Categories
சினிமா தமிழ் சினிமா

இளைய தளபதி விஜய்க்கு…. பெருசா ஒரு ஆபத்து இருக்கு…. தந்தை எஸ்.ஏ.சி பரபரப்பு பேட்டி…!!

நடிகர் விஜய் அவர்களுக்கு மிக பெரிய ஆபத்து இருப்பதாக அவர் தந்தை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இளைய தளபதி விஜயின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் புதிதாக விஜய் மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதனால் நடிகர் விஜய் மற்றும் எஸ்.ஏ சந்திரசேகர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பேசிய எஸ்.ஏ சந்திரசேகர், “விஜய்யின் நன்மைக்காகவே  நான் கட்சி ஆரம்பித்தேன். மேலும் நடிகர் விஜய் அவர்களை சுற்றி ஆபத்தான விஷயம் நடந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“5 நிமிஷத்துல 3 தென்னை மரம்” ஏறி இறங்கும் 7 வயது சிறுமி… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சிறுமி ஒருவர் 5 நிமிடத்தில் 3 தென்னை மரங்களில் ஏறி இறங்கும் சம்பவம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் வி.கே புரத்தைச் சேர்ந்த தம்பதிகள் மார்ட்டின் விஜயதுரை-ரேணுகா. இவர்களுக்கு சாம் ஆல்வின்(10) என்ற மகனும், ஹெப்சிகேனா(7) என்ற மக்களும் உள்ளனர். ஆல்வின் ஐந்தாம் வகுப்பும், ஹெப்சிகேனா இரண்டாம் வகுப்பும் படித்து வருகிறார்கள். விஜயதுரை பாபநாசத்தில் உணவகம் ஒன்று நடத்தி வருகிறார். இவர் வீட்டில் நிறைய தென்னை மரங்கள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது கொரோனாவினால் பள்ளிகல் […]

Categories
தேசிய செய்திகள்

“PUBG விளையாட்டு” இந்தியாவில் மீண்டும் ரீஎன்ட்ரி ….. அறிவிப்பு விரைவில்…!!

ஆன்லைன் விளையாட்டான பப்ஜியை இந்தியாவிற்குள் மீண்டும் கொண்டு வர அந்நிறுவனம் திட்டம் தீட்டியுள்ளது. இந்தியாவில் ஆன்லைன் பப்ஜி விளையாட்டால் அதிகமாக தற்கொலைகள் ஏற்பட்டதையடுத்து பப்ஜி விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பப்ஜி விளையாட்டாளர்கள் இடையே பெரும் கவலையை ஏற்படுத்தி இருந்தது. எனவே பப்ஜி விளையாட்டு மீண்டும் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் பப்ஜி கார்ப்பரேஷன் இந்த வருட இறுதிக்குள் இந்தியாவிற்கு பப்ஜி விளையாட்டை கொண்டுவர திட்டம் போட்டு இருப்பதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஏ.சந்திரசேகர் கட்சியின்…. பொருளாளராக நான் இல்லை…. விஜய் தாயார் ஷோபா பேட்டி…!!

விஜய்யின் தாயார் தன் கணவர் தொடங்கிய கட்சியின் பொருளாளராக இல்லை என்று பேட்டியளித்துள்ளார். இளைய தளபதி விஜய் அவர்கள் சமீபத்தில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கி உள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியானது. இந்த கட்சியின் செயலாளராக விஜய்யின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் பொருளாளராக விஜய்யின் தாயார் ஷோபா ஆகியோரின் பெயர் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது சம்பந்தமான புகைப்படங்கள் வலைதளங்களில் பரவி வந்தன. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தாய் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அழகில் மயங்கிய கணவர்…. விடிய விடிய பக்கத்தில் இருந்து…. மனைவியை செய்த காரியம்…!!

கணவர் ஒருவர் தவறு செய்யாத மனைவியின் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த தம்பதிகள் தங்கராஜ்-ருக்மணி. இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. தங்கராஜ் டெய்லர் கடை ஒன்றை நடத்தி வருகிறார். ருக்மணி மிகவும் அழகாக இருந்ததால், அவருடைய கணவர் தங்கராஜ்க்கு சந்தேக புத்தி அதிகமாக இருந்துள்ளது. மேலும் அவர் இரவு வீட்டிற்கு வரும் போது தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காதலை ஏற்காத பெண்ணால்…. விஷம் குடித்த என்ஜினீயர்…. சேலத்தில் பரபரப்பு…!!

வாலிபர் ஒருவர் காதலில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜராஜன் என்பவரின் மகன் கோவிந்தன்(25). இவர் சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு சேலத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் என்ஜினீயராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கோவிந்தன் பூச்சி மருந்தை வாங்கி குடித்து விட்டு மயக்கத்துடன் கிடந்த நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அவருடைய தந்தைக்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பாட்டியின் இறுதி சடங்கு முடிந்து…. பேரன் உயிரிழப்பு…. கதறிய குடும்பத்தினர்…!!

