பேருந்தில் மாணவர்கள் ரூட் தல என்ற பெயரில் அட்டகாசம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து சென்னையில் வரும் திங்கட்கிழமை கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் “ரூட்டு தல” என்ற பெயரில் பஸ்ஸில் ஏறி கொண்டு மாணவர்கள் அட்டகாசம் செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். […]
Author: soundarya Kapil
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சுகாதாரத்துறை ஆய்வாளர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாநகராட்சியின் 15 வது வார்டு சம்மட்டிபுரத்தில் உள்ள சுகாதாரத்துறை ஆய்வாளர் முருகன் என்பவர், தனக்கும், தன்னுடன் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுப்பதாக பெண் ஒருவர் முருகன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் அவரது ஆசைக்கு நாங்கள் இணங்காவிட்டால் வேலையை விட்டு தூக்கி விடுவதாகவும் மிரட்டல் விடுத்தார் என்று அப்பெண் கூறியுள்ளார். மேலும் இது குறித்து காவல்துறையினரிடம் […]
சித்தர்கள் எழுதிய ஒரே ஒரு பாடலில் அனைத்து நோய்களையும் தீர்க்கும் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. முன் காலத்தில் நம் சித்தர்கள் அருளிய எல்லா நோய்களுக்கும் மருந்துதான் இந்த பாடல் அமைந்துள்ளது. இந்த பாடல் காலத்தால் அழியாது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நோய்க்கு மருந்து இது தான். இதை யாராலும் மாற்ற முடியாது, மாறவும் செய்யாது. இது “அருந்தமிழ் மருத்துவம் 500” என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. நம் முன்னோர்கள் சாதாரணமானவர்கள் இல்லை என்று நிரூபித்த பாடல். ஒவ்வொரு நோய்க்கும் […]
கொட்டும் மழையிலும் சாலையின் நடுவே ஆண் ஒருவரின் சடலம் அனாதையாக கிடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வருபவர் பிரேம்நாத். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர் வழக்கம் போல சம்பவத்தன்று வேலையை முடித்து விட்டு மாலை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்துள்ளார். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை அரசு பஸ் பணிமனை அருகே சென்றுள்ளார். அந்த நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக இருந்துள்ளது. இதனால் திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது அவர் பின்னால் […]
பெண் ஒருவர் தன் கணவர் வெளிநாட்டில் இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் வசிப்பவர் திருமூர்த்தி. இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும், மோனிகா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது இரண்டு மகன்கள் உள்ளனர். திருமூர்த்தி வெளிநாட்டில் வேலை செய்து வந்ததால் ஆண்டிற்கு இரண்டு முறை சொந்த ஊருக்கு வந்து ஒரு மாதம் தங்கி இருந்து விட்டு […]
ஆசிரியர் ஒருவர் தன்னுடைய மாணவிகளின் ஆபாசமான புகைப்படங்களை வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள Cardiff பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் Richard Edmunds(40). இவர் தன்னிடம் கல்வி கற்று வந்த மாணவிகளிடம் நைசாக பேசி தொழில்நுட்ப ரீதியான விஷயங்களுக்கு புகைப்படம் தேவைப்படுவதாக கூறியுள்ளார். பின்னர் அவர்களை அதிகமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அவர்களிடம் புகைப்படங்களையும் கேட்டு வாங்கியுள்ளார். இப்படி சில மாணவிகள் தங்களின் நிர்வாண புகைப்படங்களையும் இவருக்கு அனுப்பி உள்ளனர். மேலும் […]
