் மேலாக தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து கொண்டு இருக்கிறது. இதுகுறித்து வானிலை […]
கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் விஞ்ஞானிகள் கொரோனவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடித்து வந்த நிலையில் தற்போது ஒரு சில தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. ஒரு சில நாடுகளில் மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தியாவில் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இந்நிலையில் இந்தியாவில் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் […]
உடனே – 18,000 சம்பளத்தில் வேலை…!!
மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன. சம்பளம்: ரூ.18,000 – 35,000 விண்ணப்ப கட்டணம்: இல்லை நேர்காணல் நடைபெறும் தேதி: டிசம்பர் 30 முகவரி: Central Leather Reasearch Institute, chennai, tamilnadu. கல்வித்தகுதி: M.E/ M.TECH/ B.E/ B.TECH / M.SC/ Bachelor Degree/ Dipolomo. மேலும் விபரங்களுக்கு www. clri. org என்ற இணையதளத்தை பார்க்கவும்.
மருத்துவர்கள் ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு இது போன்ற உணவுகளே காரணம் என்று கூறுகின்றனர். தற்போதைய காலகட்டத்தில் ஆண்களுக்கு மலட்டு தன்மை என்பது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இதனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள், மன விரக்தி, கணவன் மனைவி சண்டை உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது விந்தணுக்கள் எண்ணிக்கை மற்றும் தரம் குறைதல். இதற்கு நம் வாழ்க்கைமுறை மற்றும் உணவுகள் தான் முக்கிய காரணம் என்கின்றனர் மருத்துவர்கள். குறிப்பாக பீட்சா, […]
மின்சாரவாரியம் தனியார் மயமாக்கப்படாது என்று அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு மின்சாரவாரியம் எக்காரணத்தைக் கொண்டும் தனியார்மயம் ஆக்கப்படாது என்றும், மின் வாரிய அலுவலகங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ள காலிப் பணியிடங்கள் மட்டுமே தனியார் மூலம் நிரப்பப்படுகிறது என்றும், அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். கேங்க்மன் பணி குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் பத்தாயிரம் கேங்க்மன் பணியிடங்களுக்கு இன்னும் நியமனம் வழங்கப்படவில்லை. வழக்கு தொடர்ந்துள்ளவர்கள், வழக்கை வாபஸ் பெற்றால் உடனே கேங்க்மன் பணி நியமனம் செய்யப்படும் […]
வாட்ஸ் அப்பில் வரும் போலி லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உங்களுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு போலியான தகவல்கள் அல்லது லிங்குகள் வந்தால் அதை கவனமுடன் கையாள வேண்டும். ஏனெனில் தற்போது பல வகையில் மோசடி நடைபெற்று வருகிறது. சமீபகாலமாக வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராமில் அட்டகாசமான வேலைவாய்ப்பு, கை நிறைய சம்பளம், இலவச உபகரணங்கள் என்று போலியான செய்திகளுடன் லிங்குகள் வருகிறது. இலவச காசோலை, பரிசு சலுகை(Free Paycheck, gift, offer) வழங்குவதாக […]