கடிதத்தில் எழுதி வைத்துவிட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாப்பேட்டை பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து சரவணன் தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அதன்பிறகு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அம்மாபேட்டை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது, சரவணன் எழுதிய ஒரு உருக்கமான கடிதத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த கடிதத்தில் ஆட்டோ டிரைவர் போதிய வருமானம் இல்லாததால் கடன் சுமையால் தான் அவதிப்பட்டு வந்ததாகவும், மத்திய அரசு 15 ஆண்டுகள் ஆன வண்டிகள் காலாவதியானவை என அறிவித்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்யப் போவதாகவும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் இல்லை என எழுதி இருக்கிறார்.