இஸ்ரேலின் தேசிய புனைவு அமைப்பின் தளபதி சுட்டு கொல்லப்பட்டதாக இணையத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. ஈரானின் அணு ஆயுதங்களின் தந்தை என்று அழைக்கப்படும் மூத்த அணு விஞ்ஞானி சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலை இஸ்ரேல் தான் செய்தது என்று ஈரான் குற்றம் சாட்டி வந்தது. இந்நிலையில் இஸ்ரேலின் தேசிய புலனாய்வு அமைப்பான மொசாட் தளபதி படுகொலை செய்யப்பட்டதாக இணையத்தில் வீடியோ ஒன்று தீயாய் பரவி வருகிறது. இஸ்ரேல் நகரமான டெல் அவிவ்-ல் இந்த சம்பவம் நடந்துள்ளது. […]
பிரிட்டனுக்கு சென்று தடுப்பூசி போட்டு விட்டு திரும்ப, சில நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகையே ஆட்டம் காட்டி கொண்டு வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்துவதற்காக பல நாடுகளும் அதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஒரு சில நாடுகளில் தடுப்பு மருந்து பரிசோதனை இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே ஆறு நாடுகள் தங்களுடைய நாட்டு மக்களுக்கு தடுப்பூசி இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்னும் இந்தியாவில் தடுப்பூசியின் விலை நிர்ணயிக்கப் படவில்லை. […]
ட்ரம்பின் அண்ணன் மகள், ட்ரம்ப் செய்த குற்றங்களுக்காக அவரை தண்டிக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் மோசமான மறுபக்கம் பற்றி, “DO MUCH AND NEVER ENOUGH” என்ற புத்தகத்தை அவருடைய அண்ணன் மகளும், மனோதத்துவ நிபுணருமான மேரி டிரம்ப் என்பவர் எழுதியுள்ளார். இந்நிலையில் மேரி அளித்துள்ள பேட்டியில், “அமெரிக்க முன்னாள் அதிபர்கள் மீது எந்த வழக்கும் தொடர கூடாது என்ற விதியை ட்ரம்ப் விஷயத்தில் ஒருபோதும் கண்டிப்பாகக் கடைபிடிக்க […]
மர்மநபர்கள் திருட சென்ற வீட்டில் எதுவும் இல்லாததால் ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள எட்டயபுரத்தில் வசிக்கும் தம்பதிகள் மோகன்- சீமா. இவர்கள் சென்னையில் வேலை பார்த்து வந்ததால் வாரத்துக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே எட்டையபுரத்தில் வந்து தங்குவது வாடிக்கையாக வைத்துள்ளனர். இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு எட்டையபுரம் வந்த அந்த தம்பதிகள் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு மீண்டும் சென்னைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென்று மோகன் வீட்டிலிருந்து […]
போலி மருத்துவர்கள் கொரோனவை விட ஆபத்தானவர்கள் என்று மதுரை ஐகோர்ட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் வசித்து வருபவர் ஜெயபாண்டி. இவர் முறையாக மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு சிகிச்சை அளித்தற்காக காவல்துறையினர் கடந்த 2011-ம் வருடம் இவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரது மருத்துவமனைக்கு சீல் வைத்துள்ளனர்.. இந்நிலையில் மருத்துவமனைக்கு சீல் வைத்ததை ரத்து செய்யுமாறு ஜெயபாண்டி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்துள்ளார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், மருத்துவம் படிக்காமல் மருத்துவமனை நடத்திய […]
பொறியியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவை கட்டுவதற்காக ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இறுதியாண்டு பருவத்தேர்வு தவிர பல்கலைக் கழகங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளின் அறியார் தேர்வுகளை ரத்து செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்திய அனைவரும் […]
அரிசி நமக்கு உணவை தவிர வேறு என்னென்ன வகைகளில் பயன்படுகிறது என்று இங்கே பார்க்கலாம். நாம் அன்றாடம் நம்முடைய சமையலறையில் அரிசியை பயன்படுத்தி வருகிறோம். ஆனால், சமையல் அறையை தவிர வேறு எந்த இடங்களில் எல்லாம் இந்த அரிசியை பயன்படுத்த முடியும் என்று என்றாவது யோசித்ததுண்டா? இதோ சமையலறைக்கு வெளியே அரிசி சம்பந்தப்பட்ட ஏராளமான பயன்கள் உள்ளன. உதாரணமாக, உங்கள் செல்போன் தண்ணீரில் விழுந்துவிட்டால் அதை நீங்கள் அரிசி பானையில் போட்டு உலரவைக்கலாம். 1.உங்கள் ஸ்மார்ட் போனை […]
