Categories
உலக செய்திகள்

10 முதல் 17 வயது வரை… “300 குழந்தைகளை வன்கொடுமை செய்த கொடூரன்”… கிடைக்கப்போகும் தண்டனை என்ன?

இந்தோனேஷியாவில் 300 குழந்தைகளை வன்கொடுமை செய்ததற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓய்வு பெற்ற  நபருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த மாதம்  ஃபிராங்கோயிஸ் காமில் அபெல்லோ (Francois Camille Abello) என்ற 65 வயது நபரை காவல் துறையினர்  கைது செய்தனர். மேலும் அவருடைய அறையிலிருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர்.. இதையடுத்து அந்த கொடூரன் இந்தோனேசியாவில் 300 க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்,  உடலுறவு கொள்ள மறுத்தவர்களை அடித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஃபிராங்கோயிஸ்க்கு மரணதண்டனை விதிக்கப்படலாம்  என்று அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.. இந்தோனேசியாவின் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார்.  சட்டவிரோதமான குழந்தைகளை படமாக்கியது போன்ற குற்றச்சாட்டுகள் இருப்பதால் சிறையில் ஆயுள் அல்லது துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறியுள்ளனர்.

அபெல்லோவின் லேப்டாப் கம்ப்யூட்டரில் 10 முதல் 17 வயதுக்குட்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் சட்டவிரோத பாலியல் செயல்களில் ஈடுபடுவதைக் காட்டிய வீடியோக்களை கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.. கடந்த 5 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசிய நாட்டிற்கு சுற்றுலா விசாவில் பல முறை நுழைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஜகார்த்தா காவல்துறைத் தலைவர் நானா சுட்ஜானா (Nana Sudjana) வியாழக்கிழமை (நேற்று முன்தினம்) செய்தியாளர்களிடம் பேசுகையில், “அவர் குழந்தைகளை அணுகி அவர்களிடம்  ஆசையாக பேசி கவர்ந்திழுப்பார்.

மேலும் “அவருடன் உடலுறவு கொள்ள ஒப்புக்கொண்டவர்களுக்கு 250,000 முதல் 1 மில்லியன் ரூபியா வரை கொடுப்பான்.. அதாவது  17 முதல் 70 அமெரிக்க டாலர் வரை (70  டாலர் இந்திய மதிப்பு ரூ 5,262 ஆகும் ) சம்பளம் கொடுப்பான் . உடலுறவு கொள்ள விரும்பாதவர்களை அடித்து, அறைந்து உதைத்து துன்புறுத்தியுள்ளான்” என்று அவர்  கூறினார் .

பல ஆண்டுகளாக அபெல்லோ இந்தோனேசிய குழந்தைகளை துன்புறுத்தியதாக அவர்கள் நம்புவதாகவும், மேலும் பலியானவர்கள் இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.. இந்தோனேசியாவில் ஆண்டுதோறும் 70,000 குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர் என்று உலகளாவிய கடத்தல் தடுப்பு வலையமைப்பு ECPAT இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |