Categories
தேசிய செய்திகள்

அப்படி போடு!! “இதோ வந்துட்டு DakPay” இனி ஈஸியா பணம் அனுப்ப…!!

பணபரிமாற்றத்தை குறைப்பதற்காக தற்போது இந்திய தபால் துறையால் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு புதிய செயலி அறிமுகமாகியுள்ளது. ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக மின்னணு முறையிலான பண பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் அடிப்படையில் கூகுள் பே, பேடிம், போன்பே என பல்வேறு செயலிகள் அறிமுகம் ஆகின. இந்த நிலையில், இந்திய தபால்துறை மற்றும் இந்திய தபால்துறை வங்கி சார்பிலும் தற்போது புதிதாக ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இரண்டும் இணைந்து […]

Categories
உலக செய்திகள்

வீட்டிலேயே ஈஸியா…. “LED பல்புகள் மூலம்” கொரோனாவை கொன்று விடலாம் – ஆய்வில் தகவல்….!!

புற ஊதா கதிர்களை கொண்டு கொரோனா வைரஸை வீட்டிலேயே அழிக்கலாம் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸால் கடந்த ஓராண்டு காலமாக உலக மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக, கொரோனாவை அழிக்க சானிடைசர் மற்றும் சோப் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. இதுபோக, தற்போது புற ஊதாக் கதிர்கள்  மூலம் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை விரைவாகவும் எளிதாகவும் கொல்லும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் ஒளிவேதியியல் மற்றும் ஒளிஉயிரியல் நடத்திய […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டில் இந்திய குடும்பம்…. விமான நிலையத்தில் நசுங்கிய கணவன்…. அமெரிக்காவில் சோகம்….!!

நபர் ஒருவர் விமானநிலையத்தில்  நசுக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க விமான நிலையத்தில் வேலை பார்த்து வருபவர் கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ். இவர்  அங்குள்ள விமான உபகரணம் செய்யும் இடத்தில் மெக்கானிக் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தன்னுடைய மனைவி, தந்தை மற்றும் தாய் ஆகியோருடன் அமெரிக்காவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதால் இவர்கள் விரைவில் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“சாமி தரிசனத்திற்கு சென்று” 2 உயிர்களை பறி கொடுத்ததால்…. நிலவிய சோகம்…!!

சாமி தரிசனத்திற்காக சென்ற இடத்தில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் யோக நரசிம்மர் கோவில் இருக்கிறது.இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் வேனில் வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் யோக ஆஞ்சநேயர் எழுந்தருளியிருக்கும் சின்ன மலை அடிவாரத்தில் உள்ள பாண்டவர் இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தீர்த்த குளியல் செய்துள்ளனர். […]

Categories
லைப் ஸ்டைல்

தினமும் உணவில் வெங்காயம் சேர்ப்பது…. எதற்காக தெரியுமா…?? அறியாத சில நன்மைகள்…!!

வெங்காயம் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாம். வெங்காயத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த வெங்காயத்தை நாம் பச்சையாக சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. உடல் சூடு அதிகரிக்கும் போது வெங்காயம் அதை சமப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு. சாதாரண தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குறைந்துவிடும். வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள் மற்றும் குளவி போன்ற விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில் அழுத்தி […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் அதிகரிப்பு!! இந்த மாதம் முடிவதற்குள்…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!

இந்த மாதத்துக்கான வீட்டு மற்றும் வர்த்தக சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடையிலும், வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டிற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். 12 சிலிண்டருக்கு பிறகு வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமில்லாமல் தான் வாங்க முடியும். […]

Categories
உலக செய்திகள்

ஒரு முறையாவது துரோகம்…. செய்வது ஆண்களா? பெண்களா? – ஆய்வில் தகவல்…!!

கணவன் மற்றும் மனைவி இருவரில் ஒருவர் 1 முறையாவது நம்பிக்கை துரோகம் செய்வதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. திருமணமான பிறகு கணவன் தன்னுடைய மனைவியையும், மனைவி தன்னுடைய கணவனையும் நம்பி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். மேலும் தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யாமல் வாழ வேண்டும். இந்நிலையில் இந்தியர்களில் 55 சதவீதம் பேர் குறைந்தது ஒருமுறையாவது தங்கள் துணைவருக்கு துரோகம் செய்கின்றனர் என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. இவர்களில் பெண்கள் 56% அதிகம். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“ஊரடங்கு ரொம்ப போர்” பொம்மையுடன் கல்யாணமாகி குழந்தை…. இது தான் காரணம்…!!