LIC நிறுவனத்தின் ஜீவன் அச்ஷய் திட்டத்தின் மூலம் பெண்கள் மாதாமாதம் ரூ.4000 பெறுவது எப்படி என்று பார்க்கலாம். இளம் வயதில் நீங்கள் ஓடி ஓடி சுறுசுறுப்பாக வேலை செய்யலாம். ஆனால் உங்களளுடைய ஓய்வுக் காலத்தில் எவருடைய உதவியும் இல்லாமல் சுயமாக வாழ்க்கை நடத்துவதற்கு நிலையான ஒரு தொகை தேவைப்படும். அதற்கு இப்போதிலிருந்தே நீங்கள் சேமித்து வைக்க தயாராக வேண்டும். உங்களின் குழந்தைகள் உங்களை காலத்தில் காப்பாற்றுவார்கள் என்று நினைக்க வேண்டாம். உங்களுடைய கடைசி காலத்தில் உங்களை நீங்களே பார்த்துக்கொள்வதற்கு […]
இன்னும் சற்று நேரத்தில் உபரிநீர் திறக்கப்படுவதால் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்தடுத்து வந்த நிவர் மற்றும் புரெவி புயலால், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள் மற்றும் ஏரிகள் சீக்கிரமாக நிரம்பி வழிகின்றன. சமீபத்தில் சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதால் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் கிருஷ்ணா நீர்தேக்கத்திலிருந்து இன்னும் […]
அடுத்த 12 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க உள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா பகுதியில் கடந்த 12 மணி நேரமாக நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று பிற்பகலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இதன் காரணமாக இன்று கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று […]
டிசம்பர் முதல் கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. திங்கள்கிழமை (டிசம்பர் 7 ) முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை, இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் மட்டும் கல்லூரிக்கு வரலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள்: 1.மாணவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். 2.வாரத்திற்கு ஆறு நாட்கள் கல்லூரிகள் […]
அரபிக்கடலில் மேலடுக்கில் சுழற்சி உருவாகியுள்ளதால் பொதுமக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது புரெவி புயலாக மாறி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் பலத்த மழையை கொடுத்துள்ளது. மேலும் நேற்று பாம்பன் அருகே கரையை கடந்த நிலையில் தற்போது வரை அதிக மழை பெய்துள்ளது. இதையடுத்து வரும் டிசம்பர் 7ஆம் தேதி அடுத்ததாக புதிய புயல் உருவாக உள்ளதாகவும், அது இரட்டை புயலாய் மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அரபிக்கடலில் […]
குழந்தையை கவனிப்பது தொடர்பாக வந்த சண்டையில் மனைவி தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் சம்சு – சல்மா சுல்தானா. இவர்களுக்கு 3 வயதில் முகமது சுகன் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. சம்சு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுகனுக்கு கண் பார்வைக்கோளாறு இருப்பதால் இத்தம்பதிகளுக்கிடையே அடிக்கடி, குழந்தையை கவனிப்பது தொடர்பாக சண்டை வந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று நள்ளிரவும் இது தொடர்பாக […]
நடிகர் சிவாஜி கணேசன் அவர்களின் பாடலை மூதாட்டி ஒருவர் பாடும் அழகான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. வயதான மூதாட்டி ஒருவர் தன்னுடைய மெல்லிய குரலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த இருவர் உள்ளம் படத்தில் வரும் “கண்ணெதிரே தோன்றினாள்” என்ற பாடலை கொஞ்சம் கூட பிசிறு இல்லாமல் பாடி அசத்தியிருக்கிறார். இவருடைய இந்த பாடல் பாடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இவரது குரல் எம்.எஸ் ஜானகி குரலோடு ஒத்துக் […]