ஒரே நாளில் இரண்டு வாலிபர்கள் கண்மாயில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் வசிக்கும் இருளப்பன் என்பவரது மகன் சதீஷ்குமார்(22). இவர் சம்பவத்தன்று பக்கத்தில் உள்ள உள்ள கண்மாயில் அவருடைய அண்ணன் முனியசாமி மற்றும் பெரியசாமி ஆகியவர்களுடன் சேர்ந்து குளிக்கச் சென்றுள்ளார். அப்போது சதீஷ்குமார் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை […]

Categories
தேசிய செய்திகள்

“17 வயது சிறுவன்” திருமணமான பெண்ணை வற்புறுத்தி…. நாசம் செய்த கொடூரம்…!!

சிறுவன் ஒருவர் திருமணமான பெண்ணை பலாத்காரம் செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுவன் ஒருவர் வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது அந்த காட்சியை சிறுவன் தன் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதை அந்த சிறுவன் திருமணமான பெண்ணிடம் அவ்வப்போது காட்டி நடந்ததை வெளியில் சொன்னால் இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி மிரட்டி […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் பறந்த இதயம்…. அடுத்து என்ன நடந்தது…? வெளியான அதிர்ச்சி வீடியோ…!!

தானம் அளிக்கப்பட்ட இதயத்தை கொண்டு சென்ற விமானம் திடீரென விபத்துக்குள்ளான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று தானமாக அளிக்கப்பட்ட இதயத்தை எடுத்துக்கொண்டு, இரண்டு ஊழியர்கள் மற்றும் பைலட்டுடன் புறப்பட்டது. இதையடுத்து தெற்கு கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் கெக் மருத்துவமனையின் மேல் விமானம் தரையிறங்கும் போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இதில் தானம் அளிக்கப்பட்ட இதயத்தை கொண்டு வந்த தனியார் ஏர் ஆம்புலன்ஸில் இருந்த இரண்டு சுகாதார ஊழியர்கள் மற்றும் பைலட் ஆகியோர் […]

Categories
உலக செய்திகள்

“டிவி பார்த்த சிறுவனுக்கு நேர்ந்த துயரம்” அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…!!

சிறுவன் ஒருவர் டிவி பார்த்துக்கொண்டிருந்த பொது தெரியாமல் கோலிக்குண்டு விழுங்கிய சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவர் வீட்டில் தனது 12 வயது சகோதரியுடன் தனியாக இருந்துள்ளார். அவர்களது பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் தனியாக வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் சிறுவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்வத்தில் தனக்கு பக்கத்தில் இருந்த சிறிய கோலிக்குண்டுகளை எடுத்து விழுங்கியுள்ளார். இந்நிலையில் சிறிது நேரம் கழித்து பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது சிறுவன் […]

Categories
உலக செய்திகள்

அமைச்சரவையில் இடம்….! ”வெளிநாட்டில் கலக்கல்” தாய் மொழியில் பேசும் இந்திய பெண் …!!

இந்திய பெண் முதன் முறையாக நாடாளுமன்றத்தில் தன் தாய்மொழியில் பேசிய வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  நியூசிலாந்து நாட்டில் இந்திய வம்சாவளிப் பெண்ணான பிரியங்கா ராதாகிருஷ்ணன் நியூசிலாந்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட யாரும் இதுநாள் வரை அமைச்சராக இருந்து இல்லை. இதனால் பிரியங்கா ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெசிந்தா ஆண்டெர்சன் பிரதமராக மீண்டும் பதவி ஏற்றுள்ளார். முதல் கட்டமாக […]

Categories
உலக செய்திகள்

காதலி சொல்லிடுச்சு…! முடிவு எடுத்த புதின்… அதிபர் பதவி வேண்டாம்… உண்மை என்ன ?

புடின் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக வெளியான தகவலுக்கு அதிபர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பார்க்கின்சன் நோயால் அவதியுற்று வருவதால், தன் காதலி Alina Kabeava மற்றும் அவரது மகள்களின் வற்புறுத்தலின் பேரில் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருக்கிறார் என்று அரசியல் விமர்சகரான பேராசிரியர் Valery Solovei தெரிவித்திருந்தார். ஆனால் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்த கிரெம்ளின் செய்தித் தொடர்பாளரும், துணை Chief of staff […]

Categories
உலக செய்திகள்

வாக்கு எண்ணிக்கை முடியல…! ”ட்ரம்ப் ஜெயிக்கும்” தேர்தல் மையத்தில் நடந்த செயல்… வைரலாகும் வீடியோ…!!

ட்ரம்ப் வெற்றி பெற அவரது ஆதரவாளர்கள் தேர்தல் மையத்திற்கு வெளியில் பிரார்த்தனை செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் முடிவில் இழுபறி தொடர்ந்து வரும் நிலையில், டொனால்டு ட்ரம்ப் ஆதரவாளர்கள் அவர் வெற்றி பெற வேண்டும் என்று தேர்தல் மையத்திற்கு வெளியே பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது ட்ரம்ப் 213 வாக்குகள் பெற்று பின்னடைவிலும், ஜோ பைடன் 253 வாக்குகளும் பெற்று வெற்றி விளிம்பிலும் இருக்கிறார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறுவதால் இழுபறி […]

Categories
உலக செய்திகள்

வெற்றி விளிம்பில் பைடன் …. உளவுத்துறை அதிரடி முடிவு…. பரபரப்பில் அமெரிக்கா….!!

ஜார்ஜியாவில் ஜோ பைடன் வெற்றி பெற்றதை தொடர்ந்து அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலில் ஜார்ஜியாவில் ஜோபைடன் வெற்றி பெற்றுள்ளார். இதனால் உளவுத்துறை அவருக்கு அதிரடியாக பாதுகாப்பை அதிகரித்துள்ளது. ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை வகித்த வந்த நிலையில் வெற்றி வாகை சூடியுள்ளார். ட்ரம்ப் 214 வாக்குகள் பின்னடைவை சந்தித்து வந்த நிலையில், நொவோடா மற்றும் கடும் இழுபறியிலுள்ள ஜார்ஜியா மாகாணங்களில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பில் ஜோ பைடன் ஜார்ஜியாவில் வெற்றி பெற்றுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

வெளியே போகாதீங்க…!  ”ரூ. 6,23,211அபராதம்”…  புலம்பும் மக்கள் …. பிரிட்டன் அரசு அறிவிப்பு …!!

புதிதாக நடைமுறைக்கு வந்த கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு எச்சரித்துள்ளது. பிரிட்டனில் புதிதாக கொரோனா வைரஸ் நடைமுறைக்கு வந்துள்ளதால், வேலை, மருத்துவத் தேவை, உணவு வாங்க, உடற்பயிற்சி போற காரணங்களுக்காக வெளிய செல்லலாம். மற்றபடி மக்கள் நியாயமான காரணமின்றி வெளியே வரக்கூடாது. அப்படி வெளியே வந்தால் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது. மேலும் மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தங்களுடைய உள்ளூர் பகுதியில் கூட […]

Categories
உலக செய்திகள்

இன்னும் கொரோனவே முடியல…. அதுக்குள்ள புதுசா ஒரு வைரஸ்…. பீதியில் கனடா…!!

உலக நாடுகள் முழுவதும் கொரோனா பிரச்சினையே முடியாத நிலையில் தற்போது H1N2 வைரஸ் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள வுகான் நகரில் முதன் முறையாக கொரோனா பரவ தொடங்கியதை அடுத்து படிப்படியாக இந்த நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. இதனால் மனித இயல்பு நிலையையே இந்த வைரஸ் புரட்டி போட்டு விட்டது. மேலும் தற்போது கொரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில், கனடாவில் ஒருவருக்கு புதிதாக H1N2 வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“காவல் உடையில் ஒரு களவாணி” சிறுவயதிலிருந்தே திருட்டு…. அதிர்ந்து போன போலீசார்…!!

காவலர் ஒருவர் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வீடுகளில் திருடிய சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.  திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் கடந்த மாதம் தங்கதுரை என்பவரின் வீட்டில் பட்டப்பகலில் 15 சவரன் நகையை யாரோ கொள்ளையடித்து சென்று விட்டனர். இதையடுத்து அங்கிருந்த கைரேகை பதிவுகளை கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்ததில், அந்த கைரேகை திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த காவலர் கற்குவேலின் கைரேகையோடு ஒத்துப் போனதால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினருக்கு பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உங்கள அப்படி பேசுனது தப்பு தாங்க…. “மன்னிச்சிருங்க” போதை தெளிந்ததும்…. கதறிய வாலிபர்…!!

காவல்துறையினரை தவறாக பேசிய குடிகார நபர் போதை தெளிந்ததும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.  கடலூர் மாவட்டம் சிதம்பரதிலுள்ள தாயுமானவர் பகுதியில் வசிப்பவர் வினோத்(35). இவர் சம்பவத்தன்று இரவில் குடித்துவிட்டு வேணுகோபால் பிள்ளை தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் வினோத்திடம் அமைதியாக இருக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் வினோத் கேட்காமல் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் அவருடைய வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் வினோத் காவல்துறையினரை […]

Categories
தேசிய செய்திகள்

டேய் நான் சரக்கடிக்கணும்…. “சைட் டிஷ் வாங்கிட்டு வா” மறுத்த சிறுவனுக்கு…. நேர்ந்த பயங்கரம்…!!

