தனது ஆட்டோவில் தவறவிட்ட 5௦ பவுன் நகையை ஆட்டோ டிரைவர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டை பகுதியில் வியாபாரிகள் சங்கத் பிரமுகரான பால் பிரைட் என்பவர் வசித்துவருகிறார். இவரது மகனின் திருமணமானது அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடைபெற்றுள்ளது. அதன் பின்னர் மாலையில் வரவேற்ப்பு நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருக்கும் போது, பால் பிரைட் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இவர் ஆட்டோவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, தன்னுடைய பையில் வைத்திருந்த 50 பவுன் நகையை அதில் தவறவிட்டார். இதனையடுத்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பிரைட் தன்னுடைய நகையை தவறவிட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரைட் நகையை தவறவிட்ட அந்த ஆட்டோவை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் ஆட்டோ டிரைவர் சரவண குமார் என்பவர் தன்னுடைய ஆட்டோவில் தவறவிட்ட நகையை எடுத்து கொண்டு குரோம்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து விட்டார். அதன்பின் நடந்தவற்றை எல்லாம் போலீசாரிடம் கூறி அவர்களிடம் அந்த நகையை ஒப்படைத்து விட்டார். இதனை தொடர்ந்து 50 பவுன் நகையை நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த அந்த ஆட்டோ டிரைவரான சரவணகுமாரை போலீசார் பாராட்டியுள்ளனர்.