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கோவில் வீதி பகுதியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன்(30). இவர் அங்குள்ள தனியார் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி, ஹரிணி(3) மற்றும் பிரியதர்சினி(6) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பிரியதர்ஷினி திடீரென்று கீழே விழுந்ததால் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
முன்பின் தெரியாத நபரை சந்தித்தால் பெண் ஒருவருக்கு மோசமான செயல் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வசித்து வருபவர் சீன் ஜோசப்(46). இவருக்கும் முகம் தெரியாத பெண் ஒருவருக்கும் டேட்டிங் செயலின் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பெண் சீனை நேரில் பார்க்க வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார். இதையடுத்து அங்குள்ள கடற்கரை பகுதிக்கு வருமாறு அந்தப்பெண் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார். பின்னர் இருவரும் சந்தித்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணிடம் சீன் தவறாக நடந்து கொண்டுள்ளார். […]
மறுமணம் செய்த பெண், கர்ப்பமாக இருந்த நிலையில் தனது குடும்பத்துடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஜெயேந்திரா கவூர். இவருக்கும் லவ்ப்ரீத் சிங் என்று நபருக்கும் திருமணம் நடந்த நிலையில் ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில் கவூர் மற்றும் சிங்க் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று பிரிந்துள்ளனர். இதையடுத்து கவூர் தன்னுடைய மகள் மற்றும் தாயாருடன் வசித்து வந்துள்ளார். பின்னர் கவூர், ராஜா என்பவரை இரண்டாவதாக திருமணம் […]
இளைஞர் ஒருவர் 10க்கும் மேற்பட்டவர்களை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி அருகே உள்ள குரு கிராமம் என்ற பகுதியில் கடந்த சில மாதங்களில் மூன்று பேர் தொடர்ச்சியாக உயிரிழந்துள்ளனர். இந்த மூன்று பேருக்கும் இடையே எவ்வித சம்பந்தமும் இல்லாததால் குழப்பத்தில் இருந்த காவல்துறையினர், தங்களுடைய விசாரணை தீவிரமாக நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் 250 முதல் 300 க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த முகம்மது ராஜு(21) […]
துறவி ஒருவர் பாம்புகளை தன்னுடைய வாரிசுகளாக வளர்த்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரை சேர்ந்த புத்தமத துறவி விலாதா(69). இவர் தன்னுடைய வீடு உள்ளிட்ட இடங்களில் பிடிபடும் பைத்தான், பைபர், கோப்ரா உள்ளிட்ட பாம்புகளை வாங்கி வந்து யான்கூனில் உள்ள ஆசிரமத்தில் வைத்து வளர்த்து வருகிறார். இது குறித்து கூறும் இவர், பாம்புகள் கொல்லப்படுவதை தவிர்ப்பதற்காகவும், சீன பாரம்பரிய மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்பதை தடுப்பதற்காகவும் தான் இதுபோல செய்வதாக தெரிவித்துள்ளார். அவர் பாம்புகளைக் கண்டு பயப்படாமல் […]
கணவனாக வர இருந்த தன்னுடைய காதலன் இறந்ததால் மனமுடைந்த பெண் விஷமருந்தி தற்கொலை செய்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் வசித்து வந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ராகவி. ராஜேந்திரன் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்ததால் ராகவி அவருடைய தம்பி ராமலிங்கம் என்பவர் பாதுகாப்பில் வளர்ந்துள்ளார். இந்நிலையில் ராகவி கல்லூரி படித்து கொண்டிருந்தபோது சங்கேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மலர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த காதல் விவகாரம் இருவரின் வீட்டாருக்கும் தெரிந்த நிலையில் […]
