இந்தோனேஷியாவில் 300க்கும் மேற்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்தவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அவன் உயிரிழந்துள்ளான்.
இதன் காரணமாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஃபிராங்கோயிஸ்க்கு மரணதண்டனை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.. சட்டவிரோதமான குழந்தைகளை படமாக்கியது போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால் சிறையில் ஆயுள் அல்லது துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறியிருந்தனர்.
அபெல்லோவின் லேப்டாப் கம்ப்யூட்டரில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் சட்டவிரோத பாலியல் செயல்களில் ஈடுபடுவதைக் காட்டிய வீடியோக்கள், பாலியல் மருந்துகள் மற்றும் கருவிகள், 6 கேமராக்கள், ஒரு பாஸ்போர்ட், குழந்தைகள் அணிவது போன்ற 21 கவர்ச்சி உடைகள் ஆகியவற்றை கண்டுபிடித்ததாக சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் போலீசார் தெரிவித்தனர்.. கடந்த 5 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசிய நாட்டிற்கு சுற்றுலா விசாவில் பல முறை நுழைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
ஜகார்த்தா காவல்துறைத் தலைவர் நானா சுட்ஜானா (Nana Sudjana) சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அவன் குழந்தைகளை அணுகி அவர்களிடம் ஆசையாக பேசி கவர்ந்திழுப்பான். மேலும் “அவருடன் உறவு கொள்ள ஒப்புக்கொண்டவர்களுக்கு 17 முதல் 70 அமெரிக்க டாலர் வரை (70 டாலர் இந்திய மதிப்பு ரூ 5,262 ஆகும் ) சம்பளம் கொடுப்பான். உறவு கொள்ள விரும்பாதவர்களை அடித்து, அறைந்து உதைத்து துன்புறுத்தியுள்ளான்” என்று அவர் கூறினார்.
இதையடுத்து அந்த கொடூரன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.. இந்நிலையில் அந்த கொடூரன் தற்கொலை செய்ய முடிவெடுத்து கேபிள் ஒன்றை வைத்து கழுத்தை இறுக்கி உயிரிழக்கும் நிலையில் கிடந்துள்ளான். இதையடுத்து போலீஸ் அதிகாரிகள் அவனை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு 3 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் இறந்து விட்டான்.. இதனை அதிகாரிகள் உறுதி செய்தனர்..