Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்னால சமாளிக்க முடியல…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

கடன் தொல்லையால் ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளிங்கராயன் வீதியில் இருக்கும் சாலையோர மரத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் தூக்கில் சடலமாக கிடப்பதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தூக்கில் சடலமாக தொங்கியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் வசிக்கும் ஆனந்தகுமார் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் ஆட்டோ டிரைவரான ஆனந்தகுமார் கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் ஆனந்தகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது .

Categories

Tech |