சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் பகுதியில் வெளிமாநிலத்திற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக வட்ட வழங்கல் அலுவலர் கண்ணனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அப்பகுதியில் இருக்கும் ஒருவரின் வீட்டின் பின்பக்கத்தில் ரேஷன் அரிசிப் பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து அலுவலகத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து ரேஷன் அரிசி பதுக்கி வைத்து வெளிமாநிலத்திற்கு கடத்தும் நபர்கள் குறித்து வருவாய் துறையினரும் மற்றும் காவல்துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.