21 வயது இளைஞர் ஒருவர் விஷப்பாம்புகளை பிடித்து கடிக்க வைக்கும் வீடியோ பார்க்கும் பலரை அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசிப்பவர் பாம்பு நிபுணரான david orivin humplett(21). இவர் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாம்பு தன்னை கடிக்கும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இதன் மூலம் டேவிட் விலங்குகள் ஆபத்தானவை அல்ல என்பதை விளக்கிக் காட்டியுள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், தண்ணீருக்குள் இருக்கும் மலைப்பாம்பை பிடித்து அதை உடல் முழுவதும் சுற்றி வைத்து […]
உலகின் எந்த நாட்டில் உள்ளவர்களும் power ball போட்டியில் கலந்து கொண்டு கோடீஸ்வரர் ஆகலாம் என்று அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள உலகின் மிக பிரபலமான Power ball லாட்டரி போட்டி மூலம் $243 மில்லியன் ஜாக்பாட் பரிசு வெல்ல உலகின் அனைத்து நாட்டை சேர்ந்தவர்களுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் தற்போது உலகில் எந்த மூலை முடுக்கிரும் இருப்பவர்களுக்கும் Power ball விளையாடும் வாய்ப்பு வந்துள்ளது. இதற்கு ஆன்லைன் மூலமாக டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம். $243,000,000 […]
நெல்லிக்காய் மற்றும் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம். உடல் எடையை குறைக்க பல வகையான உணவுகள் பயன்படுகிறது. ஆனாலும் பலரும் அதை முறையாக பயன்படுத்தாமல் உடல் எடையை குறைக்க முடியவில்லையே என்று அவதிப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து உடல் எடையை இயற்கையான முறையில் குறைப்பதற்காக இயற்கையான பானம் மற்றும் உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். அதில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றில் சீரகம் கலந்து குடிப்பது ஆரோக்கியமாக, உங்கள் நாளை தொடங்க […]
இளம் ஜோடிகள் ஒருவர் தங்களுடைய திருமண நிகழ்ச்சிக்கான செலவுகளை, ஏழை மக்களுக்கு உணவளித்த சம்பவம் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் சேர்ந்த ஒரு திருமண ஜோடி தங்களுடைய ஆடம்பரத் திருமண விழாவை ரத்து செய்துவிட்டு அதற்காக செய்யவிருந்த மொத்த செலவையும் என்ஜிஓ மூலம் “தேங்க்ஸ் கிவ்விங்” தினத்தன்று 200க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு உணவு வழங்கி அசத்தியுள்ளனர். ஜோடிகளின் இந்த செயலானது இல்லினாய்ஸ் மக்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இவர்கள் இருவருக்கும் […]
தமிழகத்தில் ஜனவரி 4ம் தேதி கட்டாயம் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று இந்திய பள்ளி தேர்வு சான்றிதழ் கவுன்சில் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவியதன் காரணமாக தமிழகத்தில், கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இதனால் ஆன்லைன் மூலமாக மட்டுமே மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாணவர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால் மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் கேட்பதற்காக பள்ளிக்கு வரலாம் என்று அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதையடுத்து நவம்பர் மாதம் 10, […]
மிக சிறிய இனக்குரங்கிற்கு புதிதாக பிறந்த இரட்டை குரங்கு குட்டிகள் ஒட்டி பிறந்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் செஸ்டர் வனவிலங்கு பூங்கா ஒன்றில் சோயி மற்றும் பால்ட்ரிக் என்ற இரு குரங்குகள் உள்ளன. இந்த காதல் ஜோடி குரங்குகளுக்கு புதிதாக ஒரு இரட்டை குரங்குகள் ஒட்டி பிறந்துள்ளன. 10 கிராம் எடை கொண்ட இந்த குரங்குகள் 2 இன்ச் உயரமும் இருக்கும். இதுகுறித்து இந்த குரங்குகளின் பராமரிப்பாளர் ஒருவர் கூறுகையில், “செப்டம்பர் மாத தொடக்கத்தில் தான் […]