மது அருந்த சைட் டிஷ் வாங்கி தர மறுத்த சிறுவனை குடிகார நபர் அடித்து கொலை செய்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  டெல்லியை சேர்ந்தவர் ஷாதாப்(20). இவர் சம்பவத்தன்று சாலையோரம் அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த 14 வயது சிறுவன் ஒருவனை கூப்பிட்டு குடிப்பதற்கு சைட் டிஷ் வைத்திருக்கிறாயா? எனக்கு தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த சிறுவன் என்னிடம் எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறான். இதையடுத்து மது போதையில் […]

Categories
தேசிய செய்திகள்

“Anti virus” தோசையை சாப்பிட்டா…. நோய் எதிர்ப்பு சக்தி கூடும்…. பெயரால் பிரபலமான உணவகம்…!!

நபர் ஒருவர் தன்னுடைய உணவகத்திற்கு ஆண்டி வைரஸ் என்று பெயர் வைத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பிடியில் மக்கள் சிக்கி கொண்டு வரும் நிலையில் பல பகுதிகளில் இது தொடர்பான பெயர்களை மக்கள் பயன்படுத்தி வைரலாக்கி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா உச்சத்தில் இருந்த சமயத்தில் பிறந்த குழந்தைகளுக்கு கோவிட் , கொரோனா என்று பெயர் வைத்திருந்தனர். அதேபோன்று தற்போது மீண்டும் ஒரு பெயர் வைரலாகி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

“ஜாலியாக படம் பாருங்கள் ட்ரம்ப்” கலாய்த்த தன்பெர்க்…. வைரலாகும் கர்மா ஒரு பூமராங்…!!

ட்ரம்பின் டுவீட்க்கு கலாய்த்து பதில் அனுப்பிய பூமராங் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்போது தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருப்பதால் அதிக பதற்றத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் அதிபர் தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில் தான் வெற்றி பெற்றுவிட்டதாகவும் அதனால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்றும் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். ஆனால் டிரம்பின் நடவடிக்கைகள் எல்லாமே தோல்வியில் முடிந்துள்ளன. ஆனாலும் டிரம்ப் தான் […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை…. முன்விரோதமா?…. சாதி மறுப்பு திருமணமா?….. போலீசார் விசாரணை…!!

வாலிபர் ஒருவரை மர்ம நபர்கள் கல்லால் தாக்கியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கீழ்கரணை பகுதியில் வசிப்பவர் தேவபிரசாத்(26). இவர் மறைமலைநகரில் பாஸ்ட் புட் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளர். இந்நிலையில் சம்பவத்தன்று மாலையில் தேவிபிரசாத் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த சென்றுள்ளார். அப்போது விஜி என்பவருக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் தேவபிரசாத்தை கல்லால் அடித்ததோடு மட்டுமல்லாமல் […]

Categories
தேசிய செய்திகள்

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காதீர்கள்…. மாற்றாக தீபம் ஏற்றுங்கள்…. மாநில அரசு வலியுறுத்தல்…!!

பட்டாசு வெடிப்பது கொரோனா நோயாளிகளை பாதிக்கும் என்பதால் அதற்கு பதிலாக தீபாவளியன்று தீபம் ஏற்றுமாறு மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.  மகாராஷ்டிரா மாநிலத்தில் தீபாவளி பண்டிகை வருகிற 13-ம் தேதி தொடங்கி 16ஆம் தேதி வரை இரண்டு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் பொதுமக்கள் இந்த பண்டிகையையொட்டி பட்டாசு வெடித்து கொண்டாடுவர். ஆனால் இந்த வருடம் பொதுமக்கள் பட்டாசுகள் வெடிப்பதை கட்டாயமாக தவிர்க்க வேண்டும் என்று மகாராஷ்டிர மாநில அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிட்ட தகவலில் மாநில […]

Categories
மாநில செய்திகள்

வேல் யாத்திரை நடத்தலாம்…. பல்டி அடித்த தமிழக அரசு…. பரபரப்பு தகவல்…!!

வேல் யாத்திரை நடத்தப்பட கூடாது என்று கூறிய தமிழக அரசு தற்போது நடத்த அனுமதி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் இன்றிலிருந்து ஒரு மாத காலம் வேல் யாத்திரை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். மேலும் இதில் பல மத்திய அமைச்சர்களும் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்திருந்தனர். இதையடுத்து பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று விசிக மற்றும் சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இதற்கு தடை விதிக்க […]

Categories
உலக செய்திகள்

2 குழந்தைகளை கொன்று…. தானும் தற்கொலைக்கு முயன்ற தந்தை…. லண்டனில் பயங்கரம் …!!

நபர் ஒருவர் தனது குழந்தைகளை குத்தி கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லண்டனில் உள்ள இல்போர்ட் பகுதியில் வசிக்கும் இலங்கை தமிழர் நடராஜ நித்யகுமார்(40). இவர் கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய குழந்தைகளான பவின்யா(19 மாதம் ) மற்றும் நிகாஷ்(3) இருவரையும் கத்தியால் குத்தி கொன்றதுடன் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்நிலையில் குழந்தைகள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் நடராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர் உடல்நலம் […]

Categories
உலக செய்திகள்

இனியும் சும்மா இருக்க முடியாது…! ”அந்த உரிமை வேணும்” மக்களுக்கும் கொடுங்கள்…. ஸ்விஸ் அரசுக்கு கோரிக்கை…!!

பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஆயுதங்கள் வைத்து கொள்ள உரிமை வழங்குமாறு அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வியட்நாமில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட கொலை பயங்கர வெறித்தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த தாக்குதலானது முற்றிலும் எதிர்பாராத வகையில் நடந்ததையடுத்து இது தொடர்பாக தற்போது பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக ஆயுதங்களை எடுத்துச் செல்ல உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அரசியல்வாதிகள் தரப்பில் கோரிக்கை […]

Categories
உலக செய்திகள்

இப்படிலாம் நடக்கவே கூடாது….! ”அவமானபட்ட அமெரிக்கா”…. உலக நாடுகள் விமர்சனம்…!!

தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட சிக்கலால் நடந்த போராட்டங்கள் அமெரிக்காவுக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக உலக நாடுகள் விமர்சித்துள்ளன. அமெரிக்க நாட்டில் நடந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இறுதி முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் நடந்த ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவிற்கு அவமானத்தை ஏற்படுத்துவதாக உலக நாடுகள் விமர்சனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் நியூயார்க் மற்றும் பிற நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும் – காவல்துறையினருக்கும் இடையே நடந்த சண்டையினை ரஷிய ஊடகம் வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்க தேர்தல் முடிவுகளில் தெளிவு இல்லாதால் இது உலக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பீதி…! ”17,00,00,000 உயிரை பழி” கொடுங்க…. உத்தரவு போட்ட அரசு ….!!

மிங்க் விலங்குகளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவியதால் அவற்றை கொல்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டென்மார்க்கில் மிங்க் விலங்குகளிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதால், 17 மில்லியன் விலங்குகளை கொல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் Mette Frederikson தெரிவித்துள்ளார். இந்த விலங்குகளிடமிருந்து கண்டறியப்பட்ட இந்த வைரஸானது நோய் எதிர்ப்பு சக்தியையும், தடுப்பூசியின் செயல்திறனையும் குறைப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் சீனாவிற்கு வெளியில் மனிதனிர்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் மாறி மாறி பரவும் […]

Categories
உலக செய்திகள்

உங்க நாட்டுல கொரோனா பரவுது… எங்க நாட்டுக்குள்ள வராதீங்க…. சீனா போட்ட புது உத்தரவு …!!!

ஐரோப்பாவில் கொரோனா வேகமாக பரவி வருவதால், அந்நாட்டவர்கள் சீனாவிற்குள் நுழைய சீன அரசு தற்காலிக தடை விதித்துள்ளது. சீனாவிற்குள் பிரிட்டன் மற்றும் பெல்ஜியத்தை சேர்ந்தவர்கள் நுழைய கூடாது என்று சீன அரசு தடை விதித்துள்ளது. தற்போது ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மிக மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தடையை விதிப்பதால் வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்று சீனா தெரிவித்துள்ளது. முதன்முதலில் கொரோனா வைரஸ் சீனாவின் வுகானில் தோன்றிய போது கடுமையான பயண […]

Categories
உலக செய்திகள்

17வயது சிறுமியுடன் திருமணம்…! ”22நாட்களில் கசந்த வாழ்கை”… 78வயது தாத்தா எடுத்த தீடீர் முடிவு…!!

17 வயது சிறுமியை 78 வயது முதியவர் திருமணம் செய்த நிலையில் தற்போது இருவரும் பிரிந்துள்ள சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்தவர் அபா சர்னா(78) என்ற முதியவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோனி நவிதா (17) என்ற சிறுமியை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்து 22 நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் முதியவர் நோனியை விவாகரத்து செய்ய மனு தாக்கல் செய்துள்ளார். வயது வித்தியாசம் பாராமல் நடைபெற்ற இந்த திருமணம்  அனைவரையும் […]

Categories
தேசிய செய்திகள்

தோழிகளாக இருந்த பெண்கள்….. “காதலர்களாக மாறி திருமணம்” வெளியான உண்மையால் பெற்றோர்கள் அதிர்ச்சி..!!!

இரண்டு பெண்கள் வீட்டை விட்டு ஓடி ஒருவரையொருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் வசிப்பவர் காத்தூன். இவருக்கு சிம்ரன்(21) என்ற மகள் உள்ளார். அதே பகுதியில் வசிக்கும் பார்வதியின் மகள் புஷ்பலதா(20). சிம்ரனும், புஷ்பலதாவும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய தோழிகளாக இருந்து வந்துள்ளனர். புஷ்பலதா கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். சிம்ரன் முதலாமாண்டு கல்லூரி படிப்பை படித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புஷ்பலதா […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளிக்கு போனஸ்” அறிவித்த தமிழக அரசு…. மகிழ்ச்சியில் டாஸ்மாக் ஊழியர்கள்…!!!

