ஆட்டோ டிரைவரை தாக்கிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மடவிளாகம் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயராகவன் என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் விஜயராகவன் ரயில்வே நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மருந்து கொத்தள ரோடு பகுதியில் வசிக்கும் விஜயபாரதி, சந்தோஷ், புதிய கல்லார் பகுதியில் வசிக்கும் சத்தியசீலன் ஆகிய 3 பேரும் பணம் கேட்டுள்ளனர்.
அதற்கு விஜயராகவன் அவர்களிடம் தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் விஜயராகவனை பீர் பாட்டிலால் தாக்கி அவரிடமிருந்த பர்சையும் எடுத்து சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயபாரதி, சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சத்தியசீலனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.