இளம்பெண் ஒருவர் ஊரடங்கு போரடித்ததால் பொம்மையை திருமணம் செய்துள்ள சம்பவத்திற்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த நடிகை chethrin(28). இவருக்கு ஊரடங்கு போர் அடித்ததால் ஒரு  பொம்மையை திருமணம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றும், அந்த பொம்மை குழந்தைக்கு hanneore என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து தன் குழந்தையை அடிக்கடி தனது சமூக ஊடகத்தில் காட்ட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். மேலும் கேமராவின் கண்களுக்கு முன்னால் என்னுடைய […]

Categories
தேசிய செய்திகள்

எச்சரிக்கை!! அடுத்த நான்கு நாட்களுக்கு – இந்திய வானிலை ஆய்வுமையம்…!!

வட இந்திய மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கடும் குளிர் நிலவும் என இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டு புயல்கள் தாக்கின. இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைத்துள்ளது. மேலும் பருவ  தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வுமையம் அவ்வப்போது செய்தி வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் வட இந்திய மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கடும் குளிருடன் பனிக்காற்று வீசும் என்று இந்திய வானிலை […]

Categories
உலக செய்திகள்

“6 அறிவுள்ள மிருகம்” உறவினரை கொன்று…. விலங்குக்கு உணவாக கொடுத்த…. கொடூர சம்பவம்…!!

நபர் ஒருவர் உறவினரை வெட்டி துண்டுகளாக்கி விலங்குக்கு உணவாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த முதியவர் ஸ்னேல் கிரகாம்பெல்(71). இவருடைய வங்கி கணக்கில் இருந்து தொடர்ந்து பண மோசடி நடந்துள்ளதாக தன்னுடைய உறவினரான டேனியல்(30) என்பவரின் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை தொடங்குவதற்கு முன்பே டேனியல் தன்னுடைய உறவினரான முதியவர் ஸ்னேல்லை கொலை செய்துள்ளார். பின்னர் வாடகை டாக்ஸி ஒன்றில் கடைக்கு சென்று சடலத்தை துண்டாக்குவதற்கு தேவையான பொருட்களை வாங்கி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முதல்வர் பழனிச்சாமி வீட்டின் முன்…. பெரும் பரபரப்பு…!!

முதலமைச்சரின் வீட்டின் முன்பு இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டின் முன்பு இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த கிருஷ்ணம்மா(65) பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் இன்னொரு பெண்ணான மீனாம்பிகை(31) தன்னுடைய கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர்கள் இருவரும் தூத்துக்குடியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு முதல்வரை சந்திக்க அனுமதி மறுத்ததால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சித்தியுடன் தகாத உறவு” பிறப்புறுப்பை வெட்டிய சித்தப்பா…. அதிர்ச்சி சம்பவம்…!!

நபர் ஒருவர் தனது சித்தியுடன் தகாத உறவு வைத்திருந்ததால் அவருடைய பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கம் ரயில்வே காலனி பகுதியில் வசிப்பவர் விஜி(36). இவர் மீது ஏற்கனவே கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கு சித்தப்பாவான சிலம்பரசன் என்பவர் தன்னுடைய மனைவியுடன் சண்முகபுரம் தெருவில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் விஜிக்கும் தன்னுடைய சித்தப்பா மனைவிக்கும் இடையே திருமண உறவையும் மீறிய பழக்கம் ஏற்பட்டுளது. இதனால் சிலம்பரசன் […]

Categories
உலக செய்திகள்

“என்னடா இது கொடுமை” தீவிரமாக பரவும்…. புது வகை கொரோனா – விஞ்ஞானிகள் எச்சரிக்கை…!!

புது வகையான கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதாக மக்களுக்கு பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதுமாக உள்ள மக்களை தற்போது கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா அறிமுகமாகி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகியிருந்தாலும், அதன் வேகம் தற்போது குறையாமல் அதிகரித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில், தற்போது மிக தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் மீண்டும் முழுமையான ஊரடங்கு மற்றும் பல கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

“ஆட்டம் களைகட்ட போகுது” ரஜினியுடன் இணைய தயார் – கமல் அதிரடி…!!

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியுடன் கமல் ஒன்றிணைந்து செயல்பட தயாராக இருப்பதாக பதில் அளித்துள்ளார். வரும் 2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் மிக முக்கியமானது மட்டுமல்லாமல் சுவாரசியமாகவும் மாறப்போகிறது. இதுநாள்வரை பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் என்று இந்த தேர்தல் பலமுனை போட்டியாக சுவாரசியமாக நடக்க போகிறது. கமலஹாசன் தன்னை முதலில் வேட்பாளராக அறிவித்து விட்டார். ஆனால் ரஜினியின் அரசியல் […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை” கண்டம் விட்டு கண்டம்…. பாயும் பாக்டீரியாக்கள்…. ஆய்வாளர்கள் தகவல்…!!

பாக்டீரியாக்கள் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து நோய் பரவ வழிவகுக்கப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகில் பாக்டீரியாக்கள் கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்வதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. வளிமண்டலத்தில் இந்த பாக்டீரியாக்கள் மறைந்திருந்து ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு பயணிக்க முடியும் என்று கிரானாடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை Atmospheric Reasearch என்ற இதழில் வெளியாகியுள்ளது. இந்த இதழில், பாக்டீரியா நுண்ணுயிர்கள் மற்ற கண்டங்களுக்கு நகர்ந்து செல்வதாக கூறப்படுகிறது. மேலும் […]

Categories
உலக செய்திகள்

அடுத்த 6 மாதத்தில்…. 2 லட்சம் உயிர் பலிகள் ஏற்படும்…. அதிர்ச்சி தகவல்…!!

அடுத்த ஆறு மாதங்களில் அமெரிக்காவில் இன்னும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று பில்கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார் . அமெரிக்காவில் தற்போது கொரோனாவினால் 1.63 கோடிக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கை மூன்று லட்சத்தையும் கடந்து உள்ளது. இதற்கிடையே பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிப்பதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவருடைய மனைவி மெலிண்டா கேட்ஸ் இணைந்து நிர்வகிக்கும் அறக்கட்டளை 732 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. தற்போதைய நிலை […]

Categories
மாநில செய்திகள்

“மொத்தம் 2391 அரசு பள்ளிகளில்” இந்த வசதி இல்லை…. அதிர்ச்சி தகவல் – பள்ளிக்கல்வித்துறை…!!

கணக்கெடுப்பின் முடிவில் 2391 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீருக்காக உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை கணக்கெடுக்கும் பணியை கல்வித்துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பின் முடிவில் தமிழ்நாடு முழுவதும் 2391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கழிப்பறை வசதி இல்லாத இந்த அரசு பள்ளிகளின் பட்டியலை பள்ளிக் […]

Categories
மாநில செய்திகள்

“அடுத்த மூன்று தினங்களுக்கு” நல்ல மழை பெய்யும்…. வானிலை ஆய்வுமையம் தகவல்…!!

அடுத்தடுத்து மூன்று தினங்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து நிவர் மற்றும் புரெவி என்ற இரு புயல்கள் தாக்கின. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைத்துள்ளது. இதையடுத்து காலநிலை மாற்றங்களால் இது போன்ற இயற்கை பேரிடர்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை […]

Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…!! “பிணப்பை கொண்டு வாங்க” 108 முறை முடிந்தது…. மகனின் வெறிச்செயல்…!!

சிறுவன் ஒருவர் தாயாரை கொன்று விட்டு போலீசாரிடம் பிணப்பை கொண்டு வர சொன்ன சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது. பிரிட்டனை சேர்ந்தவர் ரோவன் தாம்சன்(17 ). பள்ளிக்கூடம் படிக்கும் மாணவனான இவர் தன்னுடைய தாயார் ஜோனாதன் தாம்சன் என்பவரை கொடூரமான முறையில் கொன்றதுடன் காவல்துறையினரும் தொடர்பு கொண்டு தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து வெளியான தகவலில், சம்பவத்தன்று தாய் மற்றும் மகன் இருவரும் தங்களுடைய கிராமத்தில் இருக்கும் வீட்டின் அருகே காலையில் ஜாக்கிங் சென்று திரும்பியுள்ளனர். இந்நிலையில் ஜோனாதன் கழுத்து நெரிக்கப்பட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வெளிய போக சொல்லிட்டாளே” கணவருடன் தங்கை செய்த செயல்…. அக்காவிற்கு நேர்ந்த கொடூரம்…!!

சொந்த அக்காவை தன் கணவருடன் சேர்ந்து தங்கை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாங்காடு காவல்நிலையத்தில் லட்சுமி என்பவர் புகார் ஒன்று கொடுத்திருந்துள்ளார். அதில், குழந்தைகள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் தன்னுடைய வாயில் மதுவை ஊற்றி விட்டு தன்னை தாக்கியதாகவும், அதற்கு காரணம் தன்னுடைய அக்கா தெய்வானை என்றும் கூறியுள்ளார். மேலும் அதிகாலையில் அக்கா தெய்வானை வீட்டிற்கு சென்றபோது தெய்வானை கொலை செய்யப்பட்டு கிடந்தார் என்றும் கூறியுள்ளார். இதனால் […]

Categories
உலக செய்திகள்

“டுவிட்டர் கில்லர்” இளம்பெண்களை இப்படி கொன்றதால்…. மரண தண்டனை விதிப்பு…!!

பல இளம்பெண்களை கொன்ற டுவிட்டர் கில்லருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானை சேர்ந்த டுவிட்டர் கில்லர் என்று அழைக்கப்படுபவர் Takahiro(27). பல பெண்களை கொலை செய்த இவருக்கு டோக்கியோ நீதிமன்றம் தற்போது மரண தண்டனை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர், தங்களுடைய தற்கொலை எண்ணங்களை பற்றிய தகவல்களை இணையதளத்தில் பதிவிடும் இளம்பெண்களுடன் டுவிட்டர் மூலம் தொடர்புகொண்டு பழகியுள்ளார். பின்னர் அவர்களின் தற்கொலை எண்ணங்களுக்கு தான் உதவுவதாகவும் அல்லது சேர்ந்து நாம் இறந்து […]

Categories
உலக செய்திகள்

“வேகமாக பரவும் புது வைரஸ்” பயப்பட வேண்டாம் – சுகாதார துறை செயலாளர்…!!

வேகமாக பரவி வரும் புது வகையான வைரஸ் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று சுகாதார செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் புதுவகையான வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது வேகமாக பரவி வருவதாகவும் பிரிட்டன் சுகாதார செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் இது குறித்து அங்குள்ள 60 உள்ளூர் அதிகாரிகள் இந்த புது வகையான வைரஸ் பரவுவதை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து உலக சுகாதார அமைப்புக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அறிவியலாளர்களும் இது குறித்து விரிவான ஆய்வுகளை […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வைரசுக்கு…. இந்த நாட்டு பிரதமர் பலி…. அதிர்ச்சி சம்பவம்…!!

எஸ்தினி நாட்டு பிரதமர் கொரோனா வைரசுக்கு உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ்க்கு உலகின் பல்வேறு பகுதிகளிலும் பல முக்கிய புள்ளிகளும் பலியாகி உள்ளனர். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் ஆப்பிரிக்கக் கண்டத்தின் தெற்குப்பகுதியில் உள்ள சிறிய எஸ்வதினி விநாட்டையும் விட்டுவைக்கவில்லை. வெறும் 12 லட்சம் பேர் மட்டுமே வசிக்கும் இந்த நாடு சுவாசிலாந்து என்று முன்பு அழைக்கப்பட்டு வந்துள்ளது. இந்த காரணத்தால் 6 ஆயிரத்து 700 பேர் கொரோனா வைரசால் […]

Categories
தேசிய செய்திகள்

“கையை பிடித்து ஆட சொன்ன” மாப்பிள்ளையின் நண்பர்கள்…. மணப்பெண் செய்த செயல்…. பரபரப்பு சம்பவம்…!!

மாப்பிள்ளையின் நண்பர்கள் மணப்பெண்ணை கையை பிடித்து இழுத்ததால் கல்யாணம் நின்று போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் பரேலி எனும் பகுதியில் ஒரு தம்பதிக்கு திருமணம் நிச்சயிக்க பட்டிருந்தது. இந்நிலையில் திருமணத்தன்று மணமகள் மற்றும் அவரது குடும்பத்தார் பரேலிக்கு சென்றுள்ளனர். அங்கு மிக விமர்சையாக திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்துள்ளனர். திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் சுமூகமாக நடந்து கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக, மாப்பிள்ளையின் நண்பர்கள் சிலர் திடீரென மணப்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து நடனம் […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. பொங்கல் பரிசோடு நெய் வழங்கப்படும்…!!

9 மாவட்டங்களை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் 100 கிராம் நெய் பாட்டில்கள் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பாக ஒவ்வொரு வருடமும் பொங்கலை முன்னிட்டு பொங்கல் பை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மதுரை ஆவின் சார்பாக சுமார் 2,52,000 நெய் பாட்டில்கள் தயாரித்து வழங்கப்பட இருக்கின்றன. இந்த 100 கிராம் நெய் பாட்டில்கள் மதுரை, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி போன்ற 9 மாவட்டங்களைச் […]

Categories
தென்காசி மாநில செய்திகள்

“நல்ல enjoy பண்ணுங்க” இன்று முதல் அனுமதி – தமிழக அரசு உத்தரவு…!!

இன்று முதல் குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க தமிழக அரசு அனுமதி அளித்து  உத்தரவிட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு மேலாக தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றதுடன், அங்குள்ள வியாபாரிகளும் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். ஊரடங்கு தளர்வில் பல்வேறு சுற்றுலா தலங்களும் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே […]

Categories
லைப் ஸ்டைல்

முன்னோர்கள் அதிகம் பயன்படுத்திய…. இது நமக்கு அற்புதமான மருந்து…. தெரிஞ்சிக்கோங்க…!!

