ஆட்டிசம் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எந்த முறையில் கையாள வேண்டும் என்பது குறித்த தொகுப்பு
ஆயிரத்தில் ஒரு குழந்தை ஆட்டிசம் நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் அனைவரும் பயம் கொள்ளும் அளவிற்கு இது மருத்துவ நோய் இல்லை. இதனை மூளை முடக்கு என சொல்கிறது மருத்துவம். மேலும் இதற்கான சிகிச்சையும் மிகவும் எளிதானது எனக் கூறுகின்றனர்.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகள் பட்டியலில்தான் சேர்கின்றனர். ஆனால் பல வகையான சோதனைகள் மேற்கொண்ட பொழுது இது மூளை பாதிப்பு கிடையாது என தெரியவந்துள்ளது. வயிற்றில் ஏற்படும் மெட்டபாலிக் காரணமாகவே ஆட்டிசம் நோய் ஏற்படுகின்றது எனவும் கூறியுள்ளனர்.
ஆட்டிசம் குழந்தைகளுக்கு உலகம் சம்பந்தப்பட்ட நடைமுறை விஷயங்களை பழக்கத்தில் கொண்டு வருவதும் அவர்களைப் பேச வைப்பதும் மட்டுமே கடினமான செயல் மற்றபடி அவர்களுக்கு அறிவுத்திறன் அதிகமாகவே உள்ளது. உடல்ரீதியாக அவர்கள் ஆரோக்கியமானவர்கள். பசி தூக்கம் வலி போன்றவற்றை அவர்களால் உணர முடியும் ஆனால் அதனை வெளிப்படுத்தும் வார்த்தைகள் மட்டுமே அவர்கள் அறியாத ஒன்று. எனவே அவர்களை பேச வைத்தாலே ஆட்டிஸம் பாதித்த குழந்தைகளை விரைவில் அதிலிருந்து விடுவித்து விடலாம்.
ஆட்டிஸம் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சாப்பாடு, பழக்கவழக்கம் போன்றவற்றை முறையாக கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பதால் அவர்கள் மகிழ்ச்சியுடன் பழகுவார்கள் பேசவும் முயற்சிப்பார்கள்.