மதுக்கடை ஊழியர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு போனஸ் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மதுக்கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் 10 சதவீதம் வழங்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் டாஸ்மாக் நிறுவனத்தில் சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போனஸ் 8.33 சதவீதமாகவும் மற்றும் கருணைத்தொகை 1.6 சதவீதமாகவும் வழங்கப்படும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது. இந்த போனஸ் தொகையானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

சட்டை போட்டா தான்…. உங்க கூட வாக்கிங் வருவேன்…. அடம் பிடிக்கும் நாய்…!!

தனது எஜமானுடன் பேண்ட் மற்றும் டீசர்ட் அணிந்து வாக்கிங் செல்லும் நாய் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் குமரகுருபள்ளத்தில் வசிப்பவர் அசோக். இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்று வளர்த்துள்ளார். அதற்கு டாமி என்று பெயர் சூட்டி இருக்கிறார். பொதுவாக நமது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளை பாசமாக வளர்ப்பதால் அவை நம் வீட்டின் குழந்தை போல மாறிவிடுகிறது. இவர் ஒரு முறை டாமிக்கு எதார்த்தமாக பேண்ட் மற்றும் டீசர்ட் அணிந்து அழகு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

அக்காவுடன் குழந்தை எரிப்பு…. தங்கையின் வெறிச்செயல்…. அதிர்ச்சி தரும் காரணம்…!!

சண்டை காரணமாக தன் அக்காவை தங்கையே தீயிட்டு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் களத்தூர் கிராமத்தில் வசிக்கும் சின்னசாமி என்பவருக்கு சுமதி மற்றும் சுஜாதா என்று 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இந்நிலையில் சுஜாதா பிரசவத்துக்காக தன் தாய் வீட்டில் இருந்துள்ளார். இதையடுத்து மூத்த மகள் சுமதியும் தனது ஒரு வயது குழந்தையுடன் தன் தாயார் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சின்னசாமி மற்றும் அவரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க…. “2 மணி நேரம் மட்டும் அனுமதி” சுற்றுசூழல் துறை அமைச்சர் தகவல்…!!

தீபாவளியன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி என சுற்றுசூழல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னை, நாடு முழுவதும் வரும் 14 ஆம் தேதியன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து மக்கள் பட்டாசு வெடித்து, பலகாரங்களை செய்து சந்தோசமாக இருப்பது வழக்கம். எனவே தீபாவளி அன்று காலையிலிருந்து இரவு வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று எதிர்ப்பு தெரிவித்த  இயற்கை ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் 2018ம் […]

Categories
உலக செய்திகள்

உடல்நலம் பாதித்த இளம்பெண்ணிடம்…. தவறாக நடந்த மசாஜ் வல்லுநர்…. போலீஸ் பிடியில் சிக்கினார்…!!

மசாஜ் வல்லுநர் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் மூளை கட்டி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருடைய உடல்நிலை மிகவும் மெலிந்திருந்தது. எனவே அவருக்கு அளிக்கப்பட வேண்டிய மசாஜ் சிகிச்சையை அளிக்க மசாஜ் வல்லுநரான Mark Douglas Elliot(64) என்பவரை அவரின் குடும்பத்தார் நியமித்துள்ளனர். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் நிலைமையை தெரிந்துக் கொண்ட Mark அந்த பெண்ணிடம் மசாஜ் செய்யும் போது பாலியல் ரீதியாக […]

Categories
உலக செய்திகள்

“அவசரமாக விசா வேண்டும்” வெளிநாட்டு கணவருக்கு நடந்த கொடூரம்…. பார்க்க துடித்த மனைவி…!!

மளிகை கடை நடத்தி வந்த நபரை 3 பேர் சேர்ந்து குத்தி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் தெலுங்கானாவை சேர்ந்த முகமது ஹாரிப் மொய்தீன்(37) என்பவர் வாழ்ந்து  வந்துள்ளார். இவர் அங்கு மளிகை கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முகமது மர்ம நபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதை அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று  சடலத்தை மீட்டுள்ளனர். மேலும் இந்த கொலையானது தொழில் […]

Categories
உலக செய்திகள்

“பறவை காய்ச்சல்” பயங்கர வைரஸ் தாக்கியதால்…. கொல்லப்பட இருக்கும்…. ஆயிரக்கணக்கான கோழிகள்…!!

கோழிகளுக்கு பறவை காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக ஆயிரக்கணக்கான கோழிகள் கொல்லப்பட இருக்கின்றன. பிரிட்டனில் Cheshire என்ற இடத்தில் கோழிப்பண்ணை ஒன்று உள்ளது. அக்கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், சுமார் 13,500 கோழிகள் கொல்லப்பட இருப்பதாக கோழிப்பண்ணை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கென்ட்டில் பறவைக்காய்ச்சல் தொடங்கியதால் நூற்றுக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் ஆய்வக பரிசோதனையில் ஐரோப்பாவில் பரவிய பயங்கர வைரஸுடன்  தொடர்புடைய வைரஸ் தான் தற்போது கோழிகளை தாக்கியுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் நோய் பாதிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

“Presidensial Trasition” ஜோ பைடன் ஆதரவாளர்கள் தொடங்கிய…. புதிய இணையதளம்…!!

அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், ஜோபைடன் ஆதரவாளர்கள் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளனர்.  அமெரிக்க நாட்டின் அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற 270 பிரதிநிதிகளின் வாக்குகள் தேவை. இந்நிலையில் தற்போதைய வாக்கு நிலவரப்படி ஜோ பைடன் 264 வாக்குகளும், குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் 114 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை “நாம் தான் வெற்றி பெறுவோம்” என்று ஜோ பைடன் அவரின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முகமூடிக்குள் மீசை…. மண்ணுக்கடியில் நகை…. அதிர்ச்சியடைந்த காவல்துறையினர்…!!

நகைக்கடையில் கொள்ளையடித்த கொள்ளையரை அவரின் மீசையை துப்பாக வைத்து காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். சென்னையில் உள்ள தி.நகர் பகுதியில் ராஜேந்திரகுமார் என்பவருக்கு சொந்தமாக நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கடந்த மாதம் சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கடை உரிமையாளர் காவல்துறையில் புகார் அளிகத்துள்ளார். எனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதையடுத்து கோடம்பாக்கம் மார்க்கெட் சுரேஷ், […]

Categories
தேசிய செய்திகள்

ஆழ்துளை கிணற்றில்…. “சுர்ஜித் போல மீண்டும் ஒரு குழந்தை” 2வது நாளாக …. தொடரும் மீட்பு பணி…!!

சிறுவன் ஒருவர் ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சேதுபுரா  கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுவன் ஒருவர் வீட்டின் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது திடீரென அங்கு திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் குழந்தை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு பெற்றோர்கள் வந்து பார்த்தபோது ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக காவல்துறையினர் மற்றும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

Only Smoking ….! ”25வருஷமா சாப்பிடல” தண்ணீர் குடிக்கல….. போலீசை அதிர வைத்த அகோரி …!!

பூமிக்கு அடியில் இறங்கி பூஜை நடத்த சென்ற அகோரியை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த தம்பதிகள் ராஜேந்திரன்-ஜெயலட்சுமி. இவர்களுக்கு அசோக் என்ற ஒரு மகன் இருந்துள்ளார். இவர் சிறுவயதிலேயே வீட்டை விட்டு ஓடி சென்றுள்ளார். இதையடுத்து அவர் காசி சென்று அங்குள்ள சிவன் அடியார்களிடம் தீட்சை பெற்று அகோரியாக மாறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெகு நாட்கள் கழித்து தன் வீட்டிற்கு வந்த அவர் ஊரிலுள்ள ஒரு தோட்டத்தில் குழி தோண்டியுள்ளார். அதில் சிவனுடைய […]

Categories
உலக செய்திகள்

சாலையில் சென்ற சிறுமியிடம்…. “சேட்டை செய்த முதியவர்”…. போலீஸ் பிடியில் சிக்கினார்…!!

முதியவர் ஒருவர் தனியாக சென்ற சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கனடாவை சேர்ந்த முதியவர் Jose Migual. இவர் சில மாதங்களுக்கு முன்பு பேருந்திலிருந்து இறங்கி தனியாக நடந்து சென்ற 16 வயது சிறுமியை பின் தொடர்ந்து சென்றிருக்கிறார். அதன் பின்னர் அந்த முதியவர் சிறுமியின் பக்கத்தில் சென்று அவரை தவறான இடங்களில் தொட்டு பாலியல் ரீதியாக தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளார். இச்சம்பவம் குறித்து சிறுமி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். எனவே இது […]

Categories
உலக செய்திகள்

17வயது பெண்ணை நாசம் செய்த… ”2பேரை தீயிட்டு கொளுத்திய மக்கள்”…. தெரிய வந்த உண்மை பின்னணி…!!

நபர் ஒருவர் இளம்பெண்ணை நாசம் செய்து அவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கென்யா நாட்டில் நரோக் மாவட்டத்தை சேர்ந்தவர் மெர்சி சிலாம் பாராயோ(17). மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்த இவர் திடீரென்று மாயமானார். இதனால் அவருடைய பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் குறித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து இளம்பெண்ணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர். அந்த சடலத்தின் மேல் ஐந்து […]

Categories
உலக செய்திகள்

13வயது சிறுவனிடம்….! ”மோசமாக நடந்த இளம் பெண்” …. பின்னர் கொடுத்த விளக்கம்….!!

இளம்பெண் ஒருவர் சிறுவனை பாலியல் வன்புணர்வுக்கு பயன்படுத்திய சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இண்டியனாவில் வசிக்கும் அமெரிக்கப் பெண் Zoe(19). டிக் டாக் பிரபலமான இவரை 18 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். இவர் Connar(13) என்ற சிறுவனுடன் அளவுக்கு மீறி நெருக்கத்தை காட்டுவதாகவும் அதை தங்களால் பார்க்க முடியவில்லை என்று கூறி Zoeவின் காதலனும் மற்றும் அவருடைய நண்பரும் அவரை பிரிந்து விட்டனர். மேலும் அந்த சிறுவனை Zoe சிறுவர் பாலுறவுக்கு பயன்படுத்தி கொண்டிருக்கிறார் என்று அவர்கள் குற்றம் […]

Categories
உலக செய்திகள்

மனைவிக்கு பயந்து… ”தலைமறைவு வாழ்க்கை” ஓடி ஒழிந்த கணவன் … அப்படி என்ன நடந்தது ?

முன்னாள் மனைவியின் கொடுமைக்கு பயந்த கணவர் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.  ஜெர்மனியில் பெண் ஒருவர் அவருடைய கணவனை அடிப்பது சம்பந்தமான காட்சிகள் காமெடி படங்களில் வருவதைப்போல நிஜத்திலும் அரங்கேறியுள்ளது. நிஜமாகவே ஒரு பெண் தன் கணவனை அடித்து துன்புறுத்தும் விஷயம் சமுதாயத்தில் நடக்கிறது என்ற ஒரு உண்மையை இந்த கதை விவரிக்கிறது. இதில் கற்பனைக்காக டாமி-மியா என்ற பெயருள்ள தம்பதியினரை வைத்துக் கொள்வோம். டாமியை சந்தித்து மியா பேசும் போது தன்னுடைய கணவர் […]

Categories
உலக செய்திகள்

மனைவியுடன் சேர்ந்து “தாய்க்கு தீ வைத்த மகன்” பதற வைக்கும் மரண வாக்குமூலம்…!!

பெற்ற தாயை தன் மகன் மனைவியுடன் சேர்ந்து தீ வைத்து கொளுத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் ஷாஜகான் பூர் பகுதியை சேர்ந்த ரத்னகுமார்(58) என்ற பெண் சில தினங்களுக்கு முன்பு உடலில் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினரிடம் மரண வாக்குமூலம் கொடுத்த பிறகு அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ரத்னகுமார் கொடுத்துள்ள மரண வாக்குமூலத்தில், தன்னுடைய மகன் தன் வீட்டை விற்று விடுமாறு கூறினார். எல்லோருக்கும் சமமாக பிரித்து தர வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

பக்கத்துல வராதீங்க…. மாற்றி யோசித்த முட்டை வியாபாரி…. குவியும் நெட்டிசன்களின் பாராட்டு…!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் சுகாதாரமான முறையில் முட்டை விற்ற முட்டை வியாபாரிக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது. கொழும்பில் முட்டை வியாபாரி ஒருவர் சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி மோட்டார் சைக்கிளில் வைத்து முட்டையை விற்பனை செய்து வருவது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் மேல்மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாடத் தேவையான காய்கறிகள், பால் போன்ற பொருள்களை வீடுகளுக்குச் சென்று விநியோகிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் முட்டை […]

Categories
தேசிய செய்திகள்

கணவரின் வீடியோ கொடுத்த அதிர்ச்சி …. “நீ செத்து விடு” மனைவி எடுத்த முடிவு …!!!

கள்ளக் காதலியுடன் தன் கணவர் தனிமையில் இருந்த வீடியோவை பார்த்த மனைவி தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிக்கிமில் வசிக்கும் தம்பதியினர் ரஞ்சிதா(23)-அருண்குமார்(30). இவர்களுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் அருண் குமாருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் திருமணத்திற்கு முன்பே தொடர்பு இருந்து வந்ததால் அவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதை அருண்குமார் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“வாலிபருடன் இருந்த சிறுமி” பின்தொடர்ந்த துணிச்சலான பெண்…. கேமராவில் பதிவான திடுக்கிடும் காட்சி…!!

சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்து வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லண்டன் நகரில் போன சனிக்கிழமையன்று காலை சிறுமி ஒருவர் வாலிபரிடம் தனியாக இருந்ததை கண்ட பெண் தன்னிடம் இருந்த ஒரு கேமராவை எடுத்துக்கொண்டு அவர்களின் பின்தொடர்ந்து சென்றுள்ளார். இதையடுத்து அந்தப் பெண் வாலிபரிடம் சத்தமாக நீ யார்? இந்த சிறுமியை எங்கே கூட்டி செல்கிறாய்? என்று கேட்டதற்கு அந்த வாலிபர் இவர் என்னுடைய உறவினரின் மகள் என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தை […]

Categories

Tech |