வெற்றிலையை பயன்படுத்துவதால் நமக்கு என்னென்ன மருத்துவ பயன்கள் கிடைக்கிறது என்று பார்க்கலாம். பொதுவாக நம்முடைய வீடுகளில் மரம், செடி, கொடிகள் என வளர்ப்பது வழக்கம். விருட்சங்கள் வீடுகளில் வளர்ந்தால் விருத்தியம்சத்துடன் வீடு திகழும் என்பது நம்பிக்கை. இயற்கை மூலிகைகளாக விளங்கும் வெற்றிலை, துளசி, மற்றும் வேப்பமரம் போன்றவற்றை கண்டிப்பாக நம் வீட்டில் வளர்க்க வேண்டும். வெற்றிலையை ஒரு மூலிகையாக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தார்கள். அதுமட்டுமின்றி தாம்பூலத்தில் இடம்பெறும் ஒரு மங்கலகரமான பொருளாக வெற்றிலை வைக்கப்படுகிறது. உடலிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“இது எங்கள் உரிமை” விவசாயிகளுடன் போராட்டத்தில்…. குதித்த 11 வயது போராளி …!!

11 வயது மாணவி ஒருவர் விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சம்பவம் பெருமையடைய செய்துள்ளது. டெல்லியில் போராடும் ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாணவி குர்சிம்ரத் கவுர்(11) என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவர் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியான இவர் போராட்டங்களுக்கு மத்தியிலும், தேர்வுக்காக படித்து வருகிறார். ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் இந்த மாணவியும் பஞ்சாபிலிருந்து டெல்லி வரை நடந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து இந்த சிறுமி கூறுகையில்,” நாங்கள் எங்கள் உரிமைக்காகப் […]

Categories
மாநில செய்திகள்

செல்போனில் வாக்காளர் பட்டியல்…. சரிபார்ப்பது எப்படி…??

உங்களுடைய செல்போனில் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது எப்படி என இப்போது பார்க்கலாம். உங்களுடைய மொபைலில் உள்ள பிரவுசரை முதலில் திறக்க வேண்டும். அதில் https://electoralsearch.in/##resultArea என்ற இணைய முகவரியை உள்ளிடவும். இந்த பக்கத்தில் உங்களது வாக்காளர் விபரம் உள்ளிடுவதன் மூலம் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். சில சமயங்களில் பெயர் தவறுதலாக எழுதப்பட்டிருக்கலாம். இதனால் உங்களது பெயர் பட்டியலில் இல்லை என்று வரலாம். ஆகையால் வாக்காளர் அடையாள அட்டையில் EPIC […]

Categories
தேசிய செய்திகள்

“தாய் பாசத்திற்கு உதாரணம்” நாய் குட்டிக்கு பால் கொடுத்த பசு…. நெகிழ்ச்சி சம்பவம்…!!

பசு ஒன்று நாய் குட்டிகளுக்கு தாயாக மாறி பால் கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலத்தில் நாய் ஒன்று குட்டிகளை ஈன்று விட்டு உயிரிழந்துள்ளது. இதனால் குட்டிகள் உணவுக்காக பரிதவித்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த குட்டி நாய்களுக்கு பசு ஒன்று தாயாக மாறி பால் கொடுத்துள்ளது. இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சி  அடைந்துள்ளனர். மேலும் அழகான இந்த காட்சியை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். நாய் குட்டிகளுக்கு பசு ஒன்று தாயாக […]

Categories
உலக செய்திகள்

“100 கிலோ எடை கொண்டதால்” ஏமாற்றிய காதலன்…. காதலி எடுத்த முடிவால்…. சந்தோஷமான வாழ்கை…!!

பெண் ஒருவர் தன் காதலன் ஏமாற்றிய நிலையிலும் மாற்று வழியை தேர்ந்தெடுத்து சந்தோசமாக வாழ்ந்து பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். வேல்ஸ்யை சேர்ந்த பெண் Emily Donovan(24). 100 கிலோ எடை கொண்ட இவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த நேரத்தில் தன் காதலன் தனக்கு துரோகம் செய்வதை கண்டு பிடித்துள்ளார். தன்னுடைய உடல் பருமன் தான் இதற்கு காரணம் என புரிந்து கொண்ட அவர் தன்னுடைய ஏமாற்றத்தை மறந்து வேறு பக்கம் திரும்ப முடிவு செய்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

“சென்னை ஐஐடியில் கொரோனா” தற்காலிகமாக கல்லூரி மூட உத்தரவு…!!

சென்னை ஐஐடியில் கொரோனா தொற்று பரவியதால் அனைத்து துறைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் இந்த மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு சென்னை ஐஐடியில் கல்லூரி திறக்கப்பட்ட நிலையில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை […]

Categories
தேசிய செய்திகள்

“மூளையில் ஆபரேஷன்” நடந்துகொண்டிருந்த போதே…. அசத்திய 9 வயது சிறுமி…!!

