Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3 நாட்களாக வீட்டிற்கு வராத கணவர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசில் பரபரப்பு புகார்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பிலால் நகரில் மரியம் சுபாஷினி(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவை மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, உக்கடத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனரான முகமது என்பவருக்கும், சுபாஷினிக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. கடந்த 3 நாட்களாக முகமது வீட்டிற்கு செல்லாததால் சந்தேகமடைந்த மரியம் சுபாஷினி சிலரிடம் விசாரித்துள்ளார். அப்போது முகமதுவுக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, சுபாஷினிக்கு தெரியாமலேயே அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வாழ்வது தெரியவந்தது.

இதுகுறித்து சுபாஷினி தனது கணவரிடம் கேட்டதற்கு முகமது அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். மேலும் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்த நகைகளையும் முகமது திருப்பிக் கொடுக்க மறுப்பு தெரிவித்துள்ளார். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுபாஷினி புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முகமதுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |