Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநருக்கு தர்ம அடி

இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் எம்.ஜி.ஆர் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (34). இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்துவருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவர் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது ஆட்டோவில் வந்த பன்னீர்செல்வம் கலைவாணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.

உடனடியாக கலைவாணி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் பன்னீர்செல்வத்தைப் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையின் அவசர எண்ணான 100க்கு அழைத்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த பீர்க்கங்கரணை காவல் துறையினர், பன்னீர்செல்வத்தைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |