16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 ஒரு சிறுமி வசித்து வருகிறார். இந்நிலையில் இந்த சிறுமி கடந்த சில நாட்களாக வாந்தி எடுத்ததோடு, அடிக்கடி மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்ததும் சிறுமியின் பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்த போது திருச்சி மாவட்டத்தில் உள்ள புதுப்பாலம் பகுதியில் வசிக்கும் ஆட்டோ டிரைவரான பாபு என்பவர் காதலிப்பதாக கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.