Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மனமுடைந்த ஆட்டோ டிரைவர்…. திடீரென நடந்த விபரீதம்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சுத்தமல்லி பகுதியில் பாலகணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தையும் 1 பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் பாலகணேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் அவரை மனைவி பாலகணேசனை கண்டித்துள்ளார்.

இந்நிலையில் மனமுடைந்த பாலகணேசன் சுத்தமல்லி மையவாடி பகுதிக்கு அருகில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சுத்தமல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |