ஆட்டிஸம் குழந்தைகள் குறித்து பெற்றோரும் சமுதாயத்தினரும் சிஎம் விழிப்புணர்வு பெற்றிருக்க வேண்டும்
ஆட்டிஸம் என்பது குழந்தைகளின் மூளை நரம்பில் ஏற்படும் மாற்றத்தால் உருவாவது. மூளையின் முக்கிய செயல்பாடான பேச்சுத்திறன், சமுதாய தொடர்பு மற்றும் புலன் உணர்வு ஆகியவற்றை பாதிக்கும் ஆட்டிசம். 6 மாதம் முதல் 3 வயதுக்குள் ஆட்டிசம் குறைபாட்டை கண்டுபிடிக்க முடியும். இது குறித்து விழிப்புணர்வு இல்லாதவர்கள் பலர் மூன்று வயதிற்குள் கண்டுபிடிக்க தவறுகின்றனர்.
3 வயதுக்குள் கண்டுபிடித்தால் போதிய பயிற்சி அளித்து குறைபாட்டை சரிசெய்ய இயலும் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள்தான் ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். 10 ஆயிரம் குழந்தைகளில் 5 பேருக்கு ஆட்டிசம் குறைபாடு ஏற்படுகின்றது. ஆட்டிசம் குழந்தைகளுக்கு நம் வாழ்வின் அன்றாட பழக்க வழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் இதுவே அவர்களுக்கு முதல் சிகிச்சை.