Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கண்டித்த மனைவி…. ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மனைவி கண்டித்ததால் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி பகுதியில் ஆட்டோ டிரைவரான அய்யாத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் அய்யாத்துரைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களாக அய்யாதுரை மதுபோதையில் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததால் அவரது மனைவி அய்யாத்துரையை கண்டித்துள்ளனர்.

இதனால் அய்யாதுரை வெறுப்படைந்து விஷம் குடித்து மயங்கிக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அய்யாத்துரை பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Categories

Tech |