கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஆட்டோ டிரைவரான செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆட்டோவில் சுந்தராபுரம் சந்திப்பு அருகில் சென்று கொண்டிருந்தபோது சடன் பிரேக் போட்டுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்து விட்டது.
இதில் படுகாயமடைந்த செல்லத்துரையை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்லதுரை பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.