Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 25, 000 சதுர கிலோ மீட்டர்… புதியதாக பண்ணை அமைக்கும் திட்டம்… மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு…!!

மலைப்பகுதியில் வளர்கின்ற மூலிகைச் செடிகளை பராமரிப்பதற்காக அதிகாரிகள் இடங்களை ஆய்வு செய்து பண்ணை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை அதிக அளவில் செடிகள் வளர்ந்து அடர்ந்த வனப்பகுதி போல் காணப்படுகிறது. இவை 25, 000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதி நான்கு மாவட்டங்களை இணைக்கும் அடர்ந்த பகுதியாக காணப்படுகிறது. இதில் பல வகையை சார்ந்த மூலிகைச்செடிகள் மற்றும் உயரமான மரங்கள் உள்ளது. இந்நிலையில் கல்வராயன்மலை பகுதியில் மருத்துவ குணம் அடங்கிய மூலிகைச் செடிகளை பாதுகாக்கும் விதத்தில் சித்த மருத்துவத்திற்கு தேவையான மூலிகை பொருட்கள் தயாரிக்கவும் மற்றும் மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் அரசு மூலமாக இச்செயல்பாடுகளை நடைமுறை படுத்தயுள்ளனர். அதனால் தான் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தமிழக அரசு சார்பாக இம்மலையில் மூலிகை பண்ணை அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனை யடுத்து 6 ஏக்கர் நிலம் தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து வெள்ளிமலை, அரியலூர் போன்ற பகுதிகளில் இருக்கும் இடங்களை தாசில்தார் ஆனந்தசயன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராமன், துணை தாசில்தார் மனோஜ் முனியன், வருவாய்த்துறையினர் கொண்ட குழுவினர், ஊரக வளர்ச்சித்துறை உதவி பொறியாளர் அருண் ராஜ் ஆகியோர் இணைந்து இடத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இடம் தேர்வான பின்பு பொறியாளர்கள் மூலம் கட்டிடம் கட்டுவதற்கான வரைபடம் தயாரித்து அரசுக்கு சமர்ப்பிப்பார்கள் பிறகு அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் மூலிகை பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெறும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் கல்வராயன் மலையில் மூலிகை பண்ணை அமைக்க இருப்பதால் அங்கே வசிக்கும் மலைவாழ் மக்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |