கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மதுரை பகுதியில் ஆட்டோ டிரைவரான சிவ தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது ஆட்டோவில் சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த சிவ தாஸை அருகே உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவ தாஸ் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.