Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆட்டோவில் இதான் இருந்துச்சா…? வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

கஞ்சா வைத்திருந்த ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள நாடுகாணி பகுதியில் தேவாலா காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த ஆட்டோவில் 700 கிராம் கஞ்சா இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக அந்த ஆட்டோ டிரைவரான சாந்த குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |