Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… கோர விபத்தில் பறிபோன உயிர்… திண்டுக்கல்லில் பரபரப்பு…!!

கார் மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வத்தலக்குண்டு பகுதியில் ஆட்டோ  டிரைவரான முத்தலிப் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்தலிப் வத்தலக்குண்டில் இருந்து பட்டிவீரன்பட்டிக்கு தனது ஆட்டோவில் இரண்டு பயணிகளுடன் சென்றுள்ளார். இதனை அடுத்து திண்டுக்கல்லில் வசிக்கும் பிரதீப் என்பவர் தனது காரில் தேனி நோக்கி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரதீப் ஓட்டிச் சென்ற காரானது முத்தலிப்பின் ஆட்டோ மீது பயங்கரமாக மோதி விட்டது. இந்த விபத்தில் முத்தலிப் மற்றும் அவரது ஆட்டோவில் பயணித்த ஆனந்தகுமார், நாட்ராயன் போன்றோருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே முத்தலிப் உயிரிழந்து விட்டார். அதன்பிறகு ஆனந்தகுமார் மற்றும் நாட்ராயனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Categories

Tech |