கணவரின் கழுத்தை நெரித்து மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள டி.கள்ளிபட்டியில் ரஞ்சித்குமார் சிங் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு சத்யா என்ற மனைவியும் லிபினா ஸ்ரீ என்ற மகளும் உள்ளது. இந்நிலையில் ரஞ்சித்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கூறி அடிக்கடி சத்யா தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கடந்த 18ஆம் தேதி ரஞ்சித்குமார் மர்மான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
மேலும் ரஞ்சித்குமார் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சத்யா அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற தென்கரை காவல்துறையினர் ரஞ்சித்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைதொடர்ந்து ரஞ்சித்குமாரின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் சத்யாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் சத்யா முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இந்நிலையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் சம்பவத்தன்று ரஞ்சித்குமார் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சத்யா வீட்டில் இருந்த கயிற்றை வைத்து ரஞ்சித்குமாரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளர். இதனையடுத்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து சத்யாவை கைது செய்துள்ளனர்.