9 வயது சிறுமியின் மூளையில் அறுவை சிகிச்சையின் போது பியானோ வாசித்து அசத்தியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்திலுள்ள குவாலியர் பகுதியில் வசித்து வரும் சிறுமி சௌமியா(9). இவருக்கு மூளையின் ஒரு பகுதியில் கட்டி இருந்ததுள்ளது. எனவே மூளையில் அறுவைசிகிச்சைக்காக பிர்லா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த சிறுமிக்கு சுமார் 6 மணி நேரம் மூளையில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் அறுவைசிகிச்சை குறித்து, மருத்துவர்கள் கூறுகையில், “இவருக்கு மூளையில் ஆபரேஷன் நடக்கும் போது […]

Categories
உலக செய்திகள்

புறப்பட ரெடியான விமானம்…. பரபரப்பை கிளப்பிய இளைஞர்…. பீதியில் பயணிகள்…!!

இளைஞர் ஒருவர் புறப்பட இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய சமபவம் பயணிகளை பீதியடைய செய்துள்ளது.  அமெரிக்காவில் நிவேடா மாநிலத்திலுள்ள லாஸ் வேகாஸ் நகரில் Mccarran விமான நிலையத்தில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளை ஏற்றிக்கொண்டு கிளம்புவதற்காக ஓடுதளத்தில் தயாராக நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது திடீரென வாலிபர் ஒருவர் விமானத்தின் இறக்கையின் மீது ஏறி அட்டகாசம் செய்துள்ளார். இதை கண்ட விமானத்தில் இருந்த பயணிகள் கடும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இந்த சம்பவம் குறித்து விமான நிலைய காவல்துறையினருக்கு […]

Categories
உலக செய்திகள்

இன்று இரவில் நிகழும்…. கடைசி சூரிய கிரகணம்…. நம்மால் பார்க்க முடியுமா…??

இன்று நடக்கவிருக்கும் சூரிய கிரகணம் இரவில் நிகழ்வதால் இந்தியாவில் பார்க்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.  சூரியன் மற்றும் பூமிக்கு இடையே நிலா சரியாக ஒரே நேர்கோட்டில் வரும்போது தான் சூரிய கிரகணம் ஏற்படும். இந்நிலையில் இந்த வருடத்தின் கடைசி மற்றும் இரண்டாவது சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இன்று இரவு 7.03 மணி முதல் இரவு 12.22 மணி வரை வானில் முழு சூரிய கிரகணம் நிகழ போகிறது என்று கூறப்பட்டுள்ளது. அதே போல இந்த சூரிய […]

Categories
உலக செய்திகள்

“என் பிள்ளை தனிமையை உணர கூடாது” பாசக்கார அப்பாவின் செயல்…. குவியும் பாராட்டு…!!

தன்னுடைய மகனுக்காக பாசக்கார தந்தை ஒருவர் செய்த செயல் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. கனடாவில் வசித்து வருபவர் டெரக் ப்ரு சீனியர் என்பவரின் மகன் டெரக் ப்ரு(8). இந்த சிறுவனுக்கு சிறுவயதிலிருந்தே மார்பு பகுதியில் வட்ட வடிவிலான அடையாளம் ஒன்று இருந்திருக்கிறது. இதனால் தன்னுடைய மகனுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அவருடைய தந்தையும் அதே இடத்தில் மகனுக்கு உள்ளதைப் போலவே தன்னுடைய மார்பிலும் பச்சை குத்திக்கொண்டுள்ளார். இது குறித்து சிறுவனின் தந்தை டெரக் ப்ரு சீனியர் கூறுகையில், […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அண்ணன் தங்கை உறவில் மலர்ந்த காதல்” இருவருக்கும் நேர்ந்த விபரீதம்…. நெல்லையில் பரபரப்பு…!!

அண்ணன் தங்கை உறவு கொண்ட இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில் இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியில் வசித்து வருபவர் வேல்தேவர். இவருக்கு சுடலை ராஜ் மற்றும் இசக்கிமுத்து என்று 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் பழைய பேட்டை பகுதியில் உள்ள பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சுடலைராஜின் மனைவி உயிரிழந்ததால் அவருடைய மகன்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது போன்ற உதவிகளை சுடலைராஜின் சகோதரரான இசக்கிமுத்துவின் மனைவி மற்றும் மகள் […]

Categories
தேசிய செய்திகள்

800 ஆண்டுகளுக்கு பின்…. கிரகங்கள் இணையும் …. “அந்த நாள்” எப்படி இருக்கும் தெரியுமா…??

வியாழனும் சனியும் இணையும் அந்த நாளன்று நீண்ட இரவாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 2020 ஆம் வருடத்தின் இறுதியில் வானத்தில் ஒரு அதிசயம் நிகழப் போகிறது என்றும், நவ கிரகங்களில் மிகப்பெரிய கிரகம் வியாழன் மற்றும் சனி டிசம்பர் 21ஆம் தேதி நெருங்குகின்றன. இணையும் அந்த நாளில் வானில் தோன்றும் அதிசய நட்சத்திரத்தை கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று கூறுகின்றனர். ஜோதிடப்படி இப்போது சனியும், குருவும் மகர ராசியில் இணைந்திருக்கின்றன. இந்த நிகழ்வானது 800 வருடங்களுக்குப் […]

Categories
மாநில செய்திகள்

“அதிகபட்ச கல்வி தகுதி உடையவர்கள்” கீழ்நிலை பணிகளுக்கு NO – மதுரை ஐகோர்ட் உத்தரவு…!!

அதிக கல்வி தகுதி உடையவர்கள் கீழ்நிலை பணிகளில் அமர்த்தக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு இளநிலை என்ஜினீயரிங் பணிக்கு விண்ணப்பித்து பின்னர் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றேன். ஆனால் அடுத்த கட்டத்தேர்வுக்கு அழைப்புவரவில்லை. எனவே அது குறித்து விசாரித்த போது, அந்த பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட கூடுதல் கல்வித்தகுதி இருப்பதாக கூறி என்னை நிராகரித்திருப்பது தெரியவந்தது. எனவே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வீட்டில் துர்நாற்றம்” தூக்கில் கிடந்த அழுகிய சடலம்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!

தாய் மற்றும் மகள் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியபடி  கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் கீத கிருஷ்ணன்- கல்பனா. இவர்களுக்கு குணாலிஸ்ரீ(14) மற்றும் மானசா(4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஏழு தினங்களாக கீத கிருஷ்ணனின் வீடு பூட்டியிருந்ததுடன் அங்கிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. எனவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை […]

Categories
தேசிய செய்திகள்

“கடிதத்தில் பின்குறிப்பு” வினோதமான விடுப்பு கேட்ட காவலர்…. வைரலாகும் கடிதம்…!!

காவலர் ஒருவர் வித்தியாசமான முறையில் விடுப்பு கேட்டுள்ள சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் காவலர் ஒருவர் தன்னுடைய மைத்துனரின் திருமணத்திற்கு செல்வதற்காக மேலதிகாரிகளிடம் வித்தியாசமான முறையில் விடுப்பு விண்ணப்பம் ஒன்று கொடுத்துள்ளது பரபரப்பாக நெட்டிசன்களிடையே பேசப்பட்டு வருகிறது. காவலர்கள் தங்களுக்கு தேவையான விடுப்பு கோரி மேலதிகாரியிடம் விண்ணப்பம் அனுப்புவது வாடிக்கை. இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலம் போபால் நகரைச் சேர்ந்த திலீப் குமார் அக்கிர்வார் என்ற காவலர் டிஜிபி அலுவலகத்தில் விடுப்பு […]

Categories
லைப் ஸ்டைல்

“சீர்+அகம்” இதை வெறும் வயிற்றில் குடிங்க…. நிஜமாகவே பல பிரச்சினைகள் தீரும்….!!

சீரக தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்தால் இன்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்க்கலாம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சமையலறை பொருட்கள் அதிக மருத்துவ குணங்கள் கொண்டுள்ளதாக இருக்கின்றன. இதில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய பண்பு சீரகத்திற்கு உள்ளது. சீரகம் என்றால் சீர்+அகம். இது அகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பிரச்சினைகளை தீர்க்க வல்லது. சீரகத்தை உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது தான். ஆனால் அதைவிட சிறந்தது சீரகத் தண்ணீரை பருகுவைத்து ஆகும். தண்ணீரில் சிறிது […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவை கட்டுப்படுத்தும்” கழுதைப்பாலுக்கு டிமாண்ட்…. பண்ணையாளர்கள் குஷி…!!

கழுதை பாலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் கொரோனாவை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகின்றது. அல்பேனியா நாட்டின் பண்ணைகளில் தற்போது கழுதை பால் வாங்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கழுதை பாலுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. மேலும் கழுதை பாலில் அதிகமான சத்துக்கள் இருப்பதால், இதை தேடி மக்கள் திரளாக வருகின்றனர். கழுதைப்பாலில் அதிகமான வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதாகவும் நம்பப்படுகிறது. எனவே தற்போதுள்ள கொரோனா போன்ற கொள்ளை நோயில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா வந்ததால்” கார்பன் உமிழ்வு குறைந்தது…. ஆய்வில் வெளியான முடிவு…!!

