பலநாள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஆட்டோ ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையிலுள்ள ராஜமங்கலம் காவல்துறையினர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகப்படும் படியாக இருந்த ஒருவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.
விசாரணையில் அவர் யானைக்கவுனி கல்யாணபுரத்தைச் சேர்ந்தவர் என்பதும். சேனைராஜ் எனப்படும் இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்துக்கொண்டே இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் சேனைராஜை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.