Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என் மேல எப்படி புகார் கொடுக்கலாம்….? நண்பர்கள் செய்த செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வாலிபர் ஆட்டோ கண்ணாடியை உடைத்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்துள்ளார். இவருக்கு கனகா என்ற மனைவி உள்ளார். இதனைதொடர்ந்து அதே பகுதியில் ராஜமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாஸ்கர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாஸ்கர் சுந்தரின் வீட்டிற்கு முன்பாக அமர்ந்து மது அருந்தியுள்ளார். இதனால் சுந்தர் பாஸ்கரை கண்டித்ததோடு கல்லிடைகுறிச்சி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் தனது நண்பரான கபில்ராஜ் உடன் சுந்தரின் வீட்டிற்கு  சென்று அவரையும் அவரது மனைவி கனகாவையும் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு ஆட்டோவின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து சுந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பாஸ்கர், கபில்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |