ஆட்டோ டிரைவரை நண்பர்களே இணைந்து வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள திருவல்லிக்கேணி பகுதியில் நவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நவீன் அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது ஆட்டோவில் மது போதையில் படுத்து தூங்கி உள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பர்களான கார்த்திக், பிரகாஷ், பழனி ஆகியோர் நவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் நவீன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த ஐஸ்அவுஸ் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அப்பகுதியில் நவீன் தாதா போல் வலம் வந்தது அவரது நண்பர்களுக்கு பிடிக்காததால் அவரை வெட்டி கொலை செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி தப்பியோடிய அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.