நபர் ஒருவர் பர்கர் சாப்பிடுவதற்காக ஹெலிஹாப்டரில் தனது காதலியுடன் ஹோட்டலுக்கு சென்றுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவை சேர்ந்த பெரும் பணக்காரரான விக்டர் மார்டினா(33). இவர் அலுஸ்டா என்ற பகுதியில் விடுமுறையை கொண்டாட தன்னுடைய காதலியுடன் சென்றிருந்துள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட உள்ளூர் இயற்கை உணவானது அவர்கள் இருவருக்கும் பிடிக்கவில்லையாம். இதனால் தன்னுடைய காதலியை குஷிப்படுத்தும் விதமாக விக்டர், உணவு சாப்பிட தாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அருகே இருந்த 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பர்கர் […]
திருப்பதி கோயிலுக்கு சொந்தமான மருத்துவமனை நாட்டிலேயே முதன்முறையாக செயற்கை கைகளை அறிமுகம் செய்து சாதனை படைத்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள திருமலையில் ஏழுமலையான் கோயில் உள்ளது. இங்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த கோயிலை திருமலை தேவஸ்தானம் நிர்வகித்து வருகிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் வாரி வாரி வழங்கும் நன்கொடைககளால் உலகின் பணக்கார கடவுளாக ஏழுமலையான் திகழ்கிறார். திருப்பதி தேவஸ்தானம் மூலம் நடத்தப்பட்டு வரும் பாலாஜி இன்ஸ்டிடியூட் […]
மக்களை கொன்று இதயத்தை சாப்பிட்ட குற்றவாளியின் வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. லைபீரியா நாட்டின் அதிபரான சார்லஸ் டெய்லருக்கு எதிராக கிளர்ச்சியின் போது 18 கொலைகள், குழந்தைகளை போர்வீரர்களாக பயன்படுத்துதல், வன்புணர்வு, அடிமைத்தனம், பொருட்கள் சூறையாடுதல் மற்றும் கொலை செய்யப்பட்டவர்களின் இதயத்தை சாப்பிடுதல் ஆகிய பயங்கர குற்றச்செயலில் ஈடுபட்டவர் ULIMO அமைப்பின் தளபதி Alieu Kosiah(45). இவர் சுவிட்சர்லாந்துக்கு வந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கியுள்ளார். இந்நிலையில் போர் குற்றங்களில் ஈடுபட்டதற்காக அவர் கடந்த 2014-ம் வருடம் […]
நபர் ஒருவர் மீண்டும் மீண்டும் 73 முறை நல்ல பாம்பு கடித்தும் உயிர் பிழைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கும்மறக்குண்டா கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணியம். இவர் ஐந்து வயதாக இருக்கும்போது முதல் முறையாக நல்ல பாம்பு ஒன்று கடித்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற சுப்பிரமணியம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். ஆனாலும் அந்த நல்ல பாம்பு இவரை இன்னும் விடுவதாக இல்லை. இவருடைய ஐந்து வயதில் இருந்து தற்போது […]
டர்பனில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் டர்பனில் உள்ள நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ஏங்கனில் திடீரென்று பயங்கர வெடி விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது என்று அங்குள்ள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அந்த வெடி விபத்தினால் 7 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் தற்போது அவர்கள் அனைவரும் நல்ல நிலையில் உள்ளதாக அவசர சேவை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்திற்கான […]
மாடர்னா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி குறைந்தது 3 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்கா நிறுவனமான மாடர்னா கொரோனா வைரஸுக்கு எதிராக உருவாக்கியுள்ள தடுப்பூசி 95 சதவீதம் கொரோனா வைரஸை அழிப்பதில் பலனளிப்பதாக தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு கொண்டு வர அனுமதி அளிக்கக் கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகம், ஐரோப்பிய சுகாதார துறையிடம் மாடர்னா நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இந்நிலையில் மாடர்னா நிறுவன கொரோனா […]
நாட்டு மக்கள் அனைவருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பிரான்ஸ் பிரதமர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை சில நாடுகள் மக்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளன. சமீபத்தில் ஜப்பான் அரசு அந்நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்நிலையில் தற்போது பிரான்சில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெஸ் கூறுகையில், “பிரான்ஸ் நாட்டு மக்கள் அனைவருக்குமே கொரோனா தடுப்பூசி […]
போலி சாமியார் ஒருவர் பில்லி சூனியம் எடுப்பதாக கூறி பெண்ணிற்கு சூடு வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்தில் தொடர்ந்து கஷ்டமாக வருவதாகக் கூறி அந்த பகுதியில் இருக்கும் பெண் சாமியாரான சந்தோஷி தேவி என்ற போலி சாமியாரிடம் சென்றுள்ளார். இதையடுத்து அவருக்கு யாரோ பில்லி சூனியம் வைத்ததாக சொல்லிய சந்தோஷி, அந்த பெண்ணிடம் ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு மறுநாள் வருமாறு கூறியிருக்கிறார். இதையடுத்து மறுநாள் […]
ஆசிரியர் ஒருவர் தனக்கு கிடைத்த சர்வதேச ஆசிரியர் விருதுக்கான பரிசை 10 நாட்டு போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் பரிடெவாடி என்ற பகுதியிலுள்ள சிலா பரிஷத் என்ற ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ரஞ்சித்சின்(32). உலகம் முழுவதிலும் உள்ள 140 நாடுகளில் இருந்து சர்வதேச ஆசிரியர் விருது விண்ணப்பித்த 12 ஆயிரம் பேரின் பெயர்களில், இவர் அந்த பரிசுக்கு தேர்வாகி இருக்கிறார். இவருக்கு இந்த விருதை யுனெஸ்கோ அமைப்புடன் இணைந்து varky foundation […]
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சம் தொட்டுள்ளது அந்நாட்டு மக்களிடையே பெரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகிற்கே பெரிய சவாலாக இருந்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்நிலையில் எப்படியாவது தடுப்பு மருந்து கண்டுபிடித்து, கொரோனாவை விரட்டி அடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் ஒரு வினாடி கூட வீணாக்காமல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து சில மருந்து நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ள […]
பெண் ஒருவருக்கு $1 மில்லியன் பரிசு லாட்டரி விழுந்து அவருடைய குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கனடாவில் வசித்து வருபவர் Ashleigh. இவருக்கு சமீபத்தில் லாட்டரியில் $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், லோட்டோ மேக்ஸ் லாட்டரியில் தான் எனக்கு இந்த $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. பரிசு விழுந்த தகவல் எனக்கு தெரிந்த போது வீட்டு சமையலறையில் இருந்து நான் மகிழ்ச்சியில் அதிக சத்தத்துடன் கத்தினேன். அப்போது என் கணவரும், குழந்தைகளும் வீட்டில் […]
இளம்பெண் ஒருவர் தற்கொலைகளை தடுப்பதற்காக சைக்கிளில் நிர்வாணமாக சவாரி செய்துள்ள சம்பவம் பலரின் பாராட்டை பெற்றுள்ளது. லண்டனைச் சேர்ந்த இளம்பெண்ணான கெர்கி பார்ன்ஸ் என்பவரின் உறவினர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். அந்த மரணம் கெர்கியை மிகவும் பாதித்துள்ளது. பல நாட்கள் அதை நினைத்து அழுதுள்ள அவருக்குப் மனித வாழ்க்கையின் துயரம், துன்பங்கள் இதுதானோ? சுருங்கிய இந்த வாழ்க்கையில் நம்முடைய பங்களிப்பும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார். இதன்காரணமாக அவர் தற்கொலைகளை தடுத்து நிறுத்த […]
பிரிட்டனில் கொரோனா தடுப்பூசி நல்லபலனை தருகிறதா என்று இந்திய காத்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில், அதை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி கண்டுபிடிக்கும் விஞ்ஞானிகள் முயற்சியில் ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் ஐந்து நிறுவனங்களில் தடுப்பூசி மருந்துகள் 90% க்கும் அதிகமாக கொரோனாவை கட்டுப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன. எனினும் பல நாடுகளில் இன்னும் மக்களுக்கு நேரடியாக தடுப்பூசி வழங்கப்படவில்லை. முதன்முதலாக பிரிட்டன் இந்த […]
பள்ளி வளாகத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சக மாணவியின் கழுத்தில் தாலி கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அரசு ஜூனியர் கல்லூரி என்றழைக்கப்படும் மேல்நிலைப்பள்ளியில் சத்தமில்லாமல் ஒரு விபரீத சம்பவம் நடந்துள்ளது. அந்த ஜூனியர் கல்லூரியில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் தன்னுடைய காதலியான சக மாணவியை காதலித்து வந்துள்ளார். கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் தன்னுடைய காதலியை பார்க்க முடியாமல் தவித்து […]
தண்ணீர் குடிக்கும் சிறுத்தையை வெறும் 25 நொடிகளில் முதலை இரையாக்கியுள்ள வீடியோ காண்போரை நடுங்க வைத்துள்ளது. இயற்கையின் முழு படைப்பையும் தன் வசம் வைத்துள்ள காட்டில் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயங்களும் மனதை கொள்ளை கொள்ளும். ஆனால் அதே காட்டில் தான், வேட்டையாடும் கொடூர மிருகங்களும் நிறைந்திருக்கும். இதுபோன்று வேட்டை ஒன்று தான் இந்தகாணொளியில் அரங்கேறியுள்ளது. தாகத்திற்கு தண்ணீர் அருந்த வந்த சிறுத்தை ஒன்று மிகவும் பயத்துடன் தண்ணீர் அருந்தி கொண்டிருக்கிறது. அப்போது எதிர்பாராத நேரத்தில் முதலை […]
இன்னும் சில மணி நேரத்தில் கொரோனா தடுப்பூசி வர இருப்பதாக துணைத் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். பிரிட்டனில், அமெரிக்க நிறுவனமான பைசர் தடுப்பூசிகள் சில மணி நேரங்களில் வந்து சேர உள்ளதாக இங்கிலாந்தின் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி Jonathan அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை பைசர் தொழிற்சாலையிலிருந்து ஏற்றிக்கொண்டு கனரக லாரி ஒன்று புறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பு மருந்துகள் முக்கிய மருத்துவமனைகளுக்கு உரிய முறையில் அனுப்பி வைக்கப்பட்டு -70c வெப்பநிலையில் பாதுகாக்கப்பட […]
விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் தரையிறங்கி கார் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மினசோட்டாவின் ஆர்டன் ஹில்ஸில் நெடுஞ்சாலையில் அவசரமாக தரை இறங்ககிய சிறிய ரக விமானம் ஒன்று முன்னால் சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதிலுள்ள விமானி கிரேக் கிப்போர்ட் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தின் போது விமானத்தில் 2 பேர் இருந்ததாக மத்திய விமான போக்குவரத்து […]
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கியதற்காக பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கீதாஞ்சலி. இவர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். கீதாஞ்சலி ஆன்லைன் துன்புறுத்தல்களை தொடக்கத்திலேயே கண்டுபிடித்து எச்சரிக்கும் புதிய செயலி ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதேபோன்று நீரின் சுத்தமான தன்மையினை அறிந்து கொள்ளும் வகையிலான ஒரு செயலியையும் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இந்த செயலியின் பெயர் டெத்திஸ் என்பது குறிப்பிடத்தக்கது. […]