Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பெற்ற மகள் என்று கூட பார்க்காமல்…. ஆட்டோ டிரைவர் செய்த கொடுமை…. பெரம்பலூரில் பரபரப்பு….!!

ஆட்டோ டிரைவர் மகளை அடித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஷேர் ஆட்டோ டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ஆட்டோ டிரைவர் தினமும் மது குடித்து விட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து மீண்டும் தகராறு ஏற்பட்ட போது இவரது மனைவி கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அதன்பின் குடிபோதையில் இருந்த ஆட்டோ டிரைவர் தனது மூத்த மகளை சரமாரியாக அடித்து துன்புறுத்தியுள்ளார்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் நடந்த சம்பவத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்து விட்டனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ டிரைவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |