குடியிருப்பு பகுதியில் இருந்த விஷ வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் அழித்துவிட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வாடகை குடியிருப்பு அமைந்துள்ளது. அந்த குடியிருப்பில் மேல் பகுதியில் விஷ வண்டுகள் கூடு கட்டி பொதுமக்களை தாக்கி வந்ததுள்ளது. இதனால் பொதுமக்கள் காயமடைந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி தீயணைப்பு நிலைய அலுவலரான ஜெயபாண்டி முன்னிலையில் வீரர்கள் தீ பந்தத்தினால் விஷ வண்டுகளை முழுவதுமாக அழித்துள்ளனர். அதன் பிறகு அந்த பகுதியில் மக்கள் விஷ வண்டுகளின் அச்சமின்றி நிம்மதியாக இருக்கின்றனர்.