கொரோனாவினால் இந்த ஆண்டு உலகம் முழுவதும் கார்பன்டை ஆக்ஸைடின் அளவு கணிசமாக குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கவில்லை. வாகனப் போக்குவரத்தும் முற்றிலும் குறைந்தது. இதனால் நச்சு வாயுவான கார்பன் டை ஆக்சைடு வாயு உமிழ்வு பெருமளவு குறைந்துள்ளது.  கடந்த வருடம் 640 கோடி டன் கார்பன்டை ஆக்ஸைடு வளிமண்டலத்தில் கலந்துள்ளது. ஆனால் இந்த வருடம் 3400 கோடி டன்னாக குறைந்துள்ளதாகவும், […]

Categories
உலக செய்திகள்

“உஷாரா இருங்க” குளியலறையில் செல்போன்…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

பெண் ஒருவர் குளியலறையில் செல்போன் சார்ஜரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷியாவின் அர்க்ஹங்கில்ஸ் நகரை வசித்து வந்தவர் ஒலிஷ்யா சிமினோவா(24). தனியார் துணிக்கடையில் வேலை செய்து வந்த இவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். இவர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 8 செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் இவர் குளியலறையில் செல்போனை பயன்படுத்தும் பழக்கத்தையும் கொண்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஒலிஷ்யா வழக்கம்போல குளியல் அறைக்கு தனது ஐபோனை கொண்டு சென்றுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“விட மாட்டாரு போலையே” பைடன் வெற்றிக்கு எதிராக…. உச்சநீதிமன்றத்தில் வழக்கு…!!

ட்ரம்ப் தரப்பு மீண்டும் ஜோபைடன் வெற்றிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்தார். இதையடுத்து பல வாரங்களாக ட்ரம்ப் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் இருந்து வந்தார். மேலும் ட்ரம்ப் ஜோபைடன் மற்றும் கமலா ஹாரிஸ் அதிபர் தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக ட்ரம்ப் போட்ட அனைத்து வழக்குகளும் கிட்டதட்ட தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பிரியாணி தரமாட்டியா?” கடுப்பான பேரன்…. பாட்டிக்கு நேர்ந்த விபரீதம்…!!

பேரன் ஒருவர் தன்னை பிரியாணி சாப்பிட அழைக்காத பாட்டியை கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கண்ணன்- ராஜேஸ்வரி. கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு, மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மேலும் தன்னுடைய மகன் மற்றும் மகள் பிள்ளைகளும் உள்ளனர். மூத்த மகன் பாபு என்பவருக்கு ராகேஷ் என்ற பேரனும் உள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரி சம்பவத்தன்று தன்னுடைய வீட்டில் பிரியாணி செய்துள்ளார். இதனால் தன்னுடைய பேரன் மற்றும் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

“மனைவிக்கு வந்த சந்தேகம்” இரு உயிரை பறித்து…. பிள்ளைகளை அனாதையாக்கியது…!!

சிறிய சந்தேகத்தால் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துள்ள அப்பகுதியில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் விநாயகபுரம் குப்பம்மாள் பகுதியில் வசிக்கும் தம்பதிகள் கதிர்வேல்- மணிமேகலை. இவர்களுக்கு அக்ஷயா(8), நிவாஸினி (4) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கதிர்வேல் அந்த பகுதியில் டைல்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கதிர்வேல் நடத்தையில் அவருடைய மனைவிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இருவருக்கும் தகராறு வந்துள்ளது. இதையடுத்து அனைவரும் தூங்கு சென்றுள்ளனர். அதன்பின்னர் சிறிது நேரத்தில் […]

Categories
உலக செய்திகள்

“தலையில்லாத பாம்பு” தாக்குபவரை தேடுகிறது…. வெளியான வீடியோ…!!

தலையில்லாத பாம்பு ஒன்று தன்னை தாக்குபவரை தேடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் நபர் ஒருவர் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு தலையில்லாத பாம்பு ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார். இதை பார்த்த அவர் jakonoble என்ற பெயரில் வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோவில் அந்த நபர் தன்னிடம் இருந்த டென்னிஸ் மட்டையால், தலையில்லாத பாம்பை அசைத்து பார்த்துள்ளார். இறந்து கிடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த பாம்பு தலை இல்லாத […]

Categories
உலக செய்திகள்

“டொய்ங், டொய்ங்னு அடிக்கு” தூங்க முடியல…. பெண் கூறியதால்…. பொங்கிய கிராம மக்கள்…!!

பெண் ஒருவர் தன் வீட்டின் அருகில் ஒலித்த மணி சத்தத்தை நிறுத்த கூறியது அந்த ஊர்மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவாவில் உள்ள Plan-las-quates என்ற கிராமத்துக்கு பெண் ஒருவர் புதிதாக குடி பெயர்த்துள்ளார். அந்த பெண் வசித்து வந்த வீட்டின் அருகில் ஒரு பள்ளிக்கூடம் இருந்துள்ளது. அதன் உச்சியில் உள்ள ஒரு மணி இரவும் பகலுமாக அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதனால் எரிச்சல் அடைந்த அந்த பெண், […]

Categories

Tech |