ஆட்டோவில் தவறவிட்ட பையை நேர்மையாக ஒப்படைத்த டிரைவரை துணை போலீஸ் கமிஷ்னர் பாராட்டியுள்ளார்.
சென்னை மாவட்டத்திலுள்ள ஏழுகிணறு பகுதியில் ஆட்டோ டிரைவரான வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வினோத்குமார் தனது ஆட்டோவில் கடந்த 2-ஆம் தேதி இரண்டு பேரை மெரினாவுக்கு சவாரி அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து ஆட்டோவை விட்டு இறங்கிய இரண்டு பயணிகளும் தாங்கள் கொண்டு வந்த பைகளை ஆட்டோவில் தவற விட்டுள்ளனர். அதன்பின் ஆட்டோவில் தவறவிட்ட பைகளை பார்த்த வினோத்குமார் அதில் இருந்த செல்போன் பணம், ஏ.டி.எம் கார்டு போன்றவற்றை ஏழுகிணறு காவல் நிலையத்தில் பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆட்டோவில் பைகளை தவறவிட்ட பெண் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நிகில்ஜா என்பது தெரியவந்துள்ளது. அதன் பின் இவர் தனது நண்பருடன் ஆட்டோவில் பயணித்த போது பைகளை தவற விட்டுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்டவர்களிடம் பைகளை பத்திரமாக ஒப்படைத்தனர். இதனை அறிந்த துணை கமிஷனர் ஆட்டோ டிரைவர் வினோத்குமாரின் நேர்மையை பாராட்டி அவரை நேரில் சந்தித்து பரிசுகளை வழங்கி உள்ளார்.